பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அலைக்கழிக்கும் மனக்கோளாறு

அலைக்கழிக்கும் மனக்கோளாறு பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

அலைக்கழிக்கும் மனக்கோளாறு ஓர் உளவியல் பிரச்சினையாகும். அமைதியின்மை, அச்சம், சோர்வளிக்கும் சிந்தனை ஆகிய அலைகழிப்புகளை உருவாக்கும் ஊடுறுவும் எண்ணங்கள் இதன் தன்மையாகும். இவ்வெண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யும்போது, சில சடங்கு அல்லது நடத்தைகளை திரும்பத்திரும்பச் செய்யும் மிகைத் தூண்டல் ஏற்படும். இவையே அலைக்கழிக்கும் கட்டாயங்கள் எனப்படும்.

காரணங்கள்

மரபியல்

சில நோயாளிக்கு மரபியல் சிறிதளவு பங்கு வகிக்கிறது. இதனோடு தொடர்புடைய குறிப்பிட்ட மரபணு எதுவும் இல்லை என்றாலும், குடும்பங்களில் இந்நிலை தொடர்ந்து வருவதற்கான சான்றுகள் உள்ளன. அலைக்கழிக்கும் மனநோய் (OCD) இல்லாதவரைவிட, நோய் உள்ளவரின் குடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறு நான்கு மடங்கு அதிகம்.

மூளைப்பிறழ்தல்கள்

அதிகச் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மற்றும் மூளை வேதிப்பொருளான செரோட்டோனின் குறைபாடும் ஆகிய மூளைப்பிறழ்தல்கள், மூளையின் சில பகுதிகளில் இருப்பதை நோயாளிகளின் பிம்ப சோதனை ஆய்வுகள் காட்டுகின்றன. புலன் உணர்வு சார் நடத்தை சிகிச்சை (CBT) அல்லது தேர்ந்த செரோட்டோனின் மறுபயன்பாடு தடுப்பான்கள் (SSRIs) மூலம் மூளைச் செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் மருத்துவங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

செரோட்டோனின்

அலைக்கழிக்கும் மனக்கோளாறில் செரோட்டோனின் பங்கும் இருப்பது போல் தோன்றுகிறது. இது மூளையில் உள்ள ஒரு வேதிப்பொருள் (நரம்புக்கடத்தி). ஒரு மூளையணுவில் இருந்து இன்னொன்றுக்கு இது தகவல்களைக் கடத்துகிறது. மனநிலை, மனக்கலக்கம், நினைவாற்றல், தூக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு செரோட்டோன் பொறுப்பு வகிக்கிறது. அலைக்கழிக்கும் மனநோய்க்கு செரோட்டன் எவ்விதம் காரணமாகிறது என்பது தெரியவில்லை. ஆனால் இக்கோளாறு உள்ளவர்களின் மூளையில் இவ்வேதிப்பொருள் அளவு குறைவாக உள்ளது. சிலவகையான எதிர்மனவழுத்த மருந்துகள் மூளையில் உள்ள செரோட்டோனின் அளவைக் கூட்டுகிறது. இதனால் இக்கோளாறுக்கு பலன் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை நிகழ்வுகள்

இக் கோளாறின் போக்கு ஏற்கெனவே உள்ளவர்களுக்கு (உதாரணமாக மரபியல் காரணிகள்), மரணம் பிரிவு போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் அலைக்கழிக்கும் மனக்கோளாறைத் தூண்டலாம். மேலும் வாழ்க்கை நிகழ்வுகள் கோளாற்றின் போக்கையும் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, அன்பிற்கு உரிய ஒருவரின் மரணம், உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் தீங்கு ஏற்படுமோ என்ற பயத்தை உண்டாக்கலாம். வாழ்க்கை நிகழ்வுகளால் ஏற்படும் மனவழுத்தமும் அலைக்கழிக்கும் மனக்கோளாறின் அறிகுறிகளை மேலும் மோசமாக்கலாம். ஆனால் மனவழுத்தம் மட்டுமே இக் கோளாற்றை உண்டாக்காது.

தொற்றுக்கள்

ஸ்ட்ரெப்ட்டோகோக்கல் பாக்டீரியாவால் உண்டாகும் கடுமையான தொற்றால் சில இளம் குழந்தைகளுக்கு அலைக்கழிக்கும் மனநோய் ஏற்பட்டதாக செய்திகள் உள்ளன. உடல் உண்டாக்கும் எதிர்பொருட்கள், மூளையின் ஒரு பகுதியோடு வினைபுரிவதாலும் அலைக்கழிக்கும் மனக்கோளாறு ஏற்படுவதாக ஒரு மருத்துவக்கொள்கை கூறுகிறது. தொற்று தானாகவே இக்கோளாறை உண்டாக்குவதில்லை. ஆனால் மரபியல் ரீதியாக இப்போக்கு உடையவர்களுக்குத் தொற்றால் அறிகுறிகள் தூண்டப்படுகின்றன. தொற்றால் தூண்டப்படும் இவ்வறிகுறிகள் விரைவாகத் தொடங்கும் (1-2 வாரங்களில்)

நோய்கண்டறிதல்

முதற் கட்ட நோய்கண்டறிதல் உளவியல் நிபுணர் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்களால் நடத்தப்படும். யேல்-பிரவுண் அலைக்கழிக்கும் மனக்கோளாறு அளவுப்படி நோய்கண்டறியலாம். இவை தரப்படுத்தப்பட்ட அளவுகள் ஆதலால், இவற்றைக் கொண்டு உளவியல் ஆய்வை தகுந்தவாறு செய்ய முடியும்.

சிக்கல்கள்

  • தற்கொலை சிந்தனையும் நடத்தையும்
  • மது மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தல்
  • பிற மனக்கலக்கக் கோளாறுகள்
  • மனவழுத்தம்
  • உண்ணும் கோளாறுகள்
  • அடிக்கடி கைகழுவுவதால் ஒட்டும் தோலழற்சி
  • பணி அல்லது பள்ளிக்கு செல்ல முடியாமை
  • உறவுகளில் பிரச்சினை
  • மொத்தத்தில் வாழ்க்கைத்தரம் குறைதல்

சிகிச்சை

உளவியல்சிகிச்சை

குறிப்பாகப், புலன்சார் நடத்தை சிகிச்சை பலன் அளிக்கிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறு விதமாக சிந்திக்கவும், நடந்துகொள்ளவும், எதிர்வினையாற்றவும் இச்சிகிச்சை முறையில் கற்றுத்தரப் படுகிறது. இதனால், குறைவான மனக்கலக்கம் மற்றும் பயத்துடனும், அலைக்கழிக்கும் சிந்தனைகள் இன்றி செயல்படவும், கட்டாயமான நடத்தைகளை தவிர்க்கவும் இது உதவிசெய்கிறது. குறிப்பாக, கட்டாய நடத்தைகளைக் குறைக்க, வெளிப்பாடு மற்றும் எதிர்வினை தடுப்பு சிகிச்சை உதவிகரமாக உள்ளது,

மருந்துகள்

பொதுவாக எதிர் மனக்கலக்க மற்றும் மனவழுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எதிர் மனக்கலக்க மருந்துகள் ஆற்றலுள்ளவை. அவை பலவகைப்பட்டன. பல மருந்துகள் உடனே வேலைசெய்யத் தொடங்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு அவற்றை உட்கொள்ளக் கூடாது.

அலைக்கழிப்பு

அலட்சியப்படுத்தும் அல்லது எதிர்கொள்ளும் முயற்சிகளையும் மீறி திரும்பத்திரும்ப வந்து நிலைத்திருக்கும் எண்ணங்களே அலைக்கழிக்கும் சிந்தனைகள் எனப்படும். இவ்வெண்ணங்களால் அலைக்கழிக்கப்படுபவர்கள் இவற்றில் இருந்து விடுபட கட்டாயமான செயல்களிலோ பணிகளிலோ ஈடுபடுவார்கள்.

கட்டாயங்கள்

அலைக்கழிக்கும் எண்ணங்களினால் ஏற்படும் மனக்கலக்கத்தைத் தணிக்க, சிலர் கட்டாயமாக சில சடங்குகளைச் செய்தே ஆக வேண்டும் என்ற உணர்வுக்கு ஆட்படுவார்கள்.

மனக்கலக்கம்

இவ்வலைக்கழிப்புகளால் அதிகமான மனக்கலக்கமும் கவலையும் உண்டாகும்.

தற்காலிக விடுதலை:

இக் கட்டாய நடத்தைகளினால் மனக்கவலையில் இருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும். ஆனால் விரைவில் அலைக்கழிப்பும் மனக்கவலையும் திரும்பி வரும். இந்தச் சுழற்சி மீண்டும் தொடங்கும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.02857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top