பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோயின் ஆதாரம் எது?

நோயின் ஆதாரம் பற்றி இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.

நோய்கள்

டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், கோழி காய்ச்சல், சளி காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல், மழை பெய்துவிட்டால் வைரஸ் காய்ச்சல், கோடைகாலத்தில் சின்னம்மை, பெரியம்மை, மஞ்சள் காமாலை, ஏன் சர்க்கரை நோய், புற்றுநோய் என்று ஏராளமான நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன.

இந்த மாதிரியான பல்வேறு நோய்களுக்கும் மூலக் காரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

ரொம்ப சிம்பிள். பத்து பேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டால், யாரோ ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நமது இந்தியத் திருநாட்டில் மக்கள் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் எல்லா நோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா?

நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுபட்ட காற்றில், தூசிலும் அடங்கி இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால், அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல்தானே நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!

தானாக இயங்கும் உடல்

இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ, கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர் சுரப்பிகள் பாதுகாப்புப் படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்பு மண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலை களைப் பார்த்துக்கொண்டி ருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ ஒருவர் மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில்தான் உடல் தன் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்கிறது.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல்தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர்தான், நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச் செயல்களும் நன்கு நடைபெற உதவுகிறது. இந்த உயிராற்றல் எப்போது பலவீனம் அடைகிறதோ, அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது உடலுக்கு உள்ளும் வெளியிலும் எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைத் தாக்கு கின்றன. உடல் நோயைப் பெறுகிறது.

யார் காரணம்?

ஆக, நம்முடைய உடல் நோயைப் பெறுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்தப் பலவீனம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்துவிடுகிறது. நோய் ஏற்புத் தன்மை அதிகரித்துவிடுகிறது. இதனால் உடலில் எளிதாக மாற்றங்கள் தோன்றுகின்றன. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழு சக்தியோடு இருக்கும் வரை பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி என்று எதைக் கண்டும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.

அது மட்டுமில்லை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆகப் பெரிய, சிக்கலான செல்களின் கூட்டமைப்பு கொண்ட படைப்பு மனிதன்தான். அதனால்தான் மனிதன் உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். ஆனால் பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ வெறும் ஒரு செல் உயிரிகள்தான். சிக்கலான வளர்ச்சியடைந்த செல்களின் அமைப்பு கொண்ட மனிதனின் உயிரை, அவற்றால் பறிக்க முடியாது. மேலும் சோதனைச் சாலையில் இந்தப் பாக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் இறந்த செல்களையே உணவாகக் கொடுத்து வளர்க்கிறார்கள். இறந்த செல்களில் மட்டுமே இவை செழித்து வளர முடியும்.

உயிருள்ள மனித செல்கள் இந்தப் பாக்டீரியா, வைரஸ் களைவிட பரிணாம வளர்ச்சியில் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பவை என் பதைக் கவனத்தில் கொண்டோமானால் நம்முடைய நோய்களுக்குக் காரணம் பாக்டீரியா, வைரஸ் என்பதை எளிதில் ஒத்துக்கொள்ள முடியாது. நம்முடைய உயிராற்றல் பலவீனமடையும் போதே உடலின் நோய் ஏற்புத் தன்மை அதிகரிக்கிறது. அப்போது பாக்டீரியா, வைரஸ் மட்டுமல்ல... தூசு, மாசு, நீர், வெப்பம், குளிர் போன்ற எல்லாம் உடலைப் பாதித்து நோய்களை உருவாக்கலாம். உயிராற்றலின் பலமே, உடலின் பலம்.

பொது நல மருத்துவர் - ஜி.கணேஷன்

3.00970873786
I.Nizam the Jul 14, 2020 02:41 AM

Very nice sir

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top