பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / HIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

HIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்

HIV திட்டங்கள் பற்றி இங்குக் விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

21.17 இலட்சம் இந்தியர்கள் HIVதொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர். இது 2015ஆம் ஆண்டு தேசிய அளவில் செய்யப்பட்ட மதிப் பீடாகும். காச நோய், மலேரியா, தொழுநோய் போன்ற நோய்களோடு ஒப்பிடும் போது HIV தொற்று அளவில் குறைவுதான் என்றபோதிலும், அரசியல் மாற்றங்களுக்கு இடையிலும் முன்னுரிமை தரப்பட்டு மனத் திட்டத்துடன் HIV எதிர்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக, HIV தொற்றும் பரவலும் வெகுவாக தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 0.41 விழுக்காடு என்ற அளவில் இருந்த HIV தொற்று அளவு 2015இல் 0.26 விழுக்காடாக குறைந்திருந்தது. தேசிய எய்ட்ஸ் பாட்டுத் திட்டத்தில் இந்தியா இதுவரை மூன்று ஐந்தாண்டுப் படிநிலைகளை நிறைவு செய்துள்ளது. நான்காம் ஐந்தாண்டுப் படி நிலை இப்போது செயல்பட்டு வருகிறது. தேசியத் திட்டத்தின் அடுத்தடுத்த ஒவ்வொரு படிநிலைகளின் போதும் அவ்வப்போது எதிர் கட்டுப்வினையாற்றுவதில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. HTV தொற்றையும், பரவலையும் இதனால் வெற்றிகரமாகத் தடுக்க முடிந்தது. திகைக்க வைக்கும் இன்னல்கள் மிகுந்த சூழல், வேற்றுமைகள் மிகுந்த சூழல் ஆகியவற்றிலும்கூட HIV எதிர்வினையின் வெற்றிக்குப் பின்னால் பல அடிப்படைகள் இருக்கின்றன என்பது தெரியவந்தது.

இந்திய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NACP)

இந்திய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NACP) வழிகாட்டி நெறிமுறைகளைத் தெளிவாக அறிவித்து தனது எதிர்வினைக்கான அடித்தளத்தை அமைத்தது. இந்த நெறிமுறைகள் தேசிய அளவிலான எதிர்வினையை கடந்த காலங்களில் வழி நடத்தியது. உரிமைகள், நடு நிலை தவறான பண்பு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பலவித கூறுகளுக்குமான எதிர்வினை, உண்மையான மரியாதைக்கு உத்திரவாதம், விளிம்பு நிலையினருக்கும் வாக்குரிமையைப் பறி கொடுத்தோருக்கும் மரியாதை ஆகிய நெறிமுறைகள் மிகவும் பின் பற்றக்கூடிய சிறந்த முன்னுதாரணத் திட்டமாக இதனை உருவாக்கின.

HIVயினால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு ஒரு அணுகுமுறை தேவைப் பட்டது. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் முதலில் உருவாக்கி அமைக்கப்பட்டன. நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும் HIV தொற்று பரவியபோது மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மையங்களும், வடகிழக்கு மாநில கட்டுப்பாட்டு அலகுகளும் (NERO) உருவாக்கப்பட்டன. இவை அந்தந்தப் பகுதிகளுக்கு உரித்தான பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டன. வள ஆதாரத் தேவைகளையும், கட்டமைப்புத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்கு அவை தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

காரணங்கள் மற்றம் கண்டறியும் முறை

HIVயின் மிக முக்கியமான மையப்புள்ளிகளில் ஒன்று ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் கூட்டத்தினரிடையில் இது அதிகமாக காணப்பட்டதுதான். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்போர், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், போதை ஊசிகளைப் பயன்படுத்துவோர் முக்கியமான திறள்களாக அறியப்பட்டனர். அமைதியாக இருந்துகொண்டு ஆதாயம் பெறக்கூடியவர்களாக இவர்களை நடத்தாமல் சமமான உரிமை கொண்ட சமூக அங்கத்தினர்களாகக் கருதி நடத்தி இந்திய தேசம் ஒரு முக்கியமான திசைவழியைக் கண்டது. பாதிப்புக்கு உள்ளாகி இருந்த இந்தக்குழுவினர் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தில் மிக முக்கியமான பங்குப்பணியை ஆற்றவேண்டி இருந்தது. பாதிக்கப்பட்டவர் களையும் ஈடுபடுத்திக்கொண்டு தேவை இருப்பவர்களை நாடியும் ஒடியும் மருத்துவ உதவிகளும், சேவைகளும் செய்யப்பட்டன. “எங்களுக்காக எதுவுமில்லை, எங்களையன்றி எதுவும் இல்லை" என்பது இந்த சமூகங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான தாரக மந்திரமாக மாறியது. முடிவுகள் எடுப்பதற்கான வழிமுறைகளில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியினராக இவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம், இவர்களின் மன ஊக்கம், திறமை ஆகியவற்றை கட்டமைத்து சக்திமிக்கவர்களாக ஆகும் வகையிலும் சரியான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சமூகத்தினரை வலுப்படுத்தக்கூடிய உபாயங்கள் நிறைந்த அரசின் அணுகுமுறை, HIV தடுப்புத் திட்டத்தின் சிக்கலான பன்முகப்பட்ட அணுகுமுறையை மேம்படுத்தி மேலே கூறிய காரணிகளில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.

வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக்கூடிய, சிக்கல்கள் அதிகம் கொண்ட சவால்களை சந்திப்பதற்கு பன்னோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தத் தேவையை தேசிய AIDS தடுப்புத்திட்டம் வெகு முன்னதாகவே உணர்ந்துவிட்டது. அரசாங்க மேல்மட்டத்தில் இதன் தேவை உணரப்பட்டது. தேசிய AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இது வெறுமனே வெறும் பேச்சாக ஒலிக்கவில்லை. ஊரக வளர்ச்சி, தொழிலாளர் வேலைவாய்ப்பு, பெண்கள், குழுந்தைகள் மேம்பாடு அவர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகள் உட்பட 22 அமைச்சகத் துறைகளை உள்ளடக்கிக் கொண்டு பன்னோக்கு அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. எய்ட்ஸ் ஒழிப்பு தேசியக் குழுமம் 2005இல் அமைக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் இருந்தனர். AIDS பரவலுக்கு எதிரான பன்முகப்பட்ட எதிர்வினைகளை இந்த அமைப்பு உறுதிப்படுத்தியது. AIDS தடுப்புத் திட்டத்தின் நான்காவது கட்டமானது பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டும், நடத்துமுறைகளில் பெரும் கொண்டும் பகுதி மக்களை உள்ளடக்கிக் அமைந்திருந்தது. இந்த அணுகுமுறை மிகச் சிறந்த பயனைத் தந்தது. AIDS தொற்றுடன் வாழக்கூடிய மக்களுக்கு பல்வேறு அமைச்சகங்களின் மூலமாக வழங்கப்படக்கூடிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்தி அமைத்தது இதற்கு ஒரு உதாரணமாகும். 14 பிற அமைச்சகங்களையும் சேர்த்துக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு AIDS எதிர்வினைக்கு சுகாதார அமைச்சகம் தலைப்பட்டது. அரசியல் ஆதரவை உருவாக்கவும், வளர்ச்சி தொடர்பான பிரச்னைகளில் ஆர்வத்தை வளர்க்கவும், வாதங்கள் உதவின. இந்தியாவில் எய்ட்சை எதிர்த்துப் போராடுவதற்கான விசாலமான பரந்துபட்ட ஆதரவு அரசியல் தலைவர்களிடமிருந்தும், கொள்கைகளை வகுத்தளிப்பவர்களிடமிருந்தும் சிறப்பாக வெளிப்பட்டது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு, கட்சி வேறுபாடுகளைக் கடந்த அரசியல் ஆதரவை NACP கண்டது. AIDS எதிர்ப்புக் கொள்கைத் திட்டங்களை வகுப்போரின் கூர்ந்தறியும் திறனை வெளிப்படுத்த AIDS தேசியக்குழுமம், நாடாளுமன்றக் குழு போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டங்களில் AIDS ஒழிப்புத்திட்டமும் சேர்க்கப்பட்டது. HIV/AIDSக்கு முன்னுரிமை அளித்து அதனை சந்திக்க விழைந்த அரசின் நோக்கம் குழப்பமில்லாமல் வெளிப்பட்டது. இத்தகைய பங்கேற்புகளும், நடவடிக்கைகளுக்கு ஆதரவான அழைப்புகளும் திறம்பட்ட எதிர் வினைக்கான தெளிவான பாதைகளை பல வழிகளில் ஏற்படுத்தித்தந்தன.

கண்டறிதல், மதிப்பிடுதல், கவனமாகக் கண்காணித்தல், ஆராய்ச்சி போன்ற தகவல்கள் தேசியத் திட்டத்திற்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தன. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுவதற்கு இவை அச்சாரமிட்டன. NACP அமைப்பு HIV காவல் கண்காணிப்பு முறைக்குப் பெயர் பெற்றது. HSS எனப்படும் இது உலகிலேயே மிகப்பெரிய கண்காணிப்பு முறையாகத் திகழ்ந்தது. வெவ்வேறு பிரதேசங்களிலும், மக்கள் குழுக்கள் மத்தியிலும் HIV பரவலை, அதன் போக்கை, அதன் அளவை பின் தொடர்ந்து அறிந்துகொள்ள HSS உதவியது. நடத்தைக் கண்காணிப்பு (BSS) முறையும், ஒருங்கிணைக்கப்பட்ட உயிரியல், நடத்தை இயல் கண்காணிப்பும் இன்னும் பல முயற்சிகளும் ஆதாரங்களின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதற்குத் துணை நின்றன.

முன்னோடித் திட்ட மாதிரிகளை வளர்ப்பதிலும், அதன் வெற்றி தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதிலும் அழுத்தமான நம்பிக்கை கொண்டதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் இருந்துவந்தது. இலக்கு நோக்கிய இந்தப் பயணத்தில், அனுபவ அறிவை கூர்மைப்படுத்துவதும், மென்மேலும் அறிவதற்கான முயற்சிகளும் திட்ட வடிவமைப்பில் நிறைய பயன்களை விளைவித்தன. அறிந்துகொண்டு செயல்படுவதற்கான மையங்களையும், சிறந்த நடத்தைக்கான மையங்களையும் நாடெங்கிலும் ஏற்படுத்தி கருத்தரங்குகள், பட்டறைகள், பயிலரங்கங்கள், மின்னணு ஆகியவற்றையும் தொடர்ச்சியாக நடத்தி அவற்றின் வெளி மேடைபாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் செய்யப்பட்டது. ஆக, களத்தில் இருந்து பெறப்படும் தகவல்களையும், புரிதல் களையும் ஒழுங்குபடுத்தி ஒன்றிணைத்து செயல்படுவதன் மூலம் தரமான தலையீடு, வடிவமைப்பில் மேம்பாடு ஆகியவை எட்டப்பட்டன.

வெளிப்படைத்தன்மையையும், பதில் சொல்லும் பொறுப்பையும் தொடர்ந்து கடைபிடித்து வருவதற்கான நடவடிக்கைகளின் ஊடாக HIV எதிர்வினை செயல்பட்டது. தொழில்நுட்பப் பங்குதாரர்கள், நிதியளிப்போர், கல்வி, ஆராய்ச்சி அமைப்புகள் போன்றவை சேர்ந்து நடத்தக்கூடிய திறனாய்வுகளும் இதில் அடங்கும். இவைகளின் காரணமாக மிகச் சிறப்பாக செயல்படுவதற்கான தூண்டுதலை இந்தத்திட்டம் பெற்றது. இந்தியாவிற்கு நிதியுதவி அளித்திருக்கும் பலவிதமான அமைப்புகளின் பெயர்களைப் பார்த்தாலே இந்தியாவின் AIDS ஒழிப்பு முயற்சியில் சர்வதேச ஆர்வம் எப்படி இருந்தது என்பது புலப்படும். உலக நிதியம், கேட்ஸ் அறக்கட்டளை, உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை DFiD USAID போன்றவை மிக அதிக அளவில் நிதி உதவி அளித்த அமைப்புகளில் சிலவாகும்.

AIDS வழக்கத்துக்கு மாறான ஒரு தொற்று. வழக்கத்திற்கு மாறான கவனம் இதற்கு தேவைப்படுகிறது. HIV கற்றுத்தந்திருக்கும் பாடங்கள் வளர்ச்சிக்கு சவால்விடக்கூடிய இன்ன பிறவற்றிற்கும் பொருத்தப்பாடு உடையது. வெற்றிகள் ஏராளமாக ஈட்டப்பட்டிருக்கும் அதேவேளையில் செலுத்தப்பட வேண்டிய பகுதிகள் பலவும் இருக்கின்றன. குறிப்பாக, சட்டக் கருத்துருவாக்கத்தில் பல இடைவெளிகளை நிரப்பவேண்டி இருக்கிறது. இந்தியா தொடர்ந்து புதிய புதிய முயற்சிகளைப் புனையவும், அவற்றை செயல்படுத்த வேண்டியுள்ளது. அப்போது தான் அது தனது 90-90-90 என்ற குறிஇலக்கை 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் எட்டமுடியும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top