பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள்

ஆண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள்

ஆண் பிறப்புறுப்பு உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் அமைந்துள்ளன.

வெளிப்புற உறுப்புகள்

 • ஆண் குறி
 • விதைப்பை
 • ஆசனவாய்

உட்புற உறுப்புகள்

விதை நாளம்

 • விரைகள்
 • விந்து சுரப்பி
 • புரோஸ்ட்ரேட் சுரப்பி
 • சிறுநீர் தாரை

ஆண் குறி

 • ஆண்குறி என்பது ஆணின் உறுப்பு. இது உருளை வடிவத்தில் உள்ளது. சில நேரங்களில் இது கடினமாகவும் விரைப்பாகவும் இருக்கும். சில நேரங்களில் இது தளர்வாக இருக்கும். ஆண் குறியில் எலும்புகள் இல்லை. இதில் பஞ்சு போன்ற குழாய் திசுக்கள் அதிக அளவில் இருக்கும். ஆண்களின் பாலுணர்வு தூண்டப்படும் போது இக்குழாய்களில் இரத்தம் நிரப்பப்படும். இதனால் ஆண்குறி விரைப்படைகிறது. விரைப்புத்தன்மை குறையும் போது இரத்தம் இரத்தக்குழாய்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. சிறுநீர்த்தாரை ஆண்குறியின் வழியாக வெளியே திறக்கிறது. இதன் மூலம் சிறுநீர் மற்றும் விந்து நீர் வெளிப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் வெளியேறுவதில்லை.
 • ஆண்குறியின் முகப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது ஆண்குறி மொட்டு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அதிக நரம்புகள் முடிவடைவதால் இது மிகவும் உணர்ச்சியை தூண்டக்கூடிய பகுதியாக உள்ளது. இதை மூடியுள்ள தோல் மிக மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். இதற்கு மொட்டு உறை அல்லது நுனித்தோல் என்று பெயர். இதை எளிதாக பின்புறம் தள்ள முடியும். இந்த தோல் அகற்றப்படுவதற்கு தோல் நுனியிதழ் அகற்றுதல் சுன்னத் அல்லது விருத்த சேதனம் என்ற பெயர். ஆண்குறி ஆண்களின் மகிழ்ச்சியை தூண்டும் உறுப்பாகும். இதுவே உடலுறவு கொள்ளும்போது பெண் குறியினுள்ளோ ஆசனவாய் உள்ளோ செலுத்தப்படுகிறது.

விதைப்பை

 • இது ஆண்குறிக்கு பின்னால் தொங்கியபடி இருக்கும் சிறிய பை ஆகும். இதனுள் விரைகள் உள்ளன. விதைப்பை விரைகளை பாதுகாப்பதோடு விந்தணுக்கள் உருவாவதற்கு தேவையான வெப்ப நிலையில் அவை இருப்பதற்கு உதவியாக உள்ளன.

விரைகள்

 • இரண்டு விதைப்பைகளுக்குள்ளும் இரண்டு விரைகள் உள்ளன அவைநீள் வட்ட வடிவத்தில் சிறியதாக இருக்கும். விரைகளில் விந்தணுக்களும் ஆண் இயக்கு நீரான டெஸ்டோஸ்டிரோனும் உருவாக்கப்படுகிறது. விரைகள் தொடுதல் மற்றும் அழுத்தத்துக்கு உணர்ச்சி வசப்படக்கூடியது. இதில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவை சுமாராக பனிரண்டு வயதில் ஆரம்பமாகி ஆயுள் முழுவதும் தொடர்ந்து உருவாகின்றன. இவையே குழந்தை உருவாக தேவையான விதைகள் ஆகும். டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி நீர் பாலுணர்வு தூண்டப்படவும், இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்களான மீசை முளைத்தல் ஆகியவை நிகழவும் காரணமாக உள்ளன.

விதை நாளம்

 • ஆண் குறிக்கு இரண்டு பக்கமும் உடலின் உட்புறத்தில் இரண்டு குழாய்கள் உள்ளன.
 • இவை விந்தணுக்களை விரைப்பையிலிருந்து சிறுநீர் தாரைக்கு அனுப்புகின்றன. ஆண் குடும்ப நல அறுவை சிகிச்சையின் போது இந்த குழாய்களைத்தான் துண்டிக்கிறார்கள். இவற்றை விந்துக்குழாய் என்றும் அழைக்கிறார்கள்.

விந்து சுரப்பிகள்

 • இரண்டு விந்து சுரப்பிகள் உள்ளன. பை போன்ற அமைப்புகளான இவை 60 சதவீத நீர்மத்தை வழங்கி விந்தணுக்கள் இவற்றில் நீந்திச்செல்ல உதவுகின்றன. இந்த வெள்ளை நிற திரவம் விந்தணுக்களுக்கு தேவையான உணவை வழங்குகின்றது. விந்தணுக்கள் மற்றும் விந்து நீர்அடங்கிய விந்து சிறுநீர்த்தாரை வழியாக வெளியே தள்ளப்படுகின்றது. சிறுநீர்த்தாரை சிறுநீர் அல்லது விந்து மட்டுமே ஒரு நேரத்தில் வெளியே வருமாறு அமைந்துள்ளது.

புரோஸ்ட்ரேட் சுரப்பி

 • புரோஸ்ட்ரேட் சுரப்பி சிறுநீர்பைக்கு சற்று கீழே வால்நட் அளவில் இருக்கும். இது விந்துவில் உள்ள 30 சதவீத திரவத்தை சுரக்கிறது. இந்த திரவம் காரத்தன்மை உள்ளதாக இருப்பதால் இது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க பாதையில் நிலவும் அமிலத்தன்மையை சமன்படுத்த உதவுகிறது. புரோஸ்ட்ரேட் சுரப்பி தூண்டப்படும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது (குறிப்பாக ஆசனவாய்வழி உடலுறவு கொள்ளும்போது) பாலியல் மகிழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக அமைகிறது.

சிறுநீர்த்தாரை

 • சிறுநீர்த்தாரை ஒரு பொதுவான திறவமாகும். ஆண்குறியில் அமைந்துள்ள இது சிறு நீர் மற்றும் விந்து வெளியேறும் வழியாகும். ஆனால் ஒரு நேரத்தில் சிறுநீர் அல்லது விந்து ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே வெளிவரும்.

ஆசனவாய்

 • ஆசனவாய் செரிமான மண்டலத்தின் கழிவு நீக்க திறப்பாகும். இந்த திறப்பு ஆசனவாய் வளைய தசைகள் மூலம் இறுக்கமாக மூடப்பட்டு மலம் வெளியேறும்போது மட்டும் திறக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இது இனப்பெருக்க மண்டல உறுப்பு இல்லை. ஆனால் இந்த திறப்பு ஆசனவாய்வழி உடலுறவுக்கு பயன்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.09090909091
இராஜேஷ் Aug 03, 2017 10:27 PM

எனக்கு வயது 32 . எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு 10 வருடங்களாக வலது பக்க வெதர் வீங்கி இருக்கிறது. இதனை நான் மருத்துவரை அனுகி பரிசோதித்த போது, எனக்கு வெதர் வாயு இருப்பதாக கூறினார். இதனால் எனக்கு தற்சமயம் பயமாக இருக்கிறது. நான் திருமணம் முடிக்க வா? வேண்டாமா? இதற்கு சிகிச்சை ஏதும் உண்டா? 10 வருடங்களாக எனக்கு இந்த பிரச்சனை இருப்பதால், எனக்கு வேற எதுவும் பாதிப்பு உண்டாகிருக்குமா? எனக்கு ஆண்மை குறைபாடோ, சிறுநீரக பிரச்சனைகளோ இருக்குமா? தயவு கூர்ந்து எனக்கு சரியான அறிவுரை கூறவும்! நன்றி!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top