பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நுங்கு - மருத்துவ குணங்கள்

நுங்கின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தோல் நோய்களை போக்க கூடியதும், சிறுநீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த வல்லதும், நீர் இழப்பை சமன்செய்ய கூடியதுமாக நுங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

கோடைகாலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தணிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது.

உடல் சோர்வை போக்குகிறது. வியர்குரு, அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது. பால்வினை நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.

உடல் சூட்டை தணிக்கும் சர்பத்

தேவையான பொருட்கள்:
நுங்கு, ரோஜா சர்பத் - நுங்கு துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் ரோஜாப்பூ சர்பத்தை சேர்க்கவும். நீர்விட்டு கலக்கி குடித்துவர நீர் இழப்பு சமன்படுகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.

குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய இந்த சர்பத் அவர்களுக்கு புத்துணர்வை தருகிறது.  பல்வேறு நன்மை களை கொண்ட நுங்கு, ஆண்மை பெருக்கியாக விளங்குகிறது.

இளம் நுங்கை சாப்பிட்டுவர வயிற்று புண் சரியாகும்.

தோல் நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து

இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக் கொள்ளவும்.

இதை வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவர குணமாகும். இதேபோல் அம்மை, அக்கி கொப்பளங்களுக்கு மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம்.

கண் தொற்றுக்கான மருந்து

நுங்குவில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மெல்லிய பருத்தி துணியை நனைத்து எடுக்கவும். இதை கண்களில் மேல் பற்றாக வைக்கும்போது கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறையும். கண்களில் ஏற்படும் சோர்வு சரியாகும்.

கண் நோய்களுக்கு நுங்கு நீர் பலன் தருகிறது. அற்புதமான மருந்தாக விளங்கும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. தோல் மீது ஏற்படும் கொப்புளங்களை மறைய செய்கிறது.

கோடைகாலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிரச்சனைகளுக்கான மருந்து

மோருடன் இளம் நுங்கு, உப்பு சேர்த்து கலந்து குடித்தால்வ யிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப்போக்கு சரியாகும். நுங்குவின் தோலில் உள்ள துவர்ப்பு தன்மை வயிற்றுப் போக்கை சரிசெய்யும். கோடைகாலத்துக்கு ஏற்ற உணவான நுங்குவை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது.

ஆதாரம் - விடுதலை நாளிதழ்

2.96875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top