பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / அலட்சியப் படுத்தக்கூடாத அறிகுறிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அலட்சியப் படுத்தக்கூடாத அறிகுறிகள்

அலட்சியப் படுத்தக்கூடாத அறிகுறிகள் என்னவென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வயிற்றுவலி

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

வாய்வுடன் தொப்புளைச் சுற்றியும் கீழும் வலி

மலச்சிக்கல் அல்லது வாய்வு

மருந்துக் கடைகளில் கிடைக்கும் வாய்வுமருந்து அல்லது மலமிழக்கிகள். வலி இரண்டு வாரங்களுக்கு மேலாக இருந்தால் மருத்துவரை நாடவும்.

குமட்டல், காய்ச்சல், வாந்தி, பசியின்மை, முக்கி மலம் கழித்தலுடன் தொப்புளைச் சுற்றித் திடீர் வலி

குடற்வால் அழற்சி (அப்பெண்டிசைட்டிஸ்)

மருத்துவரை அணுகவும். குடல் வால் அழற்சிக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் அல்லது அது வெடித்து தொற்றுள்ள திரவம் வயிற்றின் பிற பாகங்களில் பரவும்.

வலது புற வயிற்றில் திடீர் வலி தோன்றி வயிற்றின் பிற பாகங்களுக்கும் முதுகிலும் பரவுதல்.

பித்தப்பைக் கல் அல்லது பித்தப்பைத் தொற்றுநோய்

கொழுப்புணவை உண்ட பின் வலி நீடித்தாலோ கூடினாலோ மருத்துவரை அணுகவும்

தொப்புளுக்குக் கீழே வலி தொடங்கி இரு புறமும் பரவினால்.

பெருங்குடல் நோய், சிறுநீர்ப் பாதைத் தொற்று, அல்லது இடுப்பு அழற்சி நோய்

வலி நீடித்தால் மருத்துவரிடம் செல்லவும் அவர் கண்டறியும் சோதனைக்கு ஆலோசனை கூறலாம்.

பொதுவாக நல்ல சாப்பாட்டுக்குப் பின் மார்பு எலும்புக்கு கீழே எரிச்சல் உணர்வு

நெஞ்செரிச்சல்

கடைகளில் கிடைக்கும் அமில முறிவு மருந்துகளை எடுக்கவும், கொழுப்புப் பொருட்களைத் தவிர்க்கவும்

கீழ்ப்புற விலா எலும்புகளில் திடீரென வலி தொடங்கி அரைக்குப் பரவுதல்

சிறுநீரகக் கல்

மருத்துவரிடம் செல்லவும். நீராகாரம் அதிகம் பருகவும்.

சிறுவலி அல்லது உபாதைகள் மெதுவாகத் தோன்றி வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வீக்கத்துடன் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்தல்.

லாக்டோஸ் ஏற்பின்மை, உறுத்தும் குடல் நோய், புண்கள், உணவு ஒவ்வாமை ஆகியவற்றில் ஒரு நீடித்த நோய்

மருத்துவரை நாடவும். அவர் ஓர் இரப்பை குடல் நிபுணரிடம் ஆலோசிக்க அனுப்பக்கூடும்.

மலத்தில் இரத்தம்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

வேறு அறிகுறிகள் அற்ற கறுப்பு நிற மலம்

நாவற்பழம், காரீயம், இரும்பு மாத்திரைகள், தக்காளி, சிவப்பு முள்ளங்கி உட்கொள்ளுதல்

நிறத்துக்குக் காரணம் என எண்ணும் உணவை உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னும் பழைய நிலைக்குத் திரும்பாவிட்டால் மருத்துவரை அணுகவும்.

மலம் கழிக்கும் போது அழுத்தம் அல்லது வலியுடன் அரக்கு அல்லது பிரகாசமான சிவப்பு நிற மலம்

ஆசன வாய் வெடிப்பு அல்லது மூல நோய்.

மருந்துக் கடைகளில் கிடைக்கும் மூல நோய்க் களிம்பு. பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும். அறுவை மருத்துவம் தேவைப்படலாம்.

அடிவயிற்றில் அசௌகரியம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வலி ஆகியவற்றுடன் அரக்கு அல்லது பிரகாசமான சிவப்பு நிற மலம்.

பெருங்குடல் அழற்சி, கிரோன் நோய், கட்டி அல்லது புற்று

மருத்துவரை அணுகவும். எக்ஸ்-கதிர், கேளா ஒலி போன்ற சோதனைகள் தேவைப்படலாம். உணவுக்குழல் நிபுணரின் ஆலோசனை தேவைப்படலாம்.

குடல், உணவுக்குழல் எரிச்சலுடன் கறுப்பு தார் போன்ற மலம்.

மேல் உணவுக் குழல் குடல் பாதையில் புண்

மருத்துவரை அணுகவும். அகநோக்கலுக்கு அவர் பரிந்துரைக்கலாம்.

சிறுநீரில் இரத்தம்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

ஒரு புதிய மருந்தை உட்கொண்டவுடன் சிறுநீரில் இரத்தம்

ஆஸ்பரின், புற்றுநோய் மருந்து, சில நுண்ணுயிர்க்கொல்லிகள் போன்றவற்றின் பக்க விளைவுகள்

கூடிய மட்டும் விரைவில் மருத்துவரை அணுகவும்

காய்ச்சல், முதுகு வலியுடன் சிறுநீரில் இரத்தம்

சிறுநீரகத் தொற்று

மருத்துவரை அணுகவும். சிறுநீரகப் பாதையில் இருந்து பாக்டீரியாத் தொற்று சிருநீரத்துக்குள் பரவி இருந்தால் பொதுவாக ஒரு நுண்ணுயிர்க்கொல்லி கொடுக்கப்படும்.

கடும் வலியுடன் சிறுநீரில் இரத்தம்

சிறுநீரகக் கற்கள்

மருத்துவரை அணுகவும். வயிற்று எக்ஸ்-கதிர் அல்லது கணினி வரைவி சோதனை பரிந்துரைக்கப்படும்.

வேறு அறிகுறிகள் எதுவுமின்றி விவரிக்க முடியாதவாறு சிறுநீரில் இரத்தம்

சிறுநீர்ப்பை, சிறுநீரகப் புற்று அல்லது மரபியல் கோளாறு

மருத்துவரை அணுகவும். கணினி வரைவி, கேளா ஒலி போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்

ஆண்களுக்கு சிறுநீரில் இரத்தமும் சிறுநீர்க்கழிப்பதில் சிரமமும்

சிறுநீர்ப்பை முன்வாயில்சுரப்பி (புரோஸ்டேட்) வீக்கம்

மருத்துவரை அணுகவும். மருந்துகள் அல்லது அதிகப்படியான புரோஸ்டேட் சுரப்பித் தசையை லேசர் மூலம் அகற்றும் சிகிச்சை

இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்புநிற சிறுநீர். வலியும் சிறுநீர்க் கழிக்கும்போது எரிச்சலும்.

சிறுநீர்ப்பாதை தொற்று

மருத்துவரை அணுகவும். சிறுநீர் சோதனைப் பரிந்துரைக்கப் படலாம். மருத்துவம் நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கொண்டு பொதுவாக செய்யப்படுகிறது.

வயிற்றுப்போக்கு

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

வெளிப்படையான காரணமின்றி திடீர் வயிற்றுப் போக்கு

வைரல் தொற்று

சிலநாட்களில் பிரச்சினைகள் அகன்றுவிடும்

சில உணவுகளை உண்ட பின் வயிற்றுப்போக்கு

உணவு ஒவ்வாமை

அவ்வுணவை உண்ண வேண்டாம்

உணவுக்குப் பின் 2-6 மணி நேரத்தில் தொடங்கும் வயிற்றுப்போக்கு

கெட்ட, சரியாக சமைக்கப்படாத, அசுத்த உணவால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று

பிரச்சினை சில நாட்களில் தீரும். மலம் இயல்புநிலையை அடையும் வரை கட்டியான உணவைத் தவிர்க்கவும்.

அயல் நாட்டில் பயணம் செய்யும்போது வயிற்றுப்போக்கு

பெரும்பாலும் பாக்டீரியாக்களால் அசுத்தமான தண்ணீர் மூலம் உண்டாகும் தொற்று

பொதுவாகப் பிரச்சினை 1-2 நாட்களில் தீர்ந்துவிடும். வாந்தி, தலைவலி போன்ற பிற அறிகுறிகளுடன் மேலும் தொடர்ந்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

4 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் வயிற்றுப் போக்கு

கிரோன் நோய், லாக்டோசை ஏற்காததால் ஏற்படும் குடல் எரிச்சல் போன்ற நாட்பட்ட நோய்கள்

மருத்துவர் உணவுக்குழாய் நிபுணர் ஆலோசனையை நாடலாம்.

மலச்சிக்கல்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

வயிறு உப்புதல், நிறைந்திருப்பது போல் உணர்வு, கடினத்தோடு மலங்கழித்தல் ஆகியவற்றுடன் எப்போதாவது ஏற்படும் மலச்சிக்கல்

சத்தற்ற உணவு, உடல் பயிற்சி இன்மை, அதிக அளவில் மது அல்லது காஃபின்

சத்துணவு, அதிக அளவில் நீராகாரம், நார்ச்சத்து உட்கொள்ள பிரச்சினைகள் மாறும்

வயிறு உப்பல், வாயு, வலியுடன் மலச்சிக்கல்

டைவெர்ட்டிகுலார் நோய், கட்டிகள், குடலில் வடுத்திசுக்கள் போன்ற பெருங்குடல் மலக்குடல் நோய்கள்

மருத்துவரை அணுகவும். அவர் மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.

புதிய மருந்தை எடுக்க ஆரம்பித்த பின் மலச்சிக்கல்

வலிநிவாரணிகள், ஆண்டாசிட்டுகள், கால்சியம் சானல் தடுப்பான்கள் போன்ற மருந்துகளின் பக்க விளைவுகள்

மருத்துவரை அணுகவும். வேறு மருந்துகளை அவர் பரிந்துரைப்பார்.

வலி, வயிறு உப்பலுடன் தொடர்ந்து மலச்சிக்கல்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்

மருத்துவரை அணுகவும். மருந்துகளும் நார்ச்சத்துணவும் பரிந்துரைக்கப்படும்

உணவுமுறையில் மாற்றம்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

பசிகுறைவுடன் களைப்பு, முடியிழப்பு அல்லது குளிர் தாங்க இயலாமை

மிகைத் தைராயிடு செயல்பாடு (தைராயிடு செயல்குறைபாடு)

மருத்துவரை அணுகவும். கண்டறியும் சோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

பசி கூடுதலோடு தூக்கமின்மை, அதிக தாகம், அதிக வியர்வை, முடியிழப்பு

மிகைத் தைராயிடு செயல்பாடு (கிரேவின் நோய்) அல்லது பிற இயக்கநீர் சமநிலை இழப்பு

மருத்துவரை அணுகவும். கண்டறியும் சோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

பசி குறைவுடன் மலங்கழிக்கும் முறையில் மாற்றம், களைப்பு, குமட்டல், வாந்தி

புற்றுநோய்

மருத்துவரை அணுகவும். கண்டறியும் சோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

புதிய மருந்தை உட்கொண்டவுடன் பசி அதிகரிப்பு

கோர்ட்டிகோஸ்டிராய்டுகள், எதிர்மனவழுத்த மருந்து, சில ஒவ்வாமை மருந்துகள் போன்றவற்றின் பக்க விளைவு

மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்; அவர் மாற்று மருந்து பரிந்துரைப்பார்.

புதிய மருந்தை உட்கொண்டவுடன் பசி குறைதல்

புற்று நோய் மருந்து, சில நுண்ணுயிர்க் கொல்லிகள், நர்க்கோட்டின் கலந்த வலி நிவாரணிகள் போன்றவற்றின் பக்க விளைவுகள்

மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்; அவர் மாற்று மருந்து பரிந்துரைப்பார். சிலசமயம் பக்க விளைவுகள் மருந்து உட்கொண்டு சில நாட்கள்/வாரங்களிலோ மறைந்துவிடும்.

காய்ச்சல்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

பிற அறிகுறிகள் இல்லாமல் சிறிதளவு காய்ச்சல்

உடல்பயிற்சி, மாதவிடாய், மிகையாக ஆடையணிதல், வெப்பம்

இயல்பான உடல் வெப்பம் 98.6 F

மூக்கொழுகுதல், தொண்டைவலி, இருமல், காது வலி, வாந்தி, வயிற்றுப்போக்குடன் மிதமான காய்ச்சல் (100.5-104.5 F)

சளி காய்ச்சல், தொண்டை காது தொற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது சிறுநீரகப் பாதைத் தொற்று நோய்

இபுபுரூபன் போன்ற மருந்துகள் காய்ச்சலைக் குறைக்கும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

மனக்குழப்பம், கழுத்து விறைப்பு, மூச்சுவிட கடினம், மாயத்தோற்றங்களுடன் அதிகக் காய்ச்சல்

வைரல் அல்லது பாக்டீரியா தொற்று, சிறுநீரகத் தொற்று அல்லது வேறு அபாயகரமான பிரச்சினை

நோயாளி மந்தமாகவும், செயலற்றும் இருந்தால் அவசர சிகிச்சைக்கு செல்லவும். அல்லது மருத்துவரை அணுகவும்.

புதிய மருந்து உட்கொண்டவுடன் காய்ச்சல்

நுண்ணுயிர்க்கொல்லிகள், ஒவ்வாமை எதிர்ப்பு, எதிர்வலிப்பு, இரத்த அழுத்த மருந்துகள் போன்றவற்றின் பக்கவிளைவுகள்

மருத்துவருடன் பேசி மருந்தை மாற்றவும்.

தடுப்பு மருந்து எடுத்த பின் லேசான காய்ச்சல்

தொண்டை அழற்சி, நரப்பிசிவு, நிமோனியா நோய்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கு பக்க விளைவு

ஓரிரு நாட்களில் காய்ச்சல் பொதுவாகக் குறையும்

வெப்பம், அல்லது சூரிய ஒளி அதிகம் பட்ட உடன், நாடித் துடிப்பு அதிகமாதல், குமட்டல் மற்றும் தன்னிலை இழத்தலுடன் உடல் வெப்பம் அபரீதமாக அதிகரித்தல்

வெப்பத்தாக்கம்

குளிர்ச்சியான இடத்துக்குச் செல்லவும். தண்ணீர் அருந்தவும். அறிகுறிகள் நீடித்தால் மருத்துவ ஊர்தியை அழைக்கவும்

எடை குறைவு, தசை, மூட்டு, வயிற்று வலி

புற்று, பெருங்குடல் புண், கிரோன் நோய், எச்.ஐ.வி/எய்ட்ஸ், தன்தடுப்பாற்றல் நோய்

மருத்துவரை அணுகவும்

நாட்பட்ட இறுமல்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

மூக்கு வடிதல், திரும்பத்திரும்ப தொண்டையை சரிசெய்தல், கபம்

ஒவ்வாமை அல்லது எலும்பு உட்புழைத் தொற்று

மருத்துவரை அணுகவும். ஒவ்வாமை மருந்து பரிந்துரைக்கப்படும்.

ACE தடுப்பான்கள் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் இருமல்

மருந்து பக்கவிளைவு. 5-10 % நோயாளிகளுக்கு ACE தடுப்பான்கள் இருமல் உண்டாக்கும்

மருத்துவர் வேறு மருந்து பரிந்துரைப்பார்.

இழைப்பு அல்லது பலத்த ஓசையுடன் இரவு நேர இருமல்

ஆஸ்துமா

மருத்துவரை அணுகவும். மூச்சுக்குழல் தளர்த்தி பரிந்துரைக்கப்படும்.

வாரம் இருமுறைக்கு மேலாக நெஞ்செரிச்சலுடன் கூடிய இருமல்

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்

மருத்துவரை அணுகவும். வயிற்றில் அமிலம் உற்பத்தி ஆவதைத் தடுக்க அமில முறிவு மருந்து பரிந்துரைக்கப்படும்.

களைப்பு, நெஞ்சு வலி, மூச்சடைப்புடன் கூடிய இருமல் நேரஞ்செல்லச் செல்ல அதிகரித்தல்.

நுரையீரல் புற்று

மருத்துவரை அணுகவும். கண்டறிதல் சோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

வறட்டு இருமலோடு மூச்சடைப்பு

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

மருத்துவரை அணுகவும். நுரையீரல் திறன் சோதனை மற்றும் நெஞ்சு எக்ஸ்-கதிர் பரிந்துரைக்கப்படும்.

குழப்பமும் ஞாபக மறதியும்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

திடீர்க்குழப்பமும் நினைவாற்றல் இழப்பும்

தலைக்காயம், மூளையதிர்ச்சி

நோயாளியை மருத்துவமனை கொண்டு செல்லவும்

முதுமை காலத்தில் நினைவாற்றல் இழப்பு அல்லது மனக்குழப்பம் படிப்படியாக/திடீரென ஆரம்பிக்கும்; அன்றாடக வாழ்க்கையை அவ்வளவாகப் பாதிப்பதில்லை.

வயதோடு சம்பந்தப்பட்ட இயல்பான நினைவாற்றல் இழப்பு

மனதை சுறுசுறுப்பாக வைத்து குறுக்கெழுத்து, புதிர் போன்றவற்றில் ஈடுபடவும்

முதுமை காலத்தில், நினைவாற்றல் இழப்பு அல்லது குழப்பம் படிப்படியாக/ திடீரென ஆரம்பித்து அன்றாடக வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.

முதுமை மறதி

நோயாளியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லவும்.

திடீர் மனக்குழப்பத்தோடு பார்வை மங்கல், பேச்சுக் குழறல், உடலின் ஒரு பகுதியில் திடீரென உணர்ச்சியின்மை

பக்க வாதம், இரத்த ஊட்டக் குறைவு

மருத்துவமனை செல்லவும். உடனடி, தகுந்த சிகிச்சை உயிரைக் காப்பாற்றும்

குமட்டல், வயிற்றுப்போக்கு, வெப்பம் அல்லது சூரிய ஒளி படுதலுக்குப் பின் படிப்படியாக மனக்குழப்பம் உண்டாகுதல்

நீர்ச்சத்து இழப்பு

அதிகமான நீரை உண்டு மறுநீர்ச்சத்தைப் பெறவும்.

புதிய மருந்தை எடுத்தவுடன் நினைவிழப்பு அல்லது மனக்குழப்பம்

பென்சோடயாசெப்பைன்கள் அல்லது பார்பிச்சுரேட்டுகள் (benzodiazepines or barbiturates) போன்ற மருந்துகளின் பக்க விளைவுகள்

மருத்துவரிடம் அறிகுறிகளைக் கூறவும். வேறு மருந்து பரிந்துரைக்கப்படும்.

நெஞ்சுவலி

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

பொதுவாக நெஞ்செலும்பைச் சுற்றி பிசையும், இறுக்கும் வலி, தாடை,முதுகு, பற்களுக்குப் பரவுதல்

நெஞ்சுவலி

உடனடியாக மருத்துவரை அணுகவும்

கடுமையான வலி இருமும்போதோ இழுத்து மூச்சு விடும்போதோ மோசமாதல்

நிமோனியா, நுரையீரல் செயலிழப்பு போன்ற நுரையீரல் பாதிப்பு

மருத்துவரை அணுகவும்

செரிமானம் ஆகாமை, எதுக்களிப்பு பொன்ற அறிகுறிகளுடன் எரிச்சலுள்ள வலி

புண், கணைய நோய், பித்தப்பை அழற்சி

மருத்துவரை அணுகவும்

பதட்டம், நாடித்துடிப்பு அதிகரிப்பு அல்லது மூச்சடைப்புடன் வலி

அச்சத்தின் தாக்கம்

ஆழமாக மூச்சிழுத்து மனதை அமைதிப் படுத்தவும். இது மாரடைப்பு போன்றே தோற்றமளிக்கும்.

அதிகமான தாகம்

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

நெஞ்சுவலி, சிறு நீர்ப்போக்கு அதிகம் அல்லது குறைவுடன் தாகம்

இதயம், கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு

மருத்துவரை உடனே அணுகவும்

புதிய மருந்தை உட்கொண்டவுடன் தாகம்

டையூரெடிக், எதிர்ஹிஸ்டமைனஸ், சில எதிர் மனவழுத்த மருந்துகள் போன்றவற்றின் பக்க விளைவுகள்

மருத்துவரை அணுகவும். வேறு மருந்து பரிந்துரைக்கப்படும்.

அதிக சிறுநீர்ப்போக்கு, விளக்க முடியாத எடை குறைவு, பசி கூடுதலோடு தாகம்

நீரிழிவு (இரத்த சர்க்கரை)

மருத்துவரை அணுகவும். இரத்த சர்க்கரை சோதனை.

வேறு அறிகுறிகள் இல்லாமல் அல்லது அதிகமாக சிறுநீர் பிரியாத போதும் நீர் அருந்தும் கூடுதல் விருப்பம்

உளவியல் இயற்கை மீறிய தாகம்

மருத்துவரை அணுகவும்

அதிக சிறுநீர்ப்போக்குடன் தாகம்

இனிப்பிலா மைய நீரிழிவு. நீர்ம சமநிலையை நிர்வாகிக்கும் சில சிறுநீரக புரதக் குறைபாட்டால் ஏற்படும் ஓர் அபூர்வமான கோளாறு

மருத்துவரை அணுகவும், இரத்தப் பரிசோதனை

ஆதாரம் : தேசிய சுகாதார வலைத்தளம்

3.03225806452
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top