பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்

பச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம் பற்றிய குறிப்புகள்

 • பொதுவாக நமக்கு தெரிந்ததெல்லாம் ரத்தம் என்பது சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் தனிதனி வண்ணத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலை செய்கின்றன.
 • ரத்தமானது சிகப்பு கிளிபச்சை, மஞ்சள் நிறமென்று மூன்று நிறத்தையும் தனக்குள்ளே அடக்கி வைத்து வெளியில் சிகப்பு நிறத்தை மட்டும் நமக்கு காட்டுகிறது.
 • அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும். ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
 • வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.
 • ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் ரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. ரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் (கிளி பச்சை) என்று அழைக்கப்படுகின்றன.
 • ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா (மஞ்சள்) என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.
 • தற்போது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலான ரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியேப் பிரித்து பாதுகாக்கும் முறை வந்துவிட்டது. அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அவற்றை பாதுகாத்து வைக்கலாம். ரத்த வங்கிகள் தாங்கள் பெறும் ரத்தத்தில் 85 விழுக்காடு ரத்தத்தை இப்படி பிரித்துத்தான் பாதுகாக்கின்றன.
 • சில நேரம் தானம் வழங்குபவரிடம் இருந்து பிளேட்லெட்ஸ் அல்லது சிகப்பனுக்கள் என்று தனியாக தேவைப்படும் ரத்தத்தை மட்டும் எடுத்து பயன்படுத்துகின்றனர். இதனால் நோயாளிக்கு என்ன தேவையோ அதனை மட்டும் நாம் தானமாக கொடுத்தால் போதும்.
 • ஏனெனில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படாது. உதாரணத்திற்கு, ஹ்யூமோக்ளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும்.
 • தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிளாஸ்மா செல்கள் மட்டுமேத் தேவைப்படும். விபத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமேத் தேவைப்படும்.
 • அந்த சமயங்களில் நோயாளிக்குத் தேவையான ரத்தத்தில் இருந்து தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும் செல்கள் மட்டும் அவர்களுக்கு அளிக்கப்படும். இதனால் ஒருவர் அளிக்கும் ரத்தத்தின் மூலமாக பலர் பயனடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆதாரம் : மாற்று மருத்துவம் காலாண்டு இதழ்

2.93442622951
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top