பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்

எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையின் மருத்துவ பயன்களை படித்து பயன்பெறவும்.

முருங்கை கீரை

  • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.
  • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.
  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
  • பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.
  • முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
  • ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.
  • ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

முருங்கைக் காய்

  • முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
  • முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
  • வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது.
  • முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.
  • கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது.

ஆதாரம் – வெப்துனியா நாளிதழ்

3.21621621622
ஜெயசக்தி Sep 26, 2020 01:56 PM

முருங்கைகீரையை தொடர்ந்து சாப்பிட்டால் சூடு அதிகம் ஆகிறது

பாண்டியன் Jul 18, 2019 05:46 AM

பிளட் பிரசர், சுகர் போன்ற வியாதிக்கு பயனுள்ளது

போஸ் நாகு May 19, 2019 10:36 PM

முருங்கை நீரை தூய்மைப்படுத்தபயன்படுகிறது
என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் அது
உண்மையா என்பது பற்றி தெளிவான கருத்து
வேண்டும் நன்றி

செய்யதுமுகியதீன் Feb 20, 2019 10:09 AM

நல்ல பயனுள்ள தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top