பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவங்கள்

வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

முந்தைய புத்தகத்தில், வளர்ச்சி காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவ நிலைகள் - கர்ப்பத்தில் ஆரம்பித்து குழந்தைப் பருவம் முடிவுறும் நிலை வரை விவாதிக்கப் பட்டிருந்தது. இந்த புத்தகத்தில், நாம் பாலினம் முதிர்ச்சியின் தொடக்க காலம் முதல் வளரிளம் பருவம், (குமர பருவம்) முழு வளர்ச்சி அடைந்த பருவம் (நடுவயது) தொடர்ந்து முதுமை காலம் வரையில் உள்ள வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவங்களை உற்று நோக்குவோம்.

வளர்ச்சியடைதல் என்பது அவ்வளவு லேசானது அல்ல. முழு வளர்ச்சி அடைந்தவர்களுக்கு, அதாவது குழந்தை வாழ்க்கையில் முழு வளர்ச்சி உள்ளவர்களுக்கு வளர்ச்சி என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பெற்றோர்கள் குழந்தையின் வாழ்க்கை பருவ வளர்ச்சி நிலைகளில் என்ன செய்வதென்று தெரியாமல் போய்விட்டதை எண்ணி வருந்துகின்றனர்.

பாலினம் முதிர்ச்சியின் தொடக்க காலம்

 • பாலினம் முதிர்ச்சியின் தொடக்கக் காலம் என்பது வாழ்க்கை பருவ வளர்ச்சிக் காலத்தில் ஒரு குழந்தையானது பால்வேறுபாடற்ற தன்மையில் இருந்து மாற்றம் அடைந்து பால் வேறுபாடு தன்மையை அடையும் காலம் ஆகும். ரூட் என்பவர் ''பாலினம் முதிர்ச்சியின் காலம் என்பது வளர்ச்சி நிலையில் பாலின உறுப்புகள் முதிர்ச்சியுறுதலை ஏற்படுத்தும் காலம் மற்றும் இனப்பெருக்கத்திற்கான செயலாற்றலை பெறும் காலம்" என்று விளக்கியுள்ளார். இந்த நிலை "முழு வளர்ச்சிப் பருவ வயது" என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலை பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை விட, ஒரு தனிநபர் உடலில் பாலின் முதிர்வு ஏற்படுவதையும், குழந்தை பெறும் செயலாற்றலை பெறும்போது ஏற்படுகின்ற உடலின் மாற்றத்தையுமே குறிக்கிறது.
 • ஆண்களின் உடலில் விந்தணு 14 வயது பூர்த்தியாகும் போது உற்பத்தி ஆகிறது. அதே சமயத்தில் மொசு மொசு வென்ற மென்உரோமம் உருவாக ஆரம்பிக்கும். பெண்களுக்கு மார்பகம் வீங்கித் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் மாதவிடாய் ஆரம்பமாகும்.
 • பாலின முதிர்ச்சியின் தொடக்க காலம் என்பது தனித்தன்மை வாய்ந்த குறிப்பிடத்தக்க வேறுபாட்டை தெரிவிக்கிற காலம் மற்றும் வாழ்க்கையின் எந்த ஒரு வளர்ச்சி நிலையிலும் ஏற்பட்டிராத வளர்ச்சி நிலை மாற்றங்களை உருவாக்கும்.
 • பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலம் என்பது மேல் சென்றுக விந்திருக்கும் காலம் - ஏனெனில் இக்காலம் முடிவுறும் குழந்தைப் பருவத்தையும் வளரிளம் பருவத்தின் குமரப்பருவம் தொடக்க காலத்தையும் உள்ளடக்கி உள்ள காலம் ஆகும். உரோமமுடைய பருவத்தினர் மென்மை வாய்ந்தவர்கள் (Pubescents) என அழைக்கப் படுவர். பாலின முதிர்வு ஏற்பட்ட பின்னர், அவர்கள் 'வளரிளம் பருவத்தினர்' (adolescents) என்று அழைக்கப்படுவர்.
 • பாலின் முதிர்ச்சியின் ஆரம்ப காலம் என்பது மிகவும் குறுகிய காலம் - இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும். இக்காலத்தில் பல விரிவான மாற்றங்கள், உடலின் உள் உறுப்புகளிலும், உடலின் வெளியிலும் நடைபெறும். மாற்றங்கள் விரைவான முதிர்வாகவோ அல்லது 'மெதுவான முதிர்வாகவோ இருக்கலாம். பெண்கள் ஆண்களை விட விரைவில் முதிர்வுறுவார்கள். ஆனால் இரு பாலினர்களிடையே குறிப்பிட்ட வேறுபாடுகள் இருக்கும். பாலின முதிர்ச்சியின் தொடக்க காலம் பல நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 • வாழ்க்கைப் பருவங்களில் மிகக் குறுகிய காலமாக, பாலின முதிர்ச்சியின் தொடக்க காலம் இருந்தாலும், இக்காலம் மேலும் 3 நிலைகளைக் கொண்டுள்ளதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முறையே - முன் மென் உரோமமுடைய பருவ நிலை, மென் உரோமமுடைய பருவ நிலை, பின் மென் உரோமமுடைய பருவ நிலை என்பனவாகும்.

பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தின் நிலைகள்

முன் மென் உரோமமுடைய பருவ நிலை

இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் குழந்தைப் பருவம் முடிவுறும் காலத்தின் மேல் சென்று கவிந்திருக்கும் காலம் ஆகும். இக்காலத்தில் தான் குழந்தையானது 'முன் மென் உரோமமுடைய பருவ நிலையில் உள்ளதாக கருதப்படுகிறது. இக்காலத்தில் ஒருவரை குழந்தை பருவ நிலையில் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது, வளரிளம் பருவத்தை அடைந்தவராகவும் கருத இயலாது. முன் மென் உரோமமுடைய பருவத்தின் அல்லது முதிர்வுறுதல் நிலையில், துணையான பாலின சிறப்பியல்புகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் இன விருத்தி உறுப்புகள் முழுமையான வளர்ச்சியடைந்து இருக்காது.

மென் உரோமமுடைய பருவ நிலை

இப்பருவ நிலை, குழந்தைப் பருவம் மற்றும் வளரிளம் பருவத்திற்கும் இடையே உள்ள பருவ நிலையாகும். பாலின முதிர்வு ஏற்படுவதற்கான அடிப்படை அளவைகளின் படி இப்பருவத்தில் மாற்றங்கள் தோன்றும். பூப்பெய்துதல் (menarche) பெண்களிலும், இரவுகளில் வெளியேற்றங்கள் ஏற்படுதல் ஆண்களிலும் உண்டாகின்றன. மென் உரோமமுடைய பருவ நிலையில் அல்லது முதிர்வுறும் பருவத்தில்) துணையான பாலின சிறப்பியல்புகள் தொடர்ந்து வளர்ச்சி அடைவதுடன் மற்ற பாலின உறுப்புகளில் செல்கள் உற்பத்தியாகின்றன.

பின் மென் உரோமமுடைய பருவ நிலை

இப்பருவநிலை வளரிளம் பருவத்தின் முதல் ஒன்று அல்லது இரண்டு வருடங்களின் மேல் சென்று கவிந்திருக்கும் காலமாகும். இந்நிலையில், இணை பாலின சிறப்பியல்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கும். மேலும் பாலின உறுப்புகள் முதிர்வுற்று பணியினை தொடங்கியிருக்கும்.

பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலத்தின் அடிப்படைத் தத்துவங்களாவன

பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலம் என்பது வேகமான வளர்ச்சி மற்றும் மாற்றங்களைக் கொண்ட காலமாகும். பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலம் என்பது வாழ்க்கையின் இரண்டு வளர்ச்சிப் பருவ காலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்காலத்தில் வேகமான வளர்ச்சியுடன் குறிப்பிட்ட மாற்றங்கள் உடல் கூறுகளில் ஏற்படுகின்றன. "வளரிளம் பருவ வளர்ச்சியில் திடீர் குறுவேகம்" என இப்பருவம் குறிப்பிடப்படுகிறது.

பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலம் என்பது எதிர்மறை வளர்ச்சிப்படியாகும். வாழ்க்கைப் பற்றிய எதிர்மறையான மனப்பான்மை கொள்வது மற்றும் எதிர்மறையான பழக்கவழக்கங்கள் ஆகியன இப்பருவத்தின் சிறப்பியல்புகள் அல்லது முக்கியமாக பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலத்தின் முற்பகுதியில் ஏற்படும் பண்புகள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. மிக மோசமான எதிர்மறை வளர்ச்சிப்படி காலம் அந்த தனிப்பட்டவர் பாலின முதிர்ச்சி அடையும் போது முடிவுறும். இந்நிலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக தெரியலாகிறது. பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலம் வேறுபட்ட வயதுகளில் ஏற்படுகிறது. பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலம் எந்த நேரத்திலும் 5 அல்லது 6 வயதுகளுக்குள்ளும் மற்றும் 19 வயதுக்குள்ளும் ஏற்படலாம். மேலும் பாலின் முதிர்ச்சியின் தொடக்க காலத்தை அடையும் வரையிலான செயல்பாடுகளோடு தொடர்புடைய மாற்றம் முழுமையாவதற்கு தேவைப்படும் காலத்திலும் வேறுபாடுகள் உள்ளன.

பெண்களில் பூப்பெய்துதல் (menarche) தோன்றுவதும், ஆண்களில் இரவில் வெளியேற்றங்கள் ஏற்படுவதும், சிறுநீர் இரசாயன சோதனைகள் மூலம் கிடைக்க பெற்ற சான்றுகள், எக்ஸ் கதிர்கள் (எக்ஸ்ரே) மூலம் அறியப்பெற்ற எலும்பு வளர்ச்சி ஆகியவை ஒரு குழந்தை பாலின முதிர்வை குறிப்பிட்ட பருவநிலையில் அடைந்து விட்டதை உறுதி செய்கிறது.

பூப்பெய்துதல் (menarche) அல்லது முதல் மாதவிடாய் என்பது பெண்களுக்கான பாலின முதிர்வின் அடிப்படைத் தத்துவமாகும். மற்றொரு வகையில், ஆண்களுக்கு இரவில் வெளியேறுதல்கள் ஏற்படும். ஆண்களுக்கு முதல் வெளியேறுதலை சிறுநீர் சோதனை மூலமும் மற்றும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் உள்ளதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் செய்யப்படுகிறது. கை, கால்கள், முட்டிகள் போன்றவற்றின் எக்ஸ் கதிர்ப்பட சோதனைகள் ஏற்றதல்ல.

பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் சார்புடைய வரையறைகள்

பிட்யூட்டரி சுரப்பியின் பங்கு

இந்த சுரப்பி இரண்டு ஹார்மோன்களை சுரக்கிறது.

 1. வளர்ச்சி ஹார்மோன் - தனி நபரின் உடல் அளவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 2. கோனோடோட்ராபிக் ஹார்மோன் – கோனாடுகளை அதிகப்படியாக செயல்புரியத் தூண்டுகிறது. பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்திற்கு சற்று முன்பு வரை, கோனோடோட்ராபிக் ஹார்மோன் சுரக்கும் அளவில் சீரான அதிகரிப்பு இருக்கும். மேலும் இந்த ஹார்மோன்கள் கோனாடுகளின் உணர்வு மிகுதியால், பாலின முதிர்ச்சி தொடக்கக் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஊக்குவிக்கும் காரணியாக அவை விளங்குகின்றன.

கோனாடுகளின் பங்கு

கோனாடுகளின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தினால், பாலின உறுப்புகள் - முதன்மையான பாலினப் பண்புகள் அளவில் அதிகரித்து, செயல்புரிவதிலும் முதிர்வறுதலிலும் உதவுகின்றன. மற்றும் இணை பாலினப் பண்புகளான, மென்மையான உரோமம் உருவாகுதல் ஆகியவையும் ஏற்படுகின்றன. பிட்யூட்டரி சுரப்பி மற்றும் கோனாடுகள் ஒன்றன்பால் ஒன்று செயலாற்றுதல் பிட்யூட்டரி சுரப்பி உற்பத்தி செய்த கோனோடோட்ராபிக் ஹார்மோன்கள், மீண்டும் பிட்யூட்டரி சுரப்பியின் மீது செயல் புரியும்.

செபியேஸ் சுரப்பிகள் அதிகமாக சுரந்து சேர்ந்து கொள்வதால், பருக்கள் தோன்றும். அக்குளில் அப்போக்ரைன் சுரப்பிகள் அதிக வியர்வையை, குறிப்பாக மாதவிடாய் காலத்திற்கு முன்பும், பின்பும் சுரந்து ஒரு விதமான மணத்தை ஏற்படுத்தும்.

தசைகள்

தசைகள் உறுதியுடன், அளவில், பெரிதாகி முக்கியமாக பால் முதிர்வுறும் தொடக்க காலத்தின் இடைப்பருவத்திலும், கடைசிப் பருவத்திலும், தோள்கள், கைகள், கால்கள் ஆகியனவை வடிவம் பெறச் செய்கிறது.

குரல்

குரல் முழுமைப்பெறும். மிகவும் இனிமையானதாக இருக்கும். கரகரப்போடு, உடைந்து போகும் குரல் பெண்களிடத்தில் காணப்படுவதில்லை. பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தில் ஏற்படும் மாற்றங்களினால், பழக்கங்கள் மற்றும் மனப்பான்மையில் ஏற்படுகின்ற விளைவுகள் போன்றும், பின் தொனி குறைந்து, சத்தம் அதிகமாகி, பிறகு இனிமையான ஒலியைப் பெறுவர். குரல் உடைவது போன்றவை பாலின் முதிர்ச்சியின் போது சாதாரணமாக அடிக்கடி ஏற்படுவதுண்டு.

மார்பில் முடிச்சுகள்

ஆண்களின் உடல் அமைப்பில் பால்மடிக்கு இணையான உறுப்பில் லேசான முடிச்சுகள் 12 முதல் 14 வயதிற்குள் தோன்றும். இம்முடிச்சுகள் பல வாரங்கள் நிலைத்து இருந்து, பிறகு அளவில் குறைந்து விடும். இணை பாலினப் பண்புகள் - பெண்கள் இடுப்பு இடுப்புப் பகுதி சற்று அகன்று, உருண்டு தோன்றும். இடுப்பெலும்பு அளவில் பெரிதாகி, தோலுக்கடியில் உள்ள கொழுப்பின் (subcutaneous fat) அளவும் அதிகரிக்கும்.

மார்பகம்

இடுப்பு அகலமாக மாறிய பின், மார்பகம் வளர ஆரம்பமாகும். மார்பகத்தில் முலைக்காம்பு பெரிதாகும். பால் மடி சுரப்பிகள் உருவாகி, மார்பகம் பெரிதாகி, உருண்டையாக வளரும்.

உரோமம்

இடுப்பு மற்றும் மார்பகம் உருவாகிக் கொண்டு இருக்கையில் மென் உரோமம் உருவாகும். முதல் மாதவிடாய் அல்லது பூப்பெய்தும் சமயத்திற்கு பிறகு அக்குளிலும், முகத்திலும் உரோமம் தோன்ற ஆரம்பிக்கும். பால் இன முதிர்ச்சி அடையும் ஆரம்ப காலத்தில் சிறிது தாமதமாக கைகால்களில் உரோமம் வளர ஆரம்பிக்கும். முகத்தில் வளரும் உரோமம் மட்டுமே நேராகவும், லேசான நிறத்துடனும் முதலில் காணப்பட்டு, பிறகு அடர்வாகவும், அடர்வான நிறத்துடனும் இருக்கும்.

தோல்

தோல் சொரசொரப்பாகவும், தடிமனாகவும், வியர்வைத் துளைகள் பெரியதாகியும் தோன்றும்.

சுரப்பிகள்

செபேசியஸ் மற்றும் அப்போக்ரைன் சுரப்பிகள் பாலின முதிர்ச்சி தொடக்க காலத்தில் மிக வேகமான செயல்பட பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தில் உள்ளவர்கள் தனிமையில் இருப்பதையே பெரிதும் விரும்புவர். குறிப்பாக குடும்ப நபர்களிடம் இருந்து பிரிந்து இருப்பதையும், செயல் ஆற்றுவதையும் விரும்புவர். இச்செயல் பாடு ஒதுங்கிச் சென்றுவிடும் 'ஒத்திசைவு நோய்க்குறி' என்று கூறப்படுகிறது. வெறுப்பாக, ஆர்வமின்மையுடன் காணப்படுவது மிகச் சாதாரணம். வேகமான மற்றும் சீரற்ற வளர்ச்சி, பழக்க வழக்கங்களின் ஒருங்கிணைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி ஒழுங்கற்ற விரும்பத்தகாத பழக்கங்களை ஏற்படுத்தி விடும். மென்மயிர் பருவத்தில் உள்ள குழந்தைகள் எப்போதுமே பிறருடன் ஒத்துப் போக மாட்டார்கள். கருத்துக்களில் மாறுபடுவர், பிடிவாதத்துடன் உற்சாகமின்றி, சிடுசிடுப்புடன், தனித்திருந்து, கோபத்தில் கத்துவதுடன், எரிச்சலுடனும் காணப்படுவர். அவர்கள் தன்னம்பிக்கை இன்றி காணப்படுவர். அவர்கள் அதிக பணிவாகவும், அதிக கூச்சத்துடனும் மிகவும் எளிமையாகவும் காணப்படுவர்.

பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தில் நாளமில்லா சுரப்பியின் சமமற்ற சுரப்பினால் ஏற்படும் விளைவுகள் வளர்ச்சி ஹார்மோன் குறைவு ஏற்படுதல் குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன் சுரப்பினால், பின் குழந்தைப் பருவத்திலும் பாலின முதிர்ச்சியின் தொடக்க நிலையிலும், தனிநபர் வளர்ச்சி குறைந்து சராசரி அளவை விட குறைந்து காணப்படுவர்.

கோனாடல் ஹார்மோன் குறைவு ஏற்படுதல்

போதுமான அளவுகளில் கோனாடல் ஹார்மோன்கள் சுரக்கப்படாமல், வளர்ச்சி ஹார்மோனும் சரிநிலையில் இல்லை எனில், கால், கைகள் மிக நீளமாக வளர்ந்து, தனி நபர் சராசரி அளவை விட அதிகமாக வளர்ந்து விடுவார். போதுமான அளவில் கோனாடல் ஹார்மோன் இல்லாவிடில் சாதாரண பாலின உறுப்புகளின் வளர்ச்சியும், இணை பாலின பண்புகளும் பாதிப்படைந்து விடும். கோனாடல் ஹார்மோன் சுரப்பின் பாதிப்பால், தனிநபர் குழந்தையை போலவே இருப்பார் அல்லது எதிர் பாலினத்தவரின் பண்புகளைக் கொண்டு இருப்பார். இந்த விளைவுகள் அல்லது மாற்றங்கள், வளர்ச்சி சூழலில் எப்பருவத்தில் தடங்கல் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து நிகழ்கிறது. அதிகப்படியான கோனாடல் ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் விளைவுகள்

பிட்யூட்டரி சுரப்பியின் வேலையில் சீரற்ற தன்மை, மற்றும் கோனாடுகள் அதிகமான அளவில் கோனாடல் ஹார்மோனை உற்பத்தி செய்ய நேரிடும் போது, அதன் விளைவாக மிக சிறிய வயதில், அதாவது 5 அல்லது 6 வயதுகளில், பாலின் முதிர்ச்சி தொடக்க காலம் ஆரம்பமாகும். இதுவே (Precocious puberty or puberty precox) பிஞ்சில் பாலின் முதிர்ச்சியை அடைதல் அல்லது வயதுக்கு மீறிய வளர்ச்சி எனப்படுகிறது. இவ்வாறான குழந்தைகளின் பாலின உறுப்புகள், செயல்பாட்டை ஆரம்பித்து பாலின் முதிர்ச்சியை அடைந்திருந்தாலும், அவர்களது உருவத்தில்

மாறுபாடின்றி, சிறிய உடல் அளவினை உடையவர்களாகவும், இணை பாலினப் பண்புகள் வழக்கமான வயதில் பாலின முதிர்வு அடைபவர்களது உறுப்புகள் போன்று நன்கு உருவாகாமல் இருந்து விடுகிறது.

பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தில் ஏற்படும் இடையூறுகள்

உடல் சார்ந்த இடையூறுகள் பாலின முதிர்ச்சியின் தொடக்க காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல் சார்ந்த இடையூறுகள் என்பது நாளமில்லா சுரப்பிகளின் செயலில் லேசான அல்லது முக்கியமான குறைபாட்டினால் ஏற்படுவது. நாளமில்லா சுரப்பி வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்தி, பாலின முதிர்வின் தொடக்க காலத்தில் பாலின உறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மன இயல்பு சார்ந்த இடையூறுகள்

 1. தன்னைப் பற்றி நம்பிக்கையளிக்காத பொதுவான கருத்துக்கள். அவர்களது நடவடிக்கைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. பிறரிடம் இருந்து தம்மை விலக்கிக் கொண்டு தனியாக இருப்பது அல்லது வலிய சண்டை செய்ய முனைந்தும், தற்காத்துக் கொள்வதுமாக இருப்பார்கள். ஆ. சாதனைப் புரிவதில் பின்தங்கியிருத்தல் - வேகமான உடல் வளர்ச்சியினால், சக்தியின்றி சோர்வுற்று இருப்பர். இந்நிலை தொடரும் போது வேலையில் விருப்பமின்மை மற்றும் எல்லா வித செயல்பாட்டிலும் வெறுப்புடனும், சோர்வு மனப்பான்மை யுடனும் திகழ்வர். பாலின முதிர்ச்சியுறும் தொடக்க காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்வதில் ஆசிரியர்களும், பெற்றோரும் பாலின முதிர்வின் தொடக்க காலம் பற்றிய தேவையான தகவல்களை மாணவர்களுக்கு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தகவல்கள் இல்லாவிடில், இப்பருவ காலத்தில் மாணவர்களுக்கு விபரீதமான அனுபவங்கள் நேர்ந்துவிடும்.
 2. சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலின பங்கை ஏற்றுக் கொள்ளுதல் - பல பருவப் பெண்களுக்கு, அதாவது பழங்காலம் முதல் பெண்ணினத்தின் பாலின் பங்கை, தீவிரமாக குறிப்பிட்ட இடைவெளியுடன் மாதவிடாய் சமயங்களில் நிகழும் அசெளகர்யங்கள், மன இயல்பு சார்ந்தவை. பெண்கள் படுகின்ற துன்பங்களை ஆண்கள் படுவதில்லை.
 3. மகிழ்ச்சிக்கான 3 A க்களாவன : ஏற்றுக் கொள்ளப்படுவது, பாசமுடன் இருப்பது, நினைத்ததை அடைந்து சாதனைப் புரிதல் (Acceptance, Affection, Achievement) ஆகியவை பாலின் முதிர் ஆரம்பகாலத்தில் மீறப்படுவதால், பாலின முதிர்ச்சியின் தொடக்க காலம் என்பது வாழ்க்கை நிலைகளில் மிகவும் துன்பம் வாய்ந்த காலகமாகக் கருதப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது. ஏனெனில் துன்பம் எப்போதுமே சூழ்ந்து இருக்கும்படி பழகிவிடும்.

வளரிளம் பருவ வயது (Adolescent Years)

 • முன்காலத்தில் மக்கள், பாலின முதிர்வின் தொடக்கக் காலத்தையும், வளரிளம் பருவத்தையும் வாழ்க்கை காலத்தில் மாறுபட்ட பண்புகளைக் கொண்ட காலமாகக் கருதவில்லை. ஒரு குழந்தை இனப்பெருக்கம் செய்யும் நிலையை அடையும்போது, முழு வளர்ச்சி அடைந்த நபராக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
 • இன்று 'வளரிளம் பருவம் என்பதற்கு விரிவான பொருள் உண்டு. மனம், மனவெழுச்சி மற்றும் சமூகத்தில் பழகுவதில் முதிர்ச்சியடைந்து இருத்தல் மற்றும் உடல் சார்ந்த முதிர்ச்சியையும் வளரிளம் பருவமானது உள் அடக்கி உள்ளது. ஒரு குழந்தையின் பாலின் முதிர்வின் ஆரம்ப காலம் முதல் தொடங்கி அவை சட்டப்படி முதிர்வடைகின்ற காலம் வளரிளம் பருவமாகக் கருதப்படுகிறது. முன் வளரிளம் பருவமானது 13 முதல் 16, 17 வயது வரை நீடித்திருக்கும். பின் வளரிளம் பருவம் என்பது முன் வளரிளம் பருவம் முடிவுற்ற நிலையில் இருந்து 18 வயது வரை, சட்டப்படி முதிர்வடையும் வயது வரையிலும், முன் வளரிளம் பருவம் என்பது "டீன்கள்” (teens) என்று குறிப்பிடப்படுகிறது. சில நேரங்களில் ''டெரிபிள் டீன்கள்” (Terrible teens) அதாவது கொடுமையான பருவம் என்று குறிப்பிடப் படுகின்றன.

வளரிளம் பருவத்தினரின் சிறப்பியல்புகள்

வளரிளம் பருவம் என்பது மிகவும் முக்கியமான காலமாகும். ஏனெனில் இக்காலத்தில் தான் மனப்பான்மை மற்றும் நடவடிக்கைகளில் உடனடியாக விளைவுகள் ஏற்படுகின்றன. உள் இயல்பு சார்ந்த மற்றும் உடல் இயல்பு சார்ந்த விளைவுகள் இரண்டுக்குமே இக்காலம் மிக முக்கியமானது. அதிவேக உடல் வளர்ச்சியுடன், வேகமான மனவளர்ச்சியையும் வளரிளம் பருவத்தினர் அடைவார்கள். அதனால் மனம் பொருந்துதலில் தேவை ஏற்படலாம். மற்றும் பிற தேவைகள் புதிய மனப்பான்மைகள், மதிப்புகள், விருப்பங்கள் ஆகியவற்றை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது இருக்கும். வளரிளம் பருவம் என்பது இடை மாறுபாட்டு நிலையாகும். எந்த ஒரு இடைமாறுபாட்டு நிலை காலத்திலும், ஒரு தனி நபரின் சமுதாய படிநிலை (status) என்பது தெளிவற்றதாக இருக்கும். மேலும், எதிர்பார்த்தபடி தனிநபர் ஆற்ற வேண்டிய பங்கு பற்றிய குழப்பம் நிலவும். வளரிளம் பருவத்தினர், இந்த நேரத்தில், ஒரு குழந்தையும் அல்ல, முழுமையாக முதிர்வுற்ற நபரும் அல்ல. வளரிளம் பருவத்தினர் குழந்தையை போல நடந்து கொண்டால், அவர்கள் "வயதிற்கேற்றபடி நடந்து கொள்” என்று கூறப்படுகிறார்கள்.

முதிர்ந்த நபரை போல நடந்துக்கொண்டால் ''உன் வயதிற்கு இது அதிகப்படியாகும்" எனக் கூறி குற்றம் சாட்டப்படுகிறார்கள். வளரிளம் பருவம் என்பது மாற்றங்கள் கொண்ட காலம் ஆகும். முன் வளரிளம் பருவத்தின் போது, உடல் சார்ந்த மாற்றங்கள் மிக வேகமாக இருக்கும். மனப்பான்மை மற்றும் நடிவடிக்கைகளிலும் மாற்றங்கள் வேகமாக இருக்கும். பாலின் முதிர்வின் காரணமாக, நிலையற்ற உணர்வுகள் கொண்டு இருப்பார்கள். இதன் காரணமாக பெற்றோராலும், ஆசிரியர் களாலும் தெளிவற்ற தன்மையோடு நடத்தப்படுகிறார்கள். உடல் உறுப்புகளில், விருப்பங்களில், சமூக குழுவின் எதிர்ப்பார்ப்புகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், புதிய பிரச்சனைகளை உருவாக்கும். விருப்பம் மற்றும் நடவடிக்கை களில் வடிவத்தில் மாற்றம் ஏற்படும் போது அவர்களது மதிப்பு நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

வளரிளம் பருவத்தினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் முற்படுவர். வளரிளம் பருவம் என்பது பிரச்சனைக்குரிய வயது. குழந்தைப் பருவம் முழுவதுமாக அவர்களது பிரச்சனைகள், தேவைகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பேற்று செய்தனர். திடீரென வளரிளம் பருவத்தினர் இப்பருவத்தில் தாங்கள் சுதந்திரமானவர்கள் என்று எண்ணம் கொண்டு, தாங்களாகவே அனைத்தையும் செய்ய முற்பட்டு, இறுதியில் செயல் குலையச் செய்து வெறுப்புடன் இருப்பர். வளரிளம் பருவம் என்பது தங்களை அவர்கள் அறிந்து கொள்கின்ற நேரம். உடைகளில், பேச்சில், நடவடிக்கைகளில் வளரிளம் பருவத்தினர் அவர்கள் உடன் இருக்கும் சக வயதினர் போன்று தோன்ற வேண்டும் என்று எண்ணுவார்கள். அதனால் அவர்கள் சமூகத்தில் தங்கள் நிலையை காட்டுவதற்கு, சின்னமாக ஆடைகள், வாகனங்கள் மற்றும் பிறர் பார்க்கக் கூடிய மற்ற பொருள்களை உடைமையாகப் பயன்படுத்துவர். வளரிளம் பருவம் என்பது போலித் தன்மை வாய்ந்த மாயமான காலம் ஆகும். வளரிளம் பருவத்தினருக்கு போலித்தன்மை வாய்ந்த பெரிய ஆர்வங்கள், விருப்பங்கள், குறிகோள்கள் அவர்களுக்காக மட்டுமன்றி, அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என அனைவருக்குமாக கொண்டிருப்பர். தங்கள் மனதில் நினைக்கப் பெற்ற எண்ணங்கள், குறிக்கோள்கள் ஈடேறவில்லை எனில் அல்லது அவர்களது குறிக்கோள்களுக்கு பிறர் தடையாக இருந்து முன்னேற விடாமல் செய்துவிட்டனர் என்று நினைக்கும்போது, வளரிளம் பருவத்தினர் அதிகமாகக் கோபத்துடன் நம்பிக்கைக் குலைந்து, மனக்கசப்புடன் காணப்படுவர். வளரிளம் பருவம் என்பது முதிர்வடைந்தவர்களுக்கான நுழைவு வாயில் ஆகும். வளரிளம் பருவத்தினர், தாங்கள் முதிர்ச்சியுற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க, தங்கள் ஆடைகள் மற்றும் நடவடிக்கைகளை முதிர்ந்தவர் களுடையதை போல கடைப்பிடிப்பர். முதிர்ச்சியடைந்தவர் களின் சமூக நிலை நடவடிக்கையுடன் சம்பந்தமுடைய பழக்கங்களான, புகைபிடித்தல், மது அருந்துதல், போதை ஏற்படுத்தும் மருந்துகளை பயன்படுத்துதல், பாலின செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை வளரிளம் பருவத்தினர் செய்வார்கள்.

வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், வெளி உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

 • உயரம் :- ஒரு சராசரி பெண் அதிக உயரத்தை 17 முதல் 18 வயதில் அடைகிறாள். ஒரு சராசரி ஆண் ஒரு வருடமோ அதற்கு பிறகோ அடைகிறான். குழந்தைப் பருவத்தில் நோய் தடுப்பு ஊசிபோட பட்ட ஆண்களும், பெண்களும் வழக்கமாக உயரம் அதிகமானவர்களாக, வயதிற்கேற்றவாறு இருப்பார்கள். நோய் தடுப்பூசி போடப்படாதவர்கள், நோயால் தாக்குண்டு, வளர்ச்சியில் தடை ஏற்பட்டு இருப்பார்கள்.
 • எடை :- உயர மாற்றங்களுக்கு ஒத்த அட்டவணை படி எடை மாற்றங்கள் ஏற்படும் போது, எடையானது உடலின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கூடியிருக்கும்.
 • உடல் கூறு விகிதங்கள் :- உடலின் பல்வேறு பகுதிகள் சீராகி பொருத்தமான பரிமாணத்தை (proportion) அடையும். உதாரணம். உடல் அகலமாகி நீளமாகும். மேலும், கை கால்கள் மிக நீளமாக இனியும் தோன்றாது.
 • பாலின உறுப்புகள் :- ஆண், பெண் என இரு பாலருடைய பாலின உறுப்புகளும், அளவில் முழு முதிர்வடைந்த நிலையை பின்வளரிளம் பருவத்தில் அடைகிறது. ஆனால், அவற்றின் வேலைகள் நடைபெறுவதற்கான முதிர்வை அடைவதற்கு சில வருடங்கள் ஆகும்.

இணை பாலினப் பண்புகள்

முக்கிய இணை பாலினப் பண்புகள் வளர்ந்து முதிர்வுற்ற நிலையில், பின் வளரிளம் பருவத்தில் ஏற்படும். வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் (உள்ளுறுப்புகளில் நிகழும் மாற்றங்கள்) ஜீரண மண்டலம் இரைப்பை நீளமானதாகவும், சிறு குழாய் போல காணப்படும். குடல்கள் நீளத்திலும், சுற்றளவிலும் வளரும். இரைப்பையிலும் குடல் சுவர்களிலும் உள்ள தசைகள் தடிமனாகவும், உறுதியானதாகவும் ஆகிறது. கல்லீரல் எடை கூடியிருக்கும். உணவுப் பாதை சற்று நீண்டு இருக்கும். இரத்த ஓட்ட மண்டலம்

இருதயம் மிக வேகமாக வளரிளம் பருவத்தில் வளரும். 17 அல்லது 18 வயது அடையும்போது, இருதயம் பிறந்த போது இருந்த எடையை விட 12 மடங்கு அதிகரித்து இருக்கும். இருதயத்தின் இரத்த குழாய்களின் சுவர்கள் அதிக நீளமானதாகவும், தடித்தும் இருக்கும். மேலும் முதிர்வுற்ற நிலையை இருதயம் அடையும் போது இரத்தக் குழாய்களும் முதிர்வடைகின்றன.

சுவாச மண்டலம்

பெண்களின் நுரையீரல் முழு கொள்ளளவை முதிர்ந்த நிலையான 17 வயதில் அடைகிறது. ஆனால் ஆண்கள் நுரையீரல் முழு கொள்ளளவு நிலையை பெண்களை விட சில வருடங்கள் கழித்து அடைகின்றன.

நாளமில்லா சுரப்பிகள்

பாலின முதிர்வின் தொடக்க காலத்தில் கோனாடுகளின் அதிகமான செயல்பாட்டால் முன் வளரிளம் பருவத்தில் நாளமில்லா சுரப்பியில் தற்காலிக சமநிலையின்மை ஏற்படும். பாலின சுரப்பிகள் முழு முதிர்வை பின் வளரிளப்பருவம் அல்லது முன் முதிர்வு பருவம் வரை அடையாமல் இருந்தாலும், பாலின சுரப்பிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து, செயல்படத் தொடங்கிவிடும். உடல் திசுக்கள் உடலில் எலும்புக்கூடு வளர்ச்சி சராசரி வயதான 18 வயதில், நின்று விடும். எலும்புகள் முதிர்ந்து அதன் அளவினை அடைந்த பிறகு, எலும்பைத் தவிர பிற திசுக்கள் தொடர்ந்து வளரும். இது முக்கியமாக தசை திசுவில் புலப்படுகிறது.

வளரிளம் பருவத்தில் ஏற்படும் மனவெழுச்சிகள்

வளரிளம் பருவம் என்பது "சூறாவளி மற்றும் அழுத்தம்" நிறைந்த காலமாக, வழிவழியாக மரபு சார்புடையதாக கருதப்படுகிறது. "சூறாவளி மற்றும் அழுத்தம்" உடலியல் மற்றும் சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அதிகப்படியான மனவெழுச்சி, வலி இயக்க ஆற்றல் உண்டாகிறது. கோப வெறி எழுச்சிக்கு மாறாக வளரிளம் பருவத்தினர், அவர்களது கோப மன நிலைமையை முகத்தைத் தொங்கவிட்டு, பேசாதிருந்து சிடுசிடுப்புடன், அவர்களது கோபத்திற்கு காரணமானவர்களை குறைக் கூறிக் கொண்டும் இருப்பார்கள். மற்றவர் மீது பொறாமைப்படுவர். வளரிளம் பருவத்தினரின் உணர்வுகளை மாற்றுவதற்கு எதிர்பாலினத்தை சேர்ந்தவர்களோடு பொருந்திக் கொள்ளவும், அவர்களது சொந்த பிரச்சனைகளை முடிவுறச் செய்வதற்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உதவ வேண்டும். வளரிளம் பருவத்தினர் அதிக நேரத்தை அவர்களது நண்பர்களோடு செலவிடுவதால், வளரிளம் பருவத்தினரின் மனப்பான்மை, பேச்சு, விருப்பங்கள், தோற்றம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருப்பதும் புரிகிறது.

பாடத்திட்டத்திற்கு மிகைப்படி செயல்பாடுகளான விளையாட்டு, பயணம், புத்தகம் படித்தல், படக்காட்சி, வானொலி, தொலைக்காட்சி போன்றவைகளில் வளரிளம் பருவத்தினர் அதிக விருப்பமுடன் கவனம் செலுத்துவார்கள். சில சமூக நடப்புகளான விருந்து, மது அருந்துவது, புகைத்தல், பிறருக்கு உதவுதல் மற்றும் உலக நடப்புகளில் வளரிளம் பருவத்தினர் விருப்பம் கொண்டுள்ளனர்.

பாலியல் செயல்பாடுகளிலும், தொடர்புகளிலும் விருப்பம் இப்பருவத்தில் வளர்கிறது. ஆகவே, பாலியல் கல்வி வளரிளம் பருவத்தில் மிக முக்கியமானது. இக்கல்வியை குடும்ப நபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அளிக்கலாம்.

வளரிளம் பருவத்தில் குடும்ப நபர்களுடன் உள்ள உறவுகள் மிக சாதாரணமாக 'தலைமுறை இடைவெளி அல்லது இடைமுறிவு' (Generation Gap) என்பது வளரிளம் பருவத்தினருக்கும், அவர்களது பெற்றோர்க்கும் இடையே உள்ள இடைவெளியை குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகும். இந்த இடைமுறிவு என்பது வேகமாக மாறக் கூடிய கலாச்சாரங்களில் சாதாரணமான நடவடிக்கைகளின் மதிப்பு மற்றும் தரங்களில் ஏற்படும் முழுமையான மாற்றத்தின் விளைவாக ஏற்படும் ஒரு பகுதியானதே ஆகும். மேலும் தற்போது பல இளம் வயதினர் கல்வியில், சமூகத்தில் கலாச்சாரத்தில் அவர்களது பெற்றோர் வளரிளம் பருவத்தில் பெற்ற வாய்ப்புகளை விட அதிகமான வாய்ப்புகள் பெற்றுள்ளதை கண்கூடாக காண்கிறோம். இது மிக சரியாக 'கலாச்சார இடைமுறிவு' என்பதால் மட்டுமின்றி முழுவதுமாக காலவரிசை பட்டியலின் வயது படி உள்ள வேறுபாடுகள் ஆகும்.

வளரிளம் பருவம் முன்னேற்றம் அடையும் போது கற்பனையான உறவுமுறைகள் என்பது மிகவும் விரும்பத்தக்க, இனிமையான, பாசமிகுந்த உறவுமுறையால் மாற்றியமைக்கப் படுகிறது.

பொதுவாக குடும்பத்தில் ஏற்படுகின்ற உண்மை இல்லாத நடவடிக்கை எதுவெனில், நடவடிக்கைகளின் தரம், ஒழுங்கு முறைகள், உடன் பிறந்தோருடன் உள்ள உறவுகள், மிகுந்த குறுகலான மனப்பான்மை, சமூக பொருளாதார நிலையின் வேறுபாட்டால் மன உணர்ச்சிக்கு பலியாதல் போன்றவை ஆகும்.

வளரிளம் பருவத்தினர் 'விரும்பத்தகுந்த ஆளுமை' யை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் நண்பர்கள் குழு மற்றும் பாலினர் விரும்புகின்ற வகையில் நடந்து கொள்வர். வளரிளம் பருவத்தினர் அவர்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளை எவ்வாறு வெற்றிகரமாக ஆக்கிக் கொள்வது என்பது கீழ் வருவனவற்றை சார்ந்து அமைகிறது.

பிறர் பின்பற்றத்தக்க செயற்கையல்லாத மதிப்புமிக்க பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல். வளரிளம் பருவத்தினரின் வலிமை மற்றும் வலிமை யின்மைகளைப் பற்றி உண்மையான மதிப்பீடு செய்து கொள்ளுதல். அவர்கள் சாதனைகளைப் பற்றி நியாயமான திருப்தி அடைந்திருத்தல் மற்றும் ஆர்வமிகுதியால், அவர்களது திறனில் ஒரு குறிப்பிட்ட குறைபாடு உள்ளதாக மனதில் நினைத்து, முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்.

வளரிளம் பருவத்தினர், முதிர்வுறும் பருவத்திற்கு கடந்து செல்கையில் ஏற்படும் பொதுவான தடங்கல்கள் மோசமான அடித்தளம் குழந்தை பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனில், வளரிளம் பருவத்தில் வளர்ச்சிக்கு வகுத்தமைக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த கோட்பாடுகள் படி நடந்து கொள்வது கடினமாகி விடும். குழந்தைப் பருவத்தில் வளர்ச்சிக்கு வகுத்தமைக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த கோட்பாடுகள் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருந்தால் வளரிளம் பருவத்தில் அனைத்து நிலையிலும் விரும்பத்தக்க வளர்ச்சியை அடைவார்கள் என்று 'ஈன்ஸ்பெர்க்' என்பவர் விவரித்துள்ளார். தாமதமாக முதிர்வடைதல்

முதிர்வுறுதல் தாமதமாகும் போது வளரிளம் பருவத்தின் வளர்ச்சிக்கு வகுத்தமைக்கப்பட்டவைகளை நிறைவு செய்வதற்கான காலமும் குறைகிறது. முன்பாக முதிர்வுறுபவர் என்பவர்கள் சராசரி வயதில் முதிர்வுறுபவர் ஆவர். தாமதமாக முதிர்வடைபவர்கள், முதிர்வுறுதலின் தொடக்க கால மாற்றங்களை நிறைவு செய்து, வளரிளம் பருவத்தையும் நிறைவு செய்யும் நிலையில் இருப்பவர்கள் ஆவர்.

நீண்ட காலத்திற்கு குழந்தையாகவே நடத்தப்படுதல்

வளரிளம் பருவத்தில், மிகவும் தாமதமான முதிர்வுறுதலால், அவர்களை ஒத்த வயதுடையவர்கள் முதிர்ச்சி அடைந்தவர் போல நடத்தப்படும் போது, தாமதமாக முதிர்வடைந்தவர்கள் குழந்தையைப் போல நடத்தப்படுவார்கள். அதன் விளைவாக முதிர்ச்சி அடைந்த வயதிலும் அவர்களது உரிமையை அடைவதில், தனிச்சிறப்புரிமை பெறுவது மற்றும் அவர்களது பொறுப்புகள் போன்றவற்றில் தங்களுக்கு போதுமான திறமை இல்லை என்ற உணர்வு அவர்களிடம் உருவாகி விடுகிறது.

நீண்ட காலத்திற்கு பிறரை சார்ந்து இருத்தல்

இந்த நிலையானது, வளரிளம் பருவத்தினர் முன் முதிர்ச்சியுறும் பருவம் வரை கல்வியைத் தொடர்வதால், பிறரை சார்ந்து இருப்பது, வளரிளம் பருவத்திலிருந்து முதிர்ச்சியுறும் பருவத்திற்கு கடந்து செல்லும்போது ஒரு தடங்கலாக இருக்கும். ஏனெனில், ஆண்களை விட பெண்களின் குழுவானது அதிக காலத்திற்கு பிறரை சார்ந்த நிலையில் கட்டாயமாக இருக்க வேண்டியுள்ளதால், அவர்கள் முதிர்ச்சி பருவத்தை அடைய வளரிளம் பருவத்தைக் கடந்து செல்ல, பிறரைச் சார்ந்திருப்பது ஒரு தடங்கலாக உள்ளது. 4. 3. நடுவயது அல்லது முதிர்வயது பருவம் (Adulthood)

ஒரு குழந்தையானது, முதிர் வயது பருவ நிலை அல்லது சட்டப்படியாக முதிர் வயதை அடைவதற்கான வயது பல கலாச்சாரங்களில் மாறுபட்டு இருக்கும்.

பொதுவாக, குழந்தைகள், பாலின் முதிர்வுறுதல் காலத்தின் வளர்ச்சி முடிவடைந்த பிறகும், அவர்களது பாலின உறுப்புகள் உருவாகி, இனப்பெருக்கம் செய்யும் நிலையை அடையும் சமயத்தில், முதிர் வயது பருவ நிலையை அடைவார்கள். 4.3.1. முதிர் வயது பருவத்தின் உட்பிரிவுகள் முன் முதிர்வயது பருவம்

இந்த நிலை 18 முதல் ஏறத்தாழ 40 வயது வரை நீடிக்கும். இந்த நிலையில் உடலிலும், மன இயல்பிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களுடன் இனப்பெருக்கம் செய்கின்ற தன்மையை இழக்கும் ஆரம்ப நிலையும் தோன்றும். நடு முதிர் வயது பருவம் (நடுவயது)

நடு முதிர்வயது பருவம் அல்லது நடுவயது என்பது 40 வயதில் ஆரம்பித்து 60 வயது வரை நீடிக்கும். ஒரு சராசரி மனிதரிடத்திலும், உடல் மற்றும் மன இயல்பு சார்ந்தவைகள் தளர்வடைந்து இருப்பது வெளிப்படையாக தெரியும்.

வளரிளம் பருவத்தினர் பள்ளிப் படிப்பிற்கு பின் அல்லது பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு, வேலைக்குச் செல்ல நேரிடும் போது கடுமையான விளைவு தரும் பங்கு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுவர். ஒத்த வயதுடையவர்கள் கல்வியை தொடர்ந்து கொண்டு இருக்கையில், தாங்களை முன்பாகவே, முதிர்ச்சியடைந்தவர்களின் பங்கினை ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் முதிர்ச்சி அடையும் பருவத்திற்கு மெதுவாக கடந்து செல்லும் சந்தர்ப்பத்தையும் இழக்க நேரிடுகிறது.

பின் முதிர்வயது பருவம் (முதுமைப் பருவம்)

பின் முதிர்வயது பருவம் - முதுமைக் கூர்வு (senescence) அல்லது முதுமைப் பருவம் 60 வயதில் ஆரம்பித்து, இறப்பு வரை நீடிக்கும். உடல் மற்றும் மன இயல்பு சார்ந்த தளர்வுகள் இப்பருவத்தில் மிக வேகமாக இருக்கும். நவீன மருத்துவ நுட்பங்கள் உடல் பராமரிப்பு மற்றும் ஆடைகள் முதலானவை அநேக ஆண் மற்றும் பெண்களை இளமையில் இருந்தததை போல தோன்ற, செயல்பட, மற்றும் நினைக்கச் செய்கிறது.

முன் முதிர் வயது பருவத்தின் சிறப்பியல்புகள்

வாழ்க்கையின் புதிய பாங்கமைவுகள் மற்றும் புதிய சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி பொருந்திக் கொள்ளும் காலமே முன் முதிர் வயது பருவமாகும். இளம் முதிர்வயதில் உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் மற்றும் குடும்பத்திற்கு உழைக்கும் தலைவராக பங்கு எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் புதிய மனப்பான்மைகள், விருப்பங்கள் மற்றும் மதிப்புகளை வளர்த்துக்கொண்டு புதிய பங்கினை முனைப்போடு செயல்படுத்த வேண்டும். சில சிறப்பான பண்புகள் ஆவன.

முன் முதிர் வயது என்பது ''நிலையான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் வயது”.

இப்பருவத்தில் இளம் வயது ஆண், பெண் பல்வேறு வாழ்க்கை பாங்கமைவை, வேலை மற்றும் பல்வேறு நபர்களுடன் தொடர்புகொண்டு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பார்கள். தனிநபர்களின் வாழ்க்கை பாங்கமைவை தீர்மானம் செய்துவிட்டால் மனதில் தங்கள் தேவைகளை பின்னால் வரும் காலத்திற்கான சிறப்பியல்பு வாய்ந்த பண்புகளான பாங்கமைவை நடவடிக்கையில் மனப்பான்மை யில் மற்றும் மதிப்புகளில் உருவாக்குவார்கள். முன் முதிர் வயது பருவம் என்பது "இனப்பெருக்கம் செய்யும் வயது.” பல இளமுன் முதிர் வயதினருக்கு பெற்றோராவது என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கருதப்படுகிறது.

முன் முதிர் வயது பருவம் என்பது "சிக்கல் வாய்ந்த வயது.”

இள முதிர் வயதினர் வேலை செய்கின்ற இடங்களில், வாழ்க்கைத் துணையுடன், அதிக நட்பு வட்டம் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் விட்டுக் கொடுத்து, ஒத்துப் போய், பொருந்திக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகம் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதும் கடினமானதாக இருக்கும். முன் முதிர் வயது பருவம் என்பது "மனவெழுச்சிகளினால் மனஇறுக்கம் ஏற்படும் காலம்”. முன் முதிர்வயதினர் அதிகமாக கவலைப்படுவதால் மனவெழுச்சிகளால் மன இறுக்கம் உண்டாகும். பணி செய்யும் இடத்தில் ஏற்படும் வேலை பளு, வீட்டில் பணிசுமை, மற்றும் சமூக வட்டத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்போது ஏற்படும் வெற்றி, தோல்விகளைப் பொறுத்தும் மனவெழுச்சிகளினால் உண்டாகும் மன இறுக்கம் ஏற்படுகிறது. முன் முதிர் வயது பருவம் என்பது "சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் காலம்" ஆகும் முறையான கல்வி கற்ற பிறகு, முதிர் வயதினரின் வாழ்க்கை பாங்கமைவை பின்பற்றி, வேலை, திருமணம் ஆகியவற்றில் நுழைந்த பிறகு, சக வயதினருடன் இருந்த நட்பு உறவு மெதுவாக குறைந்து விடுகிறது. இதன் காரணமாக முன் முதிர்வயதினர் 'சமூகத்தில் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.? முன் முதிர் வயதுப் பருவம் என்பது "பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டிய நேரம்” ஆகும். இள முதிர் வயதினர் மாணவர் மற்றும் சார்ந்திருக்கும் நிலையினில் (வளரிளம் பருவத்தினரின் பண்புகள்) இருந்து சுதந்திரமான முதிர்வயது பருவத்தினராக மாற்றம் அடைவர். இள முதிர் வயதினர் புதிய வாழ்க்கை பாங்கமைவு, புதிய பொறுப்புகள், மற்றும் தங்களுக்கெனவும், வாழ்க்கைத் துணைக்காகவும் பொறுப்புகளை வகுத்து மேற்கொண்டு கடமையை நிலைநாட்டுவர்.

இளமுதிர்வயதினரின் அதிக கல்வித் தகுதி நிலை, நல்ல திடமான ஆரோக்கிய நிலை, வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப நபர்களின் வழிகாட்டுதல்கள், உயர்ந்த குறிக்கோள் மற்றும் மெய்மையான குறிக்கோள்கள், கனிவுடன் தோல்வி மற்றும் வெற்றியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், பிறருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறன் மற்றும் விருப்பம், பிறரிடம் மரியாதை மற்றும் ஆர்வத்தோடு செல்வாக்கான சமூக காரியங்களில் பங்கு பெறுதல் முதலானவைகள், வெற்றிகரமான பொருளாதார மற்றும் சமூக நிலையினை அடைவதற்கான ஏணிப்படிகள் ஆகும்.

மோசமான ஆரோக்கியம் அல்லது உடல் சார்ந்த குறைபாடு போன்றவை. தனிப்பட்ட மற்றும் சமூக பொருந்துதல்களில் இடையூறுகளை ஏற்படுத்தும். ஆனால் இடையூறுகளை குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் முறியடித்து முன்னேற முடியும்.

இளம் முதிர் வயதினர்களுக்கு பொருந்துதல் மிக அதிக அளவில் தேவைப்படுகிறது. மிக முக்கியமானதாக - திருமணம், பெற்றோராதல், மற்றும் விரிவான குடும்ப அமைப்பு ஆகியவற்றில் பொருந்துதல் மிக அவசியமாக விளங்குகிறது.

தனிமைப் பருவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் திருமணமின்றி இருப்பது பற்றி பெண்களின் மன உணர்ச்சிகள் மற்றும் தனிமையில் இருப்பதற்காக பொருந்துதலில் பெண்கள் ஆண்களிடம் இருந்து மாறுபடுகின்றனர். தனியாக இருக்கும் பெண்களை விட ஆண்களுக்கு மன அழுத்தம் குறைவு.

இளம் முதிர் பருவ வயதினர் தனியாக திருமணமின்றி இருப்பதன் காரணங்கள்

கவர்ச்சியின்றி அல்லது உரிய பால் பொருத்தமின்றி தோன்றுதல் செயலாற்றலைத் தடுக்கும் உடல் குறைபாடு அல்லது நீண்ட கால நோயால் தாக்கப்பட்டு இருப்பது.

துணையை தேடுவதில் தோல்வி அடைதல். திருமணம் மற்றும் பெற்றோர் நிலை அடைவதால் ஏற்படும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில் விருப்பமின்மை. நீண்ட நேரத்திற்கும், கால நேரமின்றி உழைக்கும் பணி அல்லது அதிகமான பயணம் மேற்கொள்ளும் பணியை விரும்பி ஏற்றுக் கொள்வது. பால் விகிதத்தில் சமமின்மை உள்ள சமூகத்தில் குடியிருப்பது. எதிர்பாலினத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமை. வயதான பெற்றோர் அல்லது வயதில் குறைந்த உடன் பிறந்தோரை பராமரிக்க வேண்டிய பொறுப்பு. மகிழ்ச்சியற்ற முந்தைய குடும்ப வாழ்வின் அனுபவங்கள் அல்லது நண்பர்களின் சோகம் நிறைந்த திருமண வாழ்வின் அனுபவங்களின் விளைவால் ஏற்படும் பொதுவான நம்பிக்கையின் காரணமாக. திருமணம் இல்லாமல் பாலினத் தொடர்புகள் கிடைப்பதால். பரபரப்பான வாழ்க்கை நிலை. தொழிலில் முன்னேற்றம் அடைய கிடைத்த வாய்ப்பினால். வேலை மற்றும் வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்துக் கொள்ள சோதனை செய்வதற்கான சுதந்திரம். சுலபமாக சமூகத்தில் உயர்வதற்கு திருமணமின்றி, ஒற்றையாக இருப்பது உகந்தது என்ற எண்ணம். உறுதியான மற்றும் திருப்திகரமான நட்புறவை ஒரே பாலினத்தைச் சேர்ந்த நபர்களுடன் கொண்டு இருக்கும்போது தன்னொத்த பாலினத்தவருடன் பாலின உறவு கொள்ளுதல்

விவாகரத்து

விவாகரத்து என்பது திருமணத்தில் ஏற்படும் மோசமான பொருந்துதலினாலும், பிரச்சனை உச்சநிலையை அடைவதால், கணவன் மனைவி இருவராலும் பிரச்சனைக்கு திருப்திகரமான விடை பெற முடியாத நிலையில் ஏற்படுகிறது. பல மகிழ்ச்சியற்ற திருமணங்கள் மதச்சார்பு, நெறிமுறை, பொருளாதாரம் அல்லது வேறு பல காரணங்களால், விவாகரத்தில் முடிவு பெறுவதில்லை . மேலும், பல திருமணங்களில் இருவரும் பிரிந்து விடுவதால் முறிகிறது. சட்டப்படி அல்லது சம்பிரதாயப்படி இல்லாமல், கைவிடுதலாலும் பல திருமணங்கள் முறிவு பெறுகின்றன.

விவாகரத்தால் ஏற்படும் அதிர்ச்சியான விளைவு என்பது வழக்கமாக இறப்பினால் ஏற்படும் அதிர்ச்சியை விட அதிகம் ஆகும். விவாகரத்திற்கு பிறகு ஏற்படும் கசப்பான சம்பவங்கள் மற்றும் மனவெழுச்சியின் இறுக்கமே அதிர்ச்சிக்கான காரணம். மேலும், விவாகரத்து ஆனவர்கள் மீது ஏற்படும் சமூகத்தின் மனப்பான்மையும், அதிர்ச்சி ஏற்பட காரணமாக விளங்குகிறது. விவாகரத்து குழந்தைகளிடம் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதிர்பருவ வயதில் பொருந்திக் கொள்வதினால் ஏற்படும் வெற்றியை 3 அடிப்படை அளவைகளைக் கொண்டு அளவிடலாம்சாதனை, திருப்தி அடைதல் மற்றும் தனிப்பட்ட வகையில் பொருந்திக் கொள்ளுதல். முதிர் வயது பருவத்தினர் வழக்கமாக பின் முப்பதுகளில் பணி மற்றும் குடும்ப வாழ்வு ஆகியவைகளில் உச்சநிலையில் இருப்பர். முதிர் வயதினர், அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் பொருந்திக் கொள்வதில் எந்த அளவு வெற்றி அடைகிறார்களோ, அதுவே அவர்கள் எந்த அளவு திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை தீர்மானிக்கும்.

நடு வயது - பின் முதிர்வயதுப் பருவம் (Middle Age)

இப்பருவம் பொதுவாக 40 முதல் 60 வயது வரை நீடித்திருக்கும் என்று கருதப்படுகிறது. இப்பருவத்தின் ஆரம்ப காலத்தில் உடல் மற்றும் மனநிலையில் முதிர்ச்சி அடைந்து விட்டதை புரிந்து கொள்ளலாம். சில மிக முக்கிய பண்புகளாவன.

சிறப்புப் பண்புகள்

நடுவயது பருவம் என்பது பேரச்சம் வாய்ந்த பருவம் ஆகும். முதுமை பருவத்திற்கு அடுத்தபடியாக நடுவயது பருவமே, வாழ்க்கை வளர்ச்சி நிலையில் பேரச்சம் வாய்ந்த பருவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பின் முதிர் வயதினர், அவர்கள் நடுவயதை அடைந்துவிட்டதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால், காலண்டர் மற்றும் நிலைக்கண்ணாடிகள் அவர்களை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறது. மனநிலை மற்றும் உடல் தளர்வுகள், இனவிருத்தி செய்யும் திறன் இழப்பு, சுதந்திரம் மற்றும் பொருளாதார வரைமுறையில் கட்டுப்பாடு போன்ற காரணங்களினால் பின் முதிர்வயது பேரச்சம் வாய்ந்த பருவமாக அமைகிறது.

நடுவயது பருவம் என்பது இடைமாறுபாட்டு நிலைக்கான காலமாகும்.

இடைமாறுபாட்டு நிலை என்பதை எப்பொழுதும் புதிய விருப்பங்கள், மதிப்புகள், ஒழுங்கான நடவடிக்கையின் பாங்கமைவு, உடல் சார்ந்த மாற்றங்கள், பங்கு மாற்றங்கள் போன்றவற்றில் பொருந்திக் கொள்வதை குறிக்கும். மிக முக்கியமான பொருந்துதல் என்பது வாழ்க்கை துணை இழப்பில் ஏற்படுவதே ஆகும் என்றாலும் வயோதிக பெற்றோர்களால் ஏற்படும் பிரச்சனைகளில் பொருந்துதலும் எப்போதும் இருக்கும்.

நடுவயதுப் பருவம் என்பது அழுத்தம் நிறைந்த காலமாகும் பணியிடத்தில், வீட்டில், சமூகவாழ்வில் பொருந்துதல்களின் போது, அழுத்தம் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழல் நிற்கும் பருவத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது.

நடுவயது என்பது சாதனை புரியும் காலமாகும்

நடு வயது என்பது பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் ஏற்படும் வெற்றிக்கான காலமாக மட்டும் இருக்காமல், சட்டப் படியான உரிமையை நிலைநாட்டவும், செல்வாக்கை பெருக்குவதில் வெற்றியை ஏற்படுத்தும் காலமாகவும் இருக்க வேண்டும். வழக்கமாக நடுவயதினர் வெற்றியின் உச்சநிலையை அடைந்தபின், கடின உழைப்பால் கிடைக்கப் பெற்ற பயன்களை அனுபவித்துக் கொண்டு ஓய்வெடுப்பார்கள்.

நடுவயது என்பது சுயமதிப்பீடு செய்வதற்கான காலம்

தங்கள் சாதனைகள், நிறைவேற்றியவைகள், பணம், சமூக அந்தஸ்து, குடும்ப அளவு, முந்தைய ஆர்வங்கள், வருங்கால வாழ்க்கைக்கான திட்டங்கள் முதலானவைகளில் தங்களைப் பற்றி சுயமதிப்பீடு செய்வார்கள்.

நடு வயது என்பது கூட்டில் ஒன்றுமில்லாது வெறுமையாக இருக்கும் காலம் ஆகும். இப்பருவத்தில் குழந்தைகள் பெற்றோரின் கீழ் நீடித்து வாழ விரும்ப மாட்டார்கள். இப்பருவம் மிகுந்த அதிர்ச்சியை, ஆண்களை விட பெண்களுக்கு ஏற்படுத்தும். வேலை மற்றும் பிற செயல்பாடுகள் இல்லாமல் இருக்க நேரிடும் போது முக்கியமாக இப்பருவத்தில் சோர்வு ஏற்படும்.

உடல் சார்ந்த மாற்றங்களுக்கு பொருந்துதல்

வயதான ஆண், பெண் ஆகியோர் தங்கள் தோற்றத்தை மாற்றி அமைப்பதில் செய்யும் பொருந்துதல் மிக கடினமான ஒன்றாகும். அவர்களது உடல் போதுமான அளவிற்கு முன்பு போல வேலை செய்வதில்லை என்பதையும், பல முக்கிய பகுதிகள் சோர்வுற்று செயலிழக்கவும் நேரிடலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் திறன் முடிவுக்கு வருவதுடன், பாலின உணர்ச்சி, விருப்பம், பாலின கவர்ச்சியையும் இழக்க வேண்டியது ஏற்படும்.

பெண்களின் அனுபவத்தில் மாதவிடாய் சுழல் திடீரென நின்று போகும் நிலையை அடையலாம். அநேகமான பெண்களுக்கு மாதவிடாய் சுழல் நின்று போகும் சமயத்தில் எடை அதிகரித்து விடும். முக்கியமாக கீழ் வயிற்றுப் பகுதியிலும், இடுப்பிலும் பெருத்து காணப்படுவர். ஆளுமையிலும் மாற்றம் ஏற்பட்டு, மனச்சோர்வுடன், எதிர்ப்புணர்ச்சி கொண்டு இருப்பர். ஆண்களின் நிலைமையில், கோனோடல் செயல்பாடுகளில் சீரான குறைபாடு ஏற்பட்டு பாலின உறவு விருப்பத்திலும், பாலின உறுப்புகளின் செயல்பாடுகளிலும் குறை ஏற்படும்.

சமூக உறவுகளில் மற்றும் பொருந்துதலில் நடுவயதினர் நல்ல நிலையில் இருப்பது மிக முக்கியமானது. அநேக நடுவயதினர் பின்பற்றும் அசைந்தாடும் நாற்காலி (சாய்வு நாற்காலி) தத்துவத்தை (rocking chair philosophy) கைவிட்டு விட வேண்டும். செயல்பாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருக்காமலும், தினப்படி செய்யும் வேலைகள் மற்றும் விருப்பங்களை விட்டுவிட வேண்டும் என்றும் நினைக்கக் கூடாது. தவிர, நடுவயதினர் திறன்களை வளர்த்துக் கொண்டு, ஏதாவது பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, குடும்பத்தில் பேரக்குழந்தைகளை கவனித்தல் மற்றும் அனுபவப் படிப்பினைகளைக் கொண்டு குடும்ப நபர்களுக்கு உறுதுணையாக இருந்து குடும்பப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு செயல்புரிய வேண்டும்.

திருமணமாகாத பெண்களுக்கு, ஆண்களை விட அதிகமான ஆபத்துக்கள் பொருந்துதலில் ஏற்படுகின்றன. வாழ்க்கைத் துணையை இழந்து வருந்தும் நடுவயது பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொருந்துதலில் பிரச்சனைகள் ஏற்படும். இப்பிரச்சனை வாழ்க்கை பாங்கமைவில் குறைபாட்டை ஏற்படுத்தி பாதிப்படைய செய்யும்.

நடு வயதினர் வரப்போகும் முதுமை மற்றும் பணி ஓய்வு பெறுதலுக்கு ஏற்ப தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். நடுவயதில் ஆண்களும், பெண்களும், பொருந்தி வெற்றி பெற்றுள்ளதை அவர்களது சாதனைகள், மனவெழுச்சிகளின் நிலை, உடல் சார்ந்த மற்றும் மன இயல்பு சார்ந்த மாற்றங்களின் விளைவுகள் அல்லது ஆளுமை மற்றும் எந்த அளவிற்கு திருப்தியடைந்து மகிழ்ச்சியில் உள்ளனர் போன்ற நடுவயதினரின் அனுபவங்களைக் கொண்டு நிர்ணயிக்கலாம்.

முதுமைப் பருவம் (Old Age)

வாழ்க்கையின் வளர்ச்சி நிலையை நிறைவு செய்யும் காலம் முதுமைப் பருவமாகும். 60 வயதை வழக்கமாக நடுவயது மற்றும் முதுமைப்பருவத்தை பிரிக்கும் கோடாக கருதுவார்கள். காலக்கணிப்பு முறைப்படி கணிக்கப்பட்டது ஒரு மோசமான அளவைக் கட்டளையாக முதுமையின் ஆரம்ப காலத்தை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், ஆரம்ப காலத்தை குறிப்பிட ஒத்த வயதுடைய தனி நபர்களுக்கு இடையே குறிப்பிட்ட வேறுபாடு இருப்பது, சரியான முதுமைப் பருவம் ஆரம்பம் ஆகிறது என்பதை கூறும். மேன்மையடைந்த வாழ்க்கை நிலைமைகளான உடல் ஆரோக்யம் பராமரிப்பின் காரணத்தால் அநேக ஆண்கள் மற்றும் பெண்கள் இன்றைய நிலையில் மனம் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த வயோதிக பருவத்தின் அறிகுறிகளை முன் எழுபதுகள் வரையிலும் வெளியே தெரியப்படுத்துவதில்லை. அதிகமான அளவில் பொருந்துதலில் குறைபாடு ஏற்பட்டு மகிழ்ச்சியை விட மகிழ்வின்றி துன்பத்தில் இருப்பதே முதுமைப் பருவத்தின் சிறப்பியல்பு ஆகும். அதனால் தான் முதுமைப் பருவத்தை, நடுவயதை விட மிகுதியான பேரச்சம் வாய்ந்த பருவமாக கருதுகின்றனர்.

முதுமைப் பருவத்தின் சிறப்பியல்புகள்

முதுமைப் பருவம் என்பது தளர்வுறும் காலமாகும். தளர்வு என்பது உடலால் பாதியும், மன இயல்பு சார்ந்த காரணங்களால் பாதியுமாக ஏற்படுகிறது. உடல் செல்களில் மாற்றங்கள் முதுமை செயல்பாட்டினால் ஏற்படுகிறது. தன்னைப் பற்றியும், பொதுவாக வாழ்க்கையைப் பற்றியும் விரும்பத்தகாத மனப்பான்மை ஏற்படுதல் தளர்வு ஏற்படச் செய்யும், அல்லது

மனச்சோர்வை ஏற்படுத்தும் அல்லது ஒழுங்கின்றி செயல்பட வைக்கும். ஊக்குவித்து தூண்டுதல், தளர்வு ஏற்படாமல் இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிப்பட்ட நபர்களிடம் முதுமையின் விளைவாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. மக்களிடையே முதுமை பருவம் வேறுபட்ட நிலைகளில் அவர்களது பரம்பரை குணம், மாறுபட்ட சமுக பொருளாதார நிலைமை மற்றும் கல்வி நிலைகள் மற்றும் மாறுபட்ட வாழ்க்கை பாங்கமைவு ஆகியனவற்றைப் பொறுத்து ஏற்படுகிறது. பொதுவான விதியின்படி, உடல் முதுமை அடைந்த பிறகு மனம் முதுமை அடையும்.

முதுமை என்பது வேறுபட்ட சில அடிப்படை தத்துவங்களை வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது - வயது உடல் தோற்றம் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. வெள்ளை நிறமுடைய கேசமுடையவராக இருந்தால், அவரை முதுமை பருவத்தினர் என்று குறிப்பிடுவர். முதுமை பருவத்தின் அறிகுறிகளை மூடி மறைப்பதற்கு பலர் முற்பட்டு அவர்கள் இன்னும் முதுமையை எய்தவில்லை போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்குவர். முதுமைப் பருவத்தில் மாறாது நிலைத்து ஊன்றிய வெளிப்பாடுகள் பல உள்ளன. பழங்கால மக்களின் நம்பிக்கைகள், கதைகள் பற்றிய ஆராய்ச்சிகள், தகவல் தொடர்பு சாதனம், கவிதை, கற்பனைக் கதை, இலக்கியம், கேலி செய்தல் அல்லது மாறுபட்ட வடிவங்களில் நகைச்சுவை அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிகள் போன்றவை எல்லா விதத்திலும் வயதான முதுமை பருவத்தில் உள்ளவர்களை விளக்கமாக வருணிக்கிறது. முதுமைப் பருவத்தினர் என்பவர், தளர்வு அடைந்து இனப்பெருக்கம் செய்ய முடியாமல், அதிகமாக விபத்துகளுக்கு உள்ளாகி, வாழ்வதற்கு கஷ்டப்பட்டு பயன்மிகுந்த நாட்கள் அனைத்தும் முடிவுற்று இருக்க, இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக முதுமையானவர்கள் புறம் தள்ளப்படுகிறார்கள் என்று வருணிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான பொருந்துதல் நிலை என்பது முதுமையின் சிறப்பியல்பு ஆகும். பெரியவர்கள் பற்றிய விரும்பத்தகாத சமூக மனப்பான்மைகளால், சமூகத்தினர் அவர்களை நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது. பெரியவர்கள் தாங்களாகவே தங்களைப் பற்றி விரும்பத்தகாத பொதுக்கருத்தை உருவாக்கியுள்ளனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இல்லை. இவை பிறருடன் பொருந்தாத நடவடிக்கையின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டு, வெவ்வேறு அளவில் கடுமையானதாக இருக்கிறது.

முதுமைப் பருவத்தில் தோற்றத்தில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள்

தலைப்பகுதி மூக்கு நீளமாகும். பற்களை இழப்பதால் வாயின் வடிவம் மாறும் அல்லது செயற்கை பல் தொகுதி அணிவதன் காரணமாகவும் வாயின் வடிவம் மாறும். கண்கள் மங்கலாக, மினுமினுப்பின்றி தோன்றும். எப்போதும் நீர் உள்ளது போல தோன்றும். இரட்டை அல்லது மூன்று முகவாய்க் கட்டை உருவாகும். கன்னங்கள் ஆடிக்கொண்டு, சுருக்கங்களோடு, அதிக தளர்வாக இருக்கும். தோல் சுருக்கங்களோடு, உலர்ந்து, அடர்ந்த புள்ளிகளுடன், மச்சங்களுடன், பாலுண்ணிகளுடன் தோன்றும். தலையில் உள்ள கேசம் மெல்லியதாகி வெளிர் கருப்பாகவும், வெள்ளையாகவும் நிறம் மாறி, தடித்து, குட்டையான முள் போன்ற உரோமம் மூக்கு, காது, கண்புருவங்களில் தோன்றும்.

வயிற்றுப் பகுதி, பெருத்து, தொங்கிக் காணப்படும். இடுப்புப் பகுதி தளதளப்பாய் தொங்கி, முன் இருந்ததை விட அகலமாக இருக்கும். இடைப்பகுதி அகலமாகி, உடம்புக்கு மூட்டை போன்ற தோற்றத்தை உருவாக்கும். பெண்களின் மார்பகம் தளர்வாய் தொங்கி தாழ்ந்து விடும். கை கால்கள் மேற் கை தளதளப்பாகி, கனமாகி விடும். கீழ்க்கை விட்டத்தில் சுருங்கிவிடும். கால்கள் தளதளப்பாகி, கைகளின் பின்பகுதியில் உள்ள குருதி நாளங்கள் தெளிவாக வெளியில் தெரியும். பாதங்கள், தசைகள் தளர்வானவுடன் அதன் விளைவாக பெரிதாகி விடும். கால், விரல் உராய்வால் ஏற்படும் தடிப்பு, வீக்கம் (Collouses) தோன்றும். கால், கைகளில் உள்ள நகங்கள் தடிமனாக, கடினமாகி, உடையும் தன்மையும் கொண்டு இருக்கும்.

உடலியல் வேலைகள் சார்ந்த மாற்றங்கள்

பார்க்கும், கேட்கும் திறன் குறைந்து குறிப்பிட்ட மாற்றங்கள் சுவையில் மணம் குறைதல், வலிக்கான உணர்வு குன்றுதலும் ஏற்படும். வயதானவர்கள் மிக விரைவில் சோர்வடைந்து விடுவார்கள். சோர்வில் இருந்து மீள அதிக நேரம் எடுக்கும். திறன் வாய்ந்த வேலைகளில் மாற்றங்கள், முக்கியமாக கை எழுத்து, புதிய திறன்களை கற்பதில் மிகவும் பின்தங்கி இருத்தல் மற்றும் வேலைகளை அருவருப்பாக, ஒழுங்கில்லாமல் செய்வர். நினைவில் வைத்துக் கொள்வதும் பாதிப்படையும், முதுமை எய்தவர்கள் சமீபத்திய நினைவுகளை மறக்கக் கூடியவர்களாகி, பழைய நினைவுகளை மனதில் கொண்டிருப்பர்.

காப்பகம் அமைக்கப்பட்டு இருக்கும் இடங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உள்ள இடங்களில் இருந்து அதிக தூரத்தில் உள்ளது.தங்கும் அறைகள் வீடுகளில் உள்ள அறைகளை விட மிகச் சிறியதாக இருக்கும்.

நன்மைகள்

வருமானம் இல்லாமையாலும், குறைந்த பொருளாதார நிலையாலும், முதுமைப் பருவத்தில் உள்ளவர்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதனால் அவர்கள் பொழுது போக்கு அம்சங்கள், விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகளை விட்டுக் கொடுக்கும் நிலையில் இருப்பர்.

பொதுவான உடல் சார்ந்த இடையூறுகள்

இதில் நோய்கள் மற்றும் உடல் ஊனங்களான, இரத்த ஓட்டம், வளர்ச்சிதை மாற்றம் மற்றும் மனநிலை பாதித்து ஏற்படும் குறைபாடுகள் தோன்றும். இருதய நோய்கள், ருமாட்டிஸம், மூட்டுவலி, பார்வை மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு முதலானவை பொதுவானவை.

உள இயல்பு சார்ந்த மற்றும் உடலியல் சார்ந்த குறைபாடு மற்றும் பொருளாதார காரணங்களால், ஊட்டச்சத்துக் குறைவு என்பது முதுமைப் பருவத்தில் அதிக அளவில் பொதுவாக காணப்படும்.

முதியோர் காப்பகங்களில் வாழ்வதால் ஏற்படும் நன்மைகள்

 • பராமரிப்பு மற்றும் சீர் செய்தல் அனைத்தையும் காப்பகமே செய்துவிடும். அனைத்து வேளை உணவுகளும் நியாயமான விலையில் கிடைக்கும். முதுமை பருவத்தினருக்கு ஏற்ற பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 • தங்களைப் போன்ற விருப்பங்கள், திறன்கள் கொண்டவர்களோடு நெருங்கி தொடர்பு கொள்ள வாய்ப்பும் கிடைக்கிறது.
 • சக வயது மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள்
 • தனிமையாய் இருப்பது தவிர்க்கப்படுகிறது. ஏனெனில் உடன் பகிர்ந்து கொள்ள எப்போதுமே யாராவது உடன் இருப்பார்கள்.
 • தங்கள் வீடுகளில் வாழ்வதை விட அதிகமான செலவு உடையது. காப்பகங்களில் உள்ள உணவு வழக்கமாக வீட்டு உணவை போன்று உண்ணும் ஆர்வத்தை ஏற்படுத்தாது.
 • ஒரே உணவை அடிக்கடி சாப்பிடும் நிலை. தமக்கு பிடித்த உணவும் கிடைக்காது. மனதுக்கு உகந்தவர்கள் அல்லாதவரோடு நெருங்கி மற்றும் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது. காப்பகம் அமைக்கப்பட்டு இருக்கும் இடம், கடைகள், பொழுது போக்குகள் மற்றும் சமூக அமைப்புகள் உள்ள இடங்களை விட்டு அதிக தூரத்தில் இருக்கும்.
 • குடும்பம் இல்லாதவர்களுக்கு விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு தேவையானவைகள் அளிக்கப்படுகின்றன.
 • முந்தைய நிலையின் அடிப்படையில் சமூக அந்தஸ்துக்கான வாய்ப்புகள் ஏற்படுதல். ஆனால், இளம் வயது சார்ந்த குழுவினர் உள்ள குழுவில் ஏற்படாது.
 • முதுமை பருவத்தினர் குறைந்த பட்சம் ஒரு சிறிய அறையைத் தங்களுக்கு வைத்துக் கொள்வது நல்லது. அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு தனிமை (privacy) இருக்கும். வாழும் அறை அமைக்கப்படும் போது சாதாரண பொழுதுபோக்குகளான படித்தல் மற்றும் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றிற்கு இடம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

முதுமை பருவத்தினரின் வாழ்க்கைக்கு செய்யப்படும் உடல் சார்ந்த தேவைகள்

 • வீட்டில் சீதோஷ்ண நிலையை சீராக, தரை முதல் கூரை வரை வைக்க வேண்டும். ஏனெனில் மோசமான காற்று ஓட்டம் முக்கியமாக முதுமைப்பருவத்தினரை குளிர் பாதிக்கும். பார்வை மங்குதல், தெளிவற்ற பார்வையால், பாதிக்கப்பட்ட முதுமை பருவத்தினர் அகன்ற ஜன்னல்கள் மூலமாக அதிக வெளிச்சம் பெற விரும்புவர்.
 • பாதுகாப்பிற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 • சில படிகளை ஏற வேண்டிய சூழ்நிலை இருந்தால், தரை மெழுகப்பட்டு, வழவழப்பாக இருக்காமல், சுவரிலிருந்து, சுவர் வரை கம்பளம் விரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
 • ஆபத்து நிறைந்த பகுதிகளில் விளக்கு வெளிச்சம் எப்போதும் இருக்க வேண்டும்.
 • பல வீடு குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் செய்யப்படும் வளர்ச்சி திறனை நிறைவேற்ற உள்புறம் மற்றும் வெளிப்புற பொழுது போக்கு அம்ச விளையாட்டுகளுக்கு போதுமான இடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • இரைச்சல் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் தூங்கும் இடத்தை வீட்டின் அமைதியான இடத்தில் அமைத்து இதனை நிறைவேற்றலாம்.
 • முதுமை பருவத்தினர் வேலையை எளிதாக்கும் சாதனங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
 • முக்கியமாக சமைப்பதற்கு மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு கருவிகள். முதியோர் வாழும் பகுதி ஒரே தளத்தில் அமைக்கப் பெற்று இருந்தால், படிகளில் ஏறிடும் சமயங்களில் தவறி விழுவதை தவிர்க்கலாம்.
 • முதுமை வயதினரின் அறையில் நேசித்த மற்றும் பாராட்டுகளைப் பெற்ற உடைமைகளை சேமிக்க இடம் அமைத்திருக்க வேண்டும்.
 • முதியோர்கள் கடைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் மிக அருகாமையில் வசிப்பது நல்லது.
 • ஏனெனில் அப்போது அவர்களது செயல்பாடுகளில் சுதந்திரமாக ஈடுபட முடியும்.
 • முதியோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அருகில் வசிக்க வேண்டும். அப்போது தான் அடிக்கடி அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். பொழுது போக்கிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் வசதிகள் செய்யப்பட்டிருப்பது அவசியம். முக்கியமாக, அதிகமான வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்வது கடினமாகும் போதும், எந்த செயல்பாடும் இன்றி வீட்டினுள் அடைந்து கிடப்பது மனச்சோர்வை ஏற்படுத்தி, சலிப்பூட்டச் செய்து விடும். கடைகள், மன மகிழ்விற்கான இடங்கள், கேசத்தை அழகு செய்யும் இடம், கோயில்கள்/சர்ச்கள் போன்றவைகளுக்காக போக்குவரத்து வசதிகளை முதுமைப்பருவத்தினருக்கு செய்து கொடுக்க வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.2
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top