பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நச்சுப்பொருட்கள்

நச்சுப்பொருட்கள் என்றால் என்ன, அதை எப்படி பராமரிப்பது போன்ற தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நச்சுப் பொருட்கள்

நச்சுப் பொருட்கள் திட, திரவ அல்லது வாயுப் பொருளாக இருக்கலாம். அவை அதிக அளவில் உடலில் சென்று கலந்து விட்டால் உடல் நலனுக்கு பாதிப்பையோ உயிரிழப்பையோ ஏற்படுத்திவிடும். கீழ்க்கண்ட மூன்று வழிகளில் அவை உடலுக்குள் நுழைகின்றன.

 • நுரையீரல்கள் மூலம்
 • தோல் / சருமத்தின் மூலம்
 • வாய் வழியாக

நுரையீரல்கள் வழியாக நுழைதல்

இப்பகுதியில் வாய் மற்றும் சருமத்தின் வழியாக உடலுக்குள் நச்சுகள் எதேச்சையாகவோ அல்லது வேண்டுமென்றோ நுழைவது குறித்து காண்போம். குறிப்பிட்ட சிலவகை வேளாண் மற்றும் தோட்டக்கலை பணிகளில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது உருவாகும் நச்சுகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான நச்சுப் புகுதல் தொடர்பான நிகழ்வுகள் எதேச்சையாக நடக்கக்கூடியவையே. இப்பாதிப்புகளுக்கு எதிரான அறிவார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம் ஆகும்.

செய்யக்கூடாதவைகள்

 • மாத்திரைகள் மற்றும் மருந்துகளைக் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் வைக்கக்கூடாது. கைக்கு எட்டாத உயரத்தில் பூட்டப்பட்ட அலமாரிகளில் வைக்கவும் (எ-கா: பீரோ, அலமாரிகளுக்கு மேல்).
 • ஒருபோதும் மாத்திரை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காதீர்கள். அவை தரம் கெட்டுவிடும். /மருந்து ,மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான நாள் /தேதி முடிந்திருந்தால் அவற்றைப் பயன்படுத்தாதீர்கள் .அது நச்சுத்தமைக்கு உள்ளாக்கும்.மருத்துவ சிகிச்சை முடிந்த பின் மீதமுள்ள மருந்து மாத்திரைகளை அவற்றை வாங்கினவர்களிடம் திரும்பக் கொடுத்துவிடுங்கள் ( மருந்துக் கடை அல்லது மருத்துவரிடம் ) அல்லது கழிப்பறையில் போட்டு தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்துங்கள்.
 • ஒருபோதும் இருட்டில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது அல்லது கொடுக்கும் போது என்ன மாத்திரை என லேபிலைப் படிக்கவும்.
 • எலுமிச்சை பழ பானங்கள், குளிர் பானங்கள் அல்லது பிற பானங்கள் உள்ள பாட்டில்களில் கெமிக்கல்,மருந்து உள்ளிட்ட நச்சு திரவங்களை ஒருபோதும் ஊற்றி வைக்காதீர்கள். பிள்ளைகள் அவற்றைத் தவறாக அறிந்துகொண்டு அவற்றைக் குடித்துவிடும்.
 • வீடு துப்புறவு செய்ய பயன்படுத்தும் டிடெர்ஜென்ட், ப்ளீச்சிங் பவுடர்,கெமிக்கல் உள்ளிட்டவைகளை ஒருபோதும் கை/பாத்திரம் கழுவும் சிங்க் தொட்டிகளுக்குக் கீழே வைக்காதீர்கள். தவழும் குழந்தைகள் அவற்றை தட்டி விட்டோ அல்லது கீழே தள்ளியோ விடுவர். வெளுப்பான் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துவிட்டால் அவை கழிவறையை மிக நன்றாக சுத்தம் செய்யும் என்று எண்ண வேண்டாம். மாறாக அவை நச்சுவாயுவினை உற்பத்திசெய்யும். அந்நச்சுவாயுவினை நுகர்ந்தால் அது உடல் நலனுக்கு நல்லதல்ல.
 • நச்சு வாய் வழியாக உள் சென்றிருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஒருபோதும் மிக அதிகமான உப்புக்கரைசலைக் கொடுக்காதீர்கள்.
 • விபத்துக்குள்ளானவர் சுயநினைவின்றியும் மற்றும் வாயில் ஏதேனும் பாதிப்புடனும் இருந்தால், அவருக்கு ஒருபோதும் எந்த ஒரு பொருளையும் வாய் வழியாகக் கொடுக்காதீர்கள்.
 • விபத்துக்குள்ளானவர் சுயநினைவின்றி இருந்தால் எந்த ஒரு பொருளையும் வாய் வழியாக கொடுக்க முயற்சிக்கக் கூட வேண்டாம்.
 • பெட்ரோலியப்பொருட்களைக் குடித்தவர் அதை வாந்தி பண்ணும்வரை ஒருபோதும் காத்திருக்காதீர்கள்.உடனே அவரை மீளுயிர்ப்பு நிலைக்குக் (Recovery Position) கொண்டுசெல்லவும். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.
 • மது அருந்தி இருக்கும்போது எவ்வித மாத்திரைகளையும் குறிப்பாக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்காதீர். மதுவுடன் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மரணத்தையோ அல்லது தீவிர உபாதைகளையோ விளைவிக்கும்.

பொதுவான நச்சுகள்

வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ளும் சில பொதுவான நச்சுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அவை

 • சிலவகை விஷத்தன்மை கொண்ட பழங்கள் மற்றும் கொட்டைகள்.
 • பூஞ்சைகள் : விஷ/நச்சுக்காளான்கள்
 • அழுகிய உணவுப்பண்டங்கள்
 • சக்திவாய்ந்த வேதிப்பொருட்கள் : வெண்மெழுகு (பாரஃபின்), பெட்ரோலிய வெளுப்பான்கள், களைக்கொல்லிகள், வேதிஉரப்பொருட்கள்
 • அதிக அளவில் உட் கொள்ளும் மருந்துமாத்திரைகள்: ஆஸ்பிரின், தூக்கமாத்திரைகள், உளத்தமைதியாக்கிகள், இரும்பு சத்து மாத்திரைகள்
 • விலங்குகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் விஷ மருந்துகள் : எலிப்பாசானம்
 • மது
 • பச்சை நிறம் கொண்ட உருளைக்கிழங்குகள் : பச்சை உருளைக்கிழங்குகள் எவ்வளவு ஆபத்தானவை என்ற விசயம் பொதுவாக பலருக்கும் தெரிவதில்லை. அவற்றை உண்பதால் அடி வயிற்றில் வலி , வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும்கூட ஏற்படும். அதன் பின்பு தடுமாற்றமும் நிலைகுலைவும் ஏற்படலாம்.

பொதுவான சிகிச்சை

விபத்துக்குள்ளானவர் சுயநினைவுடனோ அல்லது சுயநினைவிழந்தோ இருக்கலாம். அவர் சுயநினைவுடன் இருந்தால் நீங்கள் கொடுக்கும் சிகிச்சைக்கு கொஞ்சம் உதவியாக இருக்கலாம்.

அ. விபத்துக்குள்ளானவர் சுயநினைவுடன் இருக்கும்போது என்ன பொருளை விழுங்கினார், எந்த அளவு விழுங்கினார் மற்றும் எப்போது விழுங்கினார் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆ. விபத்துக்குள்ளானவர் அருகில் மாத்திரைகள், காலிபாட்டில்கள் அல்லது மருந்து அட்டைகள்/பெட்டிகள் எவையேனும் இருந்தால், அவற்றை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும். இவை எந்த வகையான நச்சு விழுங்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிய உதவும்.

இ. விபத்துக்குள்ளானவரின் வாய் வெந்தபடியோ,கொப்பளங்களுடனோ அல்லது இதர பாதிப்புகளுடன் இருக்கிறதா என வாயினைப் பரிசோதிக்கவும். அவ்வாறு இருந்து, அதே சமயம் அவரால் விழுங்கமுடியும் என்ற நிலையில் அவரால் குடிக்கமுடிந்த அளவு பால் அல்லது தண்ணீரைக் கொடுங்கள்.

ஈ. விபத்துக்குள்ளானவரை அவசியம் வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். வாந்தி எடுக்கும் பொழுது வாந்தியை சிறு கிண்ணம் அல்லது பாலித்தீன் பையிலோ சேகரித்து அவற்றை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும். இவை எந்த வகையான நச்சு விழுங்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிய உதவும்.

உ. விபத்துக்குள்ளானவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவும். விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தோ அல்லது இழந்து கொண்டிருப்பவராக இருக்கும் பொழுது எச்சரிக்கையுடன் கீழ்கண்டவற்றை சரிபார்க்கவும்.

 • சுவாசத்தை சரிபார்க்கவும். சுவாசம் நின்றுபோயிருந்தால். வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை கிஸ் ஆஃப் லைஃப் என்ற முறையை ஆரம்பிக்கவும். ஆனால் விபத்துக்குள்ளானவரின் வாய் மற்றும் உதடுகள் வெந்து / எரிந்து இருந்தால் இம்முறையினைப் பயன்படுத்தாமல் செயற்கை சுவாசம் அளிக்கவும்.
 • விபத்துக்குள்ளானவர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருந்தால், கால்களை மேலே உயர்த்திய வண்ணம் அவரை மீளும் நிலையில் வைக்கவும், அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள். (விபத்துக்குள்ளானவர் குழந்தையாக இருந்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது குழந்தையின் தலைப்பகுதி உங்கள் முட்டிகளின்மேல் வைத்துக்கொள்ளவும்)
 • விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தைத் தொடர்ந்து கவனியுங்கள். பெரும்பாலான நச்சுகள் விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தைப் பாதிக்கலாம்.
 • விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லவும்.
 • விபத்துக்குள்ளானவரைக் குளிர்ச்சியாக வைக்கவும். ஈரத் துணியினை நெற்றியில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்சியினை கழுத்து,முதுகுத்தண்டு மற்றும் உடம்பில் வைக்கவும்.
 • விபத்துக்குள்ளானவரால் எவ்வளவு குளிர்ந்த நீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீரைக் குடிக்கவைக்கவும்.
 • உடலில் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுகிறதா என கண்காணியுங்கள்.
 • விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தால், சுவாசத்தை சரிபார்க்கவும் மற்றும் அவரை அந்நிலையிலிருந்து மீளும் நிலையில் வைக்கவும். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்
 • பூச்சி/விஷ மருந்து பாட்டிலைப் பத்திரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல்வும். ஏனெனில் பாட்டில்களில் சிகிச்சை குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.அது மருத்துவரின் சிகிச்சைக்கும் உதவும்.

தோல்/சருமத்தின் மூலம் நச்சு புகுதல்

தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் பெரும்பான்மையானவற்றில், (குறிப்பாக தோட்ட ஆட்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்துபவை) வீரியம் / விஷத்தன்மையுள்ள மிக்க வேதிப்பொருட்கள் (உதரணம் : மாலதியான்) நிறைய இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தும்போது சருமத்தின் வழியே உடலுக்குள் நுழைந்து அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

பாதிப்பு அறிகுறிகள் :
 • நடுக்கம், உடல் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுதல்
 • விபத்துக்குள்ளானவர் படிப்படியாக சுயநினைவை இழத்தல்
பராமரிப்பு
 • நச்சுப்பொருட்களால் பாதிக்கப்பட்ட சருமப் பகுதியை குளிர்ந்த நீரைக்கொண்டு நன்கு கழுவவும்.குளியலின் போது எந்தவித குளியல் சோப்பும் பயன்படுத்தாதீர்.ஏன் என்றால் அவை நச்சுப்பொருளின் வீரியத்தைக்கூட்டி சரும பாதிப்பை அதிகரிக்கலாம்.
 • நச்சு/வேதிப்பொருளால் பாதிக்கப்பட்ட உங்கள் உடையினைக் கழற்றும் பொழுது, உடம்பில் அவை படாதவாறு கவனமாகக் கழற்றவும்.
 • விபத்துக்குள்ளானதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யுங்கள். அவரை கீழே படுக்கவையுங்கள் மற்றும் அசைவின்றி அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள்.
 • விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லவும்.
 • விபத்துக்குள்ளானவரைக் குளிர்ச்சியாக வைக்கவும். ஈரத் துணியினை நெற்றியில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்சியினை கழுத்து,முதுகுத்தண்டு மற்றும் உடம்பில் வைக்கவும்.
 • விபத்துக்குள்ளானவரால் எவ்வளவு குளிர்ந்த நீர் குடிக்கமுடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீரைக் குடிக்கவைக்கவும்.
 • உடலில் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுகிறதா என கண்காணியுங்கள்.
 • விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தால், சுவாசத்தை சரிபார்க்கவும் மற்றும் அவரை அந்நிலையிலிருந்து மீளும் நிலையில் வைக்கவும். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்
 • பூச்சி/விஷ மருந்து பாட்டிலைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். /அதனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும். ஏனெனில் பாட்டில்களில் சிகிச்சை குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அது மருத்துவரின் சிகிச்சைக்கும் உதவும்.
2.89333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top