பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / கற்றலுக்கு வயது வரம்பு கிடையாது
பகிருங்கள்

கற்றலுக்கு வயது வரம்பு கிடையாது

படிப்பை தொடராமல் திருமணம் செய்து பல வருடங்களுக்கு பிறகு படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு இல்லத்தரசியின் அனுபவங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எனக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவுடன் சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் படிப்பை தொடர முடியவில்லை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே படிப்பை தொடராமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் உணர்ந்தேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு இதை உணர்ந்து பயனில்லை என்று நினைத்த எனக்கு விகாஸ்பீடியா வலைதளம் ஒரு நல்ல வழியை காண்பித்தது.

விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றதன் மூலம் இந்த வலைதளத்தை பற்றி தெரிந்துக்கொண்டேன். அதில் கல்வி எனும் அறிவுசார் பகுதியில் தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதை படித்ததும் மீண்டும் படிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அருகில் உள்ள டுடோரியல் மையத்தில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பை முடித்துள்ளேன். மேலும் படிப்பை தொடர்வேன். என் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுத்த விகாஸ்பீடியாவிற்கு நன்றி.

இப்படிக்கு
முருகேஷ்வரி
கடமலைக்குண்டு - தேனி

Back to top