பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / பயனுள்ள முதலுதவி குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பயனுள்ள முதலுதவி குறிப்புகள்

பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான முதலுதவி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்தக்கசிவு

விபத்துகள் மற்றும் காயங்கள் ஏற்படும் போது இரத்த சுழற்சி அமைப்பிலிருந்து ஏற்படும் இரத்த இழப்பே இரத்தக்கசிவு ஆகும். உடலின் உள்ளே இருக்கும் இரத்தக் குழாயிலிருந்தும் இரத்தக் கசிவு ஏற்படலாம். மூக்கு, வாய் அல்லது தோலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் ஆகியவை மூலம் உடலின் வெளிப்புறத்திலும் இரத்தக் கசிவு ஏற்படலாம்.. காயத்தில் வேற்றுப்பொருட்கள் இருந்தால் என்ன செய்யவேண்டும்

வேற்றுப்பொருட்களாக கண்ணாடி, மரத்துண்டு அல்லது உலோகம் முதலியவை இருக்கலாம்.

காயத்தின் உள்ளே போகாமல் இருக்க விரல்களைக் கொண்டு காயத்தின் ஓரத்தில் காயம் கையிலோ அல்லது காலிலோ ஏற்பட்டால் அதிகமான இரத்தக்கசிவு இருக்கும். எனவே காயம்பட்டவரை படுக்கவைத்து கை அல்லது காலை இதயத்தின் மட்டத்திலிருந்து மேலே இருக்குமாறு வையுங்கள்.

இரத்தப்போக்கு அதிகரிக்கா வண்ணம் உடன் சுத்தமான துணியால் கட்டுப்போடவும்.அழுத்தம்


ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது காயம்பட்டவரை காரின் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்.

இருமலுடன் வரக்கூடிய இரத்தம்

இருமும் பொழுது எப்போதாவது ஒருமுறையாவது கையளவு அல்லது அதற்குமேல் இரத்தமும் சேர்ந்து வந்தாலும் கூட அது நோயாளிக்கும் அவரது உற்றாருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது. இது நுரையீரலில் ஏற்படும் நோய்களான நுரையீரல் புற்றுநோய், தீவிர நிலையிலுள்ள காசநோய் அல்லது நுரையீரலில் துளைகளை உருவாக்கும் இதர நோய்களினால் ஏற்படுகிறது.

நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை

 • தலை மற்றும் தோள்ப்பட்டையை சற்று உயர்வாக பாதிக்கப்பட்ட பக்கம் சாய்த்து நோயாளியைப் படுக்க வையுங்கள்
 • வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்

மார்பில் ஏற்பட்ட காயத்தினால் நுரையீரலில் இரத்தக்கசிவு இருக்குமானால் சிறிதளவு பாலித்தீன் கொண்டுள்ள நாடா மூலம் காயத்தை இறுக்கமாகக் கட்டுங்கள். இது நெஞ்சுக் கூட்டுக்குள்ளும் காயத்திலும் காற்று புகாமல் தடுக்கும் இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்தாது.

 

உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.

வயிற்றிலிருந்து ஏற்படும் இரத்தவாந்தி

வயிற்றில் உருவான அல்சர் என்ற குடல்புண் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இது ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.

நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை

 • நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள்.
 • அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொடுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கதகதப்பான நிலையில் அவர் உடல்நிலை இருக்க வையுங்கள். அதே நேரம் குளிரில் நடுங்கவும் வைத்துவிடாதீர்கள்.
 • வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்.
 • தண்ணீர் கொண்டு வாயினைக் கழுவலாம். ஆனால் அந்நீரினை சிறிதளவேனும் விழுங்கிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
 • உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.

நோயாளி மயக்கமடைந்துவிட்டால், உடனே அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக, ஒருபக்கமாக சாய்த்து படுக்க வையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.இதனால் அவரது மயக்கநிலை சீராக வாய்ப்புள்ளது.

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு

 • வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
 • முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இருக்கச் செய்யலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
 • உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுக்க செய்யவும்
 • உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 • எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
 • மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்

வலிப்பு

வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம் . பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், அது ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.

அறிகுறிகள்

 • உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
 • நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
 • முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
 • சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.

முதலுதவி

 • பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
 • நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
 • நோயாளிக்கு குளிர்ந்த நீர் எதுவும் குடிக்க கொடுக்கக் கூடாது.
 • எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
 • மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
 • மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
 • பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.

முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

குறித்த வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

http://www.youtube.com/watch?v=7MPJauo4DdY

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

 • காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
 • இரத்தம் நிற்கும் வரை காயமடைந்த பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 • காயத்தைக் கட்டுவதற்கு சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
 • ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

 • வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
 • இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள்

 • காயத்தின் மீது வீக்கம்.
 • காயம் சிவந்து காணப்படுதல்.
 • வலி.
 • காய்ச்சல்.
 • காயத்தில் சீழ்பிடித்தல்.
 • எரிச்சல்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.

பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்யுங்கள்.

மூச்சுத்திணரல் மற்றும் மாரடைப்பு ஆகியவை உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால்,

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.

மயக்கம் ஏற்படுதல்

மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

 • தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
 • சோர்வு
 • வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
 • தோல் வெளுத்துக் காணப்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது

 • முன்புறமாக சாய வேண்டும்
 • தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக்  கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது

 • பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை  உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
 • இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
 • குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால்,   பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top