பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / இணையம் மூலம் எளிதாக ரத்ததானம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம்

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்து கொள்ளலாம்.

இரத்த தானம்

இரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை.

இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் பதிவு செய்து கொள்ளலாம்.

Blood Helpers - http://bloodhelpers.com/

இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும். உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள் நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள இயலும்.

Indianblooddonors - http://www.indianblooddonors.com/

கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது, SMS அனுப்பியோ தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெது இருக்க வேண்டும். அவ்வளவே.

Friends2Support - http://www.friends2support.org/index.aspx

முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம் தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும்.

Blood Donors - http://www.blooddonors.in/

தளத்தின் முகப்பிலேயே யாருக்கு, எங்கே ரத்தம் தேவை. என்ன காரணம் போன்றவற்றை சொல்லி விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும்.

மற்ற சில தளங்கள்

இந்தியாவில் இரத்த தானம் செய்பவர்கள் - http://www.indianblooddonors.in/default.aspx

பாரத் இரத்த வங்கி - http://www.bharatbloodbank.com/

இந்திய இரத்த வங்கி- http://www.bloodbankindia.net/

IBBS நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்திய இரத்த வங்கி - http://indianbloodbank.com/

இரத்த தானம் செய்பவர்கள் சங்கம் - http://blooddonorsclub.in/

இரத்தம் கொடு - http://www.shareblood.in

ஆதாரம் : அரசினர் ரத்த வங்கி

கேள்வி பதில்கள்

குருதிக்கொடை ஒரு பாதுகாப்பான நடைமுறையா?

குருதிக்கொடை முற்றிலும் ஒரு பாதுகாப்பான நடைமுறையே. கிருமியகற்றப்பட்ட ஓர் ஊசி ஒருமுறையே ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்டுப் பின் களையப்படுகிறது. குருதிக்கொடை ஓர் எளிய நான்கு கட்ட நடவடிக்கை: பதிவு, மருத்துவ வரலாறு, குருதிக்கொடை மற்றும் ஓய்வு.

நான் எதற்காகக் குருதிக்கொடை அளிக்க வேண்டும்?

பிறருக்கு உதவி செய்வதே ஒரு முக்கிய காரணம். ஒரு தடவை அளிக்கும் கொடை மூன்று உயிர்களைக் காக்கும். நீங்கள் 18 வயதில் குருதிக்கொடை அளிக்கத் தொடங்கி, 90 நாட்களுக்கு ஒருமுறை 60 வயது வரை அளித்து வந்தால் வாழ்நாளில் 30 காலன் இரத்தத்தை தானம் அளித்திருப்பீர்கள். இதன் மூலம் 500 உயிர்களைக் காப்பாற்ற உதவி இருக்கிறீர்கள்.

குருதிக்கொடை அளிப்பதற்கு முன்னான முன்னெச்சரிக்கைகள் எவை?

  • அதிக நீரும் நீராகாரமும் அருந்தவும்
  • காஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்கவும்
  • எதிர்வினைகளைத் தவிர்க்க சிறந்த முறையில் உண்ணவும். இரும்புச்சத்துள்ள உணவை உண்ணுதல் சிறந்தது.

குருதிக்கொடை அளிக்க விரும்பினால் நான் யாரைத் தொடர்புகொள்ளவேண்டும்?

சான்றிதழ் பெற்ற ஒரு இரத்த வங்கி,  குருதிக்கொடை முகாம் அல்லது ஒரு இயங்கும் இரத்த வாகனத்திலும் நீங்கள் குருதிக்கொடை அளிக்கலாம்.

2.93150684932
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top