பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கணைய அழற்சி

கணைய அழற்சி பற்றிய தகவல்

கணையம்

செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு கணையம். இது பாதிக்கப்பட்ட பின்னரே, பலரும் இதன் அபாயத்தை உணர்கிறோம்.

உணவு செரிமான மண்டலத்தில், இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கும் வால் போன்ற ஓர் உறுப்பு, கணையம். இதில்தான் உணவு செரிமானத்துக்குத் தேவையான  என்சைம்கள் இன்சுலின் ஆகியவை சுரக்கின்றன.  செரிமானத்தின்போது, கணையத்தில் இருந்து சுரக்கப்படும் என்சைம், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய் கலக்கிறது. இந்த என்சைம் அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது. நோய்த்தொற்று உள்ளிட்ட காரணங்களால் கணையம் வீக்கம் அடைவதையே கணைய அழற்சி என்கிறோம்.

கணைய அழற்சியின்போது, இந்த என்சைம், கணையத்தில் தேங்கி இருக்கும்போது, செரிவுற்றதாக மாறுவதால், கணைய செல்கள் அரிக்கப்படுகின்றன. கணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை, உடனடி பாதிப்பு, நீண்ட நாள் பாதிப்பு என்று பிரிக்கலாம். சாதாரண பாதிப்பு என்றால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். மிகமோசமான நிலையில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

அறிகுறிகள்

 • மார்புக்குக் கீழ், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டு முதுகு வரை பரவுதல்
 • சாப்பிட்ட பிறகு மேல் வயிற்று வலி அதிகரிப்பு
 • காய்ச்சல்
 • குமட்டல், வாந்தி
 • வயிற்றைத் தொட்டால் கடுமையாக வலிக்கும்
 • படுத்தால் வயிற்று வலி அதிகரிக்கும். முன்பக்கம் சாய்ந்தால் வலி குறையும்.

அழற்சிக்கான காரணங்கள்

 • மது, சிகரெட், போதைப் பொருள் உபயோகிப்பது
 • கிருமித் தொற்று
 • பித்தப்பை கல்
 • விபத்தினால் வயிற்றில் காயம் ஏற்படுவது

மருந்துகள் தரும் பக்க விளைவு

 • கணையத்தில் நீர்க்கட்டி
 • மரபியல்
 • விஷக் கடி
 • ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பு
 • கணையப் புற்றுநோய்

அழற்சி தீவிரமடைவதன் அறிகுறிகள்

 • கடுமையான மேல் வயிற்று வலி
 • உடல் எடையைக் குறைக்க முயற்சிக் காமலே எடைகுறைதல்
 • எண்ணெய்  பசையுடனும் நாற்றத்துடனும் மலம் வெளியேறுதல்

ஆதாரம் : வினோத் (பதிவர்)

3.02702702703
பிரபு Oct 22, 2018 03:06 PM

சுக்கு, திப்பிலி, மாதுளை தோல், பனங்கற்கண்டு, தனியா எல்லாம் சேர்த்து 1௦௦ கிராம் என்றால் ஒவ்வொன்றும் எவ்வளவு அளவு தோராயமாக?

ரவி Nov 24, 2017 10:41 AM

என் கணவருக்கு இரண்டு முறை கணையம் பாதித்தது நான் அதற்கு இயற்கை வைத்தியம் செய்தேன் நீங்களும் இம்முறையை முயற்சித்து பாருங்கள் விரைவில் குணமடைய முடியும்
சுக்கு, திப்பிலி, மாதுளை தோல், பனங்கற்கண்டு, தனியா எல்லாம் சேர்த்து 1௦௦ கிராம் வாங்கி ஒரு டம்பளர் தண்ணி வூற்றி நன்கு கொதிக்கும்போது இது எல்லாம் போட்டு கொதிக்க வெச்சி ஆற வைத்து காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் சரியாகி விடும்.
இதை பிறகு மாதம் ஒரு முறை இம்முறையை பயன்படுத்தினால் திரும்ப இப்பிரச்சினை வராது

அரவிந் ராஜ் Jul 13, 2017 04:47 PM

3முறை கணைய பாதிப்பால் பாதிக்கபட்டுள்ளேன் மீண்டும் மீண்டும் வருகிறது, வருடத்திற்க்கு ஒருமுறை,இப்போதும் வந்துள்ளது இதற்கு நிரந்தர தீர்வு உள்ளதா....

இல்லத்தரசி Jun 03, 2017 05:22 PM

கணயபுற்று நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும்.வழிவகை உண்டா கூறவும்

SATHIYARAJ Apr 07, 2017 07:53 PM

4முறை கனைய பாதிப்பால் பாதிக்கபட்டுள்ளேன் மீண்டும் மீண்டும் வருகிறது 3மாதத்திர்கு ஒருமுரை பாதிப்பாகிறது இதற்கு நிரந்தர மருத்துவ தீர்வு உள்ளதா

உதயன் Sep 07, 2016 09:22 PM

நாட்பட்ட கணைய அழற்சியை முற்றாக குணமாக்கலாமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top