பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு குறித்த உபதகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோய்த்தடுப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பது ஏன் அவசியம்?

ஒவ்வொரு ஆண்டும், 1.4 மில்லியன் குழந்தைகள், சுலபமாக கிடைக்ககூடிய தடுப்பூசிகளால் தவிர்க்ககூடிய நோய்களால் இறக்கின்றன. நோய் தடுப்பு தரப்பட்ட குழந்தைகளை, குறைபாடோ அல்லது உயிரிழப்போ ஏற்படுத்தக்கூடிய இந்த பயங்கர நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. எல்லா குழந்தைகளுக்கும் இந்த பாதுகாப்பை பெறுவதற்கான உரிமை உண்டு.

ஒவ்வொரு பெண் மற்றும் ஆண் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு மருந்து தரவேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் தங்களையும், தன் சிசுவையும் டெட்டனசிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு மருந்து பெற்றுகொள்ள வேண்டும்.

எல்லா பெற்றோர்களும், ஏன்? ஏங்கே? எப்போது? மற்றும் எத்தனை முறை குழந்தைக்கு நோய்த்தடுப்பு மருந்து தரவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத போதும், அல்லது குறைபாடிருந்தாலும், அல்லது ஊட்டச்சத்து குறைபடிருந்தாலும், குழந்தைக்கு நோய்த்தடுப்பு மருந்து தருவதுதான் பாதுகாப்பானது என்று எல்லா பெற்றோரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

முக்கிய குறிப்புகள்

நோய்த்தடுப்பு பற்றி ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமூகம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

  1. நோய்த்தடுப்பு அவசரமானது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆண்டில் தொடர்ச்சியான நோய்தடுப்பு மருந்துகள் தேவை.
  2. நோய்த்தடுப்பு பல பயங்கரமான வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. நோய்த்தடுப்பு பெறாத குழந்தை, வியாதியால் அவதிபட்டு, நிரந்தரமான குறைபாடோ அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறைபாடோ ஏற்பட்டு இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  3. குழந்தைக்கு, சாதாரண வியாதி, உடல் குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், நோய்த்தடுப்பு தருவது பாதுகாப்பானதுதான்.
  4. எல்லா கர்ப்பினி பெண்களையும் டெட்டனஸிலிருந்து பாதுகாக்கவேண்டியது அவசியம். அந்த பெண் முன்பே நோய்த்தடுப்பு எடுத்திருந்தாலும், கூடுதலாக டெட்டனஸ் டாக்சைய்ட் தடுப்பூசி தேவைப்படலாம். சுகாதார ஊழியரிடம் அறிவுரை மற்றும் டெட்டனஸ் டாக்சைய்ட் தடுப்பூசி பற்றி தெரிந்துகொள்ளலாம்.
  5. நோய்த்தடுப்பு மருந்து எடுத்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக புதிய அல்லது ஸ்டெரலைஸ் செய்யப்பட்ட ஊசி மற்றும் சிரிஞ்சை பயன்படுத்தவேண்டும். மக்களும் இதை வலியுறுத்த வேண்டும்.
  6. மக்கள் கூட்டமாக சேர்ந்திருந்தால் நோய் சீக்கிரமாக பரவலாம். நெருக்கமான சூழ்நிலைகளில் வாழும், குழந்தைகள் குறிப்பாக அகதிகள் அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் வாழும் எல்லா குழந்தைகளுக்கும் உடனடியாக குறிப்பாக தட்டம்மைக்கு எதிராகவும் நோய்த்தடுப்பு தரவேண்டும்.

நோய்த்தடுப்பு குறித்த உபதகவல்கள்

முக்கிய செய்திகள் 1

நோய்தடுப்பு அவசரமானது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆண்டில் தொடர்ச்சியான நோய்தடுப்பு மருந்து தேவை.

குழந்தைகளின் ஆரம்ப நிலையிலேயே நோய்தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும்

இறப்பில், கக்குவான் இருமலால் பாதியும், இளம்பிள்ளை வாதத்தினால் மூன்றில் ஒரு பகுதியும் மற்றும் தட்டம்மையால் கால்பங்கும் காரணமாக் அமைகிறது.

சிசுக்களுக்கு நோய்தடுப்பூசிகளின் முழு எண்ணிக்கையை தருவது அவசியம், இல்லையேனில் தடுப்பூசிகள் வேலை செய்யாமல் போகலாம்.

பிறந்த முதல் ஆண்டில் குழந்தையை பாதுகாக்க, கீழ்கண்ட அட்டவணை படி நோய்தடுப்பூசிகள் அவசியம். குறிப்பிட்டுள்ள வயதுகளில் அல்லது கிட்டதட்ட அந்த வயதிற்குள் தடுப்பூசிகளை தந்தால்தான் அவைகள் மிக சிறப்பாக செயல்படும்.

முதல் ஆண்டில் ஏதோ காரணத்தினால், குழந்தை முழு நோய்தடுப்பூசி தொடரை போடவில்லை என்றால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அல்லது தேசிய நோய்தடுப்பு தினங்களில் அந்த குழந்தைக்கு முழுமையான நோய்த்தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம்.

பூஸ்டர் டோஸ் என்று அழைக்கப்படும் கூடுதல் நோய்த்தடுப்பூசிகள், சில நாடுகளில், குழந்தையின் முதல் ஆண்டிற்கு பிறகு அளிக்கப்படுகிறது. இந்த ஊசிகள் தடுப்பூசியின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.

சிசுக்களுக்கான நோய்தடுப்பூசி அட்டவணை*

வயது : பிறந்த உடன் தரப்படவேண்டிய தடுப்பூசி :

பீ .சீ .ஜீ**, போலியோ மற்றும் சில நாடுகளில் ஹேபடைடிஸ்–பீ

வயது : 6 வாரத்தில் தரப்படவேண்டிய தடுப்பூசி : டீ பீ டீ**, போலியோ மற்றும் சில நாடுகளில் ஹேபடைடிஸ்–பீ மற்றும் ஹிப்

வயது : 10 வாரத்தில் தரப்படவேண்டிய தடுப்பூசி: டீ .பீ .டீ, போலியோ மற்றும் சில நாடுகளில் ஹேபடைடிஸ்–பீ மற்றும் ஹிப்

வயது : 14 வாரத்தில் தரப்படவேண்டிய தடுப்பூசி: டீ பீ டீ, போலியோ மற்றும் சில நாடுகளில் ஹேபடைடிஸ்–பீ மற்றும் ஹிப்

வயது : 9 மாதங்களில் தரப்படவேண்டிய தடுப்பூசி : தட்டம்மை (12 – 15 மாதம் தொழில் வளம் மிகுந்த நாடுகளில்), மற்றும் சில நாடுகளில் மஞ்சள் காய்ச்சல், மம்ஸ் மற்றும் ருபெல்லா.

*தேசிய நோய்தடுப்பு அட்டவணை, ஒவ்வொரு நாடுகளுக்கிடையே சிறிது மாறுபடலாம்

**பீ சீ ஜீ சில வகையான காசநோய் மற்றும் தொழு நோயிலிருந்து பகுதி அளவு பாதுகாப்பு அளிக்கிறது; டீ. பீ .டீ, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் மற்றும் டெட்னஸிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

முக்கிய செய்திகள் 2

நோய்த்தடுப்பு மருந்து பல பயங்கரமான வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. நோய்தடுப்பு மருந்து பெறாத குழந்தை, வியாதியால் அவதிப்பட்டு, நிரந்தரமான குறைபாடு ஏற்பட்டோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டோ இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நோய்தடுப்பூசி, குழந்தை பருவத்தில் ஏற்படும் பல ஆபத்தான வியாதிகளிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது. உடல் குறைபாடுள்ள குழந்தைகளையும் சேர்த்து எல்லா குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம். ஊசி மூலமாகவோ அல்லது வாய்வழியாகவோ தரப்படும் தடுப்பு மருந்துகளால் குழந்தைக்கு நோய்தடுப்பு ஏற்படுகிறது. நோய்க்கு எதிராக, குழந்தையின் எதிர்ப்புசக்தியை வளர்க்கும் செயலை தடுப்பூசிகள் செய்கின்றன. நோய் தாக்கும் முன்பே நோய்தடுப்பு மருந்து தந்தால்தான் தடுப்பூசிகள் வேலை செய்யும்.

நோய்தடுப்பு மருந்து தரப்படாத குழந்தைக்கு, தட்டம்மை, கக்குவான் இருமல் மற்றும் பல உயிர்க்கொல்லி நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிபட்ட நோய்களிலிருந்து பிழைத்து வரும் குழந்தைகள், வழு இழந்துவிடுவதுடன், நன்றாக வளராமலும் போகலாம் அல்லது நிரந்தர உடல் குறைபாடு ஏற்படலாம். பிற்பாடு அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினாலோ அல்லது மற்ற நோய்களாலோ உயிரிழந்தும் போகலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு, குறைவான மூளை வளர்ச்சி, கேட்க்கும் மற்றும் பார்வை குறைபாட்டிற்கான முக்கிய காரணமாக இருக்கும் தட்டம்மையிலிருந்து எல்லா குழந்தைகளும் நோய்தடுப்பு மருந்து தரபட வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள், மேலும் இருமலுடன் மூக்கில் சளி அல்லது சிவந்த விழிகள் குழந்தைக்கு தட்டமை இருப்பதற்கான அறிகுறிகள். தட்டம்மையால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

எல்லா குழந்தைகளுக்கும் எல்லா இடங்களிலும், போலியோவிற்கு எதிராக நோய்தடுப்பு மருந்து தரபடவேண்டும். நகர இயலாமை அல்லது தொங்கிய கை அல்லது கால்கள் தான் போலியோவிற்கான அறிகுறிகள். பாதிக்கப்படும் ஒவ்வொரு 200 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் ஊனம் ஏற்படும்.

அழுக்கான வெட்டு காயங்களில் வளரும் டெட்டன்ஸ் நுண்கிருமி அல்லது கிருமிமுட்டைகள்,. டெட்டனஸ் நோய்தடுப்பு மருந்தை பெறாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தலாம்.

கர்ப்பக்காலம் அல்லது அதற்கு முன்போ, பெண்ணுக்கு இரண்டு முறை டெட்டனஸ் டாக்ஸாய்ட் தடுப்பூசி போடுவதன்மூலம், அந்த பெண்ணை மட்டுமல்லாமல், அவளுக்கு பிறக்கும் குழந்தையையும் வாழ்வின் முதல் வாரங்களில் பாதுகாக்கலாம்.

குழந்தை பிறந்து ஆறாவது வாரத்தில் முதல் டீ.பீ.டீ, மருந்து டெட்டனஸிற்கு எதிரான பாதுகாப்பை நீட்டிக்க தேவைப்படுகிறது.

ஹெபடைடிஸ் – பீ, பிரச்சினையாக இருக்கும் நாடுகளில், நோய்தடுப்பு மருந்து தரப்படவில்லை என்றால், நூறில் பத்து குழந்தைகள் இந்த நோயால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். ஹெபடைடிஸ் – பீ நோயால் தாக்கபட்ட குழந்தைகளுக்கு, வயதாகும் போது, கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

சில நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவல் பல குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை உருவாக்குகிறது. தடுப்ப்பூசியால் இந்த நோயை தவிர்க்க முடியும்.

பல நாடுகளில், ஹீமோபிலஸ் இன்ப்லுன்ஸெஸ் டைப்–பீ (ஹெச்.ஐ.பீ) கிருமியால் ஏற்படும் நிமோனியா, பல குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாகிரது. இந்த ஹெச்.ஐ.பீ கிருமி குழந்தைபருவத்தில் மெனின்ஜைடிசையும் ஏற்படுத்தும். குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கிருமி மிகவும் ஆபத்தானவைகளில் ஒன்றாகும். ஹெச்.ஐ.பீ நோய்த்தடுப்பு மருந்து இந்த வகை இறப்பை தவிர்க்கும்.

தாய்ப்பால் மற்றும் கொலஸ்ட்ரம் எனப்படும், பிரசவத்திற்கு பிறகு முதல் சில நாட்களுக்கு சுரக்கும் சீம்பால், நிமோனியா, பேதி மற்றும் மேலும் பல நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் வரை பாதுகாப்பு நீடிக்கிறது.

வைட்டமின்–ஏ, குழந்தைகளுக்கு நோய்தாக்கத்தை எதிர்க்க மற்றும் பார்வை இழப்பை தவிர்க்கவும் உதவுகிறது. தாய்ப்பால், ஈரல், மீன், பால் சார்ந்த பண்டங்கள், சில ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள், மற்றும் பச்சை கீரைகளில் வைட்டமின்–ஏ காணப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்–ஏ குறைபாடு ஏற்பட்டால், அவர்களுக்கு நோய்த்தடுப்பு தரப்படும்போதோ அல்லது தேசிய நோய்தடுப்பு தினங்களிலோ வைட்டமின் – ஏ மாத்திரைகள் அல்லது ஸிரப் தரப்படவேண்டும். தட்டம்மை சிகிச்சையிலும் வைட்டமின்–ஏ முக்கிய பங்கு வகிக்கிறது.

முக்கிய செய்திகள் 3

குழந்தைக்கு, சாதாரண வியாதி, உடல் குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், நோய்தடுப்பு தருவது பாதுகாப்பானதுதான்

பெற்றோர்கள் குழந்தையை நோய்த்தடுப்பு மருந்து அளிக்க அழைத்து வராமலிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் குழந்தைக்கு, நோய்தடுப்பு தரப்படவேண்டிய நாளில் காய்ச்சல், இருமல், சளி, பேதி அல்லது வேறு ஏதாவது வியாதியோ ஏற்படுவதுதான். ஆனால், இச்சிறு வியாதிகள் இருக்கும் குழந்தைக்கு நோய்தடுப்பு தருவது பாதுகாப்பானதுதான்.

சில சமயங்களில், உடல் குறைபாடோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடோ இருக்கும் குழந்தைக்கு நோய்தடுப்பு தருவதற்கு எதிராக சுகாதார ஊழியர்கள் பரிந்துரைப்பதுண்டு. இது தவறான பரிந்துரையாகும். உடல் குறைபாடோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடோ இருக்கும் குழந்தைக்கு நோய்தடுப்பு தருவது பாதுகாப்பானதுதான்.

ஊசி போட்ட பிறகு, குழந்தை அழலாம், அல்லது காய்ச்சல் ஏற்படலாம், அல்லது சிறிய கொப்பளங்கள் அல்லது சிறிய புண் ஏற்படலாம். அது இயல்பு தான். தாய்ப்பால் அடிக்கடி கொடுக்கவேண்டும் அல்லது குழந்தைக்கு நிறைய உணவு மற்றும் திரவங்களும் தரவேண்டும். குழந்தைக்கு அதிகப்படியான காய்ச்சல் இருந்தால், சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம், அதனால் அவர்களுக்கு தட்டம்மைக்கு எதிராக நோய்தடுப்பு மருந்தை குறிப்பாக, ஊட்டச்சத்து பற்றாக்குறைபாடு தீவிரமாக இருக்கும் போது அவசியம் தரவேண்டும்,

முக்கிய செய்திகள் 4

எல்லா கர்ப்பினி பெண்களையும் டெட்டனஸிலிருந்து பாதுகாக்கவேண்டியது அவசியம். அந்த பெண் முன்பே நோய்தடுப்பு எடுத்திருந்தாலும், கூடுதல் டெட்டனஸ் டாக்சாய்ட் தடுப்பூசி தேவைப்படலாம். சுகாதார ஊழியரிடம் ஆலோசனை மற்றும் டெட்டனஸ் டாக்சாய்ட் தடுப்பூசி பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உலகத்தின் பல பகுதிகளில் அசுத்தமான சூழ்நிலைகளில் தாய்க்கு பிரசவம் ஏற்படுகிறது. இது தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பிற்கு அதிகபட்ச காரணமாகிறது, மேலும் டெட்டன்ஸ் ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது..

கர்ப்பிணி பெண்களுக்கு டெட்டனஸ் தடுப்பூசி தரபடாத பட்சத்தில், டெட்டனஸ் நுன்கிருமியோ அல்லது கிருமி முட்டைகளோ உடலில் புகுந்து அவள் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும்..

டெட்டனஸ் நுன்கிருமி அல்லது கிருமி முட்டை அழுக்கான காயங்களில் வளர்கிறது. தொப்புள்கொடியை அசுத்தமான கத்தியால் துண்டித்தாலோ அல்லது ஏதாவது அசுத்தமான பொருள் தொப்புள்கொடியின் ஓரத்தின் மீது பட்டாலோ, இந்த கிருமிகள் வளரக்கூடும். தொப்புள் கொடியை வெட்ட உபயோகிக்கபடும் எந்த கருவியும், முதலில் சுத்தம் செய்து, பிறகு கொதிக்க வைத்தோ அல்லது நெருப்பில் சூடாக்கிய பிறகு குளிர விட வேண்டும். பிறந்த முதல் வாரத்திற்கு, குழந்தையின் தொப்புள் கொடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

எல்லா கர்ப்பிணி பெண்களும் தாங்கள் டெட்டனஸிற்கு எதிராக நோய்தடுப்பு பெற்றுவிட்டோமா? என்பதை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இது அவர்களையும், பிறந்த குழந்தையையும் பாதுகாக்கும்.

கர்ப்பிணி பெண்கள் டெட்டனஸிற்கு எதிராக நோய்தடுப்பு பெற்றுகொள்வது பாதுகாப்பானது தான். கீழ்கண்ட அட்டவனைப்படி தான் நோய்தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் :

முதல் ஊசி : கர்ப்பம் என்று தெரிந்த உடன்.

இரண்டாவ்து ஊசி : முதல் ஊசி போட்டு, ஒரு மாதத்திற்கு பிறகு, பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு.

மூன்றாவது ஊசி : இரண்டாவது ஊசி போட்டு ஆறு அல்லது 12 மாதங்களுக்கு பிறகு, அல்லது அடுத்த கர்ப்பத்தின் போது.

நான்காவது ஊசி : மூன்றாவது ஊசி போட்டு ஒறு ஆண்டிற்கு பிறகு. அல்லது அடுத்த கர்ப்பத்தின் போது.

ஐந்தாவது ஊசி : நான்காவது ஊசி போட்டு ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது அடுத்த கர்ப்பத்தின் போது.

ஒரு இளம் பெண்ணோ அல்லது பெண்மணியோ சரியான இடைவெளியில் ஐந்து தடுப்பூசிகள் போட்டு கொண்டால், அவள் ஆயுள் முழுவதும் பாதுகாப்பு அடைகிறாள். அவள் குழந்தைகளுக்கும் பிறந்த முதல் வாரங்களில் பாதுகாப்பு கிடைக்கிறது

முக்கிய செய்திகள் 5

நோய்தடுப்பு பெற்றுகொள்ளும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக புதிய அல்லது கிருமிநாசம் செய்யப்பட்ட ஊசி மற்றும் சிரிஞ்சை பயன்படுத்தவேண்டும். மக்களும் இதை வழியுறுத்த வேண்டும்

சரியாக கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளும், கருவிகளினாலும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும்.. குடும்ப நபர்களுக்குள் ஊசி மற்றும் சிரஞ்சுகளை பகிர்வதும் கூட உயிருக்கு அபாயமான நோய்களை பரப்பலாம். புதிய அல்லது கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகள் மற்றும் சிரஞ்சுகளைதான் பயன்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள் 6

மக்கள் கூட்டமாக சேர்ந்திருந்தால் நோய் சீக்கிரமக பரவும். நெருக்கமான சூழ்நிலைகளில் வாழும், குறிப்பாக அகதி அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் வாழும் எல்லா குழந்தைகளுக்கும் உடனடியாக நோய்தடுப்பு தரவேண்டும்.

அவசரகாலங்கள் மற்றும் மக்கள் வீட்டை விட்டு வெளியேரும் சூழ்நிலைகள்தான் அடிக்கடி தொற்றுநோய்கள் பரவுவதற்கான காரணமாக அமைகிறது. அதனால் 12 வயதுக்கும் உட்பட்ட இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, முதலில் குடிபெயறும் இடத்திலேயே நோய்தடுப்பு மருந்து குறிப்பாக தட்டம்மைக்கு எதிராக கொடுக்கபடவேண்டும். அவசரகாலங்களில் தரப்படும் எல்லா நோய்தடுப்பு மருந்துகளையும் ஒரே முறை பயன்படுத்தகூடிய ஆட்டோ டிஸெபில் சிரெஞ்சுகளால்தான் தரவேண்டும்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ அல்லது சுகாதார குறைபாடுள்ள இடத்தில் அவர்கள் வாழந்தாலோ தட்டம்மை மிகவும் ஆபத்தானது.

  • தட்டம்மை போன்ற வியாதிகள் மிகவும் சீக்கிரமாக பரவுவதால் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனித்து வைக்கவேண்டும், மற்றும் பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரால் பரிசோதிக்கப்படவேண்டும்.
  • தட்டம்மை அடிக்கடி பேதியை உண்டாக்கும். தட்டமைக்கு எதிராக குழந்தைகளுக்கு நோய்தடுப்பு தருவதனால் பேதியும் தவிர்க்கப்படுகிறது.

குழந்தையின் வழக்கமான நோய்த்தடுப்பு தடைப்பட்டால், நோய்த்தடுப்பை மருந்தை தேசிய நோய்தடுப்பு திட்டங்களின் படி முழுவதுமாக கொடுக்க சுகாதார ஊழியரின் ஆலோசனையை பெறவும்.

Filed under:
2.98591549296
baskaran Dec 17, 2015 10:31 AM

தடுப்பூசியை தவிர்ப்பது நல்லது

Ranje May 26, 2015 11:02 AM

Never would have think I would find this so indispensable.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top