பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / உயிரை பறிக்கும் கொடிய நோய்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிரை பறிக்கும் கொடிய நோய்கள்

24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள் பற்றிய தகவல்

டெங்கு

உலக மக்கள் தொகையில் 40% பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. டெங்கு வைரஸ் தாக்கும் கொசுக் கடித்த ஒரே நாளில் 41 டிகிரி செல்சியஸ் அளவு காய்ச்சல் ஏற்படும் அபயம் இருக்கிறது. டெங்கு தாக்கம் ஏற்பட்டால் தசை வலி முதலில் ஏற்படும், உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இரத்த தட்டுக்களை டெங்கு அழிக்க தொடங்குகிறது.

எபோலா

மேற்கு ஆப்ரிக்காவில் மட்டும் 28,000க்கும் மேற்பட்ட மக்கள் எபோலா நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டனர். இதுவரை அங்கு 70% பகுதியில் எபோலாவுக்கான சிகிச்சையின்றி மக்கள் இறந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இரத்த செல்களை பாதித்து, இரத்த கட்டிகள் உருவாக இது காரணமாகிறது. மேலும், இரத்த கசிவை ஏற்படுத்தி உடல் உறுப்புகள் செயலிழக்கவும் எபோலா காரணமாகிறது.

புபோனிக் பிளேக் - (Bubonic Plague)

14ஆம் நூற்றாண்டில் இந்த புபோனிக் பிளேக் நோய் காரணமாக 50 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே 20,000க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளர்கள். இது, நாய் மற்றும் பூனையிடம் இருந்து கூட பரவ வாய்ப்புகள் இருக்கின்றன. சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரே நாளில் 60% பேர் இறந்துள்ளனர்.

குடல் வைரசு D68 (Enterovirus D68)

இது ஒரு ஆக்ரோஷமான சுவாசம் மூலமாக பரவும் வைரஸ். இது போலியோ போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று கூறப்படுகிறது. இது எச்சில் மூலமாகவும் பரவ கூடியது. சுவாசம் மூலம் இது உடலில் ஊடுருவும் போது ஒரே இரவில் பாதிக்கப்பட்டவரை கொல்லும் தன்மை கொண்டுள்ளது, இந்த குடல் வைரஸ் D68 எனும் வைரஸ். ஒரு காலத்தில் இது அமெரிக்காவில் கொடூரமான நோயாக கருதப்பட்டது.

காலரா

காலரா, உடலில் நீர் வறட்சி, வாந்தி, பேதியை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த பாக்டீரியா சிறுகுடலை தாக்கி ஒரே இரவில் உயிரை பறிக்கும் அளவு திறன் கொண்டது. உலகளவில் 50 லட்சம் மக்கள் இந்த பாக்டீரியா மூலம் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது, சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலமாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் காலரா மூலம் 1,20,000 பேர் உலகில் மரணம் அடைகிறார்கள்.

எம்.ஆர்.எஸ்.ஏ (MRSA)

எம்.ஆர்.எஸ்.ஏ எனும் இந்த வைரஸ் இரத்த செல்களை அழித்து நுரையீரல் திசுவை அழிக்க கூடியது ஆகும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் இதற்கு தீர்வுக் காண இயலாது. ஒரு நாளுக்குள் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை எனில் உடல் உறுப்புக்கள் செயலிழந்து உயிரிழக்க நேரிடும்.

செரிபரோவாஸ்குலர் நோய் (Cerebrovascular disease)

இது ஆக்சிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை உடலுக்குள் தடை செய்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நோயினால் அறுபது இலட்சம் பேர் இறக்கிறார்கள். மேலும் ஐம்பது இலட்சம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயின் தாக்கத்தினால், பார்வை மற்றும் பேச்சை இழக்க கூட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டு ஒரு பக்க உடல் இயக்கம் தடைப்படலாம்.

ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்

2.98550724638
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top