உடலில் ரத்த ஓட்டம் நிகழும் போது ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் மீது அழுத்தம் ஏற்பட்டு ரத்தக் குழாய் விரிந்து சுருங்குகிறது. இருதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்தக் சுருக்கழுத்தத்தை மேல்நிலை அழுத்தம் (Systolic Blood Pressure) என்று கூறப்படுகிறது. இருதயம் பழைய நிலைக்கு வரும் போது அழுத்தம் குறைகிறது. இந்த விரிவழுத்தத்தை ‘கீழ்நிலை அழுத்தம்’ (Diastolic Blood Pressure) என்றும் கூறப்படுகிறது. ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவிக்கு ‘ஸ்பிக்மோ மோனோமீட்டர்’ என்று பெயர். ரத்த அழுத்த அளவை மில்லி மீட்டரில் குறிப்படுவது வழக்கம்.
கீழ் அழுத்தம் 60mm முதல் 90mm வரையும் மேல் அழுத்தம் 100 mm முதல் 140 mm வரையும் இருக்கலாம் எனப்படுகிறது. நடுத்தர வயதில் 120 mm/80 mm ரத்த அழுத்தம் கானப்படுகிறது. இதுவே சராசரியான ரத்த அழுத்த அளவாக கருதப்படுகிறது. அதிக ரத்த அழுத்தத்தை (ரத்தக் கொதிப்பு) Hypertension என்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை Hypotention என்றும் அழைக்கப்படுகிறது.
அதிக உணவு, அதிக உடல் எடை, உணவில் அதிக உப்பு, கொழுப்பு சேர்த்தல், சத்தில்லாத உணவுப் பழக்கம், காபி, தேயிலை, புகை, மது, போதைப்பழக்கம், போதிய உடற்பயிற்சியில்லாமை, குறைவான உடலுழைப்பு அல்லது தொடர்ந்த நீடித்த கடும் முயற்சிகள், சர்க்கரை வியாதி, சிறுநீரக வியாதி, கருத்தடை மாத்திரைகள் (Contraceptive Pills), ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன் சிகிச்சை, ஸ்டீராயிடு மருந்துகள் போன்ற காரணங்களால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ரத்தக் குழாய் சுவர்கள் தடிப்பதாலும் ரத்தக் குழாய்கள் சுருங்குவதாலும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு ரத்தக் கொதிப்பு உண்டாகலாம். ரத்த குழாய்கள் சுருங்குவதற்கும் தடிப்பதற்கும் கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து முக்கிய காரணமாக உள்ளது.
எப்போதும் கவலை, மன இறுக்கம், மன உளைச்சல், ஏமாற்றங்கள், விரக்தி, போட்டி, பொறாமை உணர்வு, அடிக்கடி மன எழுச்சிகளுக்கு ஆட்படுதல் போன்ற காரணங்களாலும் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது. உணர்ச்சிமயமான மேடைப்பேச்சு காரணமாகவும் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் சிலருக்கு தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். இது பிரசவத்திற்குப் பின்னர் மாறிவிடும்.
குடும்பச் சூழல், உணவு ஒரே மாதிரியான வாழ்க்கைப் பழக்கங்கள் காரணமாக பாரம்பரியமாகவும் ரத்தக் கொதிப்பு வரக்கூடும். பல்வேறு காரணங்களுக்காக இறந்த சில கருக்களின் இருதய ரத்தக் குழாய்களை சோதனை செய்த போது இயல்பாகவே, பிறவியிலேயே ரத்த நாளங்கள் தடித்த தன்மை கொண்டவையாக, பல்வேறு இருதய அமைப்புப் பலவீனங்கள் கொண்டவையாக இருந்ததை மருத்துவ உலகம் கண்டுள்ளது.
மிகை ரத்த அழுத்தம் நீடிப்பதால் இருதயம், சிறுநீரகம், மூளை மற்றும் ரத்தக் குழாய்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஆயுள் குறைவதாகவும், மாரடைப்பு மூலம் அகால மரணம் நிகழும் ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரத்தக் கொதிப்பு காரணமாக உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைதல், நாளமில்லா சுரப்பிகள் பாதிக்கப்படுதல், மூளையில் ரத்த நாள வெடிப்பு, ரத்தக் கசிவு (Cerebral Hemorrhage) மூளை ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு (Cerebral Thrombosis) அதன் காரணமாக ஏற்படும் பக்கவாதம், விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் தடிப்பு, ரத்தக் கசிவினால் ஏற்படும் பார்வைக் குறைவு, தலைவலி, தலைப்பாரம், எளிதில் களைப்பு, தூக்கமின்மை அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மூச்சுத்திணறி அலறி விழித்தல் நெஞ்சு படபடத்தல், கிறுகிறுப்பு, காது இரைச்சல் போன்ற உடல் இயக்கக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
ரத்த அழுத்தம் ஒரு மோசமான நோய். எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய நோய் சாகும் வரை BP மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல, அதன் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளையும் மூளையில் ஏற்படும் ரத்த உறைவுகளையும், ரத்தக் கசிவுகளையும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் (எந்தவித அறுவை சிகிச்சைக்கும் அவசியமின்றி) குணப்படுத்த முடிகிறது. பக்கவாதம் தாக்கிய பாகங்களை செயல்படவைக்க முடிகிறது. ரத்தக் கொதிப்பு ஓர் தனிப்பட்ட நோயல்ல. அது உயிர்மையப் பாதிப்பின் ஓர் அறிகுறி.
ஹோமியோபதி மருந்துகள் மனிதனை முழுமையாக ஆய்வு செய்து அளிக்கப்படும் போது இயற்கையான வழிமுறைகளில் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கச் செய்து, உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி, உறுப்புக்களுக்கு சக்தியளித்து மனிதனையே புதுப்பிக்கின்றன.
ஆதாரம் : Dr.S.வெங்கடாசலம் , மாற்றுமருத்துவ நிபுணர் சாத்தூர் – 626203, செல். 9443145700
கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
ஃபிரே நோய் பற்றிய குறிப்புகள்