பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஷிகெல்லா – வைரஸ்

ஷிகெல்லா – வைரஸ் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோய்த் தோற்றம்

மிகக் குறைந்த அதாவது பத்து உயிருள்ள பாக்டீரியாக்கள் விழுங்கப்பட்டாலே சீதபேதி உண்டாகலாம். பெருங்குடலில் உள்ள பேயர்ஸ் பேச்சஸில் காணப்படும் 'எம்' செல்கள் நோய் தோன்றும் இடமாகும். எப்பித்தீலியல் செல்களில் அவை பெருக்கமடைந்து, பக்கத்து செல்களுக்கும் பரவி புண் ஏற்படுத்தும். எப்பித்தீலியல் செல்கள் அழிக்கப்பட்டு, அருகிலுள்ள சிறு இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல் ஏற்படும். இதன் காரணமாக வெள்ளை அணுக்கள், இரத்த சிவப்பணுக்கள், அழிக்கப்பட்ட எப்பித்தீலியல் செல்கள் அனைத்தும் குடலினுள்ளே கொட்டப்படுகின்றன. இவையனைத்தும் மற்ற பொருட்களுடன் மலத்தில் வெளியேற்றப்படுகின்றன.

ஷிகெல்லா மற்ற செல்களைப் பாதிப்பதில்லை. இரத்த ஓட்டத்திலும் செல்வதில்லை. அப்படி செல்வதென்பது மிகமிகக் குறைவு. ஷிகெல்லா பேரினம் என்டிரோபாக்டீரியேசியே குடும்பத்தைச் சார்ந்தது. அதில் ஷிகெல்லா டி சென்ட்ரியே, ஷிகெல்லா ஃபிளெக்சினெரி, ஷிகெல்லா பாய்டை மற்றும் ஷிகெல்லா சோனி என்னும் நான்கு சிற்றினங்கள் அடங்கியுள்ளன. இவை அவைகள் பெற்றுள்ள உயிர் வேதியியல் பண்புகள் மற்றும் சீராலஜி குணங்களின் அடிப்படையில் வேறுபட்டுள்ளன.

ஷிகெல்லா கிராம் நெகட்டிவ், குச்சி வடிவ பாக்டீரியா, மேலும் வெளித்தோற்றத்தில் மற்ற என்டிரோபேக்டீரியாவிடமிருந்து வேறுபடுத்த முடியாதவை. இவற்றிற்கு வெளி உறை (Capsule) கிடையாது, ஸ்போர்கள் உண்டாக்காதவை, மேலும் ஓட முடியாதவை (norn motile) பொதுவாக இவை லாக்டோஸ் என்னும் சர்க்கரையை நொதிக்கச் செய்யாது, ஆனால் ஷிகெல்லா சோனி மெதுவாக நொதிக்கச் செய்யும். ஷிகெல்லாவின் ஆன்டிஜெனிக் அமைப்பு சற்று கடினமானது. அந்த ஆன்டிஜெனிக் அமைப்பின் அடிப்படையில் இவற்றின் சிற்றினமாகிய ஷிகெல்லா டிசென்ட்ரியே பதின்மூன்று பிரிவுகளாகவும், ஷிகெல்லா பாய்டை பதினெட்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றன. ஷிகெல்லா ஃபிளெக்சினெரி 6 சீரோடைப் (sero- types) களாகவும் ஷிகெல்லா பாய்டை இரண்டு சீரோடைப்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஷிகெல்லா மனிதனுக்குக் கடுமையான சீதபேதியை உண்டாக்கும்.

சீதபேதியில் சளியுடன் சீழ் கொண்ட இரத்தம் கலந்த மலம் காணப்படும். அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றும். இது ஷிகெல்லா என்னும் பேரினத்தால் உண்டாக்கப்படுகிறது. இந்நோய் உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. இதன் நோய் நுண்மப் பெருக்கக் காலம் (incubation period) இரண்டு அல்லது மூன்று நாட்களாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருக்கும். இந்நோயின் ஆரம்ப அறிகுறி வயிற்றுவலியாகும். இதனைத் தொடர்ந்து நீர் வயிற்றுப் போக்கும் காய்ச்சலும், உடல் நலக்குறைவும் ஏற்படும். சாதாரண நிலையில் நோய் இத்துடன் முடிந்துவிடும். சில நேரங்களில் வயிற்றில் பிடிப்பு சுளுக்கு ஏற்பட்டு இரத்தமும் சளியும் கலந்த சீழ் போன்ற மலம் ஷிகெல்லா டிசென்ட்ரியே 1 ஒரு கடுமையான நச்சுப் பொருளை உண்டாக்குகிறது (Shigatoxin). இது எண்டோசோம்களில் (endosomes) செயல்படும்.

புரோட்டீன் தயாரிப்பை தடுத்து செல்லை அழிக்கும். சிவப்பணுக்கள் அழிந்து இரத்தத்தில் யூரியா அதிகமாகி நோய்க்குறிகள், (Hermolytic uraemic Syndrome) ஏற்படுகின்றன. ஷிகா டாக்சின் சிறுநீரகத் திசுக்களில் தாக்குதல் ஏற்படுத்துவதாக எண்ணப்படுகிறது. இது மூளையையும் தாக்குகிறது.

ஆய்வக ஆய்வுறுதி

மலம் ஆய்வுப் பொருளாக எடுக்கப்படுகிறது. அது டிசாக்ஸிகொலேட் சிட்ரேட் அகரிலும் DesOxychiolate Citrate Agar மெக்கான்கி அகரிலும் தேய்க்கப்படும். மலத்தில் சளி இருந்தால் அதை உபயோகப்படுத்தலாம். இரவு முழுவதும் இன்குபேட்டரில் வைத்தபிறகு, அடுத்த நாள் நிறமற்ற, லாக்கடோஸை நொதிக்கச் செய்யாத கூட்டத்திலிருந்து (colony) எடுக்கப்பட்ட ஒரு பகுதி உயிர் வேதியியல் மற்றும் சர்க்கரை பயன்படுத்தும் சோதனைகள் செய்யப்பட்டு என்டெரோ பாக்டீரியேசியிலுள்ள மற்ற பாக்டீரியாக்களிலிருந்து பிரித்தறியப்படுகிறது. முயல்களில் உற்பத்தி செய்த சிற்றினத்திற்கு உரிய எதிர்ப்பொருள் (antibody) கொண்டு இனம் உறுதி செய்யப்படுகிறது.

சிகிச்சை முறை

ஷிகெல்லா சீதபேதி மருத்துவம் தேவைப்படாமலே தானே மறைந்துவிடும். உப்பு கலந்த நீர் உட்கொள்ளுதல் ஒரு வகையில் பயன்படும். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் கடுமையான நோய் நிலையில் ஆன்டிபயாடிக் கொடுக்கப்படும். ஆம்பிசில்லின், கோட்ரை மாக்சசோல், டெட்ராசைக்கிளின் அல்லது சிப்ரோஃபிளாக்சசின் முதலிய ஆன்டிபயாடிக்கில் ஏதேனும் ஒன்று பயன்படுத்தலாம்.

ஆதாரமும் பரவும் முறையும்

சீதபேதி மலத்திலிருந்து வாய் வழியாக பரவுகிறது. கழிவறையை பயன்படுத்தியவர், கைகளை நன்கு கழுவாமல், கதவுக் குமிழ், வாஷ்பேசின் குழாய் முதலியவற்றைத் தொடுவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரப்புகிறார். அடுத்தவர் அந்தப் பொருட்களைத் தொடுவதால் அவர் கைக்கு நோய்க்கிருமிகள் சென்று வாய்க்குள்ளும் செல்கின்றன,

நோய்க்கிருமிகள் நிறைந்த உணவு மற்றும் நீர் மூலம் நோய் பரவுகிறது. முக்கியமாக பள்ளி மாணவர்கள், அதிலும் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நல்ல சுகாதாரமுறைகள் பின்பற்றபடாமை நோய் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் பருவநிலை வேறுபாட்டிலும் இந்நோய் காணப்படுகிறது. பூச்சி வகைகள் மனிதக் கழிவுகளிலிருந்து உணவுப்பொருட்களுக்கு நோய்க்கிருமிகளைப் பரப்புகின்றன. உணவுப் பொருட்களைக் கையாள்பவர்கள் மூலம் பரவுகின்றன.

தடுப்பு முறைகள்

நல்ல சுகாதாரமான பழக்க வழக்கங்கள் முக்கியமாக பள்ளிகளில் பின்பற்றப்படுதல் நோய் பரவுதலைத் தடுக்கும். பள்ளிகளில், கழிவறையைப் பயன்படுத்தியபின் சுத்தமாகக் கைகளைக் கழுவுதல் கற்றுத் தரப்படவேண்டும். நோய்த் தாக்கத்தின் போது கை கழுவுதல் பாக்டீரியாவின் எண்ணிக்கையை ஓரளவுக்குத் தான் குறைக்கும். ஆகவே கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்கு (பள்ளிக்கு) செல்லாமலிருப்பது மிக அவசியம்.

ஒட்டிக்கொண்டு கோழைச் செல்கள் வாங்கியாக செயல்பட்டு A துணை அணு, செல்லின் உள்ளே செல்ல அனுமதிக்கிறது. இதன் பின் A அணு செல்லின் உள்சென்று A,A, என்ற புரதங்களாக பிரிந்து நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இதில் A, என்ற பிரிவு மட்டும் திறனுடன் செயல்படுகிறது.

இவ்வாறு A, பிரிவு செல்லினுள் சைக்ளிக் AMPயை அதிகரிக்கச் செய்து தண்ணீருடன் அயனி உப்புகளை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது. இதனால் சோடியம் குளோரைடு உப்புகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு குளோரைடு மற்றும் சோடியம் உறிஞ்சுதல் நிறுத்தப்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு உண்டாகி 20 லிருந்து 30 லிட்டர் வரை தண்ணீர் தினம் வெளியேற்றப்படுகிறது.

ஆய்வக ஆய்வுறுதி

வயிற்றுப்போக்கு மலக் கழிவு எடுக்கப்பட்டு காரபெப்டோன் (alkaline) நீர் ஊடகத்தில் சேர்க்கப்படுகிறது. கிருமிகள் வேகமாக வளரும். 3லிருந்து 6 மணி நேரத்தில் ஒரு சிறிய பகுதியை எடுத்து டிசிபிஎஸ் அகார் ஊடகத்தில் சேர்த்து வளர்க்கும்போது வி. காலரே மஞ்சளாகவும், சுக்ரோஸ் நொதிக்கும் காலனிகளாகவும் வளர்வதைக் காணலாம்., இவற்றிலிருந்து ஆக்ஸிடேஸ் நொதி உள்ளதா எனக் காணவும். உயிர் வேதியியல் சோதனைகள் செய்யவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 0-1 ஆன்டிஜன் முயலில் உற்பத்தி செய்யப்பட்ட எதிர்ப்பொருளுடன் சேர்ந்து திரட்சி ஏற்படுத்தினால் அது வி. காலரே என உறுதி செய்யப்படுகிறது.

சிகிச்சை முறை

பொதுவாக காலராவிற்கு நீருடன் உப்புக்கள் சேர்க்கப்பட்டு திரவநிலையை வாய்வழியாக மீண்டும் சமப்படுத்துவது மிகச் சிறந்தது. ஆனால் மிகவும் மோசமான நிலையில் இரத்தக் குழாய் வழியாக திரவம் செலுத்தப்படும். உலக சுகாதார நிறுவனம் வாய்வழி திரவ முறையை பரிந்துரை செய்கிறது. காலரா கிருமியை வெளியேற்ற டெட்ராசைக்ளின், குளோராம்ஃபினிகால் மற்றும் கோட்ரைமாக்சசோல் போன்ற மருந்துகளைக் கொடுக்கலாம். காலரா கிருமிகளை நாம் வாழும் இடங்களிலிருந்து ஒழிக்க டெட்ராசைக்ளின் பயன்படுத்தலாம்.

பரவுதல் - தடுக்கும் வழிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்

1800 மற்றும் 1900 ஆண்டுகளில் காலரா உலக முழுவதும் அதிக அளவில் தாக்கியது 1960 வரை கிளாசிக் பையோடைப் அதிகமாகவும் பின்னர் 1905ல் கண்டுபிடிக்கப்பட்ட எல்டார் பையோடைப் 1960ன் பின்பகுதி வரை அதிகமாகவும் காணப்பட்டது. இது ஆசியாவிலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலும், மேலும் காலராவின் ஏழாவது உலகளாவிய தாக்குதலுக்கும் காரணமானது.

இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இது சில இடங்களில் மட்டும் (endemic) காணப்படும் நோயாக உள்ளது. ஏனெனில் இந்த மையங்கள் கப்பல் வாணிபமும், யாத்ரிகர்கள் செல்வதும் அதிகம் உள்ளதால் இங்கு அதிகம் காணப்படுகிறது. இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடித் தொடர்பு மூலம் பரவுகிறது.

கட்டுப்பாடு

உணவு மற்றும் நீர் ஆகியவற்றை மக்கள் எவ்வாறு சுகாதார முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கட்டுப்பாடு அமைகிறது. நோயாளிகள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். வி. காலராவிற்கு எதிரான மருந்துகள் இருந்தாலும் நோய்க்கட்டுப்பாட்டிற்கு இது சரியானதாக சில சமயம் இருப்பதில்லை. சில நாடுகள் இதை முற்றிலும் ஒழிக்க தேவையான முன்தடுப்பு ஊசிகளை உபயோகப்படுத்த கேட்டாலும் உலக சுகாதார நிறுவனம் கொடுக்கும் சான்றிதழ் 6 மாதங்கள் மட்டுமே நிலைக்கும் என்பதாகும்.

தடுப்பூசி முறை

நோய் எதிர்ப்பு சக்தி பாக்டீரியாவுக்கு மட்டுமே அன்றி அது உற்பத்தி செய்யும் நஞ்சுக்கு அல்ல. ஒரு முறை காலரா வந்தால் அது தரும் தடுப்பு சக்தி சில வருடங்கள் மட்டுமே இருக்கும். முழு செல் வாக்சின்கள் நல்ல உபயோகமானதாக இல்லை. இது பயணிகட்கு உபயோகப்படாது. சொல்லப்பட்ட தடுப்பூசிகள் சில நாடுகளில் வழங்கப்பட்டாலும் இது 6 மாதங்கட்கு மட்டுமே தடுப்பு சக்தி அளிப்பதாகும். உயிருள்ள தடுப்பூசிகள் தற்போது சோதனையில் உள்ளன.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • விப்ரியோ காலரே ஒரு கிராம் நெகடிவ் பேக்டீரியா, வளைந்த குச்சி வடிவம் உடையது.
  • இதில் வி.காலரே 0-1 மற்றும் 0-139 காலரா நோயை உண்டாக்கும் சுகாதாரமற்ற உணவு, நீர் மூலம் பரவும்.
  • இதன் அறிகுறிகள் வாந்தி, தொடர்ச்சியாக நீருடன் கலந்த மலம் வெளியேற்றப்படுதல்.
  • இது சோறு வடித்த நீர் போல் இருக்கும்.
  • காலரா நஞ்சுதான் வயிற்றுப் போக்கிற்கும் காரணமானதாகும். ஒரு நாளைக்கு 20 முதல் 30 லிட்டர் தண்ணீர் வரை வெளியேற்றப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு  ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top