பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / ஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி

தண்ணீர் குடிப்பதற்கு நினைவூட்டும் செயலி பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நம்ம ஊர் தட்பவெப்பத்துக்கு நிறைய தண்ணீர் குடித்தாக வேண்டும். ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கு ஏற்பக் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவும் மாறுபடும். நாம் ஒரு நாளைக்கு எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப் ‘Hydro Coach - drink water’.

வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதற்கு மறந்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தவும், எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் இந்த ‘ஆப்’ பயன்படுகிறது.

பிரத்யேகத் தகவல்

உங்கள் உடல் எடை, வயது, பாலினம் ஆகியவற்றிற்கு ஏற்பச் சரியான அளவை இந்த ‘ஆப்' மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கு வசதியாக உங்கள் உடல் எடை, வயது ஆகிய தகவல்களை முன்கூட்டியே இதில் பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறீர்கள்? எவ்வளவு தண்ணீர் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை அலாரம் வைத்ததுபோல் இந்த `ஆப்’ உங்களுக்கு நினைவுபடுத்திவிடும்.

போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் சருமம் பொலிவாக இருக்கும். இந்த ‘ஆப்'பை பயன்படுத்திச் சரியான முறையில் தண்ணீர் பருகிவந்தால், சில நாட்களிலேயே உடல் ஆரோக்கியம் பெறுவதை உணரலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த ‘ஆப்' பயன்படும். இந்த ‘ஆப்'பில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான காய்கறிகள், பழ வகைகள் பற்றிய கட்டுரைகள், சமையல் செய்முறைகளை விளக்கும் பிரத்யேக தகவல்கள் உள்ளது. அதில் உடல்நலம் சார்ந்த பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆதாரம் - தி - ஹிந்து

2.96
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top