பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / கர்ப்பகாலத்தில் 'சர்க்கரை' கூடாது
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கர்ப்பகாலத்தில் 'சர்க்கரை' கூடாது

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது சர்க்கரை நோய் மருத்துவத்தில் "கர்ப்பகால சர்க்கரை நோய்" என அழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சிலருக்குப் போதிய இன்சுலின் சுரப்பதில்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. தாய், கருவில் உள்ள குழந்தையை கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிக்கும்.

பாதிப்பு என்ன?:

பெண்கள் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைதல், அதிக எடை உள்ள பெண்கள், முந்தைய கர்ப்பகாலத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தாலோ, மனநல நோய் அல்லது ஸ்டீராய்ட் மருந்து உட்கொண்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பிரச்னை இருந்தாலோ அவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், அது பெரும் அளவில் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு "ஹைப்போகிளைசிமியா' (தாழ் சர்க்கரை நிலை) பாதிப்பு ஏற்படும். சில குழந்தைகளுக்கு இதய நோய் பிரச்னை ஏற்படும். சில குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

தொப்புள் கொடிக்கு அபாயம்:

சர்க்கரை நோய் காரணமாக குழந்தை உருவாகும் போது கர்ப்பிணிக்கு தொப்புள் கொடியில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறக்கும்போது 4 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும்.

குழந்தை பிறக்கும் போது நுரையீரல் சரியாக வளர்ச்சி அடையாமல் சுவாசக் கோளாறு ஏற்படக் கூடும். குழந்தை மஞ்சள் காமாலையுடன் பிறக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் ஆபத்தான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க சில பரிந்துரைகள்: கர்ப்பம் அடைந்தவுடன் முதல் முறையாக பரிசோதனைக்கு வரும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்து கொள்ளவும். சர்க்கரை நோய் இல்லையென்றாலும் கர்ப்பம் அடைந்து 24 வாரங்களில் மீண்டும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப கால சர்க்கரை நோய் இருந்தால் பழங்கள், காய்கறிகள், முழுமையான தானியங்கள், பருப்புகளை மருத்துவர் கூறிய அளவில்தான் சாப்பிட வேண்டும். "பாலீஷ்' செய்யப்பட்ட தானியங்களைச் சாப்பிடக் கூடாது.

நேரடியாக சர்க்கரையோ அல்லது சர்க்கரை சிரப் சேர்க்கக் கூடாது. ஆரோக்கிய கொழுப்பான எண்ணெய், சனோலா எண்ணெய் பயன்படுத்தலாம். கறி அல்லது பதப்படுத்தப்பட்ட கறி பயன்படுத்தக்கூடாது.

சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 30 நிமிஷங்கள் நடைப் பயிற்சி செய்வது அவசியம். மருத்துவர் குறிப்பிடும் மருந்துகளை தவறாது சாப்பிட வேண்டும்.

கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கண்டறிய, கடந்த 2 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் "குளுக்கோஸ் சேலஞ்ச்' பரிசோதனை வசதி உள்ளது.

உணவுப் பொருளில் சத்து:

காய்கறி வகைகளில் பிரக்கோலியில் வைட்டமின் அ, உ, கால்சியம், போலேட், இரும்புச் சத்து உள்ளது. இட்லி பாத்திரத்தில் நீர் கொதிக்கும் போது தட்டில் 5 நிமிஷங்களுக்கு பிரக்கோலியை வேக வைக்கவும் அல்லது மிருதுவாகும் வரை வேக வைக்கவும். இதை சாலட், சூப்புடன் சேர்த்துச் சாப்பிடலாம். சமைத்த கறி மற்றும் மீன் உணவுகளுடன் சூடேற்றப்பட்ட வாணலியில், எண்ணெய் ஊற்றி, கரண்டியில் கலக்கி விடவும். ஆலிவ் ஆயில் கலந்து சாப்பிடலாம்.

ஓவனில் 400 டிகிரி அளவுக்கு ஹீட் செய்து, மசாலா, ஆலிவ் எண்ணெய் உப்பு, மிளகு சேர்க்கவும். தொடர்ந்து 15 நிமிஷங்கள் "பிரவுன்' ஆகும் வரை வறுக்கவும். இத்துடன் சாப்பிட கறி, பச்சைக் காய்கறிகள் சேர்த்து வழங்கலாம்.

ஆதாரம் : தினமணி

Filed under:
2.97183098592
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top