பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

உதவி

பின்வரும் தலைப்புகள் இத்தளத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும்.

தளத்தின் பகுதிகள்

விகாஸ்பீடியா தமிழ் வலைதளம் ஆறு துறை சார்ந்த தகவல்களை வழங்குகிறது. அவை வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூகநலம், எரிசக்தி மற்றும் மின்னாட்சி ஆகும். ஒவ்வொரு துறை பற்றியும் சுருக்கமானத் தகவல்கள் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை

வேளாண்மை பகுதியில் வேளாண்கடன், கொள்கைகள் மற்றும் திட்டங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு, காலநிலை மற்றும் சந்தை நிலவரம், சிறந்த நடைமுறைகள், பண்ணைமுகமை, வேளாண் (கல்வி) நிறுவனங்களின் தகவல் களஞ்சியம் முதலியன பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

உடல்நலம்

உடல்நலம் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மட்டுமின்றி சுகாதாரம், பொதுவான நோய்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள், முதலுதவி மற்றும் மனநலம் போன்றவற்றை பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி

கல்வி பகுதி, குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தை உரிமைகள் மற்றும் தரமான கல்வி போன்றவற்றை உள்ளடக்கிய கற்றல் வளங்களை வழங்குகிறது.

மின்னாட்சி

மின்னாட்சி பகுதியில் பொதுமக்களுக்கான இணையதள சேவைகள், குறிப்பிட்ட மாநிலத்தின் மின் நிர்வாக தொடக்கம், மொபைல்வழி சேவைகள், தகவல்பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன..

சமூக நலம்

சமூக நலப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தை நல மேம்பாடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் நலம், வறுமை ஒழிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி

எரிசக்தி பகுதியில் தொழில்நுட்பம், சிறந்த நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள், எரிசக்தி சேமிப்பு தொடர்பான தகவல்கள், மேம்படுத்தப்பட்ட எரிசக்தி திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்தல் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் சேவைகள்

இ - வியாபார் (மின் வணிகம்)

இ-வியாபார் என்பது வாங்குவோர் விற்போருக்கான களம் ஆகும். இதில் வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான பரிமாற்றுத் தகவல்கள் வழங்குகின்றது. இது இணைய வர்த்தக மையமாக விளங்கி உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களைச் சமூகத்தில் பெருவாரியான பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தி விற்கவும் வாங்குவோருக்கு உதவும் வகையில் அமைகிறது. பயனாளிகள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்கவும் வாங்கவும் செய்யலாம்.

வல்லுநரைக் கேட்போம்

உத்தவாதமாக திறன்வாய்ந்த வகையில் ஒத்துழைப்பு மனப்பான்மையில் பயனாளிகளும் வல்லுநரும் தொடர்பு கொள்ள இந்த இணையப்பக்கம் பயன்படும். தனிப்பட்டோர் சேவையினை நோக்கமாக கொண்டு பயனாளிகளுக்கு உத்தரவாதமான முறையில் துல்லியமாக அவர்களின் கேள்விகளுக்குக் குறிப்பாக அவர்களது வாழ்விடப்பாதுகாப்போடு வல்லுநரிடம் பதில் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயானாளிகள் வேளாண்மை, கல்வி, மின் நிர்வாகம்,தொடர்பான கேள்விகளை வரவேற்கிறோம்.

பொதுஅறிவு வினாடிவினா

இந்த இணையவழி வினாடிவினா. குழந்தைகளின் பொது அறிவு அளவை மேம்படுத்தி அவர்களது செயல்பாட்டையும் தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வடிவகைப்பட்டுள்ளது. 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் இந்த வினாடிவினாவில் பங்கேற்கலாம்.

மறுஅழைப்பாளர்

இந்த இணையச் சேவையானது பயனாளர்கள் நிர்வகிக்கும/முதன்மையான நிதிச் செயல்பாடுகளைத் திட்டமிடவும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பியோ அல்லது மின்அஞ்சல் கவன ஈர்ப்பு தந்து அவர்களுக்கு நிலுவை பணம் செலுத்த / நிதித்தயாரிப்புகள் முதிர்ச்சி அடைந்திருப்பதையும் தெரிவிக்கப்படும்.

கிராமத் தொழில்முனைவோர் பக்கம்

இந்தக் களம் ஒரு சிறப்பான களமாக கிராமஅளவில் தொழில் முனைவோருக்கு (VLES) இந்தியா முழுவதும் பொதுச்சேவை மையமாக அமைந்து அவர்களது அனுபவங்களைப் பகிர்வதோடு அவர்களுக்கு விருப்பமானவற்றைப்பற்றிக் கலந்தாலோசிக்கவும் அமைந்திருக்கிறது. மேலும் இது கிராமத் தொழில்முனைவோருக்குப் பயனுள்ள வளங்களைத் தரும்.

மின் கற்றல்

பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், சேவைவேண்டிய குழுவினர் ஆகியோருக்கு திறன்களையும் அறிவையும் வழங்கிட பலமொழியில் பாடத்திட்டம் அமைத்து, வேளாண்மை தகவல் அறியும் உரிமை, நிதி ஆதாரம் போன்றவற்றைத் தெரிவிக்க ஏற்படுத்தப்பட்ட கற்றல் பாடங்கள் அமைந்துள்ளன. நடமாடும் மகப்பேறு நல அறிவுறுத்தல் (Moblie based maternal Health Awarness – MOTHER ) ‘மதர்’ எனப்படும் நடமாடும் சேவையைப்பயன்படுத்தி பேறுகாலத்திற்கு முன்னும் பின்னும் குழந்தைபாதுகாப்பு பற்றி குரல்வழி தனிப்பட்ட தகவல்களைத் தருகிறது. நேரடியாக கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களது அலை பேசி வழியாகத் தகவல் தரப்படும்.

கற்றல் வளங்கள்

குழந்தைக்களுக்கான மின்னணுகற்றல் வளங்கள், மின்னணு கற்றல் வளங்களான அறிவியல், கணிதம், மொழி மற்றும் பல பாடங்கள் பல முகவர்கள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளனர்.

சிசு சம்ரக்ஷாக்

சிசு சம்ரக்ஷாக் என்ற பண்மொழிப் பல்லூடக வளமானது யுனிசெப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிசு மற்றும் முன்பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான தகவல்களை வழங்குகிறது.

அடிப்படை தகவல்தொழிற்நுட்ப அறிவு மையச் செயலிகள்

அடிப்படை வன்பொருள் தீர்வுகள் அடங்கிய கையேடு இது. இந்தி , தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இக்கையேடு கிடைக்கிறது.

பல்லூடகத் தயாரிப்புகள்:

ஊட்டச்சத்தும் உடல்நலமும்

இந்தப் பண்மொழித் தொகுப்புக் குறுந்தகடு இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் (ICMR) ஓரங்கமான தேசிய ஊட்டச்சத்து நிறுவன (NIN) த்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகட்டில் உள்ள செய்திகள் நான்கு முதன்மைத் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அவையாவன.

உங்கள் உணவை அறிந்து கொள்ளுங்கள், ஊட்டச்சத்து தேவையும் அவை கிடைப்பதும், உணவும் நோய்களும், உணவுப் பாதுகாப்பு, இந்தக் குறுந்தகடு- சமூகநலப்பணியாளர்களுக்கும். இணைமருத்துவர் மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் இல்லத்தரசிகள், மற்றும் யாரெல்லாம் உணவுபற்றியும் உண்பதால் ஏற்படும் நன்மை மற்றும் நலமுடன் வாழ்க்கை முறையைப் பாதுகாக்க விரும்புகிறார்களோ அவர்களெல்லோரும் வைத்திருக்க வேண்டியது. இந்தக் குறுந்தகடு இந்தியாவின் ஆறுமொழிகளிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

மருத்துவ, நறுமண சாயத்தாவரங்களைப் பாதுகாத்தல்

54 வாணிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ, நறுமண, சாயத்தாவரங்கள் தேசிய மருத்துவதாவரங்கள் கழகத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டவை பற்றிய தகவ்லகளை உள்ளடக்கிய குறுந்தகடு அமைந்துள்ளது. தயாரிப்பு பற்றிய தகவல் சுருக்கமும், தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றியும் உள்நாட்டு மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றது.

கடைசி நெல் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைப்பதற்கு உரிய கையேடு

பல்லூடக் குறுந்தகடு C.C.D மதுரை தமிழ்நாடு என்ற அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டது. பேரிடர் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைத்து முதன்மைத் தேவைக்காக முன்னிலைப்படுத்தும் 4 புள்ளி நிலைப்பாட்டின் முழுப்பார்வை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் காவிரியின் டெல்டா பகுதி (கழிமுகப்பகுதி) யில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலத்தின் விவசாயிகளுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிக் கண்டுபிடித்த நுட்பமாகும் இது. இந்த நிலைப்பாடுகளைச் செயல்படுத்தும் முறைகளைப் பயன்படுத்த உதவக்கூடிய சுருக்கமான முழுப்பார்வை குறுந்தகட்டில் உள்ளது. இந்தப் பல்லூடக வளமானது தானே கற்றல் கருவியாகப் பயன்படுகிறது. மேலும் பயிர்செய்யும் நிலத்தை மேம்படுத்தும் பணியாளர்கள், ஆய்வாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் ஆகியோருக்குப் பயிற்சிகையேடாகவும் அமைந்துள்ளது. இந்தத் தயாரிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

வலுவான (தொடர்) விவசாயம் சஸ்திரா விவசாயம்

இந்தத் தயாரிப்பு வலுவான பயிர் உற்பத்திப் பயிற்சிகளைப் பெருவாரியான சான்றுகளுடனும் வயல் மையமிட்ட(வீடியோ) காணொலிக் காட்சிகளுடனும் மேற்கொள்வதைப்பற்றிக் கூறுகிறது. இது விவசாயிகளுக்கும் அரசுசாரா அலுவலர்களுக்கும் பயனுள்ள பொருளாகும். இதன் மையப்பொருளை வலுவான விவசாய மையமும் SERP ஹைதராபாத்தும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தத் தயாரிப்பு தெலுங்கில் கிடைக்கிறது.

 

தேடல் வசதியைப் பயன்படுத்துதல்

பயனாளிகளுக்குத் தேடல் வசதி உடனடியாக அவர்களுக்குத் தேவையான கருத்துருவினைத்தேடிப்பெற உதவும் நுழைவாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்த வசதி இருக்கும். இந்த வசதி நுழைவாயிலில் கருத்துருவை மட்டும் காணமுடியும் அதனைக் கொண்டு விவரம் இணையப் பயன்பாட்டுவழிதான் பெறமுடியும்.

நுழைவாயில் தேடல் வசதியை பயன்படுத்திப் பின் வருவனவற்றை பயானிகள் தேடிடப்பயன்படுத்தலாம்.

 • குறிப்பிட்ட எழுத்து அல்லது ஒரு சொல்/ வாக்கியம்
 • சொற்களுக்கு / வாக்கியங்களுக்கு இடையில் இடைவெளி
 • சொற்களுக்கிடையில் செயலூக்கிகள் (விருப்பம்/இல்லை)

நேரலைத்தேடல்

நேரலைத் தேடல் செயலியில் நுழைவாயிலில் தேடும் ஆற்றலை மேம்படுத்துகிறது. தேடல் பெட்டியில் ஒரெழுத்தைத் தட்டும்போது தேடல் களத்தில் தட்டப்பட்ட எழுத்துடன் பொருந்தக்கூடிய எல்லா தொடர்களையும் பட்டியலிட்டு வரும். அதனால் தேடல் எளிதாகிறது. இந்த நேரலை மீள்பார்வை (Feedback) யினால் கருத்தாக்கப் பொருத்தம் வேகமாகவும் திறன்வாய்ந்த வகையிலும் தேடலைச் செய்ய முடியும்.

நுழைவாயிலைப் பயன்படுத்துதல்

நுழைவாயிலில் என்னென்ன பதியப்பட்டிருந்தாலும் அவற்றில் மக்கள் தாங்களே முன்வந்து தகவல்கள், படங்கள், கோப்புகள், மற்றும் தரவுகளும் என்று அவர்களது புலமைத்துறை சார்ந்தனவற்றைப் பதியலாம். நுழைவாயில் நான்கு விதமானப் பயனாளிகளுக்கு உதவுகின்றது.

 • புதுப்பயனாளி
 • பதிந்த உறுப்பினர்
 • கருத்துக்கொடைஞர்
 • கருத்தாயுநர்

ஒவ்வொரு விதமான பயனாளிகளின் உரிமைகள் பற்றிச் சுருக்கமாகப் பின்வரும் பகுதி விளக்கும்.

புதுப்பயனாளி

புதுப்பயனாளி நீங்கள்

 • இணையவழி கருத்திற்குச் செல்க
 • கருத்தைச் தேடுக
 • கருத்தினை மின்அஞ்சல் /சமூக ஊடகம் வாயிலாகப் பகிர்க
 • ஒரு பக்கத்தை மதிப்பிடுக
 • பக்க மதிப்பீட்டிப் பகுதியில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தைச் சொடுக்கவும்.
 • கலந்தாய்வு அரங்கில் கலந்து கொள்ளவும்.
 • கலந்தாய்வு அரங்கம் ஒவ்வொரு துறைக்கூறு / முகட்டளவிலும் வரிசைக்கருகில் பட்டியல் காணப்படும். பயனாளி இணையப் பக்கத்தின் வலது கோடியில் உள்ள சுழற்சட்டத்தில் வாய்ப்புகள் வரும். அதில் சொடுக்கி கலந்தாய்வில் பங்குபெறலாம்.
 • பயனாளிகள் கலந்தாய்வில் ஏற்கெனவே உள்ள ஐயங்களுக்குப் பதில் சொல்லலாம். புதிதாகவும் ஐயங்களை எழுப்பலாம்.
 • பக்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கலாம்/ விமர்சனம் செய்யலாம்.
 • பக்கத்தின் கீழே வரை செல்லவும்.
 • “உங்கள் ஆலோசனைகளைப் பதியவும்” பகுதியில் ஆலோசனையுடன் உங்கள் பெயரையும் பதியவும்.
 • ‘ஓப்படை’ சொடுக்கவும்.
 • வாக்குச்சாவடி
 • முகப்புப் பக்கத்தில் உள்ள ‘கருத்துவாக்கு’ சொடுக்கவும்.
 • உங்கள் வாய்ப்பை ‘வாக்கு’ இல் சொடுக்கவும்.
 • முந்தைய சாவடி, முந்தைய சாவடியில் கடந்தனவற்றைக்காண சொடுக்கவும்.
 • புதிய எழுத்தைத் தேர்க
 • முகப்பு பக்கத்தில் புதிய எழுத்தைத் தேர்க எனச் சொடுக்கவும்.
 • உங்கள் மின் அஞ்சல் முகவரியைப் பதிந்து ‘ஓப்படை”
 • நுழைவாயில் மீள்பார்வையை வழங்குக
 • முகப்புப் பக்கத்தில் ‘உங்கள் மீள்பார்வை’ யைத் தரவும் எனச் சொடுக்கவும்.
 • பெயர்- மின்னஞ்சல் முகவரியையும் மீள்பார்வையும் இடுக.
 • ‘ஓப்படை’ என்பதில் சொடுக்கவும்.
 • R.S.S. இடுகையில் இடவும்.
 • பக்கத்தின் அடியில் செல்க
 • R.S.S குறியினைச் சொடுக்கவும்.
 • ஏதாவது ஒரு துறைக்கூறில் சொடுக்கி உடனடி நிகர்தகவல் (Updates) பெறலாம்.
 • ஓர் உறுப்பினராகவோ அல்லது கருத்துக் கொடைஞராகவோ ஆகவும்.
 • பக்கத்தின் வலது மூளையில் “பதிவு” என்று சொடுக்கவும்.
 • உறுப்பினர் அல்லது கருத்துக்கொடைஞர் இரண்டில் ஒன்றைத் தேர்க.
 • தரவுகளை நிரப்புக.
 • ‘பதிக’ என்பதில் சொடுக்கவும்.

பதிந்த உறுப்பினர்

பதிவு செய்து கொண்ட உறுப்பினரான நீங்கள் மேற்கண்ட புது உறுப்பினருக்கான எல்லா உரிமை பெறுவதோடு, கூடுதலாக

நீங்கள்

 • உங்கள் முன்விவரங்களை நிகர்தகவலாக்கலாம்.
 • வலது மேல் மூளையில் உங்கள் பயனர்பெயர் வரும் அதைச் சொடுக்கவும்.
 • ‘கீழே போடு’ பட்டியலில் முன்விவரங்கள் என்பதில் சொடுக்கவும்.
 • உங்கள் முன்விவரம் காட்சிப்படும். அதில் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
 • உங்கள் பயனர் பக்கத்தை மூடவும்.
 • வலது மேல் மூலையில் காட்சிப்படும் உங்கள் பயனர்பெயரைச் சொடுக்கவும்.
 • ‘கீழே போடு’ பட்டியலில் “டேஷ்போர்ட்” என்பதைச் சொடுக்கவும்.
 • வழக்கமாகக் காட்சிப்படும் “டேஷ்போர்ட்” தெரியும்
 • டேஷ்போர்டை மறைப்பதற்கு “எடிட்” என்ற வாய்ப்பைச் சொடுக்கவும்.
 • உங்கள் கொடையைக்; காணலாம்.
 • வலது மேல் மூளையில் காட்சிப்படும் உங்கள் பயனர்பெயரைச் சொடுக்கவும்.
 • ‘கீழே போடு’ பட்டியலிருந்து” என்கொடை” என்பதைச் சொடுக்கவும்.
 • உங்கள் அனைத்து இடுகைகளும் - மீள்பார்வை ஆலோசனை விவாதக் குறிப்புகள் முதலியன காட்சிப்படும்.
 • விவாத அரங்கில் தலைப்புகளை விவாதிக்கவும்.
 • ஏதாவது ஒரு துறைக்கூறில் விவாத அரங்கினைச் சொடுக்கவும்.
 • உங்களுக்கு ஆர்வமான விவாத அரங்கைத் தேர்க
 • விவாத அரங்கில் உள்ள தலைப்புப் பட்டியலைக் காண்க.
 • விவாதங்களைப் பார்வையிட்டு உங்கள் கருத்தைச் தெரிவிக்க “இதற்குப் பதிலிடுக” எனபதில் சொடுக்கவும்.

கருத்துக் கொடைஞர்

 • பதிவு செய்த உறுப்பினர் பெறும் எல்லா உரிமையும் கருத்துக் கொடைஞரும் பெறுகிறார். அத்துடன் நீங்கள்
 • கருத்துப் பக்கங்களைச் சேர்க்க
 • நீங்கள் துறைக்கூறில் புதிய பக்கத்தைச் சேர்க்கவும். அதில் நீங்கள் கருத்துக் கொடைஞர் என அங்கீகரிக்கப்பட்டவராவீர்.
 • பட்டியல் பக்கத்தில் எதில் புதிய பக்கத்தைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்காக “புதிது சேர்க்க” என்ற வாய்ப்பு இருக்கும் அதில் சொடுக்கவும்.
 • தலைப்பு. கட்டுரை முதலியன பதிந்து புதிய பக்கத்தில் உங்கள் கருத்தை “Body Text ”இல் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
 • பாதுகாக்க (ளுயஎந) என்பதில் சொடுக்கவும்.
 • கருத்துப்பக்கத்தைச் திருத்த
 • கருத்துக்கொடைஞர் என அனுமதிக்கப்பட்ட நீங்கள் துறைக்கூறின் பக்கங்களைத்; திருத்தலாம்.
 • வலது மேல் மூளையில் உள்ள “Green band” இல் சொடுக்கி பக்கத்தின் நிலையைச் சோதிக்கவும். “Open for Edit” அல்லது “Review in process” நிலையில் உங்கள் பக்கங்களைத் திருத்தலாம்.
 • “Edit” இல் சொடுக்கவும். “Edit” பக்கம் காட்சிப்படும் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
 • “Save” என்பதில் சொடுக்கவும்.
 • மேலே உள்ள செயல்பாட்டை இந்தக் காணொலி சேர்ப்பில் பார்க்கவும்.

கருத்தாயுநர்

கருத்தாயுநர் என்ற நிலையில் நீங்கள் கருத்துக்கொடைஞருக்குரிய எல்லா வசதிகளையும் பெறுவீர்கள் அத்துடன், நீங்கள்

 • அண்மை இடுகைகளைப் பார்க்க
 • மேல்வலது பக்கம் உங்கள் பயனர்பெயரில் சொடுக்கவும்.
 • “அண்மை இடுக்குகள்” என்பது “கீழே போடு” பட்டியலில் தெரியும். அதனைச் சொடுக்கவும்.
 • ஆய்வுப் பட்டியலைப் பார்க்க.
 • வலது மேல் மூளையில் காட்சிப்படும் உங்கள் பயனர்பெயரைச் சொடுக்கவும்.
 • “கீழே போடு” பட்டியலிருந்து ஆய்வுப் பட்டியலைச் சொடுக்கவும்.
 • மாற்றத்திற்குட்பட்ட எல்லா பக்கங்களுடன் ஆய்வு தேவை என்ற பட்டியலும் காட்சிப்படும்.
 • ஆய்வு/திருத்து கருத்துப்பக்கம்.
 • கருந்தாயுநர் என்று அனுமதிக்கப்பட்ட நீங்கள் துறைக்கூறின் பக்கங்களை ஆய்வு செய்யலாம்.
 • History (Edit) இல் சொடுக்கி, மாற்றங்கள் நிகழ்ந்த பக்கங்களைப் பார்க்க. மாற்றியவற்றை ஆய்க. (Reviewed date - இல் சொடுக்கவும்.
 • ஆய்வுசெய்த தேதியைச் சேர்க்க
 • அனைத்து மாற்றங்களையும் ஆய்வு செய்த பின் “வெளியிடு” அல்லது ஆய்ந்து பின் “பாதுகாக்க” என்பதில் சொடுக்கவும்.
Back to top