பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்களே பேப் ஸ்மியர் பரிசோதனை

பெண்களே பேப் ஸ்மியர் பரிசோதனை பற்றிய குறிப்புகள்

நோய் கண்காணிப்பு

  • கர்ப்பப்பை வாய்ப் பகுதியில்  உள்ள அணுக்களில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் எனப்படும்.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைப் பொருத்தவரை, 95 சதவீத பெண்களுக்கு வைரஸ் காரணமாகவே ஏற்படுகிறது. அதாவது, பாலுறவில் தொடர்ந்து ஈடுபடும் பெண்களுக்கு "எச்பிவி' எனப்படும் "ஹூமன் பாப்பிலோமா வைரஸ்' காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் ஏற்படுகிறது.

எளிய-செலவில்லாத பரிசோதனை

  • அதிர்ஷ்டவசமாக, ஒரு எளிமையான, குறைவான செலவினம் கொண்ட மற்றும் நம்பத்தக்க சோதனை முறையான "பேப் ஸ்மியர்' என்ற பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயை, எளிதில் அது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்.
  • கர்ப்பப் பை வாயின் மேற்பரப்பிலிருந்து அணுக்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்; இந்தச் சோதனையில் புற்று நோய் உண்டாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பேகூட வழக்கத்துக்கு மாறான செல்களை அடையாளம் காண முடியும்.
  • பாலுறவில் இடைவிடாது ஈடுபடும் அனைத்துப் பெண்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 21 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் "பேப் ஸ்மியர்' பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

Filed under:
2.97945205479
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top