অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வாடகை தாய்

வாடகை தாய்

குழந்தையின்மை

தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும் , அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.

குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன.

குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை.

ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

வாடகைத் தாய்

இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள்.

வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.

இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய். இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம்.

வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவிய|ன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார்.

பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும்.

வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம்.

குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்றமனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது.

வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.

யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்றஉறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்றதொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது. வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement)

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு

(Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) - இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்

புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் - கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை.

இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்.

ஆதாரம் : டாக்டர். மனோகரன்.© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate