பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / ஆசிரியரின் அனுபவம்
பகிருங்கள்

ஆசிரியரின் அனுபவம்

விகாஸ்பீடியா பற்றிய ஒரு ஆசிரியரின் அனுபவங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

என் பெயர் கோகிலா நான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் வடசேரி S.V.R.V மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்து வருகின்றேன். நான் கடந்த மாதம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “விகாஸ்பீடியா - தமிழ்” வலைதள பயிற்சி முகாமில் பள்ளிக்கல்வித்துறையின் எங்கள் பள்ளியின் சார்பில் கலந்து கொண்டேன். இப்பயிற்சியில் “கல்வி – உட்பிரிவில்” மாணவர்கள் பகுதி, ஆசிரியர் பகுதி, பொதுஅறிவுத் தகவல்கள் பற்றிய தகவல்களை பார்த்தேன். இத்தகவல் என்னை மாதரி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் என்பதை அறிந்தேன். ஏனெனில் நாங்கள் பள்ளிப்பாடபுத்தகங்களை மட்டும் படித்து மாணவ மாணவியருக்கு பாடம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுபோன்ற தமிழ் வலைதளம் மூலம் பயனுள்ள பல்வேறு வகையான தகவல்கள் என்போன்ற ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்பெறும்.

மறுநாள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளாத எனது சக ஆசிரியர்களுடன் இவ்வலைதளம் பற்றிய தகவல்களையும், தொழிற்நுட்பங்ளையும் எடுத்துரைத்தேன். கணிப்பொறி மூலம் இவ்வலைதளத்தில் பதிவு செய்யுங்கள் எனவும் அறிவுறித்திதேன்.

மேலும் ஒருபாடப்பரிவில் விகாஸ்பீடியா வலைதளம் பற்றி மாணவர்களிடமும் எடுத்துரைத்தேன். இப்பாடத்தில் பொதுஅறிவு வினாக்கள் இருப்பதையும் எடுத்துக்கூறி நான் மறுநாள் வகுப்பறை வீட்டுப்பாடமாக தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளை எழுதி வரவேண்டும் என்று கூறினேன். இதை ஒரு மாணவன் மறநாள் எழுதி வந்தான் என்னிடம் காண்பித்து அதில் ஆதாரம் விகாஸ்பீடியா தமிழ் எனவும் எழுதியிருந்தான். நான் அவனிடம் கேட்டேன். இது என்ன விகாஸ்பீடியா என்றேன். டீச்சர் தாங்கள் தான் நேற்று விகாஸ்பீடியா வலைதளத்தைபற்றி எங்களுக்கு பாடம் நடத்தினீர்கள். இதனால் நான் வீட்டில் சென்று கல்லூரியில் படிக்கும் எனது அக்காவிடம் சென்று கூறினேன். அப்போது இருவரும் இந்த வலைதளத்தைப்பார்தோம். அப்போது தாங்கள் எழுதி வரச்சொன்ன விருதுகள் பற்றிய தகவல்களை பார்த்தேன் எழுதிவந்தேன் என்றான். உடனே நான் வகுப்பறையில் அந்த மாணவனை பாரட்டினேன். மேலும், விகாஸ்பீடியா வலைதளத்தை “பாடசாலை” வலைதளத்திலும் இத்தகவல்களை வழங்க பரிந்துரையும் செய்தேன்.

நன்றி

கோகிலா, ஆசிரியை S.V.R.V மேல்நிலைப்பள்ளி

வடசேரி

கன்னியாகுமரி மாவட்டம்

Back to top