பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / CT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

CT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது

CT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை பற்றி காண்போம்.

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்க ளில் (SCAN சென்டர்ஸ்), ” இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப் படும், ECG எடுக் கப்படும், X-RAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்” என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக் காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவி யாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத் துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கரு விகளும் உடலின் அனைத்து பாக ங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில் நுட்பத்திலும் கட்டண த்திலும் உள்ளது.

CT ஸ்கேன்

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முலா வது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY .

பலர் XRAY பிலிம் – ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.

நம் திரைப்படங்களில் அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத் த XRAY பிலிம்களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது. ஆனால் FILM களில் RECORD செய் யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத் திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY-க்கு உள்ளே ஒரு X-RAY TUBE-ம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக் கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.

X-RAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர்ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும்.

X-RAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்

இப்போது வளர்ந்துள்ள தொழில் நுட்பத் தால் X-RAY TUBE சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறு கிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பை யும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரி க்கும்.

எச்சரிக்கை

கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

ஆதாரம் : பாரத் ஸ்கேன் மையம், சென்னை

3.0
மாரிமுத்து Feb 01, 2020 07:05 PM

CT ஸ்கேன் எத்தனை முறை ஒரு மனிதர் வாழ்நாளில் எடுக்கலாம் கதிர்வீச்சின் தாக்கம் எத்தனை முறை எடுக்கலாம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top