பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம்

கொவிட்-19க்கு எதிரான இந்தியப் பொருளாதாரத்தின் போரை ஆதரிக்க, தொழில்கள், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நிவாரணம் மற்றும் கடன் ஆதரவு தொடர்பான நடவடிக்கைகள்.

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கத்துக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான ரூ 20 இலட்சம் கோடி மதிப்பில் விரிவான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு அரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகியவை சுய-சார்பான இந்தியாவின் ஐந்து தூண்கள்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நிவாரணம் மற்றும் கடன்.

முக்கிய அறிவிப்புகள்

  • சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ 3 லட்சம் கோடி அவசர பணி மூலதன வசதி.
  • அழுத்தத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணைக் கடன்.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிதியத்தின் நிதி மூலம் ரூ 50,000 கோடி பங்கு உட்செலுத்துதல்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய விளக்கம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதர நடவடிக்கைகள்.
  • ரூ 200 கோடி வரையிலான அரசு ஏலங்களுக்கு சர்வதேச ஏலங்கள் நடத்தப்பட மாட்டாது.
  • ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு 2020 ஆகிய அடுத்த 3 மாதங்களுக்கு தொழில்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆதரவு நீட்டிப்பு.
  • வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள அனைத்து நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு.

இதர சலுகைகலள்

  • வங்கி சார நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/சிறு கடன் நிறுவனங்களுக்கு ரூ 30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம்.
  • வங்கி சார நிதி நிறுவனங்கள்/ சிறு கடன் நிறுவனங்களின் கடன்களுக்கு ரு 45,000 கோடி பகுதி கடன் உத்தரவாதத் திட்டம் 2.0.
  • மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ 90,000 கோடி நிதி உட்செலுத்துதல்.
  • பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) மற்றும் சலுகை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஒப்பந்தப் பொறுப்புகளை முடிக்க ஆறு மாதங்கள் வரை கால நீட்டிப்பு வழங்கி ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம்.
  • ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிவராணம்- பதிவு செய்த அனைத்துத் திட்டங்களுக்கும் பதிவு மற்றும் பணி முடிப்புத் தேதி ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு.
  • தொழில்களுக்கு வரி நிவாரணம்- தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனம் அல்லாத தொழில்கள் மற்றும் இதர தொழில்களுக்கு நிலுவையில் உள்ள வருமான வரி திரும்ப செலுத்த வேண்டியத் தொகை உடனடியாக வழங்கப்படும்.
  • 2020-21 நிதி ஆண்டின் மிச்சமுள்ள காலகட்டத்துக்கு TDS மற்றும் TCS ஆகிய வரி பிடித்த விகிதங்களில் 25% குறைப்பு. * வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு
3.44444444444
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top