பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / க்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

க்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்

க்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை எனும் நச்சுப்பொருள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

துணிகளிலும் மற்றும் சாதாரணமாக உபயோகிக்கப்படும் பொருட்களிலும் காணப்படுகின்றன. இந்த காரணத்தால் தோலில் ஏற்பட்ட காயம், மண் அல்லது உரத்தால் தூய்மைக் கேடு அடைந்திருந்தால், சிறப்பான கவனிப்பு அளிக்கப்பட வேண்டும்.

நோய் நச்சுக்கள் (Toxins)

இருவகையான நோய் நச்சுக்கள் கி. டெட்டனையால் உருவாக்கப்படுகிறது. ஒன்று பிராணவாயுவில் நிலையற்ற ஹீமோலைசின். அது டெட்டனோலைசின் என கூறப்படுகிறது. மற்றொன்று இன்றியமையாத நோய் ஏற்படுத்தும் ஒரு மூளை நச்சு ஆகும். இதனை டெட்டனோஸ்பாஸ்மின் என்று அழைப்பர்.

எலியைக் கொல்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள சுத்தமான டெட்டனோஸ்பாஸ்மின் அளவு 0.0001/ug ஆகும். இது மனிதன் மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு வாய் வழி செலுத்துவதைவிட ஊசி மூலம் செலுத்தும்போது நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.

நேரடியாகக் காற்றில்லாமல் வாழும் பாக்டீரியாக்கள் தோலில், சளி சவ்வின் மேற்பரப்பில் மற்றும் அதிக அடர்வுடன் வாயிலும் இரைப்பை குடல் பாதைகளில் சாதாரணமாக வாழும் உயிரியாக மனித உடலில் முழுவதுமாகக் காணப்படுகின்றன. இவை பிராணவாயு இருக்கும் நிலையில் வளராது, மற்றும் பிராண வாயுவால் கொல்லப்படுகிறது. சாதாரணமாக வாழும் உயிரியால் உருவாகும் தொற்றுக்கள், சாதாரணமாக மனித உடலின் சுத்தமாக உள்ள பகுதிகளில் தூய்மைக் கேட்டினை விளைவிக்கும். பல முக்கிய நோய்கள் க்ளாஸ்ட்ரிடியம் சிற்றினங்களால் சுற்றுப்புற சூழல்கள் அல்லது சாதாரணமாக வாழும் உயிரியிலிருந்து உண்டாகின்றன. அவை பாட்டுலிஸம், டெட்டனஸ், வாயு காங்க்ரீன், உணவு விஷமாதல் மற்றும் போலி சவ்வுறை குடல் அழற்சி ஆகும். க்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை உயிரிகள் வட்ட முனைகளைக் கொண்ட நீளமான, மெல்லிய கிராம் பாசிட்டிவ் பாசில்லை ஆகும். முழுமையாக வளர்ந்துள்ள ஸ்போர்கள் பாசில்லைக்கு மேளம் அடிக்கும் குச்சி போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.

டெட்டனஸ் பேசில்லஸ் என்பது காற்றில்லாமல் வாழும் உயிரி, இது தன்னைச் சுற்றியுள்ள கசையிழைகள் கொண்டு நகரும் பண்பு உடையது. மாமிசம் வேகவைத்த நீர் ஊடகத்தில் நன்றாக வளரும். ஊட்டம் பெற்ற இரத்த அகாரில் வளரும் போது மெல்லிய படலத்தை உருவாக்குகிறது. ஸ்போர்கள் அவை கொதிக்கும் நீர், 160°C உலர் வெப்பம் மற்றும் 5% ஃபினால் போன்ற மாறுபட்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொள்ளும் அழியாது. ஆனால் 1% ஐயோடின் கலக்கப்பட்ட நீர் ஸ்போர்களை ஒரு சில மணி நேரங்களில் அழிக்கிறது.

டெட்டனஸ் பேசில்லை மனித குடலில் காணப்படுகிறது. ஆனால் தொற்றினை மக்கள் விலங்கின மலக்கழிவுகள் மற்றும் மண்ணின் மூலம் அடைகின்றனர். இந்த உயிரி உரமிடப்பட்ட மண்ணில் இருக்கும். டெட்டனஸ் ஸ்போர்கள் அதிகமாக பரந்து காணப்படுகின்றன. இவை தோட்டத்தில், விளையாட்டு மைதானங்களில், சாலைகளில், தூசியில், பிளாஸ்டர் (Plaster) மற்றும் மருத்துவமனைகள், வீடுகளின் காற்றில் இந்த நோய் இயற்கையாக உருவாகும் போது, டெட்டனஸ் பேசில்லை தொற்றுப்பகுதியில் இருந்து கொள்ளும், அவை பரவாதவை. ஆனால் இந்த நோய் நச்சு ஊடுருவிச் சென்று தண்டுவடத்தை பாதித்து, பின் அனைத்து மண்டலத்தையும் பாதித்து விடும். இந்த நோய் நச்சுப் பொருளானது இரத்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து நரம்புகளுக்கும் கொடுக்கப்படுகிறது.

இந்த நோய் நச்சுப்பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை இயக்கு நரம்புகள் வழியாக அடைந்து விடுகிறது. நோய் நச்சு முதலில் மூளைத் தண்டு பகுதியில் அல்லது தண்டுவடத்தை கடந்து, குறிப்பிட்ட உடல் பகுதியில் டெட்டனஸ்ஸை ஏற்படுத்தும். குறிப்பிட்ட பகுதியில் பரவுதல் மூலம் தண்டுவடத்தின் மேல் பரவி, ஏறும் டெட்டன்ஸை உருவாக்கும். மூளையின் தண்டை அடைந்த பின், கீழ்நோக்கி பரவி, தாடை பூட்டப்பட்ட நிலை (Lock jaw) ஏற்படுத்தி, தொடர்ச்சியாக இறங்கும் டெட்டனஸை ஏற்படுத்தும். டெட்டனஸ் நச்சுப் பொருள் இயக்கு செல்களில் மிக அதிக செயல்பாட்டை தண்டுவட முன்கொம்புப் பகுதியில் ஏற்படுத்தி, பின் அனைத்து மத்திய நரம்பு மண்டலத்திற்கு ஊடுருவிச் சென்றுவிடும். இந்நோய் நச்சு இரு நரம்பு செல்கள் சேருமிடத்திலுள்ள நீர்மக் கொப்புளத்தின் உறையை பாதிக்கும். இதனால், ஆல்பா (4) அமினோபுயுட்ரிக் அமிலம் வெளியிடப்படுவது தடுக்கப்படுகிறது.

நிறைய நரம்பு செல்களின் (Neurons) தடை (inhibition) கட்டுப்படுத்த முடியாமல் விடப்படுகின்றது. அதனால் தொடர்ந்த கிளர்ச்சியுற்ற நிலை வெளிப்படுவதால் டெட்டனஸின் குறிப்பிடத்தக்க இசிப்பு ஏற்படும். நோய் நச்சு அதன் பாதிப்பை தண்டுவடம், மூளைத்தண்டு, புற நரம்புகள் நரம்புத் தசைகளின் சந்திப்புக்களில் மற்றும் நேரடியாக தசைகளிலும் செயல்படுத்தும்.

நோய்த் தோற்ற வகை

கி.டெட்டனை ஸ்போர்கள் காயங்களில் தூய்மைக் கேடு ஏற்படுவதன் விளைவாக டெட்டனஸ் வழக்கமாக ஏற்படுகிறது. கழுவப்பட்ட ஸ்போர்கள் விலங்கினத்திற்குள் ஊசி மூலம் செலுத்தப்படும்போது, அவை முளைப்பதில்லை. மற்றும் செல் விழுங்குதல் மூலம் நீக்கப்படுகின்றன. ஸ்போர்கள் முளைப்பது உயிராற்றல் அற்றதாக்கப்பட்ட திசுக்கள் மற்றும் காயத்திலுள்ள உயிரற்ற பொருட்களில் குறைந்த பிராண வாயு இழு விசையைச் சார்ந்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே, தொற்று ஏற்பட்டு, டெட்டானிக் நிலை நோய் நச்சுக் காரணமாக ஏற்படுகிறது.

டெட்டனஸ் நோய் நச்சு பக்கத்தில் உள்ள திசுக்களில் இறப்பை ஏற்படுத்துவதில்லை, மற்றும் ஆரம்பத்தில் உள்ளதில் இருந்து தொற்றை பரவச் செய்வதில்லை. மேற்போக்கான தோல் காயம் அல்லது சிறு முள் குத்தல் வழியாக நோய் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன. தோட்ட வேலையை ஆர்வத்துடன் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அபாய நேர்வு குழுவினராகிறார்கள். ஆட்டோஜெனிக் டெட்டனஸ், காதின் வெளிப்புற துளையில் தொற்று ஏற்படுதல்) க்ரிப்டோஜெனிக் டெட்டனஸ் (தொற்று ஏற்படும் பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை) கருப்பை டெட்டனஸ், டெட்டனஸ் நியோனேட்டோரம் (தொப்புள்க் கொடி காயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுதல்) மற்றும் அறுவைக்குப் பின் தொற்று ஏற்படுதல் போன்றவைகள் அறியப்பட்டுள்ளன.

நோய் நிலை

சில விறைப்புத் தன்மை, மற்றும் அண்மையில் ஏற்பட்ட காயத்தின் அருகில் அல்லது அக்குறிப்பிட்ட பகுதியில் வலி போன்ற அறிகுறிகள் ஆரம்பம் ஆகும். ஒரு சில நோயாளிகளின் ஆரம்ப நிலையில் தாடைகளில் விறைப்புத்தன்மை இருக்கும் (பூட்டப்பட்ட தாடை), கழுத்தில் மற்றும் பின்பக்கத்தில் வலி மற்றும் விறைப்புத் தன்மை தொடர்ச்சியாக வரும். இந்த விறைப்புத் தன்மை அனைத்து தசைக்குழுவையும் பங்கு பெற செய்து பரவும். முகத்தில் இசிவு, அல்லது சுருக்கம் ஏற்பட்டு திடீர் திடீரென்று சிரிக்கும் நிலையை ஏற்படுத்தும் மற்றும் சில நோயாளிகளில் இசிவானது பின் புற தசைகளில் ஒபிஸ்த்தோடோனாஸ் (அதிகப்படியான வளைந்த முதுகு) ஏற்படுத்தும். காயம் பட்டதற்கும் மற்றும் முதல் அறிகுறி தோன்றுவதற்கு 10-14 நாட்கள் ஆகும். அதற்கு மேலும் வேறுபடும். அதிகமான வியர்வை, இதயத்துடிப்பு அதிகரித்து படபடப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஏறி இறங்குதல் ஆகியவை காணப்படும்.

பரிசோதனைக் கூட ஆய்வுறுதி

ஆய்வுப் பொருட்களை காயங்களில் இருந்து சேகரித்து, கிராம் சாயம் ஏற்றப்படுகிறது. தடவுகையில் கிராம் பாசிட்டிவ் ட்ரம் குச்சி வடிவ பேசில்லையைக் காணலாம். மற்ற பிற பேசில்லைகள் முனையில் ஸ்போர்களுடன் தோன்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். எளிய நுண்ணோக்கி உபயோகப்படாது போகலாம். இம்யூனோஃப்ளோரெசென்ஸ் நுண்ணோக்கி சிறப்பு சாயத்துடன் பயன்படுத்தப்பட்டால் நல்ல முடிவை கொடுக்கும். ஆனால் பொதுவாக கிடைப்பதில்லை. நேரடியாக சூடாக்கப்படாத பொருள் இரத்த அகாரில் செலுத்தப்பட்டு காற்றில்லா சூழலில் வளர்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆய்வுப்பொருள்கள் பல்வேறு ஸ்போர் உண்டாக்கும் உயிரிகளுக்காக, வெவ்வேறு வெப்பநிலைகளில் சூடாக்கப்படுகிறது. எலிகளில் தோலுக்கு அடியில் இவ்வாறு வளர்ந்த விளைந்த உயிரியை ஊசிமூலம் ஏற்றி டெட்டனஸை ஏற்படுத்தலாம். கட்டுப்படுத்தப்பட்ட எலிகள் டெட்டனஸ் எதிர் நச்சால் பாதுகாக்கப்படுகின்றன.

சிகிச்சை முறை

நோயாளி சுயநினைவுடன் இருப்பார். ஆனால் தூக்க நிலையில் வைக்கப்பட வேண்டும். மற்றும், தொடர் மருத்துவ பராமரிப்பு தேவைப்படும். அதிகப்படியான அளவு ஆரம்ப நிலையில் ஊசி மூலமாக எதிர் நோய் நச்சும் (30,000 முதல் 200,000 அளவுகள்), இதனை தொடர்ந்து தசைமூலமாக செலுத்தப்படுகிறது. உடனடியாக காயம் சுத்தம் செய்யப்பட்டு, அழுத்தமின்றி லேசாக விடப்படுகிறது. அறுவை மூலமாக இறந்த திசுக்களை அகற்றுதல் இன்றியமையாதது ஆகும்.

நோயாளிக்கு 10,000 அளவுகள் மனித டெட்டனஸ் நோய் இம்யூனோகுளோபுலின் (HTIG) உப்புநீரில் (Saline) மெதுவாக இரத்தம் வழியாக ஏற்றப்படுகிறது. பென்சிலின் அல்லது மெட்ரோனிடாசால், தேவைப்படும் அளவிற்கும், காலத்திற்கும் கொடுக்கப்படுகிறது. முன்பே, நோய்த் தடுப்பு செய்யப்பட்ட நபர்களுக்கு, காயம் ஏற்படும் போது பூஸ்டர் அளவைகளில் டெட்டனஸ் டாக்ஸாயிடு அளிக்கப்பட்டு எதிர் நோய் நச்சு உருவாகுதல் ஊக்குவிக்கப்படுகிறது.

நோய் பரவுதலும் அதன் கட்டுப்பாடும்

டெட்டனஸ் என்பது மிகப் பெரிய ஆட்கொல்லி நோய்களின் கீழ் வருகிறது. வருடத்திற்கு டெட்டனஸ் மூலமாக சுமார் 1 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாகவும், அதில், 400,000 குழந்தைப்பருவத்தில், பிறப்புக்குப்பின் ஏற்படும் டெட்டனஸ் மூலம் ஏற்படுகிறது. இவ்வாறாக இந்நோய் நாட்டிற்கு, நாடு வேறுபடுகிறது. மற்றும் உலகளாவிய நிலையில் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம், நோய் தடுப்பு மருத்துவம் மற்றும் காயத்தை கையாளும் முறை ஆகியனவற்றை சார்ந்துள்ளது. தொப்புள் கொடியில் மாட்டுச்சாணம் பூசுதல், தொப்புள் கொடியை ஆரம்ப காலம் போல் சுத்தமற்ற நூலால் கட்டுதல் (lygatures) மற்றும் சுத்தமற்ற கருவிகளைப் பயன்படுத்தி காது குத்துதல் போன்றவைகளால் டெட்டனஸ் ஏற்படும்.

தடுப்பு முறை மற்றும் கட்டுப்படுத்துதல்

காயத்தை பராமரித்து, கையாளுதல் என்பது முதன்மையான முக்கியத்துவம் பெற்றது. இல்லாவிடில் டெட்டனஸ் ஸ்போர்கள் சுத்தமற்ற காயங்களில் முளைக்கும்.

சுறுசுறுப்பான நோய்த் தடுப்பு முறை

உலகளாவிய நிலையில் சுறுசுறுப்பான நோய் தடுப்பு முறையை டெட்டனஸ் டாக்ஸாய்டு பயன்படுத்தி செய்வது கட்டாயமாகும். அனைத்து மனிதர்களும் இந்த நோய்த் தடுப்பை டெட்டனஸ்க்கு எதிராக குழந்தைப்பருவத்திலேயே செய்து இருக்க வேண்டும். அவற்றின் நோய்த்தடுப்பு, டாக்ஸாய்டு பூஸ்ட்டர் மூலம் 5 முதல் 10 வருட இடைவெளிகளில் பராமரிக்கப்படுகிறது. டெட்டனஸ் டாக்ஸாய்டு என்பது சுத்திகரிக்கப்பட்ட நோய்நச்சு ஃபார்மால்டிஹைடு (ஃபார்மல் டாக்ஸாய்டு) உடன் சேர்க்கும்போது நச்சுத் தன்மை இன்றி பெறப்படுகிறது. கரையும் டாக்ஸாய்டு அலுமினியம் ஹைட்ராக்ஸைடின் மீது புறத்துறிஞ்சுதல் மூலம் சேர்ந்து திறமையாக செயல்படும். டெட்டனஸ் டாக்ஸாய்டு என்பது டிப்தீரியா மற்றும் கக்குவான் (pertiosis)க்கு நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படும்போது மூன்று நோய்த்தடுப்பு மருந்தாக (Triple antigen) குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படுகிறது.

தொடர் மருத்துவ முறையால் மூன்று 0.5 மிலி அளவைகளான டெட்டனஸ் டாக்ஸாய்டை 6-12 வாரங்கள் இடைவெளிகளுடன் முதல் இரண்டும் மற்றும் 6-12 மாதங்கள் இடைவெளி இரண்டாவதுக்கும் மற்றும் மூன்றாவதுக்குமாக மூன்று ஊசிகள் போடப்படுகின்றன. ஒரு பூஸ்டர் அளவையான 0.5 மிலி 5-10 வருடங்கள் இடைவெளியில் நோய் எதிர்ப்புத் தன்மையை சீராக வைக்க கொடுக்கலாம். நோய்த் தடுப்பு ஊசிகள் போட்டதற்கான குறிப்புகளை கவனமாக பத்திரப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

உள் செலுத்து (Passive) நோய்த்தடுப்பு முறைகள்

டெட்டனஸ் எதிர் நச்சு என்பது சாதாரணமாக ஆன்டிடெட்டனஸ் சீரம் அல்லது ATS எனக் கூறப்படுகிறது. இம்மருந்தை குதிரைகளை டாக்ஸைய்டு உள் செலுத்து கொண்டு நோய்த் தடுப்பு செய்து பெறமுடியும். பெரிய காயம் ஏற்பட்ட உடனே ATS அளிக்கப்படுவது, மிக முக்கியத்துவமானது. டெட்டனஸ் நோய்த் தடுப்பதில் ATS மிகுந்த மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. டெட்டனஸ் நோய் உருவான பிறகு, இம்மருந்து நோயை எதிர்த்து காப்பதில் சற்று குறைந்த பயன் மட்டும் விளைவிக்கும்.

கூட்டு நோய்த் தடுப்பு முறைகள்

உள் செலுத்து பாதுகாப்பை காயம் ஏற்பட்டபின் நோயாளிகள் எதிர் நச்சு பெற்று அடையும் போது டெட்டனஸ் டாக்ஸாய்டும் கொடுக்கப்படவேண்டும். நோய்த் தடுப்பு பெறாத அடிப்பட்டு காயம் பட்ட நோயாளி தனி ஊசி மூலமாக 1500 அளவுகள் குதிரையில் உற்பத்தி செய்த டெட்டனஸ் எதிர் நச்சு அல்லது 250 அளவுகள் ஒத்தமைப்பு எதிர்நச்சு குளோபுலின் ATG தசைக்குள் செலுத்துதலை ஒரு கையிலும் மற்றும் 0.5 மிலி டாக்ஸாய்டை மற்றொரு கையிலும் கொடுக்கலாம். நோயாளி இரண்டாவது 0.5 மிலி டாக்ஸாய்டு மருந்தை ஊசி மூலமாக 6-12 வாரங்களுக்குப் பின் போட்டுக் கொள்ளலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  1. க்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை என்பது ஒரு நேரடி காற்றில்லாமல் வாழும் உயிரி பாக்டீரியம் ஆகும்.
  2. இது முனையில் வட்டமான ஸ்போர் உருவாக்கும் அந்த ஸ்போர் மேளம் அடிக்கும் குச்சி போன்ற தோற்றத்தை பேசில்லையில் ஏற்படுத்தும்.
  3. இது இரு வகையான நோய் நச்சு உருவாக்கும், ஒன்று ஆற்றல் மிகுந்த நரம்பு நோய் நச்சு, இது டெட்டனோஸ்பாஸ்மின் என்று அழைக்கப் படுகிறது.
  4. இந்த டெட்டனோஸ்பாஸ்மின் நரம்பு தசைகளின் இணைப்பு களில் செயல்புரிந்து, பூட்டப்பட்ட தாடையை ஏற்படுத்தி, டெட்டனஸின் பண்பான இசிவு அல்லது சுருக்கத்தை ஏற்படுத்தும். மற்றொன்று ஹீமோலைசின் ஆகும்.
  5. டெட்டனஸ் டாக்ஸ்ஸாயிடை டிப்தீரியா மற்றும் கக்குவான் மருந்துடன் ட்ரிட்பிள் நோய் காப்பு மருந்தாக குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.6875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top