பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்

மனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள் பற்றிய குறிப்புகள்

ஆதி மனித உணவு

சமைத்த உணவுக்கு அடிமையான மனிதன் மீண்டும் அனைத்து வகையான சமைத்த உணவுகளையும் அதிகபட்சம் முடிந்த அளவு உண்ண மறுத்து, ஆதி மனித உணவாகிய தேங்காய், பழங்களையே உணவாக உண்டு வாழ முயலும்போது, எந்த மருத்துவமும், எத்தகைய நோய்களுக்கும், எந்நிலையிலும் அவசியமில்லை.

விபத்து ஏற்பட்டபோதிலும், மரணத்துக்குப் போராடி உயிர் ஊசலாடும் நிலையிலும் மருத்துவம் செய்யாது, திராட்சை, ஆரஞ்சு முதலான பழச்சாறுகளும், தேன் கலந்த பச்சைத் தண்ணீர், இளநீர், தேங்காய்ப்பால் முதலிய திரவ உணவுகளையே உணவாகக் கொடுக்கும்போது, எலும்பு நரம்புகளை சரி செய்யவும், உயிர் பிழைக்கவும் பெரும் வாய்ப்பு உள்ளது. இயற்கை காற்றோட்டமுள்ள அறையில் தங்க வேண்டும்.

சமையல் உணவில் அதிகத் தீங்கு தரும் உணவுப் பொருட்கள்

உப்பு, புளி, காரம், எண்ணெய், வெள்ளைச் சர்க்கரை, பால் மற்றும் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், மோர் முதலியன. முட்டை, பாலிஸ் செய்யப்பட்ட அரிசி, மைதா, கருவாடு, இறைச்சி, மீன் மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்த இதர உணவுகள்.

என்ன நோய், எந்த உறுப்பில் நோய் எனக் கண்டறிவது அவசியமில்லை. நோய் கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் முதலியன தேவையே இல்லை. அக்கதிர் வீச்சுக்கள் உடலைப் பாதிப்பதுடன் பொருள் விரயம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் பயன் இல்லையென்றே சொல்லலாம்.

இயற்கை வாழ்வு

மனிதனுக்கு உரிய உணவாகிய தேங்காய் பழங்களையே உணவாகப் பெரும்பாலும் உண்டு வாழ முயலும்போது, உடலிலுள்ள கழிவுகள் வெளியேறி, உடலும் ரத்தமும் சுத்தமாகி, உடல் தூய்மையானதாக உருவாகிறது. வாத, பித்த, கப நாடிகள் சீரடைகின்றன. சுவாசமும் சீராகிறது. இப்பேருண்மைக்கு இன்றும் சாட்சியாக விளங்குபவை மனிதனைவிடக் கீழான உயிரினங்களான, பகுத்தறிவில்லாத உயிரினங்கள், அனைத்து விலங்கினங்கள், அனைத்து பறவையினங்கள், அனைத்து ஊர்வன உயிரிகள், அனைத்து நீர் வாழ் உயிரினங்களே. இவையனைத்தும் இயற்கையாக உணவைத் தேடி, இயற்கையாக உண்டு, இயற்கையாக இன்றும் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறாக மனிதனும் பெரும்பாலும் இயற்கையாக உண்டு, இயற்கையாக வாழ முயலும்போது, மனித உடலும் தன்னைத் தானே அனைத்து உடல், உள நோய்களிலிருந்து தானே சரி செய்து, சரியாக இயங்க ஆரம்பிக்கும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இது தெவ்வீகப் பேருண்மையாகும்.

உலகிலுள்ள துன்பங்களுக்கெல்லாம் காரணம், சமைத்துண்ணும் பழக்கமே! சமைத்துண்பது தற்கொலைச் செயலாகும். ஆவதும் உணவாலே அழிவதும் உணவாலே. உணவை மாற்றினால், உலகையே மாற்றலாம்!

பகவத் கீதை, திருக்குறள், திருமந்திரம், அஷ்டாங்கயோகம், சாந்தோக்ய உபநிடதம் போன்றவை இக்கருத்தையே மனிதருக்கு வலியுறுத்தி உள்ளன.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.1
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top