பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாதவர்கள் நேரடியாக பிளஸ் 2 எழுத சலுகை
பகிருங்கள்

பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாதவர்கள் நேரடியாக பிளஸ் 2 எழுத சலுகை

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத நிலையிலும் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.

11-ம் வகுப்பு தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து 12-ம்வகுப்புக்குச் செல்லலாம். தோல்வியுற்ற பாடங்களை 12-ம் வகுப்பு இறுதித் தேர்வின்போது சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அதேநேரம் தனியார் பள்ளிகளில் படிக்கும் 26 ஆயிரம் மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சிக்காக கட்டாய மாற்றுச் சான்றிதழ் வழங்கி வெளியேற்றப்பட்டனர். இதை கண்டறிந்த அரசு தேர்வுத்துறை, தோல்வியுற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமே மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளித்தது. இருப்பினும் 40 சதவீத மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அவ்வாறு விண்ணப்பிக்காத மாணவர்களும் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு, ஏற்கெனவே தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஹால்டிக்கெட்கள் தரப்பட்டுள்ளன.

இதன்படி, மாணவர்கள் யாரிடமும் அனுமதி பெறாமல் நேரடியாக தேர்வு மையத்துக்குச் சென்று தேர்வு எழுதலாம். மேலும், தேர்வுமைய விவரங்களை தலைமையாசிரியர் மூலம் கேட்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top