பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்

பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

  • கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பலவிதங்களில் பாதுகாக்கிறது. அமுக்கவிசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இத்திரவத்தைச்சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது.
  • இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது Prelabour rupture of membrane எனப்படும். அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவநீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர்) வெளியேறுதல். இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவமுறை

  • 34வார கர்ப்பகாலத்திற்குமுன் இதுநடைபெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன்பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.
  • ஆனாலும் அதற்குமுன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கொடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஆதாரம் : விதை விருட்சகம்

3.02083333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top