பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / மேற்படிப்புக்கு உதவிய வலைதளம்
பகிருங்கள்

மேற்படிப்புக்கு உதவிய வலைதளம்

விகாஸ்பீடியா தமிழ் வலைதளத்தில் பல்வேறு உதவித்தொகை வழங்கும் நிறுவனங்களையும் அதன் அமைப்புகள் விபரங்களையும் பார்த்து பயன் பெற்றேன்

என் பெயர் மோகனா, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறேன். நான் கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வாகி இருந்தேன். மேற்படிப்பு படிக்க என்னால் முடியவில்லை எனது குடும்பமும் மிகவும் வறுமை. இதற்கிடையில் நான் கல்லூரி சேர்வதற்கு பல முயற்சிகள் எடுத்தேன். ஆனால் எனக்கு கல்வி உதவித்தொகை யாரும் கொடுத்து உதவவில்லை. அப்போது எனக்கு கற்பித்த ஆசிரியை ஒருவர் விகாஸ்பீடியா தமிழ் வலைதளத்தில் பல்வேறு உதவித்தொகை வழங்கும் நிறுவனங்களையும் அதன் அமைப்புகள் விபரங்களையும் பற்றி எடுத்துக்கூறினார். அவர் கூறியதை கேட்டு என்னுடன் பயின்ற தோழிகளிடம் இதை பற்றி எடுத்துரைத்தேன். எனது தோழி விகாஸ்பீடியா வலைதளத்தில் இத்தகவல் உள்ளது என்று கூறியதும் அதன்படி நான் உதவித்தொகை விண்ணப்பம் அனுப்பியுள்ளேன். அவ்விண்ணப்பத்திற்கான பதிலும் எனக்கு வந்துள்ளது. இத்தகவல்களை தெரிவித்த விகாஸ்பீடியா வலைதளத்திற்கு மிக்க நன்றி.

இப்படிக்கு,

A. மோகனா

காஞ்சிபுரம் மாவட்டம்

மின்னஞ்சல் : mohana.anand1993@gmail.com

Back to top