பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

ஆடு வளர்ப்பு

தினசரி கூலி வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் தற்போது சுயதொழில் செய்ய ஆரம்பித்துள்ள அனுபவத்தை இங்கு பகிர்ந்துள்ளார்.

விகாஸ்பீடியா வலைதளம் பற்றி நான் எங்கள் ஊரில் உள்ள இ-சேவை மைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

ஆடு வளர்ப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த தொழிலில் உள்ள பயன்கள் நஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. விகாஸ்பீடியாவின் வேளாண்மை பகுதியில் கால்நடை பராமரிப்பு பகுதியை பார்த்தேன். எனது சந்தேகங்களை தீர்க்கும் அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதை படித்ததும் ஆடு வளர்ப்பை தைரியமாக மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. ஆனால் அதற்கான முதலீடு என்னிடம் இல்லை. வங்கியில் கடன் வாங்கி தொழில் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையும் விகாஸ்பீடியா கொடுத்தது.

தினசரி கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருந்த நான் தற்போது 20 ஆடுகள் வளர்த்து வருகிறேன். நல்ல வருமானமும் கிடைக்கிறது. விகாஸ்பீடியா வலைதளத்திற்கு நன்றிகள் பல.

இப்படிக்கு
கண்ணம்மாள்
கரட்டுப்பட்டி, தேனி

Back to top