பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

இயற்கை விவசாயம்

விகாஸ்பீடியாவின் உதவியுடன் இயற்கை விவசாயம் செய்து பயன்பெற்ற ஒரு விவசாயியின் அனுபவங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன.

நான் விகாஸ்பீடியா பற்றி எங்கள் ஊரில் உள்ள இ-சேவை மையத்தின் பணியாளர் திலகவதி மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் விகாஸ்பீடியா வலைதளத்தில் உள்ள தகவல்கள் பற்றி என்னிடம் தெரிவித்தார்.

என் மகன் பெயர் சூர்யா. அவன் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறான். அவனிடம் இதை பற்றி கூறினேன். அவன் தனது கணினி மூலம் எனக்கு விகாஸ்பீடியா வலைதள பகுதியை காண்பித்தான். அதன் வாயிலாக விகாஸ்பீடியாவில் உள்ள விபரங்களை பார்த்தேன்.

நான் கடந்த 2 வருடமாக விவசாயம் செய்ய வில்லை. காரணம் தொடர் நஷ்டம், தண்ணீர் பஞ்சம், நிலத்தின் தன்மையும் மாறிவிட்டது. அதனால் விவசாய செய்யாமல் இருந்தோம். அந்த வலைதளத்தை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு புதிய யோசனை கிடைத்தது. ஊடுபயிர் சாகுபடி, பாரம்பரிய விவசாயம், இயற்கை பூச்சி கொல்லி, மண்ணின் தரத்தை மேம்படுத்த உதவும் விசயங்கள் என பலவற்றை அறிந்தோம். இயற்கையின் போக்கில் எப்படி விவசாயம் செய்யலாம் என்பதையும் அறிந்தோம். குறுகிய கால பயிர்கள் பற்றியும், மண்ணிற்கு இயற்கை முறையில் கிடைக்ககூடிய சத்துக்கள் பற்றியும் அறிந்தேன். அவற்றை உடனடியாக செயல்படுத்தி இப்பொழுது 1 ஏக்கர் மட்டும் பயிர் செய்துள்ளேன். எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. விகாஸ்பீடியா வலைதளத்தில் உள்ள தகவல்கள் அடிப்படையில் பயிர்செய்ய முடிவு செய்து அவற்றை பின்பற்றி வருகிறேன். இது நல்ல பயன் அளிக்கும் என நம்புகிறேன்.

நான் இயற்கை முறையில் தற்போது காய்கறிகள் தான் பயிர் செய்துள்ளேன். இவற்றை முதலில் எங்கள் ஊரில் இயற்கை விவசாய முறையில் உற்பத்தியான காய்கறிகள் என்பதை கூறி எங்கள் பகுதியில் விற்பனை செய்கிறேன். பூசனிக்காய் இப்பொழுது அறுவடையாகி வருகிறது. இது மிகவும் சுவையாக உள்ளது என்பதை நான் அறிந்தேன். எனது அண்டைவீட்டாறுக்கும் விற்பனை செய்துவிட்டேன். அவர்களும் சுவையின் வித்யாசத்தை உணர்ந்துள்ளனர். இப்பொழுது எங்கள் ஊரில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்து வருகிறேன். அனைவரும் விரும்புவர் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. விகாஸ்பீடியா வலைதளம் பற்றி மற்ற விவசாயிகளுக்கும் தெரிவிக்க வழியுறுத்தி உள்ளேன்.

இயற்கை விவசாயம் எளிமையானது, பயனுள்ளது, பாரம்பரியமானது. அதனால் அதிக அளவு நன்மை மட்டும் அல்ல விவசாயம் அழியாது மக்கள் வாழ வழி வகுக்கும். எனவே அனைவரும் இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை அதற்காக உருவாக்கப்பட்ட விகாஸ்பீடியா போன்ற வலைதளங்களில் பார்த்து பயன்பெறவும். இயற்கை விவசாயம் அழியாமல் காக்க வேண்டும்.

நன்றி
கோட்டையம்மாள்
விவசாயி
தேனி - தமிழ்நாடு

Back to top