பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்

பல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம் பற்றிய குறிப்புகள்

நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் உடல்வலி, மூட்டுவலி போன்ற நோய்கள் நீங்கும். நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். அதேபோன்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

  • காய்ச்சலால் அவதியுறுபவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முப்பது மில்லி லிட்டர் அளவுக்கு தொடர்ந்து ஒருவாரம் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் காய்ச்சல் முழுமையாக நீங்கிவிடும். கோப்பி, தேநீர் அருந்துவதை போல தினமும் நிலவேம்பு கஷாயத்தை குடித்து வருபவர்களுக்கு உடல் அரோக்கியமாகவே இருக்கும்.
  • நிலவேம்பு (சிறியாநங்கை), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடம், கோரைக்கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு ஆகியவற்றை வாங்கிக் கொள்ளவும். இந்த ஒன்பது வகை மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். காய்ச்சி வடிகட்டி கஷாயமாக மிதமான சூட்டில் பருகினால் சிறந்தது.
  • எனினும் இதனை பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதாயின், முறையான மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். ஏனையவர்கள் அருந்துவதில் பிரச்னை இல்லை. கஷாயம், காய்ச்சப்பட்டு நான்கு மணி நேரத்துக்குள் பருகிவிட வேண்டும். இல்லையென்றால் அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் முழுமையான பயனைத் தராது.

ஆதாரம் : நல்வாழ்வு, மருத்துவம்

3.10666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top