பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அமுக்கிரா கிழங்கு

அமுக்கிரா கிழங்கின் நன்மைகள்

அமுக்கிரா கிழங்கின் நன்மைகள்

  • அமுக்கிரா கிழங்கு இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் பெருக்கும், கிழங்கை உண்டால் உடலை உரமாகச் செய்து காமத்தை உண்டாக்கும். இதை அரைத்துக் கட்டிகளின் மேல் போட கட்டிகள் கரையும். உறக்கம் உண்டாக்கும், தாது வெப்பத்தைப் போக்கும் தீபனம் (பசி) உண்டாக்கும்.
  • அமுக்கிரா கிழங்கைப் பச்சையாகக் கொண்டு வந்து பசுவின் நீர் விட்டு அரைத்து, கொதிக்க வைத்து கிரந்தி, கண்டமாலை, வாதவீக்கம், இடுப்பு வலி மீது பற்றுப் போடக் குணமாகும்.
  • சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்துக் கட்டிகளின் மேல் போடக் கட்டி கரையும்.

சூரணம்

  • கிழங்கைப் பாலில் ஊறவைத்து வேகவைத்து அலம்பி, உலர்த்தி, சூரணம் செய்து ஒரு வேளைக்கு 5 கிராம் முதல் 10 கிராம் வரை தேனில் கலந்து கொடுக்க, கபம், வாதம் இவற்றால் உண்டாகும் நோய்கள் விலகும். வாதசூலை, வீக்கம், பசிமந்தம் போகும். நெய்யுடன் கலந்து உண்டு வர ஆயாசம் நீங்கும். உடல் பலம் உண்டாக்கும். சுக்கிலம் பெருக்கும்.
  • அமுக்கிராக்கிழங்கு சூரணத்தை 1 பங்குடன் 3 பங்கு கற்கண்டு சர்க்கரை சேர்த்து வேளைக்கு 5 கிராம் முதல் 10 கிராம் வரை, காலை, மாலை உண்டு,பசும்பால் குடித்து வர, சுக்கிலநட்டம், நரம்புத் தளர்ச்சி இவை நீங்கி உடல் வலிவும், வசீகரமும் உண்டாகும்.

ஆதாரம்: தமிழ்த்தாமரை

3.08791208791
பானு May 20, 2020 01:37 AM

இந்த பொடியை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா... எனக்கு நிறைய முறை கரு சிதைவு ஆகிருக்கு..

தேவ்குமா Mar 14, 2020 08:44 AM

அமுக்ரா கிழங்கு எப்படி இருக்கும்?அதனை தெரிந்து கொள்ள படம் மூலம் அறிய ஆவல்.

சங்கர் Feb 13, 2019 11:35 PM

சக்கரை வியாதிக்கார்கள் சாப்பிடலாமா

தமணிவண்ணன் Feb 13, 2017 03:47 PM

எங்கு கிடைக்கும்

சக்திவேல் Dec 25, 2016 07:28 PM

அமுக்கார கிழங்கு செடி எங்குகிடைக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top