பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / சர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?

சர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி? என்பதை பற்றிய குறிப்புகள்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் நமது கண்பார்வை எந்த அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நகர்ப்புற நீரிழிவு நோயாளிகளில் 2 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு இருக்கும்.

சென்னையை பொறுத்தவரையில் 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு கண்பார்வை குறைபாடு இருக்கிறது. உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளிகளின் தரைநகரம் என்று வர்ணிக்கிறார்கள். நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர்.

30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர்.

டைப்-1

டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

டைப்-2

டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிலும் விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்’ செய்வது மிகவும் நல்லது.

பரிசோதனை

எப்.எப்.ஏ. (திதிகி) என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம்.

கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும். இதில் கையின் ரத்தநாளங்களில் மருந்தை செலுத்தி விழித்திரையில் லேசர் செய்ய வேண்டிய இடங்களை கண்டறியலாம். பரிசோதனை மூலம் லேசர் கிரணங்களை உள்ளே செலுத்தி கண்களில் கத்தி வைக்காமல், விழித்திரையின் சிகிச்கை செய்ய முடியும்.

சிகிச்சைகள்

லேசர் சிகிச்சை

  1. நீரிழிவு நோய் காரணமாக கண்களில் இருந்து நீர் கசிந்தால் லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
  2. இன்ட்ரா விட்டிரியஸ் ஊசி.
  3. விட்ரக்டமி. டிப்ஸ் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கண்விழி பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு நோய் தனக்கு இருப்பது தெரிந்ததும் கண் மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டால் கண்பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுத்து விடலாம். கண் மருத்துவரிடம் தொடக்கத்திலேயே சிகிச்சை செய்யா விட்டால் கண்பார்வை பறிபோவதை தடுப்பது கடினம்

ஆதாரம் : தேசிய நீரழிவு ஆராய்ச்சி மையம், அய்யபாக்கம்.

3.03529411765
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top