பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்

மனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பூமியில் எண்ணிறந்த வகையான, எண்ணிக்கையில் அதிகமான நுண்ணியிரிகள் குழுமியுள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர வாழ்ந்து உணவினை பல்வேறு இடத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. இதனால் பலவிதமான உறவுகள் உயிரிகளிடத்தே தோன்றியது.

சிம்பையாசிஸ் எனப்படும் மூன்று வகையான உறவுகள்

பகிர்ந்து வாழும் வாழ்க்கை

இல்வாழ்க்கை ஒரு சிறந்த வாழ்க்கையாகும். ஏனெனில் இரு உயிரிகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது. அவை இரண்டும் ஒன்றோடு சேர்ந்து வாழ்ந்தும் இனப்பெருக்கம் செய்வதும் தனித்தன்மையானது. அவை ஒன்றுக்கொன்று தீங்கு விளைவித்துக் கொள்ளாது. எடுத்துக்காட்டு : நமது உடலில் வசிக்கும் பாக்டீரியாக்கள் கூறலாம். சில பாக்டீரியாக்கள் சிறிது நேரம் மட்டுமே உடலில் வசிப்பவை. இவை மனித உடலின் வெப்பம், உணவு, மனிதனின் நோய்தடுப்பாற்றல், உடலில் நிரந்தரமாக தங்கியிருக்கும் பாக்டீரியாக்களின் போட்டி ஆகிய ஒவ்வாத சூழ்நிலையினால் இந்த பாக்டீரியாக்கள் உடலில் சிறிது நேரம் மட்டுமே இருப்பவை.

ஒன்றுக்கொன்று ஆதரவு

 • இந்த தொடர்பில் இரண்டு உயிரிகளும் ஒன்றுக்கொன்று நன்மை அடைபவை எடுத்துக்காட்டாக மனித குடலில் வசிக்கும் பாக்டீரியாக்கள் அங்கிருந்து உணவைப் பெற்று வைட்டமின் 'K' வை உருவாக்கும். ஒட்டுண்ணி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பாக்டீரியாக்கள் அதிக சிக்கலமைப்பு இல்லாதிருக்கும். இவை விருந்தோம்பியை கொல்லக் கூடிய சக்தி உடையவை. விருந்தோம்பி இறந்தால், ஒட்டுண்ணி புது விருந்தோம்பிக்கு கடத்தப்படவில்லை என்றால் அவையும் விருந்தோம்பியோடு நீக்கப்பட்டுவிடும். விருந்தோம்பி உயிர் வாழ்ந்தால் அவை பாக்டீரியாக்களை தடுப்பாற்றல் மூலம் நீக்கிவிடும்.
 • பெரும்பான்மையான பாக்டீரியாக்களில் உயிரியல் செயல்பாடுகளில் கூர்மையான வித்தியாசம் இல்லை. ஆனால் ஒட்டுண்ணி தகுதியில் சீரான பலவிதமான தன்மை உண்டு. எடுத்துக்காட்டாக ஈகோலை பாக்டீரியா உணவு பாதையிலிருந்து ஊடுருவி, சிறுநீர் பாதையில் சென்றால் நோய் உண்டாக்கும். சில வெளிப்படையாக நோய் உண்டாக்கலாம், சில மறைமுகமாக நோய் உண்டாக்கும் அல்லது நோய் தடுப்பாற்றலை உண்டாக்கும். (எடுத்துக்காட்டாக போலியோ வைரஸ்). சில வெளிப்படையாக நோய் உண்டாக்குவதால், இறுதியில் ஒட்டுண்ணி முழுவதும் நீக்கப்படும்.
 • ஒட்டுண்ணி இறுதி நிலையில், விருந்தோம்பி அதிகமாகக் காயப்படுத்தப்பட்டு இறுதியில் விருந்தோம்பி இறந்துவிடும்.
 • இவ்வாறு ஒட்டுண்ணிக்கும், விருந்தோம்பிக்கும் இடையே உள்ள தொடர்பு, கூட்டமாதல் (colonization) வெளிப்படைநோய், மறைமுக நோய் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். நிரந்தர நுண்ணுயிரிகள் இரண்டு வகைப்படுத்தப்படும். இவை வழக்கமாக குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட வயதில் காணப்படும். அவை தொந்தரவு செய்யப்பட்டால் மீண்டும் தம்மை அவ்விடத்தில் உருவாக்கிக் கொள்ளக் கூடியவை.

இடைப்பட்ட நுண்ணுயிரிகள்

இவை, நோய் விளைவிக்காத அல்லது நோய் விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள். இவை தோல் அல்லது கோழைப்படலத்தில், சில மணி, நேரம், நாட்கள் அல்லது வாரம் வரை தங்கியிருக்கலாம். பொதுவாக இவை வெளியில் இருந்து வருபவை. ஆனால் உள்ளே இருக்கும் நிரந்தர நுண்ணுயிரிகள் பாதிக்கப்படும்போது, இவை பெருகி, கூட்டமாகி, நோயையும் உண்டாக்கலாம்.

 • கூட்டமாதல்
 • விருந்தோம்பி
 • ஒட்டுண்ணி
 • மறைமுக நோய்
 • வெளிப்படை நோய்

வாய், மேல் சுவாச பாதைகள்

 • குழந்தை பிறந்தவுடன் வாய், மற்றும் தொண்டையில் நுண்ணுயிரிகள் இல்லாது காணப்படும். ஆனால் பிறந்து 4-12 மணி நேரத்திற்குள் விரிடன்ஸ் ஸ்ட்ரெப்டோகாக்கை உருவாகிவிடும். அவை, தாய் மற்றும் உதவியாளர்களின் சுவாசபாதையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். நாசித்தொண்டைப் பகுதியில் கீழ்காணும் நுண்ணுயிரிகள் காணப்படலாம்.
 • டிப்தீராய்டுகள் எந்த அளவிலும், நோய் விளைவிக்காத நெய்சீரியா, ஆல்பா-ஹீமோலிடிக் ஸ்ட்ரெப்டோகாக்கை மேலும் (காற்றற்ற முறையில் சுவாசிக்கும்) அனரோபிக் நுண்ணியிரிகள். குறைந்த அளவு, யீஸ்டு, ஹீமோபிலஸ் இனங்கள், ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், கிராம் நெகட்டிவ் குச்சிகள் ஆகியவை. உணவு பாதையில் காணப்படும் நுண்ணுயிரிகள் பிறந்த குழந்தையின் உணவு பாதையில் நுண்ணுயிரிகள் இல்லை. ஆனால் நுண்ணுயிரிகள் உணவின் மூலம் உள்ளே நுழைகின்றன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குடலில் லாக்டிக் அமில ஸ்ட்ரெப்டோகாக்கை மற்றும் லாக்டோ பாசில்லஸ்கள் காணப்படும்.
 • காற்றை சுவாசிக்கும் மற்ற காற்றில்லா முறையில் சுவாசிக்கும் நுண்ணுயிரிகள் கார்போ ஹைட்ரேட்டிலிருந்து அமிலம் உருவாக்கும். அமில சூழ்நிலையைத் தாங்கிக் கொள்ளும் (pH:5). குழந்தை வளரும் போது உணவுப் பழக்கம் பெரியவர்களைப் போன்று மாறுவதால் உணவு பாதையின் நுண்ணுயிரிகளும் மாறும். உணவுப் பாதையிலுள்ள நுண்ணுயிரிகளின் கலவை உணவினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது.

ஒட்டுண்ணிக்கும் விருந்தோம்பிக்கும் உள்ள தொடர்பு

சாதாரணமாக நுண்ணுயிரிகள் காணப்படுவது

 1. தோல், பாதம் வெளிச் செவி முடிவில்
 2. நாசியறை, நாசி தொண்டைப்பகுதியான சுவாசபாதையின் மேல் பகுதி
 3. வாய், உள்வாய்த் தொண்டை, உமிழ்நீர், பற்களில் மேல்பகுதி, ஈறுஇடுக்குகளில்
 4. உணவுபாதை, இனப்பெருக்க உறுப்பு பாதை
 5. கண்ணின் வெளியுறை.

உடல்வாழ் நுண்ணுயிரிகளின் வகைகள்

உடல்வாழ் நுண்ணுயிரிகள் இரண்டு வகைப்படுத்தப்படும்.

வயது வந்தோரிடம் (adult) உணவு குழலில் வாய்புற நுண்ணுயிரிகள் காணப்படும். இரைப்பையில் அமிலத்தன்மை யிருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வெகு குறைவாகவே காணப்படும். இரைப்பையின் அமிலத்தன்மை, நோய் உண்டாக்கும் வி.காலரே போன்ற நுண்ணுயிரிகளின் தொற்றுதலிலிருந்து பாதுகாக்கின்றது. குடல்களில் அமிலத்தன்மை மாறி காரத்தன்மை ஏற்படுவதால் அங்கு நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். கீழ்க்கண்ட நுண்ணுயிர்கள் மனித இரைப்பை, குடல் பகுதிகளில் காணப்படுகின்றன.

 1. சால்மோனெல்லா, ஷிகல்லா, எர்ஸினியா விப்ரியோ, காம்பைலோபாக்டர் தவிர மற்ற என்டிரோபாக்டீரியாக்கள்.
 2. குளுக்கோஸை நொதிக்கச் செய்யா கிராம் நெகடிவ் குச்சிகள்
 3. என்டிரோகாக்கை
 4. ஸ்டாப். எபிடர்மிடிஸ்
 5. ஆல்பா மற்றும் இரத்த அணுவை அழிக்காத ஸ்ட்ரெப்டோகாக்கை
 6. டிப்தீராய்ட் பாக்டீரியா
 7. குறைந்த எண்ணிக்கையில் ஸ்டாப். ஆரியஸ்
 8. குறைந்த எண்ணிக்கையில் ஈஸ்ட்கள்
 9. அதிக அளவில் காற்றில்லா சுவாச முறையில் சுவாசிக்கும் நுண்ணுயிரிகள்.

சிறுநீர் பாதை, சிறுநீரகப் பாதை முன்பகுதி (Urethra) இனப் பெருக்க பாதை (Vagina) ஆகிய பகுதிகளில் நிரந்தரமாக நுண்ணுயிர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். சிறுநீர்ப்பையில் தற்காலிக (transient) நுண்ணுயிரிகள் சிறுநீர்ப் பாதையிலிருந்து வந்து தங்கியிருக்கும். ஆனால் இவை, எப்பிதீலிய செல்களால் அழிக்கப்பட்டு, சிறுநீரோடு வெளியேற்றப்படும்.

சிறுநீர்ப்பாதை முன்பகுதி

பலவிதமான பகிர்ந்து வாழும் வாழ்க்கையுள்ள நுண்ணுயிரிகள் இங்கு காணப்படும். அவை லாக்டோபாசிலை, ஸ்ட்ரெப்டோகாக்கை கோயகுலேஸ் இல்லா ஸ்டாபைலோ காக்கஸ் ஆகியவை ஆகும். இவை வீரியமற்றவை. அரிதாக மனித நோயோடு தொடர்புடையவை. என்டிரோ பாக்டீரியோசியே, என்டிரோ காக்கஸ், கான்டிடா ஆகியவை சிறுநீர் கால்வாயில் தற்காலிக நுண்ணுயிரிகளாகக் காணப்படும். நோய் உண்டாக்கும் நெ.கோனோரியே, கிளாமைடியா, ட்ராக்கோமாட்டிஸ் ஆகியவை சிறுநீர்ப்பாதை முன்புற சுழற்சி (Urethritis) உண்டாக்கும். அறிகுறி உண்டாக்காத நுண்ணுயிரிகளாக சிறுநீர்ப் பாதையில் கூட்டமாகக் காணப்படும்.

இனப்பெருக்கப் பாதை

இனப்பெருக்கப் பாதையில் காணப்படும் நுண்ணுயிர்களின் கூட்டம் வேறுபட்டதாய் ஹார்மோன்களின் தாக்கம் உடையதாய் காணப்படும்,

பிறந்த பெண் குழந்தைகளில் ஆறு வாரம் வரை லாக்டோ பாசிலை பாக்டீரியாக்கள் பெருபான்மையாகக் காணப்படும். பிறகு ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும்போது pH நடுநிலையாக்கப்படும் சாதாரணமாகக் காணப்படும் நுண்ணுயிரிகள் மாறி ஸ்டபைலோகாக்கை, ஸ்ட்ரெப்டோகாக்கை, என்டிரோ பாக்டீரியேசியே இனங்கள் காணப்படும். பருவ முதிர்ச்சி அடைவதனால் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி தூண்டப்பட்டு, கிளைகோஜன் வளர்சிதை மாற்றத்தினால் pH அமிலமாக மாற்றப்படுகிறது.

இச்சமயம் நுண்ணுயிர்கள் மாற்றமடைகின்றன. லாக்டோபாசிலை பாக்டீரியாக்கள் மீண்டும் பெரும்பான்மையாகிறது. மற்ற நுண்ணுயிரிகள் ஸ்டாப். எப்பிடெர்மிடிஸ், ஸ்ட்ரெப்டோகாக்கை, என்டிரோகாக்கஸ், கார்டனெல்லா, மைக்கோபிளாஸ்மா, யுரியோபிளாஸ்மா, மற்றும் பிற காற்றில்லா சுவாச நுண்ணுயிரிகள். மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களில் மீண்டும் பருவம் முதிர்ச்சி அடையும் முன்பு காணப்படும்.

தோலில் காணப்படும் நுண்ணுயிரி :

தோல் தொடர்ந்து வெளிச் சூழ்நிலைக்கு உட்படுத்தப்படுவதால் பல தற்காலிக நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட சில நிரந்தர நுண்ணுயிரிகள், சுரப்பிகள் உள்ள பகுதிகள் துணியால் போர்த்தப்பட்ட பகுதிகள், கோழைப்படலத்தின் அருகிலுள்ள பகுதி, இவற்றை பொறுத்து வேறுபடும்.

தோலில் காணப்படும் நிரந்தர நுண்ணுயிரிகள்:

குடியேறுவதைத் தடுக்கின்றன. சாதாரண நுண்ணுயிரிகள், உள்ளே வரும் நோய்க்கிருமிகளோடு உணவுக்காக போட்டியிட்டு, அவற்றைத் தடுப்பு பொருள்களான பாக்டீரியோசின் மூலம் (பாக்டீரியாவை அழிக்கும் பொருள்கள்) தடைப்படுத்தும். சாதாரண நுண்ணுயிரிகள் சில சந்தர்ப்பங்களில் நோயை உண்டாக்கும். எடுத்துக்காட்டாக, நோய் தொற்றுதல் இல்லாத இடத்தில் அவை நோயை உண்டாக்கும். உணவு பாதையில் காணப்படும் நுண்ணுயிரிகள், சிறு நீர்பாதையில் செல்ல நேரிட்டால் அங்கு நோயை உண்டாக்கும். அதுபோன்று வாயில் காணப்படும் நுண்ணுயிரிகள் இரத்தத்தில் நுழைந்தால் என்டோ கார்டைட்டிஸ் நோயை உண்டாக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

 • நுண்ணுயிரிகள் மனிதனோடு சிம்பையாசிஸ் முறையில் தொடர்பு கொண்டுள்ளது.
 • உறவுகள் தொடர்பு பகிர்ந்து வாழும் வாழ்க்கை, ஒன்றுக்கொன்று ஆதரவு ஒட்டுண்ணி என மூன்று வகைப்படும்.
 • உடலின் தோலில் உள்ள நுண்ணுயிரிகள் எவ்வித தீமையும் விளைவிக்காது.
 • அவை சாதாரண நுண்ணுயிரிகள் எனப்படும். சாதாரண நுண்ணுயிரிகள், தோல், கோழைப்படலம் உணவு பாதை, சிறுநீர், இனப்பெருக்க பாதை ஆகிய இடங்களில் காணப்படும்.
 • சாதாரண நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பகிர்ந்து வாழும் உயிரிகள். இவை நோய்கிருமிகளோடு உணவுக்காகவும் போராடுபவை. நோய்க்கிருமிகள் கூட்டமாக உருவாதலை தடுக்கின்றன. இவை சில சமயம் நோயை உண்டாக்குகின்றன.
 • ஸ்டபைலோகாக்கஸ் எப்பிடெர்மிடிஸ், ஸ்டைபைலோகாக்கஸ் ஆரியஸ், மைக்ரோகாக்கஸ் இனங்கள், நோய் உண்டாக்காத நெய்சீரிய இனங்கள், ஆல்பா ஹீமோலிடிக், மற்றும் நான் ஹீமோலிடிக் ஸ்ட்ரெப்டோகாக்கை, டிப்தீராய்டு, புரோப்பியானோ பாக்டீரிய இனங்கள், பெப்டோஸ்ட்ரெப்டோகாக்கஸ் இனங்கள். தற்காலிக பாக்டீரியாக்கள், குறைந்த pH, கொழுப்பு அமிலங்கள், தோல் சுரப்பிகளின் சுரப்புகள், லைசோசைம் இவற்றால் நீக்கப்படுகின்றன.
 • குடலில் நுண்ணுயிரிகள் வைட்டமின் 'K' வை உருவாக்கிச் செரித்த உணவை உறுஞ்சுவதற்கு உதவுகின்றன. நிரந்தர நுண்ணுயிரிகள் பாக்டீரியல் குறுக்கிடுதல் மூலம், நோய் உண்டாக்கும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.93103448276
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top