பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு பற்றிய குறிப்புகள்

இன்றைய நவீன யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நம் வாழ்வில் எப்போதும் அவசர போக்கைத் தான் காண முடிகின்றது. வாழ்க்கையின் அவசரங்கள் மனிதர்களை ஓட வைத்துவிட்டது. யாரும் ஆற அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை.

சொல்லப்போனால், இத்தகைய வாழ்க்கை சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில், என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் அடிப்படை ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு அடையாளமே சரியான உடலமைப்பு ஆகும். சரியான உடலமைப்பு எந்த ஒரு உடல்நல கோளாறுகளையும் தருவதில்லை. ஆகவே அவ்வாறு சரியான உடலமைப்பைப் பெற நினைத்தால் ஜிம்மிற்கு செல்வது, உணவில் கவனமாய் இருப்பது போன்றவை மட்டும் போதாது. சில வாழ்க்கை முறைகளையும் மாற்றி கொள்ளுதல் அவசியம்.

தற்போது அந்த சரியான உடலமைப்பைப் பெறுவதற்கு சில குறிப்புகள் கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றினாலே உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ளலாம். * வாரம் மூன்று முறை மீன் சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொய்வுறுதல் 30 சதவீதம் குறைகிறது.

ஏனெனில் மீனில் ஒமேகா-3, புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவையே சருமத்தில் உள்ள கொலாஜனுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து, சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது. அதிலும் சால்மன் எனப்படும் மீன் வகையில் உள்ள அஷ்டக்ஷேந்தின் (Astaxanthin) எனப்படும் ஊட்டச்சத்து ஆக்சிஜனேற்ற தடுப்பானாக (Anti Oxidant) இருந்து, சருமத்திற்கு போஷாக்கு அளித்து சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.

 • க்ரீன் டீயில் உள்ள கலவைகள், மூளையானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி எண்டோர்பின் எனப்படும் சக்தியூட்டும் ஹார்மோனை சுரக்க வழி செய்கிறது. ஆகவே அடுத்த முறை புத்துணர்ச்சி இல்லாததாய் உணர்ந்தால், க்ரீன் டீயை சாப்பிடுங்கள்.
 • தினமும் ஐந்து முதல் ஆறு அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது எனவும், ஆயுள் காலத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் வரை அதிகரிக்கிறது எனவும், இதய நோய் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
 • உணவில் மஞ்சள் சேர்த்து கொள்ளுவது நினைவாற்றலை 30 சதவீதம் வரை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மஞ்சளில் காணப்படும் கர்க்யூமின் (curcumin) எனப்படும் மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற தடுப்பான் (Anti Oxidant) மூளைக்கு ஊட்டமளிப்பதே இதற்கு காரணம்.
 • மன அழுத்தம் மற்றும் கவலையை போக்க வயிற்றில் இருந்து மூச்சு எடுத்து விட வேண்டும். ஒன்றில் இருந்து ஆறு வரை எண்ணி கொண்டே மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, வயிற்றை முடிந்த வரையில் நிதானமாக விரிய செய்ய வேண்டும், பின்பு நான்கு எண்ணும் வரையில் மூச்சை பிடித்து கொள்ள வேண்டும்.
 • பின்னர் ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிய படியே மூச்சை நிதானமாக வாய் வழியாக விட வேண்டும். இதனை மனம் ரிலாக்ஸாக உணரும் வரை, இந்த மூச்சு பயிற்சியை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.
 • அடிக்கடி தலைவலி, முதுகு வலி போன்ற தொல்லைகள் இருந்தால், கவலைப்படாமல் ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும். அவ்வாறு தூங்கினால், உடல் அசௌகரியங்கள் பாதியாக குறைந்துவிடுமென ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தூக்கமானது, வளர்ச்சி ஹார்மோன்களை சுரக்க செய்து, சேதமடைந்த திசுக்களை வேகமாக குணப்படுத்துகிறது.
 • ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, தினமும் உணவில் அரை டீஸ்பூன் இலவங்கம் சேர்த்து கொள்ளுதல் இரத்த சர்க்கரையை 29 சதவீதம் அல்லது அதிகளவில் கட்டுப்படுத்தும். மேலும் இது சிறு குடலில் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை தாமதப்படுத்துகிறது.
 • நோய் வருவதை தடுக்க பசுமையான மற்றும் வண்ணமயமான காய்கறிகளை உண்ண வேண்டும். அதிலும் கேரட், மிளகாய் மற்றும் வெண்டைக்காய் போன்ற வண்ணமயமான உணவுகள் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்.
 • உண்ணும் காய்கறிகள் எவ்வளவு வண்ணமயமாய் உள்ளதோ அவ்வளவு நல்லது. ஏனெனில் தாவரத்தில் உள்ள நிறமி சுவாசக் குழாயை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, அதனால் உடலுக்குள் செல்லும் வைரஸை தடுத்து, நோய்க்கு எதிராக போராடும் அணுக்களை பெருக்க வழி செய்கிறது.
 • பதப்படுத்தப்படாத தேன், இயற்கை கொல்லிகள்/ஆன்டி பயோடிக்ஸ் (Anti Biotics) மற்றும் சிகிச்சை முறை நொதிகள் (Enzyme) நிறைந்துள்ளது.

எனவே தேனை உடம்புக்கு முடியாத போது உண்டு வந்தால், நோய் தாக்கத்தை மூன்று நாட்களுக்குள் குறைத்துவிடும். அதிலும் இது சைனஸ் நோய்த்தொற்று மற்றும் பிற குளிர் சிக்கல்களுக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்துவிடும்.

ஆதாரம் : தினமணி மருத்துவமலர்

2.95774647887
தமிழரசன் Sep 16, 2020 12:41 PM

நன்றாக புரிந்தது தினமும் இதைப் பின்பற்றியே நடப்பேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top