பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / மின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்

மின்சார அதிர்ச்சி மற்றும் தண்ணீடில் மூழ்கியவற்கான சிகிச்சை முறைப் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

மின்சார அதிர்ச்சி (தாக்குதல்)

மின்சாதனங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கொண்டு அவர் மின்சார அதிர்ச்சி(தாக்குதல்)விபத்துக்குள்ளானவர் என்பதை மிக சுலபமாகக் கண்டறியலாம்.

சிகிச்சை

விபத்துக்குள்ளானவரைத் தொடும் முன் மின் இணைப்புகளைத் துண்டித்துவிடுங்கள் விபத்துக்குள்ளானவரால் சுவாசிக்க முடிந்தால் உடனே அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். அதாவது ,அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள்.
எனினும், கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.

விபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால், வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை கிஸ் ஆஃப் லைஃப் என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.
மருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க ஆள் 108-க்கு அனுப்புங்கள். உடன் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

தண்ணீரில் மூழ்குதல்

தண்ணீரில் மூழ்கியவர்களை உடனடியாக மீட்டு கீழ்க்கண்ட முதலுதவியை செய்யவும்.

சிகிச்சை

  • காற்றோட்டத்திற்கு வழி வகை செய்து விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கிறாரா? இதயம் சரியாக இயங்குகிறதா? என்பதனைக் கண்டு தீர்மானிக்கவும்.
  • விபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால், வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறைகிஸ் ஆஃப் லைஃப் என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.
  • விபத்துக்குள்ளானவர் அப்போதுதான் சுயநினைவை இழந்தவராகக் காணப்பட்டால், தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.
  • மருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க உடனடியாக ஆள் அனுப்புங்கள்

தண்ணீரில் மூழ்குதல் முதலுதவி பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

2.84375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top