பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / இயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்

இயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்

  1. சாப்பாடு சாப்பிடும்போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். கோபம், கவலை இருக்கும் சமயங்களில்  மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும். அல்லது கோபம் தணிந்த பிறகு சாப்பிடவும். கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம்.. கைக்குத்தல் அரிசியில் உடலை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன.
  2. வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம். மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  3. காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும். முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். அதிகமாக மோர் குடிக்கவும்.
  4. தயிர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பால் அளவாக அருந்த வேண்டும். சீஸ் தவிர்க்க வேண்டும். பழச்சாறு, காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொள்ளு சூப், கொள்ளு துவையல், வறுத்த கொள்ளு, வேக வைத்த கொள்ளு போன்றவற்றை வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்ளவும். கொள்ளு சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும்.
  5. கொள்ளு ரசத்தைக் குளிர்காலங்களில் பயன்படுத்தவும். சூடான உடல்வாகு கொண்டவர்கள் கொள்ளைத் தவிர்ப்பது நல்லது. உணவுக்கட்டுப்பாடுடன் யோகா, நீராவிக் குளியல் ஆகியவை செய்வது உடல் எடை குறைய வழி வகுக்கும்.

ஆதாரம் : மாலைமலர் ஆரோக்கியம்

3.05050505051
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Pradeep Jul 09, 2018 08:28 PM

கொள்ளு சாப்பிடுவது நல்லதா

தங்கபாண்டி May 18, 2017 10:36 AM

என் உடல் உஷ்ணம் ஆனது தேன் சுடுநீர் எலுமிச்சை கந்தநீர் கொள்ளு சாப்பிட்டால் வெப்பநிலை அதிகமாகி தாக்கம் ஏற்படுகிறது உங்கள் ஆலோசனை வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top