অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இரத்த தானம்

இரத்த தானம்

Blood Donation.PNG

ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் யாராவது சிலருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. சிலசமயம் உங்கள் இரத்தம் ஒரு உயிரை விட மேலனதாக ஆகிவிடும். விபத்துக்குள்ளானவர்கள், குறைப்பிரசத்தில் பிறந்த குழந்தைகள், பெரிய அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் போன்றவர்களுக்கு முழு இரத்தம் தேவைப்படுகிறது. அங்கே உங்கள் இரத்தம் பரிசோதனைக்குப் பிறகு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. அடிபட்ட, இரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மற்றும் மற்ற அறுவைசிகிச்சைக்குள்ளாகும் நோயாளிகளுக்கு இரத்த சிவப்பணுக்கள் மட்டும் தேவைப்படுகிறது. அத்தகைய இரத்தச்சிவப்பணுக்கள் தானம் கொடுத்த உங்கள் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

இரத்ததானம் செய்யும் போது கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்

  • இரத்ததானம் கொடுப்பதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர் நன்றாக சாப்பிடுதல் வேண்டும்.
  • இரத்ததானம் அளித்தப்பின் வழங்கப்படும் சிற்றுணவுகளை சாப்பிடுதல் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு நன்றாக உணவருந்துதல் வேண்டும்.
  • இரத்ததானமளிக்கும் நாளில் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். தானமளித்த 3 மணி நேரத்திற்குபிறகு புகைப்பிடிக்கலாம்.
  • இரத்ததானம் அளிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் மது அருந்தியிருந்தால் இரத்ததானம் செய்வதற்கு அனுமத்திக்கப்பட மாட்டீர்கள்.

இரத்ததானம் பற்றிய தவறான நம்பிக்கைகள்

  • “நான் இரத்ததானம் அளித்தப்பின் சோர்வாகவும், அசதியாகவும் உணர்கிறேன்” – இரத்ததானம் செய்தபின்பு நீங்கள் நீராகாரங்கள் அருந்துவதாலும் மற்றும் நன்றாக உணவருந்துதலும் நீங்கள் சோர்வாகவும், அசதியாகவும் உணரமாட்டீரகள்.
  • “நான் சாதாரண வேலைகளை தொடரமுடியாது ” – இரத்ததானம் அளித்த பிறகு வேலைகளை செய்யவேண்டாம் என்று கூறினாலும் உங்களால் எல்லா வேலைகளையும் தொடரமுடியும்.
  • “எனக்கு இரத்தம் குறைவாக இருக்கும்” – நீங்கள் மருத்துவரால் தானமளிக்கத் தகுதியானவராக சான்றளிக்கப்பட்டால் தானமளித்தப்பின்பும் உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கும்.
  • “நான் மது அருந்த முடியாது” - நீங்கள் இரத்ததானமளித்த மறுநாள் மது அருந்தலாம்

ஆதாரம்:BharatBloodBank

இரத்தம் பற்றிய உண்மைகள்

  • இரத்தம் என்பது உயிரை பாதுகாக்கும் திரவம். இது உடலிலுள்ள இதயம், தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் மூலமாக உடலில் சுழற்சி செய்கிறது.
  • இரத்தம் நமது உடம்பிற்கு உணவு, தாதுஉப்புகள், ஹார்மோன்கள், உயிர்சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், எதிர்உயிரி மருந்துகள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
  • இரத்தம் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் மற்றும் கரிமில வாயுவை எடுத்துச்செல்கிறது.
  • இரத்தம் நோய்தொற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், காயங்களை ஆறவைக்கவும் உதவுகிறது. உங்களுடைய உடலை ஆரோக்யமாக வைத்திருக்கிறது.
  • உங்களுடைய உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தமாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின் உடலில் ஒரு கிண்ணம் அளவுள்ள இரத்தம் இருக்கும்
  • இரத்த வெள்ளையணுக்கள் கிருமிகளின் தொற்றினை எதிர்க்கும் முதன்மை நோய் எதிரியாகும்.
  • கிரோனுலோஸைட்ஸ் என்ற ஒருவகை இரத்த வெள்ளையணுக்கள், இரத்த நாள சுவர் மீது உருண்டு பாக்டீரியாக்களை தேடி அழிக்கிறது.
  • இரத்த சிவப்பணுக்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.
  • இரண்டு மூன்று சொட்டு இரத்ததில் காணப்படும் சுமார் ஒரு பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் இருக்கும்
  • இரத்த சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்கள் இரத்த ஒட்ட மண்டலத்தில் உயிருடன் இருக்கும்
  • . இரத்த தகடுகள் இரத்த உறைதலுக்கு உதவிப்புரிந்து லுகீமீயா மற்றும் இதர புற்றுநோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது .

ஆதாரம்:BharatBloodBank

இரத்த தானம் ஏன் செய்யவேண்டும்?

இரத்தம் ஒரு உயிரோட்ட திரவம், எல்லா உயிர்களும் இதனைச் சார்ந்த்தே. இரத்தமானது 60% திரவ பொருளாலும் 40% திட பொருளாலும் ஆனது. திரவபொருள் பிளாஸ்மா என்றழைக்கப்படுகிறது. இது 90% நீராலும் 10% உணவுப்பொருள், ஹார்மோன்கள் மற்றும் இதர பொருட்களாலும் ஆனது. இரத்தம் எளிதில் உணவு மற்றும் மருந்துகளால் நிரப்பிக்கொள்ளும். ஆனால் இரத்தத்தின் திடப்பகுதிகளான இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த தகடுகள் போன்றவைகள் இறந்தால் மீண்டும் உருவாக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும்

  • இப்படியாக உள்ள நீங்கள், ஒரு நோயாளிக்கு இரத்தமாற்றம் செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம், அவர்களின் உயிரைவிட விலைமதிப்பு மிக்கதாகிறது.
  • சில சமயங்களில் நம்முடைய உடல் இரத்த பரிமாற்றத்திற்கு ஏற்றதாக இல்லாமல்கூட இருக்கலாம்.
  • நீங்கள் அறிந்த்து போலவே இரத்தத்தை அறுவடை செய்யமுடியாது, தானத்தால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இரத்தம் தேவைப்படும் நபருக்கு இரத்ததானம் அளிப்பதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும்.
  • இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 250CC அளவுடைய 40 கோடி யூனிட்டுகள் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 5,00,000 யூனிட்டுகள் மட்டுமே தானமாக கிடைக்கிறது.

ஆதாரம்:BharatbBloodBank

இரத்த தானம் செய்வோர்களின் பயனுள்ள இணையங்கள்

மேலும் பயனுள்ள இணையங்கள்

கேள்வி பதில்கள்

இரு கொடைகளுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளிக் காலம் எவ்வளவு?

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதத்துக்கு ஒருமுறையும் பாதுகாப்பாகக் குருதிக்கொடை அளிக்கலாம்.

குருதிக்கொடை அளிக்க வயது மேல்வரம்பு என்ன?

குருதிக்கொடை அளிக்க வயது மேல்வரம்பு 65. எனினும், முதல் தடவை குருதிக்கொடை அளிப்பவரையும் 60 வயதுக்கு மேற்பட்டத் தொடர்ந்து குருதிக்கொடை அளிப்பவரையும் மருத்துவரின் வழிகாட்டுதல் படி ஏற்றுக்கொள்ளலாம்.

குருதிக்கொடையின் போது எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது. இது எவ்வளவு விரைவில் உடலால் ஈடுகட்டப்படும்?

350 மி.லி. முதல் 450 மி.லி. வரை எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு இருக்கும். பொதுவாக 24 மணி நேரத்தில் இந்த இரத்தம் உடலால் ஈடுகட்டப்படும். சிவப்பணுக்களை முழுமையாக ஈடுகட்ட 4-5 வாரங்கள் தேவைப்படும்.

குருதிக்கொடைக்குப் பின் பலவீனம் அடைய அல்லது தொற்று எதையும் பெறவாய்ப்புண்டா?

இல்லை. நீங்கள் நல்ல உடல்நிலையோடு இருந்தால் எந்த கவலையும் இல்லை. ஆய்வகம் அல்லது ஊர்தியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனிக்கப்பட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவானதே.

கடைசியாக மாற்றப்பட்டது : 6/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate