অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்

அக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்

ஒழுங்கற்ற மாதவிடாய்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சுற்றில் வழக்கத்திற்கு மாறாக மாற்றங்கள், அதாவது மாதவிடாய்ப் போக்கின் நிறம், அளவு, காலம், மற்றும் அதனுடன் இணைந்த குறிகள் இவற்றில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஒழுங்கற்ற மாதவிடாய் எனப்படுகிறது. பொதுவாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம்

1. முந்திய மாதவிடாய் சுற்று

2. தாமதித்த மாதவிடாய் சுற்று

3. முறையற்ற மாதவிடாய் சுற்று

என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பொதுவாக மாதவிடாய் சுற்று என்பது 28 நாட்கள் (காலம் மற்றும் இடைவெளி சேர்த்து) என்று கணக்கிடப்படுகிறது. வழக்கமான மாதவிடாய் வெளிப்படும் நாளுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் முன்னதாக அல்லது மாதம் இருமுறை வெளிப்படும் போக்கு என்பது முந்திய மாதவிடாய் சுற்று என்றும், வழக்கமான மாதவிடாய் நாளுக்கு தாமதமாக எட்டு அல்லது ஒன்பது நாட்களுக்குப் பிறகோ அல்லது 40 முதல் 50 நாட்களில் (அல்லது அதற்கும் தாமதமாக) வெளிப்படும் மாதவிடாய்ப் போக்கு என்பது தாமதித்த மாதவிடாய் என்றும் அழைக்கப்படுகிறது.

வெளிப்புற நோய்க் காரணிகள், குளிர், வெப்பம், ஈரம் மற்றம் கவலைகள், ஒழுங்கற்ற முறையற்ற பாலியல் வாழ்க்கை, ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறுதல் போன்ற காரணங்களால் இரத்தம் மற்றும் சக்தி(Q1) இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் சீர்குலைவு ஏற்படுகிறது. இந்த சீர்குலைவு கூடுதல் சக்தி ஓட்டப்பாதைகளான ‘சோங்’ (chong) மற்றும் இன விருத்தி சக்தி (Ren) ஓட்டப்பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு காரணமாக அமைகின்றன.

காரணமும், நோயின் போக்கும்

A.முந்திய மாதவிடாய்

I. இரத்தத்தில் வெப்பத்தன்மை: அபரிதமான உள்உடல் வெப்பம் காரணமாக, அதாவது ‘யின்’ தன்மை குறைவதாலும் ’யாங்’ தன்மை அதிகமாவதாலும் முந்திய மாதவிடாய் ஏற்படுகிறது. காரசாரமான உணவுகள் சாப்பிடுவது, கருப்பையில் வேலை செய்யக்கூடிய, வெப்பத்தை உண்டாக்க கூடிய மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, தேக்க மடைந்த கல்லீரல் சக்தியிலிருந்து மாற்றப்பட்ட வெப்பம் இவைகளால் இனவிருத்தி மற்றும் ’சோங்’ சக்தி ஓட்டப் பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளே முந்திய மாதவிடாய் சுற்றிற்கு காரணமாகின்றன.

II. சக்திகுறைபாடு: அதிகப்படியான உழைப்பு, முறையற்ற சத்தியில்லாத உணவுகள் மண்ணீரல் பலவீனமடைவதற்கு காரணமாவதாலும், மத்திய வெப்பமண்டலப் பகுதியில் ஏற்படும் சக்தி குறைபாடு மாதவிடாய்ப் போக்கை கட்டுபடுத்த தவறுவதாலும் முந்திய மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது. “அதிகப்படியான உள் உடல் வெப்பத்தை நாடி பிரதி பலிக்கவில்லையெனில், கல்லீரல் மற்றும் இருதயத்தின் சக்தி குறைபாடு காரணமாக இரத்தம் கட்டுபடுத்தத் தவறும் பட்சத்தில் முந்திய மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

B.தாமதமான மாதவிடாய்

I. இரத்தக்குறைவு: நாள்பட்ட நோய்கள் மற்றும் ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரணங்களால் நாள்பட்ட இரத்தப் போக்கு, பலவீனம் ஏற்பட்டு இரத்தம் கெட்டுப் போய்விடுகிறது. ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்களும், அதிகப்படியான உழைப்பும் மண்ணீரல் மற்றும் இரைப்பையை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக, இனவிருத்தி மற்றும் சோங்சக்தி ஓட்டப் பாதைகளில் இரத்தக் குறைவு ஏற்படுகிறது. முடிவு தாமதமான மாதவிடாய் சுற்று ஆகிறது.

II. இரத்தத்தில் குளிர்தன்மை: இது பெரும்பாலும், தொடர்ச்சியான ‘யாங்’ தன்மையில் குறைபாடு மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படுவதால் ஏற்படுகிறது. அதிகப்படியான பக்குவப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுவதாலும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதாலும், மழை மற்றும் குளிரில் அடிபடுவதாலும் தாமதமான மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது. நோயை உண்டாக்க கூடிய குளிர்தன்மை இனவிருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகளை தாக்குவதால் சுலபமான இரத்த ஓட்டத்திற்கு தடையை உண்டு பண்ணுகிறது. இதன் காரணமாக தாமதமான மாதவிடாய்ச் சுற்று ஏற்படுகிறது.

III. தேக்கமடைந்த சக்தி : உணர்ச்சிகளின் அழுத்தத்தால் சக்தி(ண1) யின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதன் காரணமாக சக்திக் தேக்கம் நிகழ்கிறது. இந்த சக்தித் தேக்கம் இயல்பான இரத்த ஓட்டத்தை தடை செய்வதன் காரணமாக இனப்பெருக்க மற்றும் சோங் சக்தி ஓட்டப் பாதைகளில் இயல்புக்கு மாறான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால் சரியான காலத்தில் இரத்தத் தொகுப்பு உருவமைக்கப்பட முடியாது போகிறது. அப்பொழுது தாமதமான மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

C. முறையற்ற மாதவிடாய் (காலம் மற்றும் இடைவெளிகளில்) சுற்று

I. கல்லீரல் சக்தித் தேக்கம் : கடும் கோபத்தின் அழுத்தம் கல்லீரலை சேதப்படுத்தி சேமித்து வைக்கப்பட்ட இரத்தத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றது. இது இனப்பெருக்க மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகளில் இரத்தத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது இதனால் முறையற்ற மாதவிடாய்சுற்று உண்டாகிறது.

II சிறுநீரகத்தில் குறைபாடு : பக்குவப்படாத வயதிற்கு முன் செய்யப்படும் திருமணம் (18 வயதிற்கு முன்) முறையற்ற இஷ்டப்படியான பாலியல் வாழ்க்கை முறை ஒரே பிரசவத்தில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரணங்கள் சிறுநீரக பலத்தை குறைக்கின்றன. இந்தச் செயல்பாடுகள் சாரத்தையும் இரத்தத்தையும் உட்கொள்கின்றன. சிறுநீரகம் தன் செயல்பாடுகளான சாரத்தை சேமித்தல் மற்றும் இனப்பெருக்க, சோங் சக்தி ஓட்டப்பாதைகளை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்யத் தவறும் பொழுது முறையற்ற மாத விடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

குறிகளை வேறுபடுத்திப்பார்த்தல்

A. முந்திய மாதவிடாய்ச்சுற்று

I. இரத்தத்தில் வெப்பத்தன்மை

குறிகளின் முக்கியவெளிப்பாடுகள்

குறுகியகால மாதவிடாய் சுழற்சி, அடர்த்தியான, அடர்சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு, அதிக அளவு போக்கு அமைதியின்மை, நெஞ்சில் நிறைந்த உணர்வு, பழுப்பு நிற சிறு நீர், மஞ்சள் படிவத்துடன் சிவந்து காணப்படும் நாக்கு, வேகமான, பலமான நாடி

குறிகளைப் பகுத்தாய்தல்

அடர்த்தியான, அடர்சிவப்பு நிற, ஏராளமான போக்கு உள் உடல் வெப்பத்தைக் குறிக்கிறது. இந்த உள் உடல் வெப்பம் கல்லீரல் மற்றும் இருதயத்தின் ஆற்றலைக் குறைப்பதால் அமைதியின்மை மற்றும் நெஞ்சில் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த உடல் உள்வெப்பமானது இருதயத்திலிருந்து சிறுகுடலுக்கு இறக்கம் செய்யப்படும்பொழுது குறைவான அடர் மஞ்சள் நிற சிறுநீர் உற்பத்தியாகிறது. நாக்கில் மஞ்சள் படிவமும், துரிதமான நாடியும் உடல் உள்வெப்பத்தை குறிக்கிறது.

II.சக்தி குறைபாடு

குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள் : ஏராளமான, மெல்லிய நீர் போன்ற இளஞ்சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு, குறைவான சுழற்சிக்காலம், உடல் மற்றும் மனத்தளர்ச்சி படபடப்பு, குட்டைசுவாசம், அடிவயிற்றில் காலியாகவும், கனமாகவும் இருப்பது போன்ற உணர்வு (தன்னிச்சையாக மனதில் எழும்), மெல்லிய படிவத்துடன் காணப்படும் வெளுத்த நாக்கு பலவீனமான நாடி.

குறிகளைப் பகுத்தாய்தல்

மண்ணீரல் சக்தியானது மத்திய வெப்ப மண்டல ஆதிக்கம் செலுத்தி இரத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது., அங்கு இன விருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப் பாதைகளின் இடையூறுகள், ஏற்படுத்தினால், ஏராளமான, மெல்லிய, இளஞ்சிவப்பு நிறப்போக்கு குறைந்த கால மாதவிடாய் சுழற்சிக்கு அல்லது முந்திய மாதவிடாய் சுற்றுக்கு வழிவகுக்கிறது. உடல், மனதளர்ச்சி கட்டை சுவாசம் மற்றும் அடி வயிற்றில் காணப்படும் காலியான கனமான உணர்வு சக்தி குறைபாட்டின் அடையாளங்களாகவும் மற்றும் பலவீனமான நாடியும் (சக்தி குறைபாட்டின் அடையாளம்) காணப்படுகிறது.

B. தாமதமான மாதவிடாய்

இரத்தக்குறைவு

குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்: குறைவான சுழற்சிக்காலத்தில், குறைவான இளஞ்சிவப்புநிற மாதவிடாய்ப்போக்கு, அடிவயிற்றில் காலியான வலி நிறைந்த உணர்வு, உடல் இளைப்பு, மஞ்சள் நிற வெளிறிய உடல், பொலிவிழந்த தோல் (சருமம்), கிறுகிறுப்பு, தலைசுற்றல், மங்கலான பார்வை, படபடப்பு, தூக்கமின்மை மற்றும் மெல்லிய படிவத்துடன் கூடிய வெளிர்சிவப்பு நிற நாக்கு பலவீனமான நூல் போன்ற மெல்லிய நாடி

குறிகளைப் பகுத்தாய்தல்

நாள்பட்ட நோய்களில் அடிபட்டதால் அல்லது நாள்பட்ட இரத்தப்போக்கினால் பலவீனமான உடல்வாகு அமையப் பெற்றால், அவர்களுக்கு சரியான நேரத்தில் இரத்தம் உருவாக்கப்பட்டு, இரத்தத்தொகுப்பு உருவமைக்கப் பட முடியாத காரணத்தால் குறைவான, இளஞ்சிவப்பு நிற இரத்தப்போக்கு, குறைவான சுழற்சிக்காலத்தில் ஏற்படுகிறது. இரத்தம் கருப்பையை பராமரிக்கத்தவறும் பொழுது அடிவயிற்றில் வலி நிறைந்த, காலியான உணர்வு காணப்படுகிறது. சக்தி ஓட்டப்பாதைகள், இரத்த நாளங்கள், தசைகள் மற்றும் சருமம் இவைகளுக்கு சரியான போஷக்கு கிடைக்காத பொழுது, உடல் இளைப்பு, மஞ்சள் நிற வெளிறிய உடல், பொலிவிழந்த தோல் போன்ற குறிகள் தோன்றலாம். கல்லீரலுக்கும், இருதயத்திற்கும் இரத்தத்தால் ஊட்டமளிக்கத் தவறும் பட்சத்தில் கிறுகிறுப்பு, மங்கலான பார்வை படபடப்பு மற்றும் தூக்கமின்மை உண்டாகிறது. நாக்கிற்கு சரியான ஊட்டம் கிடைக்கப் பெறாததால் இரத்த நாளங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் வெளிர்சிவப்பு நிற (டண்ய்ந் ஸ்ரீர்ப்ர்ன்ழ்ங்க்) நாக்கு மற்றும் பலவீனமான நூல் போன்ற மெல்லிய நாடி காணப்படுகிறது.

II. இரத்தத்தில் குளிர்ந்த தன்மை

குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்

தாமதமான மாதவிடாய்ச்சுழற்சியில் கருநிற போக்கு, அடிவயிற்றில் கீழ் வலி வெப்பத்தால் சற்று மட்டுப்படும். ஆழமான, மெதுவான நாடி (குறிகளைப் பகுத்தாய்தல்

மாதவிடாய்க்காலங்களில் நோய்த்தன்மையான குளிரின் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனால் தாமதமான மாதவிடாய்ச் சுற்று, குறைவான மற்றும் கருநிறப்போக்கு காணப்படுகிறது. கருப்பையில் உள்ள குளிர்ச்சி (குளிர்தன்மை) இயல்பான சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தை தடைசெய்கிறது. மேலும் அங்கு வலி விட்டு விட்டு தோன்றுகிறது. (அடிவயிற்றில்). இயல்பிலேயே குளிரிச்சி தன்மையை உடைய ‘யின்’ ‘யாங்’ தன்மையை சேதப்படுத்துகிறது. மேலும் கை, கால்களில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. நாக்கில் மெல்லிய வெண்மையான படிவமும், ஆழமான மெதுவான நாடியும் குளிர்ச்சிதன்மையின் சம்பந்தப்பட்ட நோய்க் குறிகளின் அடையாளமாக காணப்படுகிறது.

III சக்தி தேக்கம் குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்

கருஞ்சிவப்பு நிற போக்குடன் குறுகியகால மாதவிடாய் சழற்சி, அடிவயிற்றில் உப்பிசத்துடன் கூடிய வலி, மன அழுத்தம், அடைபட்ட நெஞ்சு (மூச்சு விட சிரமம்) எதிர்களித்தால் சற்று மட்டுப்படும், மார்பு சார்ந்த வயிற்றுப் பகுதியிலும் மார்பகப் பகுதிகளிலும் வீக்க உணர்வு, நாக்கில் மெல்லிய வெள்ளை நிறப் படிவம் மற்றும் வீணை தந்தி போன்ற விறைப்பான நாடி.

குறிகளைப் பகுத்தாய்தல்

தேக்கமடைந்த கல்லீரல் சக்தி தடைபட்ட இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது, மேலும் அடிவயிற்றில் உப்பிசத்துடன் கூடிய வலியுடன் குறைவான, தாமதமான மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடுகிறது. சக்தி (Q1) சுலபமாக பயணம் செய்யத் தவறும் பட்சத்தில் மன அழுத்தம், அடைபட்ட நெஞ்சு (மூச்சு விட சிரமமான) போன்ற குறிகள் காணப்படுகின்றன. கல்லீரல் சக்தி ஓட்டப்பாதை மார்பு, விலா எலும்புகளுக்கு அருகில் செல்வதால் கல்லீரல் தேங்கிய சக்தி மார்பகம் மற்றும் மார்பு சார்ந்த வயிற்றுப் பகுதிகளில் ஒரு வித (வீக்கத்தை) உப்பிசத்தை உண்டாக்குகிறது. கல்லீரல் குறைபாடு மற்றும் கல்லீரல் சக்தி தேக்கத்தின் ஒரு குறிப்பிடப்படக்கூடிய அடையாளமாக வீணை தந்தி போன்ற விறைத்த நாடி காணப்படுகிறது.

C. முறையற்ற் மாதவிடாய் சுற்று

கல்லீரல் சக்தித் தேக்கம் குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்

மாதவிடாய் சுழற்சி மற்றும் இரத்தப்போக்கின் அளவில் மாற்றம். அடர்த்தியான, பிசுபிசுவென்று ஒட்டக்கூடிய, நீலம் கலந்த சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு சிரமமான போக்கு, மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியில் உப்பிசம், அடிவயிற்றுப் பகுதியில் உப்பிசத்துடன் வலி, மன அழுத்தம் அடிக்கடி பெருமூச்சு விடுதல், நாக்கில் மெல்லிய மென்மையான படிவம் மற்றும் வீணைதந்தி போன்ற விறைப்பான நாடி

குறிகளைப் பகுத்தாய்தல்

கடுங்கோபத்தின் அழுத்தத்தினால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டு இயல்பற்ற சக்தி மற்றும் இரத்த ஓட்டத்திற்கு வழிகாட்டுகிறது. இச்செயல்பாடு இரத்தத் தொகுப்பில் இடையூறு ஏற்படுத்தி முடிவில் மாதவிடாய் சுழற்ச்சியிலும், இரத்தப் போக்கின் அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கல்லீரல் சக்தியின் தேக்கம் தடைபட்ட இரத்த ஓட்டத்திற்குக் காரணமாகிறது. சிரமமான போக்கை உண்டாக்குகிறது. மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியிலும் மார்பகப் பகுதிகளிலும் உப்பிசத்தையும், அடிவயிற்றுப் பகுதிகளில் உப்பிசத்துடன் கூடிய வலியையும் ஏற்படுத்துகிறது. அடிக்கடி பெருமூச்சு விடுவதால் தேக்கமடைந்த சக்தியை சற்று விடுவிக்கலாம். கல்லீரல் சக்தி தேக்கத்தின் ஒரு குறிப்பிடப்படும் படியான அடையாளமாக தந்தி வீணை போன்ற விரைப்பான நாடி காணப்படுகிறது.

சிறுநீரக குறைபாடு குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்

மாறுபட்ட மாதவிடாய்ச் சுற்றில், குறைந்த அளவிலான, இளஞ்சிவப்பு நிற இரத்தப் போக்கு, கிறுகிறுப்பு, செவியிரைச்சல், அடிமுதுகு மற்றும் முழங்கால் மூட்டுக்களில் வலி, பலவீனம் காணப்படும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்,தளர்ந்த மலம், வெளுத்த மெல்லிய படிவத்துடன் கூடிய நாக்கு, ஆழமான பலவீமான நாடி ஆகிய குறிகள் காணப்படுகின்றன.

குறிகளைப் பகுத்தாய்தல்

சிறுநீரக சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, பாதிக்கப்பட்ட செயல்பாடுகளுடைய இனவிருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகள் மாதவிடாய்ப் போக்கில் ஒழுங்கற்ற நிலையை உண்டாக்குகிறது. மேலும் இரத்தத் தொகுப்பின் கட்டுமானத்தில் (உருவாக்கத்தில்) வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இச்செயல்பாடுகள் மாதவிடாய் சுற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பற்றாக்குறைவான சிறுநீரக சக்தி, சாரத்தையும் இரத்தத்தையும் படிப்படியாக குறைத்து விடுவதால் அது குறைவான, அடர்த்தியற்ற இளஞ்சிவப்பு நிற மாதப்போக்கிற்கு அடிகோல்கிறது. சிறுநீரகம் எலும்புகளில் செயல்பாட்டை காட்டுகிறது. மஜ்ஜையை உருவாக்குகிறது. சிறுநீரக சக்தி ஓட்டப்பாதை காதில் திறக்கிறது. மேலும் இடுப்பு வழியாக பயனிக்கிறது. அதனால் சிறுநீரகத்தின் குறைபாடுடைய நிலை - மஜ்ஜை உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது, செவித்திறனைக் குறைக்கிறது. மற்றும் செவியிரைச்சல் உண்டாகிறது. இடுப்புப் பகுதியில் ஊட்டசக்தி குறைவுபடுவதால் அடிமுதுகிலும் முழங்கால் மூட்டிலும் பலவீனம் மற்றும் புண் போன்ற வலியை உண்டாக்குகிறது. சிறுநீரைக் கட்டுப்படுத்த தவறுவதால் அடிக்கடி சிறுநீர் வெளிப்படுகிறது, மேலும் மலக்குடலிருந்து மலம் வெளித்தள்ளப் படுவதால் தளர்ந்த மலம் அடிக்கடி வெளிப்படு கிறது. வெளுத்த மெல்லிய படிவத்துடன் கூடிய நாக்கு மற்றும் பலவீனமான ஆழமான நாடி, சிறுநீரகத்தில் ‘யாங்’ தன்மை குறைபாட்டைக் காட்டுகிறது.

ஆதாரம் : உடலும் மருந்தும் நூல்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate