பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்லீரல் இழைநார் வளர்ச்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 • கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைமப் பெருக்கம், காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்) போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்ப்புள்ள காரணங்களும் உள்ளன.
 • நீர்க்கோவை அல்லது மகோதரம் (அடிவயிற்று உட்குழிவில் திரவம் சேகரித்தல்) என்பது கல்லீரல் அழற்சியின் மிகவும் பொதுவான பிரச்சினை. இது மோசமான வாழ்க்கைத் தரம், தொற்றுநோய் அபாய அதிகரிப்பு மற்றும் மோசமான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (மனக்குழப்பம் மற்றும் ஆழ்மயக்கம்) மற்றும் உணவுக்குழாய் தட்டமையால் ஏற்படும் இரத்தப்போக்கு என்பன உயிருக்கு அபாயமுள்ள பிற சிக்கல்களாகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சி பொதுவாக குணமாக்க இயலாத நோய். எனவே இதன் சிகிச்சை நோய் தீவிரமாவதைத் தடுத்தல் மற்றும் பிற சிக்கல்களில் கவனம் செலுத்துகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் முற்றிய நிலைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு.

நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 • பின்வரும் அறிகுறிகளுள் சில கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயின் விளைவால் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக ஏற்படுபவையாக இருக்கலாம். இவற்றில் பலவும் திட்டவட்டமானவையல்ல, மற்ற நோய்களிலும் தோன்றலாம் என்பதுடன் இது கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் குறிக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. அதேநேரத்தில், இந்த அறிகுறிகள் இல்லாதிருப்பதால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி சாத்தியம் இல்லாதிருக்கிறது என்றும் கொள்ள முடியாது.
 • சிலந்தி குருதிக்குழாய் கட்டிக் குவியல்கள் (ஸ்பைடர் ஆஞ்சியோமாடா) அல்லது ஸ்பைடர் நெவி. பெண்மை இயக்குநீர் (estradiol) அதிகரிப்பு காரணமாக நடுவிலுள்ள சிறிய தமனியைச் சுற்றியுள்ள பல சிறிய நாளங்களில் உண்டாயிருக்கும் இரத்த நாள புண்கள். இது மூன்றுக்கு ஒரு நிகழ்வுகளில் ஏற்படுகிறது.
 • உள்ளங்கைகள் சிவந்துபோதல். உள்ளங்கையில் உள்ள வழக்கமான சிறிய மச்சங்கள் பெரிதுபடுதல். இவை மாற்றமடைந்த பாலுறவு இயக்குநீர் (ஹார்மோன்)யின் வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படுவது.
 • நகங்களில் மாற்றங்கள் : மூர்க்கேயின் கோடுகள் - ஆல்புமின் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக வழக்கமான வண்ணத்தால் பிரிக்கப்படும் இரட்டை படுகிடையான கோடுகள்.
 • டெர்ரியின் நகங்கள் - நகத்தின் அண்மித்த மூன்றில் இரண்டு பகுதி வெண்மையாகவும் தொலைவில் உள்ள மீதம் மூன்றில் ஒரு பங்கு சிவப்பாக தோன்றுவது. ஆல்புமின் உற்பத்தி பற்றாக்குறை (ஹைப்போபிமினிமியா) காரணமாகவும் ஏற்படுவது.
 • நகத்திரள்வு அல்லது முருங்கை விரல்கள் - நகக்கண்ணிற்கும் அண்மித்த நக மடிப்பிற்கும் டிகிரிகள் இடையிலுள்ள கோணம் > 180
 • எலும்புறை பெருக்க நோய் (ஹைபர்டிராபிக் ஆஸ்டியோஆர்தோபதி) - மிகை வளர்ச்சியுறும் நாள்பட்ட எலும்புறையழற்சியினால் மிகுந்த வலி ஏற்படுத்தக்கூடியவை.
 • டுபுய்டிரேனின் உள்ளங்கைச் சுருக்கம் - உள்ளங்கை தசைநார்களின் தடிப்பினாலும் குறுகிப்போவதாலும் ஏற்படும் விரல்களின் நெகிழ்வுப் பிறழ்வுகள். இது மிகவும் பொதுவானது (33 விழுக்காடு நோயாளிகளிடத்தில்).
 • "ஆடவர் முலைப்பெருக்கம் (கைனகொமேஸ்தியா)" - மையமான மார்பகக் காம்புகளிலிருந்து நீளும் ரப்பர் போன்ற அல்லது கெட்டியான திரட்சியுடன் ஆண் மார்பகத்தில் காணப்படும் சிறுசுரப்பி திசுவின் தீங்கற்ற பெருக்கம். இது அதிகரித்த பெண்மை இயக்குநாரால் (எஸ்ட்ராடயலால்) ஏற்படுகிறது; 66 சதவிகித நோயாளிகளிடத்தில் ஏற்படக்கூடியது.
 • "ஹைபோகோனடிசம்" - இனப்பெருக்க இயக்கக்குறை, ஆண்மையின்மை, பாலுறவு இயக்கமின்மை, இவை அனைத்தும் முதன்மை சுரப்பியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஏற்படும் அல்லது ஹைபோதாலமிக் அல்லது பிட்யூட்டரி செயல்பாட்டின் அழுத்தத்தால் ஏற்படும் விதை மெலிவு.
 • கல்லீரல் அளவு. பெரிதுபட்டதாக, இயல்பாக, அல்லது சுருங்கியதாக காணப்படலாம்.
 • மண்ணீரல் விரிவடைதல் (மண்ணீரல் அளவு விரிவடைதல்). வாயிற்றொகுதி இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் சிவப்பு சதைப்பகுதியின் தடை காரணமாக ஏற்படுவது.
 • நீர்க்கோவைகள் - பரிவிரிக்குழியில் நிணநீரின் சேகரிப்பால் ஏற்படும் விலாப்புற மந்தநிலை. (விலாப்புற மந்தநிலையை கண்டுபிடிக்க 1500 mL தேவைப்படுகிறது).
 • கேபுட் மெடுஸா - வாயிற்றொகுதி உயர் இரத்த அழுத்தத்தில் தொப்புழ்கொடி நாளம் உடைபடலாம். வாயிற்றொகுதி நாள அமைப்பைச் சேர்ந்த இரத்தமானது தொப்புள்கொடி நாளத்தினால் வழிமாற்றப்பட்டு தொப்புள்கொடி இணைப்பு நாளங்களின் வழியாக தள்ளப்படலாம் என்பதோடு முடிவில் கேபுட் மெடுஸாவாக குறிப்பிடப்படும் அடிவயிற்று சுவர் நாளங்களுக்கும் தள்ளப்படலாம்.
 • க்ருவெய்லர்-பம்கார்டன் முணுமுணுப்பு - வாயிற்றொகுதி இரத்த அழுத்தம் காரணமாக வாயிற்றொகுதி அமைப்பிற்கும் தொப்பூழ்கொடி நாளத்தொகுதிக்கும் இடையில் ஏற்படக்கூடிய இணைத் தொடர்புகள் மூலம் அடிவயிற்றுப் பகுதியில் நாள முணுமுணுப்பு ஏற்படுதல் (துடிப்புமானி மூலம் அறியக்கூடியது).
 • ஃபெடோர் ஹெபடைடிஸ் - அதிகரித்த டைமைதில் சல்பைட் காரணமாக மூச்சுக்காற்றில் முடைநாற்றம் இருப்பது.
 • "மஞ்சள் காமாலை" - அதிகரித்த பிலிருபின் காரணமாக தோல், கண் மற்றும் கோழைச்சவ்வில் (குறைந்தபட்சம் 2–3 mg/dL அல்லது 30 mmol/L) ஏற்படும் மஞ்சள் நிறம். சிறுநீரும் கரிய மஞ்சள் நிறத்தில் காணப்படலாம்.
 • அஸ்டெரிக்ஸிஸ் - கல்லீரல்நோய் மூளைக்கோளாறு உள்ள நோயாளிகளிடத்தில் நீண்ட, பின்நெகிழ்வுள்ள கைகளின் இருபக்க இணைவற்ற தளர்ச்சி.
 • மற்றவை. பலவீனம், வெளிறிப்போதல், பசியின்மை, எடையிழப்பு.

பிரச்சினைகள்

 • நோய் அதிகரிக்கையில் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. சிலரிடத்தில், பின்வருவன நோயின் முதல் அறிகுறிகளாக இருக்கின்றன.
 • குருதி உறைய வைக்கும் காரணிகள் குறைவாக உற்பத்தியாவதால் ஏற்படும் கன்றிப்போதல் மற்றும் இரத்தப்போக்கு.
 • பிலிருபினின் குறைவுபட்ட முறைப்படுத்துதல் காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை.
 • தோலில் பித்தநீர் உப்புக்களின் விளை பொருட்கள் படிவதன் காரணமாக ஏற்படும் அரிப்பு (அரிப்புகள்).
 • கல்லீரல்நோய் மூளைக்கோளாறு - அம்மோனியாவையும் அதுசார்ந்த நைதரசனுக்குரிய உட்பொருட்களையும் இரத்தத்திலிருந்து கல்லீரல் தெளிவுபடுத்தாமல் இருப்பதால், இவை மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பெருமூளை செயல்பாட்டை பாதிக்கிறது: தனது தோற்றத்தைக் குறித்த விழிப்புணர்வில்லாது இருத்தல், எதிர்வினையாற்றாதிருத்தல், மறதி, ஒருமனதுடன் செயல்பட சிக்கல்கள் அல்லது தூங்கும் பழக்கங்களில் மாற்றங்கள்.
 • செயல்பாட்டு உட்பொருள்களின் குறைவுபட்ட தன்னகப்படுத்தல் காரணமாக ஏற்படும் மருந்துகளுக்கு பலனின்றி இருத்தல்.
 • இந்த நோய் முதன்மையான கல்லீரல் புற்றுநோயான கல்லீரல் உயிரணுப் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது. இது அதிக உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டதாகும்.
 • வாயிற்றொகுதி உயர் இரத்தழுத்தம்- குடல்பகுதிகள் மற்றும் மண்ணீரலிலிருந்து ஈரல்சார் தமனிகள் வழியாக சாதாரணமாக எடுத்துச்செல்லப்படும் இரத்தம் மிகவும் மெதுவாக ஓடுகிறது என்பதுடன் அழுத்தம் அதிகரிக்கிறது; இது பின்வரும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது:
 • நீர்க்கோவைகள் - அடிவயிற்று உட்குழிவுக்குள் இரத்த நாளங்கள் வழியாக நீர்மம் கசிவது.
 • உணவுக்குழாய் புடைப்புகள் - வயிறு மற்றும் உணவுக்குழாய் இரத்த நாளங்கள் வழியாக ஓடும் இணையான இரத்த ஓட்டம். இந்த இரத்த நாளங்கள் பெரிதடையலாம் என்பதோடு வெடித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

உறுப்புக்களிலான பிரச்சினைகள்

 • கல்லீரல் இழைநார் வளர்ச்சியானது நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாடின்மைக்கு காரணமாகலாம் என்பதோடு நோய்த்தொற்றிற்கும் காரணமாகிறது. தொற்றின் குறிகள் மற்றும் அறிகுறிகள் திட்டவட்டமானது இல்லை என்பதோடு கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிக்கலானது (எ.கா., காய்ச்சல் இன்றி மோசமடையும் என்செபலாபதி).
 • வழக்கமாக சிறுகுடல்களில் காணப்படும் பாக்டீரியாவினால் அடிவயிற்றில் உள்ள நீர்மத்திற்கு (நீர்க்கோவை) தொற்று ஏற்படுவது (இடைவிடாத பாக்டீரியல் அடிவயிற்றுச் சவ்வு அழற்சி).
 • ஹெபாடோர்னல் குறைபாடு - சிறுநீரகங்களுக்கு போதுமான இரத்தம் செல்லாது, சிறுநீரகம் செயலிழப்பது. இந்தப் பிரச்சினை மிக அதிகமான உயிரிழப்பு அபாயத்தைக் கொண்டுள்ளது (50 சதவிகிதத்திற்கும் மேல்).
 • ஹெபடோபல்மனரி சிண்ட்ரோம் - இரத்தம் வழக்கமான நுரையீரல் சுழற்சியை மாற்றச்செய்வது (உயர்த்தப்படுவது), சயானோஸிஸ் மற்றும் டிஸ்பினியாவிற்கு வழியமைப்பது (மூச்சுத் திணறல்), நிமிர்ந்து உட்கார்ந்திருக்கையில் மோசமடைவது.
 • போர்ட்டோபல்மனரி ஹைபர்டென்ஷன் - வாயிற்றொகுதி உயர்அழுத்தம் காரணமாக நுரையீரல்களுக்கு மேலாக இரத்த அழுத்தம் அதிகரிப்பது.

காரணங்கள்

கல்லீரல் நோய் ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன; சில நேரங்களில் ஒரு நோயாளிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணத்தினால் ஏற்படலாம். மேற்கத்திய உலகில் நாள்பட்ட குடிப்பழக்கமும் ஹெபடைடிஸ் சி நோயும் மிகவும் பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

குடிப்பவருக்கான கல்லீரல் நோய் (ஏஎல்டி) - பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு தொடர்ந்து கூடுதலாக குடித்துவரும் தனிநபர்களிடத்தில் 10 முதல் 20 சதவிகிதம் வரை இந்த நோய் உருவாகிறது. இயல்பான புரோட்டின், கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வழக்கமான உள்வாங்கலை தடுப்பதால் மதுப்பழக்கம் ஈரலை காயப்படுத்துவதாக இருக்கிறது. இவ்வகை நோயாளிகளிடத்தில் காய்ச்சலுடன் கூடிய குடிப்பழக்க குடலழற்சி, ஹெபாடோமெகலி, மஞ்சள் காமாலை, மற்றும் பசியின்மை ஆகியனவும் உடனிருக்கலாம். ஏஎஸ்டி மற்றும் ஏஎல்டி ஆகிய இரண்டும் உயர்நிலையில் இருக்கும்; ஆனால் ஏஎஸ்டி:ஏஎல்டி விகிதம் > 2.0 உடன் 300 IU/Lக்கு குறைவாக இருக்கிறது, இந்த மதிப்பு மற்ற கல்லீரல் நோய்களில் காணப்படுவது அரிது. கல்லீரல் திசு ஆய்வில் ஈரல்திசு அழுகல், மெல்லரி புரதங்கள், சிரை இணைப்பிழைய அழற்சியுடனான நடுநிலை நாட்ட நுழைவு ஆகியன காணப்படலாம்.

நாள்பட்ட ஹெபடைடிஸ் சி - ஹெபடைடிஸ் சி தீநுண்மம் உடனான தொற்று கல்லீரல் அழற்சிக்கு காரணமாகிறது. தொடர்ந்து சில பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வகை அழற்சி பல்வேறு அளவுகளில் மாறுபடும் ஈரல் நோய்க்கு காரணமாக அமைகிறது. ஹெபடைடிஸ் சியால் ஏற்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு மிகவும் வழமையான காரணமாக இருக்கிறது. ஊனீர் ஆய்வுகளில் ஹெபடைடிஸ் சி எதிர்ப்பொருள் அல்லது வைரல் ஆர்என்ஏயை மதிப்பிடுதல்களுடன் நோய் அறுதியிடப்படக்கூடியது. இம்முனோஸ்ஸே, இஐஏ-2 அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான தொடக்கநிலை ஆய்வாகும்.

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி - ஹெபடைடிஸ் பி வைரஸ் கல்லீரல் அழற்சிக்கு காரணமாகிறது என்பதுடன் ஒருசில பத்தாண்டுகளுக்கும் மேலான காயம் ஈரல் நோய்க்கு வழியமைக்கிறது. ஹெபடைடிஸ் டி ஹெபடைடிஸ் பி உடன் சார்ந்திருப்பது, ஆனால் இணை-தொற்றில் கல்லீரல் இழைநார் வளர்ச்சியை விரைவுபடுத்துவது. நாள்பட்ட ஹெபடைடிஸ் பி ஹெச்பிஏஜி > 6 மாதங்களுக்குப் பிறகான தொடக்கநிலை தொற்றின் கண்டுபிடிப்பைக் கொண்டு அறுதியிடப்படக்கூடியது. ஹெச்பிஇஏஜி மற்றும் ஹெச்பிவி டிஎன்ஏ ஆகியவை நோயாளிக்கு எதிர் வைரஸ் சிகிச்சை தேவையா என்பதை தீர்மானிக்கிறது.

ஆல்கஹாலிக் அல்லாத ஸ்டெதோஹெபடைடிஸ் (என்ஏஎஸ்ஹெச்) - என்ஏஎஸ்ஹெச்சில், ஈரலி்ன் மேல்பகுதியிலான கொழுப்பு உருவாக்கங்கள் முடிவில் தழும்பு திசுவிற்கு காரணமாகிறது. இந்த வகையான ஹெபடைடிஸ் நீரிழிவு நோய், ஊட்டச்சத்தின்மை, உடல் பருமன், காரனரி ஆர்டரி நோய் ஆகியவற்றோடும் கார்டிகாஸ்டிராய்ட் மருத்துவங்களுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இந்த ஒழுங்கின்மை குடிப்பழக்க கல்லீரல் இழைநார் வளர்ச்சியோடு ஒத்திருப்பது ஆனால் நோயாளி குடிப்பழக்கத்தை கொண்டிருப்பதில்லை. திசு ஆய்வு நோய் அறுதியிடலுக்கு தேவைப்படுகிறது.

முதன்மை பித்தநீர் கல்லீரல்நோய் அறிகுறியில்லாமலோ அல்லது களைப்பு, அரிப்பு மற்றும் மஞ்சள் காமாலை அல்லாத தோல் ஹெபாடோமலஜியுடனான ஹைபர்பிக்மண்டேஷன் ஆகியவற்றின் அறிகுறிகள் இருக்கலாம். முதன்மையாக அல்கலைன் பாஸ்பேட் உயர்ந்தும் கொழுமங்கள் மற்றும் பைலிருபின் மதிப்புகள் உயர்ந்தும் காணப்படும். ஈரல் திசு ஆய்வில் எதிர்மைட்ரோகாண்ட்ரியல் எதிர்ப்பொருள்கள் இருப்பதுடன் உறுதிப்பாடான பகட்டான பித்தநீர் கல் புண்கள் காட்டப்பட்டால் இந்த நோயுள்ளதாக அறுதியிடலாம். இது பெண்களில் மிகவும் பரவலாக காணப்படுகிறது.

முதன்மை தடிமனான பித்தக்குழாய் அழற்சி - பிஎஸ்சி என்பது அரிப்புகள், ஸ்டெட்டோரியா, கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் பற்றாக்குறைகள் மற்றும் வளர்ச்சிதைமாற்ற எலும்பு நோயுடன் காணப்படும் அதிகரித்த கொழும நிலைகுலைவு. குடல்பகுதி அழற்சிநோயுடனான, குறிப்பாக வயிற்றுப் புண்களுடன் வலுவான தொடர்பு உள்ளது. முரனொளி பித்தக்குழாய் வரைவி காட்டும் பித்தக்குழாய்களின் தளர்ச்சி மற்றும் மணிகள் போன்ற தோற்றம் நோய் அறுதியிட சிறந்தது. குறிப்பிடவியலா சீரம் இம்முனோகுளோபின்களும் அதிகரிக்கக்கூடும்.

ஆட்டோஇம்மூன் ஹெபடைடிஸ் - தடுப்பாற்ற திறனிழப்பால் ஏற்படும் அழற்சி முடிவில் தழும்பு மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு காரணமாகும். இந்த நோயாளிகளின் சீரம் குளோபின்கள், குறிப்பாக காமா குளோபின்கள் கூடுதலாக காணப்படுகின்றன. பிரென்டைஸோன் +/- அஸதயோப்ரின் கொண்டு சிகிச்சையளிப்பது பலன்மிக்கது. ஆட்டோஇம்மூன் ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயாளிகளின் பிழைப்புவீதம் 90 சதவிகிதத்திற்கு மேலாகவும் பத்து வருட ஆயுள் நீ்ட்டிப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. ஆட்டோஇம்மூனை அறுதியிடுவதற்கு தி்ட்டவட்டமான கருவிகள் இல்லை, ஆனால் கார்டிகோஸ்டிராய்ட்ஸ் சிகிட்சையை தொடங்குவது பலன்மிக்கது.

பரம்பரை ஹீமோகுரோமடோடிஸ் - வழக்கமாக பரம்பரையாக குடும்பங்களில் காணபடுவது. இவர்களுக்கு இரும்புச்சத்து மிகையாவதன் காரணமாக ஏற்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி, தோல் ஹைபர்பிக்மண்டேஷன், நீரிழிவு நோய், போலி கீல்வாதம், மற்றும்/அல்லது இதயத்தசை நோய் ஆகியனவற்றிற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆய்வகச் சோதனைகள் பசித்த டிரான்ஸ்ஃபெரின் செறிவு > 60% மற்றும் ஃபெரிட்டின் > 300 ng/mL இருப்பதை காட்டலாம். மரபணு சோதனை ஹெச்எஃப் இ நிலைமாற்றங்களைக் கொண்டும் அறுதியிடலாம். இவை இருக்கின்றன என்றால் திசு ஆய்வு செய்யவேண்டியதில்லை. ஒட்டுமொத்த உடலில் உள்ள இரும்புச்சத்து அளவை குறைப்பதற்கு சிரை திறப்பு (ஃபிளிபாடமி) கொண்டு சிகிச்சை செய்யப்படுகிறது.

வில்சன்ஸ் நோய் - குறைவான சீரம் செரலோபிளாசமின் மற்றும் கல்லீரல் திசு ஆய்வில் அதிகரித்த ஹெபடிக் செப்பு உள்ளடக்கத்தால் அறியப்படும் ஆட்டோசோமல் ரிசஸிவ் நிலைகுலைவு. இது விழித்திரையில் கெய்சர்-ஃபிளைஷர் வளையங்களைக் கொண்டிருக்கலாம் என்பதோடு மனநிலையிலும் மாற்றம் ஏற்படலாம்.

ஆல்பா 1-எதிர் டிரைப்ஸின் பற்றாக்குறை (ஏஏடி) - ஆடோசொமால் பின்னடையும் தன்மையுள்ள நிலைகுலைவு. நோயாளிகள் சிஓபிடியைக் கொண்டிருக்கலாம், அவர்கள் புகையிலை புகைபிடிக்கும் விவரத்தைக் கொண்டிருந்தால். சீரம் ஏஏடி அளவுகள் குறைவு. மறுஒன்றிணைப்பு ஏஏடியானது ஏஏடி பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் நுரையீரல் நோயைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கார்டியாக் நுரையீரல் நோய் - நாள்பட்ட வலதுபக்க இதயச் செயலிழப்பின் காரணமாக ஏற்படும் குடல் நெருக்கம்.

 • கேலக்டோசிமியா
 • கிளைகோஜென் சேகரிப்பு நோய் வகை
 • சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்
 • ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் அல்லது விஷப்பொருள்கள்
 • சிலவகை பாராசி்ட்டிக் தொற்றுக்கள் (ஷிஸ்டோசோமையாஸிஸ் போன்றவை)

உடல் இயக்க நோய்குறியியல்

 • புரதங்களை தொகுப்பது (எ.கா.,அல்புமின், இரத்த உறைவு காரணிகள் ) , விஷநீக்கம் மற்றும் சேமிப்பு (எ.கா.,வி்ட்டமின் ஏ) ஆகியவற்றில் கல்லீரல் மிகமுக்கிய பங்காற்றுகிறது. மேலும், இது கொழுமங்கள் மற்றும் கார்போஹைதரைட் வளர்ச்சிதை மாற்றங்களிலும் பங்கேற்கிறது.
 • எந்தக் காரணமாக இருந்தாலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி வருவதற்கு முன்னர் கல்லீரல் அழற்சியும் கொழுப்புநிறை கல்லீரல் நோயும் வருவது வழமையாக உள்ளது. இந்த நிலையிலேயே இதற்கான காரணம் களையப்பட்டால், இந்த மாற்றங்களை முற்றிலுமாக மீட்க முடியும்.
 • கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் நோய்குறியின் முதன்மைத் தன்மையாக இயல்பான பாரங்கைமாவை (அருகுக்கலவிழையம்) வடுவுற்ற தழும்பு திசுவாக மாற்றுவதேயாகும். இதனால் வாயிற்றொகுதி இரத்தம் உறுப்பு வழியாக ஓடுவது தடுக்கப்படுவதுடன் இயல்பான செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. அண்மைய ஆய்வுகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சியில், சாதாரணமாக விட்டமின் ஏவை சேகரித்து வைக்கும் உயிரணு வகையான ஸ்டெல்லாட் உயிரணுவின் மையப் பங்கை சுட்டுகின்றன. ஹெபடிக் பாரன்கிமாவிற்கு ஏற்படும் சேதமானது ஸ்டெல்லாட் உயிரணுவின் தூண்டுதலுக்கு வழியமைக்கிறது. இது சுருங்கும் இயல்புள்ளதாக (மையோஃபைப்ரேபிளாஸ்ட் எனப்படுவது) மாறி இரத்த ஓட்டத்தை இடைமறிக்கின்றது. மேலும், இழைம எதிர்வினை மற்றும் இணைப்பு திசுவின் பரவலுக்கு வழியமைக்கும் TGF-β1 ஐ சுரக்கச்செய்கிறது. மேலும், மச்சை மெட்டாலோபுரோட்டினஸ் மற்றும் இயல்பாக தோன்றும் தடுப்பான்கள் (டிஐஎம்பி 1 மற்றும் 2) இடையிலுள்ள சமநிலையில் குறுக்கிடுவதால் இது மச்சை சிதைவு மற்றும் இணைப்பு திசு-சுரப்பு மச்சை மாற்றியமைப்பிற்கு வழியமைக்கிறது.
 • இந்த இழைம திசு பட்டைகள் (செப்டா) ஹெபாடோசைட் கணுக்களை பிரிக்கிறது; இது முடிவில் ஒட்டுமொத்த கல்லீரல் அமைப்பையும் மாற்றியமைப்பதால் இரத்த ஓட்டம் முழுவதுமாக குறைந்துபோவதற்கு வழியமைக்கிறது. மண்ணீரல் சுருங்குவதால், ஹைபர்ஸ்பெலினிஸம் மற்றும் இரத்தத் தட்டுக்களின் அதிகரித்த பிரிவுபடுதலுக்கு காரணமாகிறது. வாயிற்றொகுதி உயர் இரத்த அழுத்தம் கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் மிகத் தீவிரமான பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்கிறது.

நோய் அறுதியிடல்

கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான தங்கத் தரநிலை அறுதியிடலாக ஊசித்துளை, டிரான்ஸ்ஜெகுலர், சாவிதுளை (லபராஸ்கோபிக்) அணுகுமுறை மூலமான கல்லீரல் திசு ஆய்வு உள்ளது. இருப்பினும், மருத்துவ, ஆய்வக மற்றும் ரேடியோகதிர் தரவுகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் குறிப்பி்ட்டால் திசு ஆய்வு தேவையில்லை. மேலும், கல்லீரல் இழைநார் வளர்ச்சியேகூட ஈரல் திசு ஆய்வால் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் கல்லீரல் திசுவாய்வில் சிறிய ஆனால் குறிப்பிடத்தகுந்த அபாயம் இருக்கிறது

ஆய்வக கண்டுபிடிப்புகள்

பின்வரும் ஆய்வக கண்டுபிடிப்புகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான வழமையான குறியீடுகளாக இருக்கின்றன:

 • அமினோடிரான்ஸ்ஃபரேஸ்கள் - ஏஎஸ்டி மற்றும் ஏஎல்டி ஆகியவை மிதமாக அதிகரித்து ஏஎஸ்டி > ஏஎல்டி ஆக இருக்கும். இருப்பினும், இயல்பான அமினோடிரான்ஃபெரேஸ்கள் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அறிகுறிகளாக இருக்காது.
 • அல்கலைன் பாஸ்பேட்டேஸ் - வழக்கமாக சற்றே கூடுதலாக காணப்படும்.
 • சிஜிடி – ஏபி அளவுகளோடு தொடர்புபடுத்தப்படுவது.. வழமையாக நாள்பட்ட ஈரல் நோயில் மதுப்பழக்கத்தினால் ஏற்படுவதைவிட கூடுதலாக இருக்கும்.
 • பிலிருபின் - கல்லீரல் இழைநார் வளர்ச்சி மேலோங்க மேலோங்க கூடுதலாகலாம்.
 • அல்புமின் - அல்புமினானது கல்லீரலால் மட்டுமே தயாரிக்கப்படுவதால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மோசமடையும்போது ஈரல் செயல்பாடு வீழ்ச்சியடைந்து அல்புமின் அளவு குறைந்துபோகிறது.
 • இரத்தக்கட்டு நேரம் - உறைதல் காரணிகளை கல்லீரல் தயாரிப்பதால் நேரம் அதிகரிக்கிறது.
 • குளோபுலின்கள் - ஈரலிலிருந்து பாக்டீரியல் ஆன்டிஜென்கள் நிணநீர் திசுவிற்கு விலகிச்செல்வதன் காரணமாக அதிகரிக்கிறது.
 • சீரம் சோடியம் - அதிக அளவிலான ஏடிஹெச் மற்றும் அல்டோஸ்டிரோன் அளவுகளின் காரணமாக நீரை வெளியேற்றும் திறனின்மை காரணமாக ஹைபோநட்ரீமியா ஏற்படுகிறது.
 • த்ரோம்போசைட்டோபீனியா - மண்ணீரல் பெரிதாவதால் ஏற்படும் சிக்கல் மற்றும் ஈரலிலிருந்து குறைவுபட்ட த்ரோம்போபோய்டின் ஆகிய இரண்டின் காரணமாகவும் ஏற்படுவது. இருப்பினும், இரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை < 50,000/mL.க்கு குறைய எப்போதாவதுதான் காரணமாகின்றன
 • லுக்கோபீனியா மற்றும் நியூட்ரோபீனியா - மண்ணீரல் ஒதுங்குதலோடு மண்ணீரல் பெரிதாதல் காரணமாக ஏற்படுவது.
 • இரத்தக்கட்டு பழுதுகள் - கல்லீரலானது பெரும்பாலான இரத்தக்கட்டு காரணிகளை உருவாக்குகிறது என்பதோடு கல்லீரல் இழைநார் வளர்ச்சி மோசமடைவதோடு இரத்தக்கட்டு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
 • இவற்றில் ஆறு அறிகுறிகளைக் கொண்ட செல்லத்தக்க மற்றும் காப்புரிமை பெற்ற ஃபைப்ரோடுஸ்ட் என்ற செய்முறை இழைநார் வளர்ச்சியை (கல்லீரல் இழைநார் வளர்ச்சி உட்பட) உடல்புகாது கண்டறிவதாக உள்ளது.

இழைநார் வளர்ச்சியை அறியப் பயன்படும் பிற ஆய்வக ஆய்வுகள்

 • ஹெபடைடிஸ் வைரஸ்கள், ஆட்டோ ஆண்டிபாடிஸ் (ஏஎன்ஏ, எதிர்-மென் தசை, எதிர்-மைட்டோகாண்ட்ரியா, எதிர்-எல்கேஎம்) ஆகியவற்றிலான சீரம் ஆய்வு.
 • ஃபெரிட்டின் மற்றும் டிரான்ஸ்ஃபெரின் செறிவு (இரும்புச்சத்து அதிகமாவதன் குறிப்பான்கள்), செம்பு மற்றும் செரிலோபிளாசமின் (செம்பு அதிகமாவதன் குறிப்பான்கள்)
 • இம்முனோகுளோபிமின் அளவுகள் (IgG, IgM, IgA) - இந்த திட்டவட்டமானவை அல்ல ஆனால் பல்வேறு காரணங்களை வேறுபடுத்திக் காண்பதற்கு உதவுபவை
 • கொழுமங்கள் மற்றும் குளுக்கோஸ்
 • ஆல்பா 1-ஆண்டிடிரைப்ஸின்

படமெடுத்தல்

அடிவயிற்றின் அச்சு கணித்த குறுக்குவெட்டு வரைபடத்தில் காணப்படுவதன்படி கல்லீரல் இழைநார் வளர்ச்சி.

மீயொலி நோட்டம் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மதிப்பிடுதலில் வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது, இதில் தொடர்ச்சியற்று காணப்படும் பகுதிகளோடு முற்றிய கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் உள்ள சிறிய மற்றும் கணு ஈரலைக் காட்டக்கூடியதாக இருக்கிறது. மீயொலி நோட்டத்தை ஈரல்திசு புற்றுநோய், வாயிற்றொகுதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் பட்-சியாரி கூட்டறிகுறி ஆகியவற்றிற்கான நோயறிதலாகவும் பயன்படுத்தலாம்.

ஃபைப்ரோஸ்கேன் (டிரான்சியன்ட் எலஸ்ட்டோகிராபி) என்ற புதிய சாதனம் ஈரல் விறைப்புத்தன்மையை தீர்மானிப்பதற்கு நெகிழ்வு அலைகளைப் பயன்படுத்துகிறது; கோட்பாட்டளவில் மெட்டாவிர் அளவை புள்ளிகளில் கல்லீரல் சேதத்தை மதிப்பிட இதனைப் பயன்படுத்தலாம். ஃபைப்ரோஸ்கேன் அழுத்த அளவீட்டோடு ஈரலுடைய மீயொலி படத்தை (20–80 mm வரை) எடுத்துத் தருகிறது. இந்தச் சோதனை திசு ஆய்வினைவிட மிகவும் வேகமானது என்பதுடன் (வழக்கமாக 2.5–5 நிமிடங்கள் நீடிப்பது) முற்றிலும் வலியற்றது. இது கல்லீரல் இழைநார் வளர்ச்சி தீவிரத்தன்மையுடனான காரணார்த்த தொடர்பைக் காட்டுகிறது.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எடுக்கப்படும் மற்ற சோதனைகளாக அடிவயிறு கணித்த குறுக்குவெட்டு வரைவி மற்றும் கல்லீரல்/நிணநீர் நாள எம்ஆர்சிபி உள்ளிட்டவை இருக்கின்றன.

உள்நோக்கியியல்

கல்லீரல் இழைநார் வளர்ச்சி உள்ள நோயாளிகளிடத்தில் உணவுக்குழாய் நாளம் பருத்து விரியக்கூடிய வாய்ப்பின்றி உள்ளதா என அறிய இரைப்பை அகநோக்கி (உணவுக்குழாய், வயிறு மற்றும் சிறுகுடல் மேல்பகுதி ஆகியவற்றை உள்நோக்கி கொண்டு பரிசோதித்தல்) சோதனை செய்யப்படுகிறது. இவை கண்டுபிடிக்கப்பட்டன என்றால் முற்காப்பு சிகிச்சை பயன்படுத்தப்படலாம் (ஸ்கெலரோதெரபி அல்லது கட்டுதல்) என்பதோடு பீட்டா பிளாக்கர் சிகிச்சையும் தொடங்கப்படலாம்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான காரணங்களாக அரிதாக பித்தநீர் நாளங்களின் நோய்கள், முதல்நிலை ஸ்கெலரோஸிங் கோலங்கிட்டிஸ் போன்றவை, இருக்கலாம். இஆர்சிபி அல்லது எம்ஆர்சிபி (பித்தநீர் நாளம் மற்றும் கணையத்தின் எம்ஆர்ஐ) போன்ற பித்தநீர் நாளங்களை படமெடுத்தல் நோயாளிகளிடத்தில் உள்ள இயல்புக்கு மாறானவற்றைக் காட்டுவதோடு நோய் அறுதியிடலிலும் உதவலாம்.

நோய்க்குறியியல் (பதொலோஜி)

கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஹெபடோசெல்லுலார் கார்சினோமாவிற்கு வழியமைக்கிறது (ஆட்டோப்ஸி மாதிரி).

மேக்ரோஸ்கோப் வழியாக தொடக்கத்தில் கல்லீரல் விரிவுபடுத்தப்படுகிறது, ஆனால் நோய் அதிகரிப்பதால் இது சிறியதாகிவிடுகிறது. இதனுடைய மேலதளம் ஒழங்கற்று இருக்கிறது, சீரான தன்மை கெட்டியாகவும் வண்ணமானது மஞ்சளாகவும் இருக்கிறது (ஸ்டெடோஸிஸ் உடன் இணைந்திருந்தால்). கணுக்களின் அளவைப் பொறுத்து மூன்றுவகையான மேக்ரோஸ்கோப்பிக்குகள் இருக்கின்றன. மோக்ரோநோடுலர், மேக்ரோநோடுலர் மற்றும் கலப்பு கல்லீரல் இழைநார் வளர்ச்சி. மைக்ரோநோடுலர் வடிவத்தில் (லென்னக்ஸ் கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது போர்டல் ஈரல் நோய்) மறுஉருவாக்கம் செய்யப்படும் கணுக்கள் 3 மில்லிமீட்டருக்கும் குறைவாக இருக்கின்றன. மேக்ரோநோடுலர் கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் (நெக்ரோட்டிக் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு பிந்தையது) கணுக்கள் 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருக்கின்றன. கலப்பு கல்லீரல் இழைநார் வளர்ச்சி வேறுபட்ட அளவுகளில் வெவ்வேறு கணுக்களைக் கொண்டதாக இருக்கிறது.

இருப்பினும், கல்லீரல் இழைநார் வளர்ச்சி மைக்ரோஸ்கோபியில் அதனுடைய நோய் ஆய்வியல் அம்சங்களால் வரையறுக்கப்படுகிறது: (1) ஹைபோடோசைட்களின் மறுஉருவாக்க கணுக்கள் இருப்பது (2) ஃபைப்ரோஸிஸ் இருப்பது, அல்லது இந்த கணுக்களுக்கு இடையில் உள்ள இணைப்பு திசு இடம் மாறியிருப்பது. ஃபைப்ரோஸிஸ் வடிவமைப்பு கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு வழியமைக்கும் உள்ளுறையும் சீரழிவைப் பொறுத்து காணப்படலாம்; இதற்குக் காரணமான உள்ளுறையும் நிகழ்முறை தீர்க்கப்பட்டாலும் அல்லது நிறுத்தப்பட்டாலும் ஃபைப்ரோஸிஸ் பரவும். கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் உள்ள ஃபைப்ரோஸிஸ் ஈரலில் உள்ள மற்ற இயல்பான திசுக்களின் அழிவிற்கு வழியமைக்கிறது. இது சைனுசாய்ட்ஸ், ஸ்பேஸ் ஆப் டிஸ் மற்றும் ஈரலில் இரத்த ஓட்டம் மற்றும் நுழைவழி உயர் இரத்த அழுத்தத்திற்கான தடுப்பிற்கும் வழியமைக்கும் பிற இரத்தநாள அமைப்புக்கள் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது.

ஈரலை பல்வேறு முறைகளிலும் காயப்படுத்துகின்ற பல்வேறுவகை ஆக்கக்கூறுகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு காரணமாகின்றன என்பதோடு பிற காரணக் குறிப்பீட்டு இயல்புமாற்றங்களும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் காணப்படலாம். உதாரணத்திற்கு, நாள்பட்ட ஹெபடைடிஸ் பி இல், லிம்போசைட்ஸ் உடனான கல்லீரல் வேர்த்திசுவின் அழற்சி காணப்படுகிறது. கார்டியாக் கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் எரித்ரோசைட்களும் ஹெபடிக் நாளங்களைக் சூழ்ந்திருக்கும் திசுவில் பெரிய அளவிற்கான ஃபைப்ரேஸிஸ்களும் காணப்படுகின்றன. முதன்மை நிணநீர் கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் நிணநீர்க் கட்டியைச் சுற்றிலும் ஃபைப்ரோஸிஸ் காணப்படுவதோடு கிரானுலோமஸ் மற்றும் நிணநீர் சேகாரமும் இருக்கிறது; ஆல்கஹாலிக் ஈரல் நோயில் நியூட்ரோபில் உடனான கசிவு காணப்படுகிறது.

தரம்பிரிப்பு

கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் தீவிரத்தன்மை சைல்ட்-பங் எண்ணிக்கையால் பொதுவாக வகைப்பிரிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கைக்கு பிலிருபின், அல்புமின், ஐஎன்ஆர், நீர்க்கோவைகளின் இருப்பு மற்றும் தீவிரத்தன்மை மற்றும் வகுப்பு ஏ,பி, அல்லது சியைச் சேர்ந்த நோயாளிகளை வகைப்படுத்துவதற்கான என்செபலோபதி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 

மிக நவீனமான பலன்கள், கல்லீரல் மாற்று சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் மற்ற சூழல்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, இவை இறுதி-நிலை கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் உருமாதிரி (எம்இஎல்டி) என்பதோடு இதனுடைய பீடியாட்ரிக் கூட்டான பீடியாட்ரிக் இறுதி-நிலை ஈரல் நோயாகவும் (பிஇஎல்டி) இருக்கிறது.

ஹெபடிக் நாள அழுத்த சரிவு, அதாவது ஈரலுக்கு உள்நோக்கியும் வெளிநோக்கியும் செல்கின்ற இரத்தத்திற்கு இடையிலுள்ள நாள அழுத்த வேறுபாடு, அத்துடன் இது கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் தீவிரத்தன்மையை தீர்மானிக்கிறது என்றாலும் அளவிடுவதற்கு கடினமானது. 16 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் மேற்பட்டது என்றால் மரணம் ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

கையாளுதல்

பொதுவாக, கல்லீரல் இழைநார் வளர்ச்சியால் ஏற்படும் கல்லீரல் சேதம் திரும்பப்பெற முடியாதது, ஆனால் சிகிச்சையானது மேற்கொண்டு அதிகரித்தலை நிறுத்தலாம் மற்றும் பிரச்சினைகளைக் குறைக்கலாம். ஆரோக்கியமான உணவு ஊக்கப்படுத்தப்படுகிறது, கல்லீரல் இழைநார் வளர்ச்சியான ஆற்றலைக் குடிக்கும் நிகழ்முறை என்பதால். நெருக்கமாக பின்தொடர வேண்டியது முற்றிலும் அவசியமானது. நோயெதிர்ப்புப் பொருள்கள் தொற்றுக்களைத் தடுக்க பரிந்துரைக்கப்படுகிறது என்பதுடன் பல்வேறு மருத்துவங்கள் அரிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. லாக்டுலோஸ் போன்ற மலமிளக்கிகள் மலச்சிக்கல் பிரச்சினையைக் குறைக்கின்றன; என்செபலாபதியைத் தடுப்பதில் அவற்றின் பங்கு வரம்பிற்குட்பட்டது.

உள்ளுறையும் காரணங்களுக்கு சிகிச்சையளித்தல்

ஆல்கஹாலின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் ஆல்கஹாலிக் கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஆல்கஹாலைத் தவிர்த்துவிடுவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் சம்பந்தப்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான சிகிச்சை வெவ்வேறு வகையிலான ஹெபடைடிஸ் வகை சிகிச்சைகளைப் பயன்படுத்துவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது, அதாவது வைரல் ஹெபடைசிற்கான இண்டப்ஃபெரான் மற்றும் ஆட்டோஇம்மூன் ஹெபடைடிசிற்கான கார்டியோகோஸ்டிராய்ஸ். உறுப்புகளில் செம்பு சேர்வதால் உருவாகும் வில்சன்ஸ் நோயால் ஏற்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி இந்த செம்பை நீக்குவதற்கு செலேஷன் தெரபி (எ.கா., பென்தில்லேமைன்) கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேற்கொண்டு கல்லீரல் சேதத்தைத் தடுத்தல்

கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் உள்ளுறையும் காரணிகள் பொருட்டின்றி ஆல்கஹால் மற்றும் பாராசிட்டமால் ஆகியவற்றோடு மற்ற சேதப்படுத்தக்கூடிய உட்பொருள்கள் ஊக்கமிழக்கச் செய்யப்படுகின்றன. சந்தேகத்திற்குரிய நோயாளிகளிடத்தில் வெற்றிடமாக்கம் ஹெப்படைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி என்பதாக கருதப்பட வேண்டும்.

நீர்க்கோவை

உப்புக் கட்டுப்பாடு அவசியமானது, ஏனென்றால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி உப்பு சேகரிக்கப்படுவதற்கு (சோடிய சேமிப்பு) காரணமாக இருக்கிறது. கூடுதல் சிறுநீர் கழிக்கவைக்கும் மருந்துகள் (டையூரிடிக்குகள்) நீர்க்கோவைகளை தோன்றாமல் செய்வதற்கு அவசியமானதாக இரு்ககலாம்.

உணவுக்குழல் தட்டம்மை

நுழைவாயில் உயர் இரத்த அழுத்தத்திற்கு, புரப்ரானாலோல் என்ற மருந்து போர்டல் அமைப்பிற்குள்ளாக இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. மிகவும் பிரச்சினை ஏற்பட்டால் போர்டல் நாளத்தையும் கல்லீரல் நாளத்தையும் இணைக்கும் புறவழி (டிரான்ஸ்ஜூகுலர் இண்ட்ராஹெபடிக் போர்டோசிஸ்டமிக் ஷண்டிங் அல்லது TISS) ஒன்று ஏற்படுத்தப்பட்டு நிலைமை கையாளப்படுகிறது. இது கல்லீரல்நோய் மூளைக்கோளாறை மோசமாக்கக்கூடியது என்பதால் இந்த நோய்க்கு குறைவான வாய்ப்புள்ளவர்களுக்கே இச்சிகிட்சை அளிக்கப்படுகிறது. மேலும் இச்சிகிட்சை கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான முன்னேற்பாடு அல்லது நோய் மட்டுப்படுத்தும் அளவீடு என்றளவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரல்நோய் மூளைக்கோளாறு

கருத்தளவில் உயர்-புரத உணவு நைட்ரஜன் சமநிலையை பாதிக்கிறது என்பதால் மூளைக்கோளாறை அதிகரிக்கச் செய்யக்கூடும் என்பதால் கடந்த காலத்தில் உணவிலிருந்து புரதம் முடிந்தவரை நீக்கப்பட்டிருக்கிறது. இந்த யூகம் தவறானது என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன என்பதால் போதுமான ஊட்டச்சத்தைப் பெற உயர்-புரத உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஈரல் நீரக கூட்டறிகுறி

கூடுதலாக சிறுநீர் கழிக்கும் மருந்துகள் தரப்படாதநிலையில் சிறுநீரில் சோடியத்தின் அளவு 10 mmol/Lக்கும் குறைவாக இருப்பதும் சீரம் கிரியேட்டினைன் > 1.5 mg/dl க்கு மேலாக (அல்லது 24 மணிநேரத்தில் கிரியேட்டினைன் வெளியேற்றம் நிமிடத்திற்கு 40 மிலிக்கும் குறைவாக) இருப்பதும் ஈரல் நீரக நோய்க்கூட்டறிகுறியை வரையறுக்கிறது.

தானாக வயிற்று உள்ளுறை நுண்ணுயிரி அழற்சி

நீர்க்கோவைகளோடு கல்லீரல் இழைநார் வளர்ச்சியுள்ள நோயாளிகள் தானாக வயிற்று உள்ளுறை நுண்ணுயிரி அழற்சி (SBP) நோய்க்கு ஆட்பட வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர்.

உறுப்பு மாற்று சிகிச்சை

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல்

 • பிரச்சினைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது கல்லீரல் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டாலோ கல்லீரல் மாற்று சிகிச்சை அவசியமானதாகும். கல்லீரல் மாற்று சிகிச்சையால் உயிர்வாழ்பவர்கள் எண்ணிக்கை 1990களில் அதிகரித்திருக்கிறது என்பதுடன் 5 வருட உயிர்வாழ்க்கை விகிதம் தற்போது 80 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது, இது நோயின் தீவிரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவருக்குள்ள மற்ற நோய்களின் தீவிரத்தன்மையை பெருமளவிற்கு சார்ந்திருக்கிறது.
 • மாற்றுச் சிகிட்சையாளர்களுக்கு நோயெதிர்ப்பு தடுப்பிகளின் (சைக்ளோஸ்போரின் அல்லது டாக்ரோலிமிஸ் போன்ற மருந்துகள்) பயன்பாடு தேவையானதாகும். .

ஈட்டுத்திறனிழந்த கல்லீரல் இழைநார் வளர்ச்சி

முன்னதாக கல்லீரல் இழைநார் வளர்ச்சி நிலைப்பெற்றிருந்த நோயாளிகளுக்கு மலச்சிக்கல், தொற்று (எவ்வகையாகவும் இருக்கலாம்), கூடுதல் மதுப் பயன்பாடு, மருந்துகள், உணவுக்குழல் தட்டம்மையால் இரத்தப்போக்கு அல்லது நீர்ப்போக்கு போன்ற பல்வேறு காரணங்களால் ஈட்டுத்திறன் இழப்பு ஏற்படலாம். இது மேற்குறிப்பிட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் எந்த வடிவத்தையும் எடுத்து பிரச்சினைகளை உருவாக்கலாம்.

ஈட்டுத்திறனிழந்த கல்லீரல் இழைநார் வளர்ச்சி உள்ள நோயாளிகளுக்கு திரவச் சமநிலை, மன நிலை மற்றும் போதுமான ஊட்டச்சத்து மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை தேவையாதலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட பரிந்துரைக்கப்படுகிறார்கள். பின்வருவனவற்றைக் கொண்டு சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் - டையூரிடிக்குகள், நோய் எதிர்ப்பொருள்கள், மலமிளக்கிகள் மற்றும்/அல்லது எனிமாக்கள், தயாமின் மற்றும் அவ்வப்போது ஸ்டிராய்டுகள், ஆசிட்டைஸ்சிஸ்டைன் மற்றும் பென்டோக்ஸிஃபிலைன். கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் உடலில் சோடியம் சமநிலை பாதிக்கப்பட்டு கூடுதலாக இருக்கக்கூடுமாதலால் உப்புநீர் (சலைன்) அளிப்பது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.

நோய்ப் பரவல்

நாள்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சி நிகழ்வு உலகளாவிய அளவில் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. ரஷ்யா மற்றும் சிஐஎஸ் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதிலும் 2 மில்லியன் மக்கள் உள்ளனர் என்பதோடு ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியால் 300,000 பேர் இறக்கின்றனர்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது நாள்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஆண்கள் மரணிப்பதற்கு பத்தாவது முன்னணிக் காரணமாகவும் பெண்கள் மரணிப்பதற்கு பனிரெண்டாவது முன்னணிக் காரணமாகவும் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்துவந்தது, இது வருடத்திற்கு ஏறத்தாழ 27,000 பேர்களைக் கொல்கிறது. அத்துடன், மனிதர்கள் மீதான பாதிப்புகள், மருத்துவமனைச் செலவுகள் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு என்ற வகையிலான கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் செலவினம் அதிகப்படியானதாக இருக்கிறது.

நிலைப்படுத்தப்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சி 34-66 சதவிகித பத்துவருட உயிரிழப்புத் திறனைக் கொண்டிருக்கிறது. இது பெருமளவிற்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சிக் காரணங்களையே சார்ந்திருக்கிறது. ஆல்கஹாலிக் ஈரல் நோயானது முதல்நிலை நிணநீர் ஈரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் காட்டிலும் மிக மோசமானதாக இருக்கிறது. எல்லாக் காரணங்களிலுமான உயிரிழப்பு அபாயம் பனிரெண்டு மடங்காக அதிகரித்து காணப்படுகிறது; ஒரு காரணம் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் தொடர்விளைவுகளை உள்ளிட்டதாக இல்லை என்றாலும் எல்லா நோய்ப் பிரிவுகளில் இது அப்போதும் ஐந்து மடங்கிற்கு அதிகரித்த அபாயமுள்ளதாக இருக்கிறது.

கல்லீரல் காயத்தை ஏற்படுத்தும் மற்ற நோய்களுக்கும் அப்பால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி அபாயத்தின் மேம்படுத்திகள் குறித்து சற்றே அறியப்பட்டிருக்கிறது (அதாவது ஒட்டுமொத்தமாக கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு வழியமைக்கக்கூடியதாக செயல்படும் ஆல்கஹாலிக் ஈரல் நோய் மற்றும் நாள்பட்ட வைரல் ஹெபடைடிஸ் போன்றவை). காஃபி அருந்துவது கல்லீரல் இழைநார் வளர்ச்சிலிருந்து, குறிப்பாக ஆல்கஹாலிக் கல்லீரல் இழைநார் வளர்ச்சிலிருந்து பாதுகாக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆதாரம் : உலக சுகாதார அமைப்பு

3.125
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top