பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / மீனவர்க்கு முதலுதவி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மீனவர்க்கு முதலுதவி

மீனவர் கடலில் மீன்பிடிக்கும் போது தேவைப்படும் முதலுதவி பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்

ஒரு மீனவர் கடலில் மீன்பிடிக்கும் போது கடலில் விழுந்தால் எவ்வாறு முதலுதவி செய்யலாம்?

ஒருநபர் கடலில் விழுந்து இறந்தால் Drowing என்று கூறுவார்கள்,  அல்லது கடலில் விழுந்து நீரை தண்ணீரை குடித்து விட்டால் அதற்கு Near Drowing என்று கூறுவார்கள். இந்த நபரை உடனடியாக எழுந்து நடக்க செய்யக்கூடாது. இவரை திருப்பி போட்டு உடம்பை அழுத்து நீரை வெளியேற்றுதல் செய்யக்கூடாது. முதலில் இவருக்கு தேவை சீரான சுவாசம்.  இவ்வாறு கடலில் விழுந்து வெளிவந்த நபருக்கு உடல் வெப்பநிலை குறைய ரம்பிக்கும். எனவே, உடனடியாக இவரை தரையில் தொந்தரவு செய்யாமல் சாதாரணமாக படுக்க வைத்து உடம்பிலுள்ள ஈரத்துணியை மாற்றி புது துணியை அணிய செய்யவேண்டும். பின் தலை மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள ஈரத்தை அகற்றி வெப்பமடையசெய்ய வேண்டும்.  இவர் சிறிது நேரத்தில் சாதாரண நிலைக்கு வந்தாலும் 24 மணிநேரம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

கடலில் மீனவர் மீன்பிடி தொழில் செய்யும் போது வெட்டு வந்தால் அல்லது காக்காய் வலிப்பு (Fits) வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

வலிப்பு வந்த நபருக்கு தலை, கை, கால்களில் அடிபடாமல் அருகில் உள்ள பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். வலிப்பு வந்த நபருக்கு அவருடைய உமிழ்நீர் மூச்சுகுழாயில் படாமல் வலது பக்கம் அல்லது இடது பக்கம் திருப்பி படுக்க வைத்து உமிழ்நீர் உள்ளே போகாமல் பாதுகாத்தாலே போதும்.  அவ்வாறு செய்தால் மூச்சு திணறல் இல்லாமல் சிறிது நேரத்தில் குணமாகலாம். பின்பு மருத்துவரிடம் சென்று  அவருக்கு தலையில் அல்லது நரம்பு சம்பந்தமான பிரச்சினை என்ன உள்ளது என்று சிகிச்சை பெறலாம். வலிப்பு வரும் நபர் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். தனியாக வாகனம் ஓட்டிச்செல்ல கூடாது. கடலுக்கு நீச்சல் செய்ய போகக்கூடாது. வலிப்பு நின்ற பிறகும்  அரை மணிநேரம் ஓய்வு எடுத்து பின்பு தனது வேலையை தொடரலாம். கண்டிப்பாக 24 மணிநேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவருக்கு வாந்தி வந்தால் என்ன செய்யலாம்?

  1. 1/2 தேக்கரண்டி உப்பு
  2. 6 தேக்கரண்டி சர்க்கரை
  3. 1 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கடி கொடுக்க வேண்டும். வாந்தி பேதி ஏற்பட்டவருக்கு உடலில் நீர்சத்து குறைந்து கொண்டே வருவதால் அதை ஈடுசெய்ய இவ்வாறு கொடுத்து வர உடல்நிலையை சீராக வைக்கலாம். அதிகம் ஏற்பட்டால் கரை வந்த உடன் மருத்துவரை அணுக வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு மீன்வளத்துறை

2.91463414634
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top