பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாதுகாப்பான தாய்மை

பாதுகாப்பான தாய்மை தொடர்புள்ள முக்கிய குறிப்புகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான தாய்மை

பாதுகாப்பான தாய்மை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள முக்கியத்துவங்கள் பின்வருமாறு ஒவ்வொரு நாளும் சுமார் 1400 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் இறக்கின்றனர். மேலும் பத்தாயிரத்திதிற்கும் மேற்பட்டோர் கர்ப்பகாலங்களில் தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு அச்சுருத்தலைத் தருகின்ற அல்லது அவர்களை ஊனமாக்கும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். கர்ப்ப காலங்களில் ஏற்படுகிற ஆபத்துக்களை பெரிதளவு குறைக்குக் கூடிய வழிமுறைகள் பின்வருமாறு

• கருத்தரிக்கும் முன்பு ஒரு பெண் நல்ல ஆரோக்கியத்துடனும் சத்தான உணவு அருந்துபவளாகவும் இருத்தல் வேண்டும்.

• கர்ப்ப காலங்களில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் குறைந்த பட்சம் நான்குமுறை தனது ஆரோக்கியத்தை பரிசோதனை செய்தல் வேண்டும்.

• பிரசவத்தை நல்ல திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.

• பிரசவத்திற்குப் பிறகு 12 மணிநேரம் வரையிலும், குழந்தைப்பிறப்பிற்கு பின்பு 6 வாரங்கள் கழித்தும் தாயானவள் பரிசோதிக்கப்பட வேண்டும். பிரசவத்திற்கு முன்பும் பின்பும், குழந்தைப் பிறப்பின் போதும் தேவைப்படுகிற பராமரிப்பை அளிக்கவும், பிரசவம் மற்றும் குழந்தைப் பிறப்பின்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு விசேஷித்த முறையில் பராமரிப்பு அளிக்கவும் சுகாதாரப்பணியாளர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கவேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

முக்கிய குறிப்புகள் :

பாதுகாப்பான தாய்மை குறித்து ஒவ்வொரு குடும்பமும், சமூகமும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் பின் வருமாறு

 1. அனைத்து குடும்பங்களும் கர்ப்பம், குழந்தைப்பிறப்புக் காலங்களில் ஏற்படுகின்ற ஆபத்தான பிரச்சினைகளின் அபாயகரமான அடையாளங்களை இனம் கண்டுகொள்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் பிரச்சினைகள் எழும்போது, தேவையான உதவிகள் பெறுவதற்கான திட்டங்களையும் முன் ஏற்பாடாக கொண்டிருத்தல் வேண்டும்.
 2. கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்புக் காலங்களில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் போன்றோர், ஒவ்வொரு கருவுற்ற பெண்களையும் குறைந்தது நான்கு முறையாகிலும் கண்டிப்பபாக பரிசோதிக்க வேண்டும்.
 3. சாதாரண நாட்களைவிட கர்ப்பகாலம் முழுவதும் அனைத்து கருத்தரித்த பெண்களுக்கும் போதிய ஓய்வும் குறிப்பாக சத்து நிறைந்த உணவும் மிக அவசியம்.
 4. புகைப்பிடித்தல், மதுபானம், போதை மருந்து, விஷம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பொருட்கள் முதலியன கருத்தரித்த பெண்களுக்கும், இளம் குழந்தைகளுக்கும் பெரும் தீங்குவிளைவிக்கிறது.
 5. உடல் ரீதியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தகாதமுறையில் உபயோகிக்கப்படுவது பல சமூகங்களில் காணப்படுகிற சமுதாயப் பிரச்சினையாகும். குறிப்பாக கர்ப்ப காலங்களில் தவறாக உபயோகித்தால், அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
 6. ஆரோக்கியமான, கல்வி அறிவு பெற்ற, குழந்தைப்பருவம் மற்றும் இளம்வயதில் சத்து நிறைந்த உணவு உட்கொண்ட பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்பின்போது மிகக்குறைந்த பிரச்சினைகளையே சந்திப்பார்கள்.
 7. ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்புக் காலங்களில் மருத்துவ பராமரிப்பைப் பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறாள். மருத்துவ பராமரிப்பை அளிப்பவர்கள் தொழிற்நுட்ப ரீதியாக திறமையானவர்களாயும், கருவுற்ற பெண்களை மரியாதையுடன் நடத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

அனைத்து குடும்பங்களும் கர்ப்பம், குழந்தைப்பிறப்புக் காலங்களில் ஏற்படுகின்ற ஆபத்தான பிரச்சினைகளின் அபாயகரமான அடையாளங்களை இனம் கண்டுகொள்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் பிரச்சினைகள் எழும்போது, தேவையான உதவிகள் பெறுவதற்கான திட்டங்களையும் முன் ஏற்பாடாக கொண்டிருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு கர்ப்பகாலத்திலும், பிரச்சினைகள் ஏற்படுகின்ற வாய்ப்பு உண்டு. பிரச்சினைகள் எப்பொழுது ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. முதல் பிரசவம் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தைத் தரும் அபாயகரமான ஒன்று.

ஒவ்வொரு கருத்தரித்தலின் போதும், ஒரு கருவுற்ற பெண் குறைந்தபட்சம் நான்கு முறை பரிசோதனை செய்யப்பட வேண்டும். பிரசவம் நடைபெற வேண்டிய இடத்தைப்பற்றி மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவச்சி போன்றவர்களிடம் அறிவுரை பெறுவது மிக முக்கியமானதாகும்.

ஏனென்றால் கர்ப்ப காலத்திலோ, குழந்தைபிறப்பின் போதோ, அல்லது குழந்தை பிறந்த உடனேயோ ஆபத்தான பிரச்சினைகள் எந்த வித அடையாளமும் இன்றி நேரிட வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு மிக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சுகாதார மையம் அமைந்துள்ள இடத்தை அறிந்துவைத்துக்கொள்வது மிக அவசியம். மேலும் எந்த ஒரு நேரத்திலும் கர்ப்பிணிப் பெண்ணை அங்கு கொண்டு செல்வதற்கான முன் ஏற்பாடுகளையும், தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். முடிந்தால், எளிதில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையின் அருகிலேயே தற்காலிகமாக தங்கியிருக்கச் செய்யலாம்.

பிரசவம் கடினமாகவோ அல்லது சிக்கலாகவோ இருக்கும் என எதிர்பார்த்தால், பிரசவம் மருத்துவமனையிலோ அல்லது சுகாதார மையத்திலோ வைத்தே கண்டிப்பாக நடைபெற வேண்டும். எல்லா பிரசவமும் குறிப்பாக முதல் பிரசவம் மருத்துவமனையில் வைத்து நடைபெறுவது மிக பாதுகாப்பானது.

அனைத்து குடும்பங்களும் ஆபத்தான காரணிகள் குறித்தும், பிரசவத்தின்போது நேரிட வாய்ப்புடைய பிரச்சினைகளின் அடையாளங்களை கண்டுபிடிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

ஆபத்துக்குள்ளாக்குகிற முன் கர்ப்ப கால காரணிகள்:

• முந்தின பிரசவத்திலிருந்து இரண்டு வருடத்திற்கும் குறைவான இடைவெளி இருத்தல்

• 18 வயதுக்கு குறைவாகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருத்தரித்தல்.

• ஏற்கெனவே நான்கோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை உடைய பெண் கருத்தரித்தல்.

• முந்தின பிரசவம் குறைமாதத்தில் ஏற்பட்ட பெண் கருத்தரித்தல்

• ஏற்கனேவ பிறப்பின்போது இரண்டு கிலோ எடைக்கும் குறைவான குழந்தையைப் பெற்றெடுத்த பெண் கருத்தரித்தல்.

• முந்தின பிரசவம் மிகவும் கடினமாகவும், அறுவைச் சிகிச்சை மூலமாகவும் நடைபெற்ற பெண் கருத்தரித்தல்.

• கருக்கலைதல், குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை ஏற்பட்ட பெண் கருத்தரித்தல்.

• 38 கிலோவுக்கும் குறைவான எடையுடைய பெண் கருத்தரித்தல்.

• பெண்ணின் பிறப்பு உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருத்தல்

கர்ப்ப காலத்தில் அபாயக்குறிகள்:

• எடை அதிகரிக்காமல் இருத்தல் (குறைந்தபட்டசம் 6 கிலோ எடை கர்ப்பகாலங்களில் அதிகரித்தல் வேண்டும்)

• இரத்தசோகை, கண் இமைக்குள் வெளிறி இருத்தல் (ஆரோக்கியமான கண் இமைகள் சிவப்பாக இருக்கும்) மிகவும் சோர்வுடன் இருத்தல், மூச்சு வாங்குதல்.

• அசாதாரணமான முகம், கை, கால் வீக்கம்.

• கருவில் இருக்கும் குழந்தை மிகக்குறைவான அசைவுடனோ அல்லது அசையாமலோ இருத்தல்.

உடனடி மருத்துவ உதவித்தேவைப்படும் அறிகுறிகள்:

• கர்ப்ப காலத்தின்போது பெண் உறுப்பிலிருந்து லேசான இரத்தம்படுதல் அல்லது இரத்தக்கசிவு ஏற்படுதல்.

• அதிகமான அல்லது தொடர்ந்து இரத்தக்கசிவு பிரசவத்திற்கு பின்பு ஏற்படுதல்.

• கடினமான தலைவலி மற்றும் வயிற்றுவலி.

• கடினமான அல்லது தொடர்ந்து வாந்தி எடுத்தல்.

• அதிகமான காய்ச்சல்.

• பிரசவத்திற்கு முன் பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறுதல்.

• வலிப்பு ஏற்படுதல்.

• கடினமான வலி ஏற்படுதல்.

• நீண்ட நேரம் தொடரும் பிரசவ வலி

தகவல் குறிப்பு 2

கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்புக் காலங்களில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் போன்றோர், ஒவ்வொரு கருவுற்ற பெண்களையும் குறைந்தது நான்கு முறையாகிலும் கண்டிப்பபாக பரிசோதிக்க வேண்டும்.

எப்பொழுதும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் அதிகமான கவனம் தேவை. கருத்தரித்திருப்பதை உணர்ந்த உடன் ஒரு பெண் மருத்துவமனைக்கோ அல்லது சுகாதாரப் பணியாளரிடமோ சென்று பரிசோதனை செய்து கொண்டால் அநேக ஆபத்துக்களை தவிர்த்து விட முடியும். கருத்தரித்தலைத் தொடர்ந்து, ஒவ்வொரு கர்ப்பகாலம் முழுவதும் குறைந்தது 4 முறையும், பிரசவம் ஆனதிலிருந்து 12 மணிநேரம் வரையிலும், குழந்தை பிறந்த பிறகு 6 வாரங்கள் கழித்தும் பெண்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவோ, அடிவயிற்றுப் பகுதியில் வலியோ அல்லது மேற்கூறப்பட்ட அடையாளங்களோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரிடமோ, சுகாதாரப்பணியாளரிடமோ ஆலோசனை பெற வேண்டும்.

பிரசவத்தின்போது திறமையான பிரசவ உதவியயளரின் உதவியைப் பெறுவதோடு பிரசவம் ஆனபிறகு 12 மணி வரை தொடர்ந்து பெண் கண்காணிக்கப்பட்டால், தாய் மற்றும் சேய் சுகவீனம் அடைவதையும், மரணமடைவதையும் தடுக்க முடியும்.

திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் போன்றோர் பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தை பெற கீழ்க்கண்ட முறையில் உதவியாக உள்ளனர்:

• பிரச்சினைகள் எழும்போது கர்ப்பிணிப்பெண்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக, பிரசவம் நோக்கி உள்ள முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்தல்.

• தாய்க்கும் சேய்க்கும் மிகவும் ஆபத்தாக விளங்கும் இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணித்தல்.

• இரத்தசோகையை கண்காணித்து இரும்பு மற்றும் போலிக் சத்து மாத்திரைகளை தொடர்ந்து வழங்கல்.

• வைட்டமின்-ஏ குறைவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து தாய், சேயைக் காப்பாற்ற போதுமான அளவுக்கு வைட்டமின்-ஏ உட்கொள்ள பரிந்துரை செய்தல்.

• சிறுநீர்க்குழாயில் நோய் தொற்றுதல், பாலியல் நோய்தொற்றுதல் போன்ற கர்ப்பகாலங்களில் ஏற்படக்கூடிய நோய்தொற்றுதலைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நோய்தடுப்பு மாத்திரை மருந்துகள் (ஆன்டிபயாடிக்) மூலம சிகிச்சை அளித்தல்.

• கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கும் டெட்டனஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை 2 முறை போடுதல்.

• காயிட்டர் நோயிலிருந்து கர்ப்பிணிப் பெண்களையும், எதிர்காலத்தில் உடல் மற்றும் மனரீதியாக குழந்தைகள் ஊனமடைவதைத் தடுக்கவும் அயோடின் கலந்த உப்பை சமையலுக்குப் பயன்படுத்த கர்ப்பிணிப் பெண்களை ஊக்கப்படுத்துதல்.

• கரு வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதைக் கண்காணித்தல்

• மலேரியா தடுப்பு மாத்திரைகளை தேவைப்பட்டால் கொடுத்தல்.

• குழந்தைப்பிறப்புக்கு தாயை தயார் செய்தல் மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல், தன்னையும், குழந்தையையும் நன்றாகப் பராமரித்துக் கொள்ளுதலுக்கான அறிவுரைகளை வழங்குதல்.

• கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரசவம் எங்கு நடைபெற வேண்டும் என்பதைப் பற்றிய அறிவுரை வழங்குதல்.

• பிரசவத்தின்போதோ அல்லது குழந்தை பிறந்த பின்போ பிரச்சினைகள் எழும்போது, எப்படி மருத்துவ உதவிகள் பெறுவது என்பதைப் பற்றிய அறிவுரை வழங்குதல்.

• பாலியல் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அறிவுரை வழங்குதல்.

• எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனையை கர்ப்பிணிப்பெண்களுக்குத் தவறாமல் வழங்குதல். ஏனெனில் ஒவ்வொரு கர்ப்பிணிப்பெண்ணுக்கும் இது குறித்து அறிந்து கொள்ளுவதற்கான உரிமை உள்ளது.

• கர்ப்பிணி மற்றும் பிரசவித்த பெண்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தாலோ, குழந்தையும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஏதுவாக திறமையான சுகாதாரப் பணியாளரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

பிரசவத்தின் போது பிரசவ உதவியாளர் அறிந்துள்ள தகவல்கள்:

• தொடர்ந்து பிரசவ வலி இருந்தாலோ (12 மணி நேரத்திற்கும் மேல்) அல்லது எப்பொழுது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதைக் குறித்து அறிந்திருத்தல்.

• எப்பொழுது மருத்துவ உதவி தேவைப்படும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது என்பதை அறிந்திருத்தல்.

• நோய்த்தொற்று அபாயத்தை குறைக்கும் வழி முறைகள் (சுத்தமான கைகள், கருவிகள் மற்றும் பிரசவிக்கும் இடம்)

• கருப்பையில் குழந்தை தவறான நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருத்தல்.

• தாய்க்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை அறிந்திருத்தல்.

• எப்பொழுது தொப்புள்க் கொடியை அறுப்பது, அறுத்தபின் அதை எப்படி பராமரிப்பது என்பதை அறிந்திருத்தல்.

• பிறந்த உடன் குழந்தை சுவாசிக்காமல் இருப்பின், என்ன செய்வது என்பதை அறிந்திருத்தல்.

• பிறந்த குழந்தையை துடைத்து, எவ்வாறு வெவெதுப்பாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்திருத்தல்.

• பிரசவித்த உடன் குழந்தையை தாய்ப்பால் குடிக்க வைத்தல்.

• பிரசவத்திற்குப் பின்பு தாயின் பராமரிப்பு குறித்து அறிந்திருத்தல்.

• குருட்டுத்தன்மையை தடுத்திடும் வகையில், பரிந்துரைக்கப்பட்ட சொட்டுமருந்தை எவ்விதம் கண்களில் விடுவது என்பதை அறிந்திருத்தல்.

பிரசவத்திற்கு பின்பு திறமையான உதவியாளர் கண்டிப்பாக செய்ய வேண்டியவை பின்வருமாறு

• பிரசவம் முடிந்த உடன் தொடர்ந்து 12 மணிநேரம் வரையிலும் குழந்தைப்பிறப்புக்குப் பின் 6 வாரங்கள் கழித்தும் பெண்ணின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

• அடுத்த குழந்தை பிறப்பை எவ்விதம் தடுப்பது அல்லது தள்ளிப்போடுவது என்பது குறித்து பெண்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

• எச்.ஐ.வி போன்ற பாலியல் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பது எப்படி என்று பெண்கள் அறிவுறுத்தப்படுவதோடு, அது குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைப்பது குறித்தும் அறிவுரை வழங்க வேண்டும்.

தகவல் குறிப்பு 3

சாதாரண நாட்களைவிட கர்ப்பகாலம் முழுவதும் அனைத்து கருத்தரித்த பெண்களுக்கும் போதிய ஓய்வும் குறிப்பாக சத்து நிறைந்த உணவும் மிக அவசியம்.

ஒரு குடும்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுகின்ற உணவு வகைகள் சத்துள்ளவைகளாக இருத்தல் வேண்டும். பால், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, தானியங்கள், பச்சைப்பட்டாணி மற்றும் பீன்ஸ், போன்றவை கர்ப்பகாலங்களில் உண்ணக்கூடிய பாதுகாப்பான உணவுப் வகைகள் ஆகும்.

இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ மற்றும் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணும்போது அவர்கள் ஆரோக்கியத்துடன், நல்ல உடல் வலிமையுடனும் இருப்பதை உணருவார்கள். மேற்கூறிய சத்துக்கள் இறைச்சி, மீன், முட்டை, காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் போன்றவற்றில் அடங்கி உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை இரத்த சோகையை தடுப்பதற்கும், வைட்டமின்-ஏ குறைவினால் ஏற்படுகிற நோய்தொற்றிலிருந்து பாதுகாக்க வைட்டமின்-ஏ மருந்துகளையும் கருத்தரித்த பெண்களுக்கு வழங்கலாம். கருத்தரித்த பெண்கள் ஒரு நாளில் 10000 IU-க்கு (சர்வதேச அளவு) மேலாகவோ அல்லது ஒரு வாரத்தில் 25000 IU (இன்டர்நேஷனல் யூனிட்ஸ்) மேலாகவோ வைட்டமின்-ஏ மருந்துகளை கண்டிப்பாக உண்ணுதல் கூடாது.

அயோடின் கலந்து உப்புக்களையே உபயோகப்படுத்த வேண்டும். போதிய அளவு அயோடின் இல்லாத உணவை அருந்திய பெண்கள், கருக்கலைதல் மற்றும் உடல், மன ரீதியாக ஊனமுற்ற குழந்தைகளைப் பெறுவதற்கு ஏதுவாகிறார்கள். முன் கழுத்துப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிற காயிட்டர் என்ற நோய், ஒரு பெண் போதிய அளவு அயோடின் சத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் காட்டும் ஒரு அடையாளமாகும். இரத்தசோகை, மலேரியா, குடல்புழுக்கள் முதலியன இருப்பதாக சந்தேகப்பட்டால், உடனடியாக சுகாதாரப் பணியாளரிடம் அலோசனை பெறுவது நல்லது.

தகவல் குறிப்பு 4

புகைப்பிடித்தல், மதுபானம், போதை மருந்து, விஷம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பொருட்கள் முதலியன கருத்தரித்த பெண்களுக்கும், இளம் குழந்தைகளுக்கும் பெரும் தீங்குவிளைவிக்கிறது

கருவுற்ற பெண் புகைபிடிப்பதினாலும், அல்லது புகைபிடிப்பவர்கள் இருக்கின்ற சூழ்நிலைகளில் வாழ்வதினாலும், மது அருந்துவதினாலும், போதை மருந்து உட்கொள்வதினாலும் தனது மற்றும் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறாள். கர்ப்ப காலங்களில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் பரிந்துரை செய்யப்படாமலோ, தேவையில்லாமலோ கண்டிப்பாக மருந்து உட்கொள்ளக்கூடாது.

கருவுற்ற பெண் புகைபிடித்தால், எடைகுறைவான குழந்தை பிறத்தல், இருமல், சளி, நிமோனியா மற்றும் இதர சுவாசப் பிரச்சினைகள் ஆகிய பாதிப்புகளை அவளுடைய குழந்தை பெற வாய்ப்பு உள்ளன.

ஒரு குழந்தையின் நல்ல உடல், மன வளர்ச்சிக்கு, கருவுற்ற பெண்களும், இளம் குழந்தைகளும் புகையிலைப்புகை, சமையல்புகை, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பல விஷங்களிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும். மேலும் ஈயக்குழாய் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரில் காணப்படக்கூடிய ஈயம்(லெட்), வாகன மாசு, மற்றும் சில வகையான பெயிண்ட் வகைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்

தகவல் குறிப்பு 5

உடல் ரீதியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தகாதமுறையில் உபயோகிக்கப்படுவது பல சமூகங்களில் காணப்படுகிற சமுதாயப் பிரச்சினையாகும். குறிப்பாக கர்ப்ப காலங்களில் தவறாக உபயோகித்தால், அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

கருவுற்ற பெண்கள் தவறாக உபயோகப்படுத்தப்பட்டால், கருவிலுள்ள குழந்தையானது கடுமையான பாதிப்புக்குள்ளாகும். உடல்ரீதியாக தகாதவகையில் உபயோகிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணால் மீண்டும் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் இந்த ஆபத்தைக் குறித்த விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். மேலும் கருவுற்ற பெண்களை தவறாக உபயோகிப்பவர்களிடமிருந்து பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.

தகவல் குறிப்பு 6

ஆரோக்கியமான, கல்வி அறிவு பெற்ற, குழந்தைப்பருவம் மற்றும் இளம்வயதில் சத்து நிறைந்த உணவு உட்கொண்ட பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்பின்போது மிகக்குறைந்த பிரச்சினைகளையே சந்திப்பார்கள்.

பெண்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பது தங்கள் குடும்ப ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. குறைந்தபட்சம் ஏழு வருடம் பள்ளிப்படிப்பை உடைய ஒரு பெண், கல்வி அறிவே இல்லாதவர்களைக் காட்டிலும், மிக இளம் வயதில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. மேலும், சிறிது காலம்தாழ்த்தி திருமணம் செய்வதும் அதிகம்.

குழந்தை மற்றும் இளமைப் பருவங்களில் சத்தான உணவு உண்பதினால் கர்ப்பக் காலம், குழந்தை பிறப்புகளின் போதுள்ள பிரச்சினைகளை வெகுவாக குறைக்கிறது. பீன்ஸ், பருப்புவகைகள், தானியங்கள், கீரைவகைகள், மற்றும் சிவப்பு/மஞ்சள்/ ஆரஞ்சு நிற காய்கறிகள், பழ வகைகள் போன்றவை சத்தான உணவு வகைகள் ஆகும். எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுது பால், பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, முட்டை, மீன், கோழிக்கறி போன்றவைகளையம் சேர்த்துக் கொள்ளலாம்

பெண்களின் பிறப்பு உறுப்புக்களைத் துண்டிப்பது கடுமையான பிறப்பு உறுப்பு மற்றும் சிறுநீர் நோய்தொற்றுக்குக் காரணமாவதுடன், மலட்டுத்தன்மை மற்றும் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் குழந்தைபிறப்பின் போது ஆபத்தான பிரச்சினைகள் எழுவதற்கு காரணமாக அமைவதோடு, பெண்களை மனரீதியாக பிரச்சினைக்குள்ளாக்குகிறது.

தகவல் குறிப்பு 7

ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்புக் காலங்களில் மருத்துவ பராமரிப்பைப் பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறாள். மருத்துவ பராமரிப்பை அளிப்பவர்கள் தொழிற்நுட்ப ரீதியாக திறமையானவர்களாயும், கருவுற்ற பெண்களை மரியாதையுடன் நடத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

கர்ப்பம், பிரசவம், பிரசவத்திற்கு பின்பு ஆகிய காலங்களில் மருத்துவ ஆலோசனைகள் பெறக்கூடிய வாய்ப்பு பெண்களுக்கு இருந்தால், கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்பின் போதுள்ள பல்வேறு ஆபத்துக்களை தவிர்த்துவிட முடியும்.

அனைத்துப் பெண்களும் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் போன்ற குழந்தைப் பிறப்பு உதவியாளர்களது சேவையையும், தேவைப்பட்டால், அவசரகால மகப்பேறு உதவியையும், பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர்.

தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் தரமான பராமரிப்பை வழங்குவதால், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. மகப்பேறு வசதிகள் தேவைப்படுகிற அனைத்துப் பெண்களும், மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, அதன் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவச்செலவு பெண்கள் மருத்துவச்சேவையைப் பெறுவதற்கு தடையாயிருத்தல் கூடாது. பராமரிப்பை அளிப்பவர்கள் தரமான பராமரிப்பை அளிப்பதற்குத் தேவையான திறனுைடையவர்களாய் இருத்தல் வேண்டும். அனைத்துப் பெண்களையும் மரியாதையுடன் நடத்தவும், கலாச்சார வரையறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்திருக்கவும், பெண்களது நம்பகத்தன்மை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை மதித்து நடந்திடவும், சுகாதாரப் பணி செய்பவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்

 • கர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்களை
 • இந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள்
 • பேறுகாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள்
 • பேறுகாலத்திற்கு தேவையான அவசர வசதிகள்
 • பேறு காலத்திற்கு பின் தேவையான வசதிகள்

பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்படும் மரணத்திற்கான சில காரணங்கள்

சமுக காரணங்கள்

மருத்துவ காரணம்

பிரசவத்திற்கு தேவையான வசதிகள்

 • சிறிய வயதிலேயே திருமணம்
 • அடிக்கடி குழந்தை பெறுதல்
 • ஆண்குழந்தை வேண்டுமென இருத்தல்
 • ரத்த சோகை
 • ஆபத்து நிறைந்த அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பது

 

 • பிரசவத்தில ஏற்படும் தடைகள்
 • ரத்தபோக்கு அதிகமாகுதல்
 • டாச்சிமியா
 • தொற்றுநோய்கள் தாக்கம்
 • பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமை
 • மருத்துவ குழுவின் கவனக்குறைவு
 • மருத்துவ வசதி குறைவுகள்
 • மருத்துவ உதவியில் தாமதம்

 

கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை

கர்ப்பம் தரித்த நாள் முதல் பிரசவம் வரை பெண்கள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில மருந்துகள் இத்தகைய நேரங்களில் உடலுக்கு உகந்தது அல்ல என்பதால் நோய்வாய் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கர்ப்பமான உடனேயே சுகாதார மையத்திற்குச் சென்று பதிவு செய்தல் முக்கியம். கர்ப்ப நாட்களில் சுகாதார மையத்தில் "ஐந்து முறைப் பரிசோதனை" மிகவும் முக்கியம். எனவே, இப்பரிசோதனைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் சுகாதார மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் கட்டாயம் செல்ல வேண்டும்.

அளவுக்கு அதிகமான ரத்தப் அழுத்தம், சிறுநீரில் உப்புச்சத்து காணப்படுதல், கைகால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஆபத்தான "டாக்ஸீமியா" வுக்கு அறிகுறிகள்.

சுகாதார பழக்கங்கள்

தினமும் இருமுறை சோப்பு போட்டு குளித்து சுத்தமாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கடினதன்மை உடைய சோப்புகளை உபேயாகிக்க கூடாது. சரியான பொருத்தமான உள் ஆடைகளை அணிய வேண்டும்

பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்

 • ரத்தம் கலந்த நீர்கசிவு ஏற்படுவது
 • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
 • தொடர்ந்து நீர் கசிவு ஏற்படுவது

ஆபத்திற்கான அறிகுறிகள்

 • அதிக அளவில் இரத்த போக்கு ஏற்படுவது
 • கடுமையான தலைவலி மற்றும் கண் இருட்டுதல்
 • மயக்கமான உணர்வு அல்லது வலிப்பு
 • 12 மணி நேரம் வலி தொடர்ந்து இருத்தல்
 • பிரசவம் ஆன அரை மணி நேரத்திற்கும் பிறகும் நஞ்சுக் கொடி (பிளசென்டா) வராமல் இருத்தல்
 • குறை பிரசவம் ஏற்படுதல்(மாதங்கள் ஆவதற்க்கு முன் குழந்தை பிறப்பது)
 • தொடர்ந்து ஏற்படும் வயிறுவலி

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள்

 • காய்ச்சல் அல்லது வயிறு வலி இருக்கும் போது
 • மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும்போது
 • கருவின் அசைவு குறைந்து காணப்படும்போது
 • அதிக அளவில் வாந்தி ஏற்பட்டு எதுவும் சாப்பிட முடியாத சூழ்நிலையில்

இரத்தம் தேவைப்படும் போது தயார் நிலையில் இருப்பது

பிரசவ நேரத்தில் அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவது நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில் இரத்தத்தின் வகை தெரிந்து கொண்டு அதே வகை ரத்தத்தை ஏற்றிக் கொள்வது ஆபத்தை தவிர்க்க உதவும்.

பிரசவத்திற்கு பின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்

பிரசவத்திற்கு பின் 50% உயிரிழப்புகள் நேரிடுவதை பரிசோதனைகள் தெரிவிக்கின்றது. பிரசவத்திற்குப் பின் 1 வார கால கட்டம் மிக முக்கியமானது. கர்ப்பபை, சிறுநீர்பை இவைகளில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் சூழநிலையில் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் காணப்படும் ஆபத்தான அறிகுறிகள்

 • மயக்கம் மற்றும் வலிப்பு வருதல்
 • அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது
 • காய்ச்சல்
 • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
 • வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு
 • வலி வீக்கம் ஆகியவை காலிலோ அல்லது மார்பிலோ காணப்படுகிறது
 • சிறு நீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது
 • கண்இமை நாக்கு உள்ளளங்கை வெளிரி காணப்படுவது

பிரசவத்திற்கு பின் மருத்துவமனைக்கு செல்வது

பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வது அவசியம். குழந்தை மற்றும் தாய் சரியாக உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்.

உணவு மற்றும் ஓய்வு

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க இயலும். பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சரியான அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வேலைகள் தவிர்க்க வேண்டும்.

சுகாதாரம்

தினமும் இருமுறை குளிப்பதும் இயற்க்கை கழிப்பிற்கு பின் சோப் உபேயாகித்து கைகால்களை சுத்தம் செய்வதும் ரத்தப் போக்கு இருப்பின் சுத்தமான சானிடரி நாப்கின்களை உபேயாகப்படுத்துவதும் பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 4-6 மணி நேரங்களுக்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றிக் கொள்வதும் அவசியம். குழந்தையை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது பால் அளிக்கும் போதோ கைகளை சுத்தமாக கழுவி பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சேயின் நலத்தை காத்துக் கொள்ள முடியும்.


உடல்நலம்

கேள்வி பதில்கள்

கர்ப்பம் என்றால் என்ன?

கர்ப்பம் என்பது கர்ப்பமுறுதலில் இருந்து குழந்தைப்பேறு வரை உள்ள காலகட்டம் ஆகும். முட்டை விந்தணுவால் சினைப்படுத்தப்பட்ட பின் அது கருப்பையின் உட்புறத்தில் பதியமாகி நஞ்சுக்கொடியாகவும் முளையமாகவும் (முதிராக்கரு) பின் முதிர்கருவாகவும் உருவாகிறது. கர்ப்ப காலம் பெண்ணின் இறுதி மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி பொதுவாக 40 வாரங்கள் நீடிக்கின்றன. இது மூன்று மாதங்களை உள்ளடக்கிய மூன்று மும்மாதகாலமாக பகுக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் வயிற்றுவலி ஏன் வருகிறது?

கர்ப்ப காலத்தில் வயிற்றில் உண்டாகும் அசௌகரியங்கள் இயற்கையே. அதில் தீங்கு எதுவும் இல்லை. கடுமையானதும் தொடர்ந்து இருப்பதுமான வயிற்றுவலியை அலட்சியப் படுத்தக் கூடாது. வயிற்று வலியுடன் வெள்ளைபடுதல், இரத்தப்போக்கு, காய்ச்சல், குளிர், பிறப்புறுப்புக் கசிவு, மயக்கம், சிறுநீர் கழிக்கும்போது சிரமம் ஆகியவற்றுடன் ஓய்வுக்குப் பின்னும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்:

 • வயிற்று அல்லது இடுப்பு வலியோ அசௌகரியமோ,
 • பிறப்புறுப்புக் கசிவு அல்லது இரத்தப்போக்கு (சிவப்பு அல்லது பழுப்பு, அதிகம் அல்லது குறைவு, தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு). உடல் செயல்பாடு, மலம் கழித்தல் அல்லது இருமும்போது வலி அதிகமாதல்.
 • தோளில் வலி.
Filed under:
3.06956521739
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top