பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காலையில் எழுந்த உடன் மனஅழுத்தத்தில் இருத்தல், எதையும் செய்ய மனமற்ற நிலை, ஓய்வற்ற நிலை, தற்கொலை எண்ணம், மூட்டுகள் மற்றும் இடுப்புவலி, ஜீரண குழாய்களில் பிரச்னை இவற்றில் 5க்கு மேல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு மன அழுத்த நிவாரண உதவி மிக அவசியம். ஆய்வக பரிசோதனையை விட நோயாளியுடன் உரையாடி கண்டுபிடிப்பதே சிறந்தது.

உடல் ரீதியாக அறிதல்

முகம்பார்த்து பேசாமை, முடியை இழுத்து கொண்டிருத்தல், ஞாபகம் இன்மை, ஈடுபாட்டு தன்மை இன்மை, பேச்சில் குறைவு, மூலையில் ஒதுங்கி இருந்து அழுது தேம்புதல், தற்கொலை எண்ணம், அதிகமன அழுத்தம் தற்கொலைக்கு தூண்டும். இப்படிப்பட்ட நோயாளிகளை மிக கவனமாக பராமரிக்கவேண்டும்.

சிகிச்சை

ஆன்டிடிப்ரசன்மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தலாம். செரோட்டின், டோப்பளமின் போன்ற மருந்து இதற்கு உதவுகிறது. ஆனால் பின் விளைவுகளாக செரிமான கோளாறு, தலைவலி, நரம்புதளர்ச்சி, வாந்தி, தூக்கமின்மை தென்படும். சைக்கோ தெரபி கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்திலிருந்து மீட்டு வரலாம். மருந்துவம், கவுன்சிலிங் ஆகியன சேர்ந்து எடுப்பது எளிதில் நிவாரணம் பெறச்செய்யும். இவை முடியாத பட்சத்தில் மின்காந்த அலைகள் தலையில் தொடர்பு ஏற்படுத்தி நரம்புகளை தூண்டியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கை கொடுக்கும் யோகா

தியானம், யோகா, அக்குபஞ்சர், இசை, மசாஜ் மற்றும் நறுமணபொருள், ஊட்டசத்துள்ள உணவுகள் ஆகியன மூலமும் குணப்படுத்தலாம். தியானம் என்றால் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக ஒரே ஒளி, ஒலி மந்திர குறிப்பிட்ட ஒரு பிம்பத்தின் மீது மனதை குவிய செய்தல். யோகா, தியானத்துடன் உடலை சில நிலைகளில் அமர செய்து மூச்சுப்பயிற்சியுடன் உடல் எடையை மறந்து ரிலாக்சாக்குதல் மூலம் நல்ல மாற்றம் வருகிறது.

உடலை தடவுதல்

மசாஜ் மூலம் உடல் பாகங்களை தடவும் முறையால் ரிலாக்ஸ் கிடைக்கும். மானசீகமாக தடவும் போது மனமும் உடலும் தொடர்புக்குள்ளாகிறது. உடல் சுகம் கிடைக்கிறது. ஆவேசம், தீவிர உணர்ச்சி அழிக்கிறது.

இசை

மருந்தில்லாமல் அனைத்து வயதினருக்கும் இசை மூலம் கோபம், அழுத்தம், கவலையை போக்கலாம்.

அக்கு பஞ்சர்

அக்கு பஞ்சர் எனும் நுண்ணிய ஊசிகளை குறிப்பிட்ட இடங்களில் தோலின் உள் செலுத்தி உடல் வலி, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் மீன் எண்ணை (ஒமேகா 3), விட்டமின் பி6, பி12, விட்டமின் சி மற்றும் டி ஆகியவை கொண்ட உணவுகளையும், இரும்பு, சுண்ணாம்பு, மெக்னீசிய சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுக்கலாம்.

செரேட்டோனின் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும். செரேட்டோனின் குடலில் 90 சதவீதமும், மூளை மற்றும் ரத்தத்தில் 10 சதவீதமும் இருக்க வேண்டும். உறக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரேட்டோனின் குறைந்தால் கோபம், தற்கொலை எண்ணம் வரும். சத்துக்கள் இல்லாத உணவு செரோட்டோனின் அளவை குறைக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செரோட்டோனின் அளவை அதிகரிக்க செய்து ரத்தத்தினை சீராக ஓடச் செய்து தசைகளை உறுதிப்படுத்துகிறது. நல்ல சிந்தனை ஓட்டம் மற்றும் அன்பு மலரச் செய்கிறது. பருப்பு, பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணெய், புளித்த உணவுகள் மனஅழுத்தத்தை குறைக்கும்.

இயற்கை வைத்தியம்

தினமும் இரு வேளை 50 கிராம் மஞ்சளுடன் 15 கிராம் குங்குமம் சேர்த்து 8 வாரம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும். ஜிங்கோபைலோபா என்ற மூலிகை மருந்தும் உதவும். ஜடமான்சி, நீர்பிரம்பி, பூசணிக்காய், சங்கு புஷ்பம், வால் உழுவை, அமுக்கார சூரணம் இவைகளை பசு நெய்யில் தனித்தனியாக தயாரித்து சாப்பிட்டால் நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னோர் காட்டிய வழியான முறையான உணவுபழக்கம், நன்நெறி கடைபிடித்தல், கட்டுக்கோப்புடன், திறந்த மனதுடன், தூய்மையான சிந்தனையுடன் வாழ்தல் அவசியம்.

ஆதாரம் : குங்குமம் மாத இதழ்

3.09677419355
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top