অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

முதல் உதவி குறிப்புகள்

முதல் உதவி குறிப்புகள்
 • முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில்/அலுவலகத்தில் பணியிடங்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
 • முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
 • பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
 • அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
 • பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
 • முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
 • அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
 • பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது உண்ணுவதற்கு திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
 • பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும் அவற்றை மருத்துவரிடம் சிகிச்சையின் போது காட்ட வேண்டும்.

முதலுதவிப் பெட்டி

அலுவலகம், விடு, தொழிற்சாலை, பள்ளிக்கூடம்,பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனம் என எல்லா இடங்களிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. வீட்டிலுள்ள டப்பாவையோ சிறிய அட்டைப் பெட்டியையோகூட இதற்குப் பயன்படுத்தலாம். முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை பொருட்கள் மற்றும் மருந்துகள் பின் வருமாறு:

 • சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் - பல அளவுகளில்
 • பேண்டேஜ் துணி ரோல்கள்
 • ஒட்டும் டேப்புகள்
 • முக்கோண, மற்றும் ரோலர் பேண்டெஜ்கள்
 • பஞ்சு (1 ரோல்)
 • பேண்ட் எய்ட்- பிளாஸ்டர்
 • கத்திரிக்கோல்
 • சிறியடார்ச்

 

 

 • லேடெக்ஸ் கையுறைகள் (2 ஜோடிகள்)
 • சிறிய கிடுக்கிகள்
 • ஊசி
 • ஈரப்பதம் கொண்ட டவல்கள்/சுத்தமான, உலர்ந்த துணிகளின் துண்டுகள்
 • ஆன்ட்டி செப்டிக் (சவ்லான், டெட்டால்)
 • தெர்மாமீட்ட்ர்
 • பெட்ரோலியம் ஜெல்லி ட்யூப்
 • ஊக்குகள் – பல அளவுகளில்
 • சுத்தப்படுத்தும் கரைசல் அல்லது சோப்
மருந்துகள் (டாக்டரின் பரிந்துரை தேவைப்படாதவை)
 • ஆஸ்பிரின் அல்லது பாரசட்டமால் வலி நிவாரணிகள்
 • வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்துகள்
 • பூச்சிக்கடி, தேனீக்கள் கொட்டுதல் ஆகியவற்றுக்கான ஆண்டிஹிச்டமீன் க்ரீம்.
 • ஆண்டாசிட் (வயிற்றுப் போக்குக்கு)
 • லக்ஸேட்டிவ்

 

 

எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் முதலுதவிப் பெட்டியை வைத்திருங்கள். மருந்துகள் காலாவதியானதும் மாற்றிவிடுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. நோயாளிக்கு இரத்தப் போக்கு அதிகமாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இரத்தப்போக்கை மட்டுப்படுத்தக் கூடியதாகக் கிடைப்பதைக் காயத்தின் மேல் வைத்து அழுத்தவும்.அருகில் உள்ள அவசர கால தொலைபேசி எண்ணில் அழைக்கவும் அல்லது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல யாரிடமாவது உதவி கேட்கவும்.

உதவி வரும் வரை காயத்தின் மேல் அழுத்தத்தை விட்டுவிட வேண்டாம்.

2. நோயாளி வெளிறி, குளிரையும் தலைசுற்றலையும் உணர்கிறார். இதற்குப் பொருள் என்ன?

உடலில் இரத்த ஓட்டம் போதுமான அளவுக்கு இல்லை என்று அர்த்தம். இது உயிருக்கு ஆபத்தான நிலை. ஏனெனில் இது வெகு விரைவில் உடல்திசுக்களில் உயிர்வளிக்குறைவு, மாரடைப்பு அல்லது உறுப்புகள் சிதைவு போன்ற பிற நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும். காயம் அல்லது நோயால் ஏற்படும் இந்நிலை அதிர்ச்சி என அழைக்கப்படும். இப்படி அதிர்ச்சிக்குள்ளாகும் யாரையாவது நீங்கள் பார்த்தால் உடனே அவரைப் படுக்க வைத்து கால்களை உடலைவிட அதிக உயரத்தில் இருக்குமாறு வைக்கவும். அதாவது கால்கள் இதயத்தை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும். இதனால் மூளைக்கும் இதயத்துக்கும் அதிக இரத்தம் பாயும்.

3. காயத்தைக் கழுவலாமா?

சிறு வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்புகளில் அழுக்கைக் கழுவலாம். அதிகமாக இரத்தம் வழியும் காயத்தைக் கழுவக் கூடாது. குழாயின் அடியில் கழுவினால் இரத்த உறைவு பொருட்கள் அகன்று இன்னும் அதிகமாக இரத்தம் வழியும்.

4. அதிக இரத்தப் போக்கின் போது செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

அதிக இரத்தப்போக்கின் போது செய்ய வேண்டியவை

 • உதவி வந்து கொண்டிருப்பதாகக் கூறி காயம்பட்டவருக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்
 • மருத்துவ ஊர்தியை உடனே அழைக்க வேண்டும்
 • காயம்பட்டவரின் நிலையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்
 • இரத்தப் போக்கை நிறுத்தக் காயத்தின் மேல் நேரடியான அழுத்தம் கொடுக்க வேண்டும்
 • காயம்பட்டவரின் மூச்சுப் பாதை தடைகள் இன்றி இருக்கிறதா என்று நோக்கவும்
 • நாடித்துடிப்போ மூச்சோ இல்லை என்றால் செயற்கை முறை சுவாசம் அளிக்கவும்
 • நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்க மரப்பால் கையுறை பயன்படுத்தவும்.
 • உடலின் மேற்பகுதியில் இரத்தப் போக்கு இருந்தால் தலையை உயர்த்தி வைக்கவும். உடலின் கீழ்ப்பகுதியில் இரத்தப்போக்கு இருந்தால் காலை உயர்த்தி வைக்கவும்

அதிக இரத்தப்போக்கின் போது செய்யக்கூடாதவை

 • தேவைப்படாவிட்டால் நோயாளியை நகர்த்த வேண்டாம்
 • எப்போதும் முதுகெலும்புக் காயம் இருப்பதாகவே கருதவும் (நோயாளியை நகர்த்த வேண்டாம்)
 • எலும்பு முறிவுகளை சரி படுத்த முயல வேண்டாம் (நோயாளியை அசையாமல் வைத்தால் போதுமானது)
 • இரத்தப் போக்கை கட்டுப்படுத்த நேரடி அழுத்தத்தைப் பயன்படுத்தவும்.
 • கண்களில் விழுந்த பொருட்களை அகற்ற வேண்டாம்
 • தீக்காயக் களிம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்
 • அவசரகால உதவிகளை கூடிய மட்டும் விரைவாக அழைக்கவும்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate