பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வறுமை ஓழிப்புத்திட்டங்கள்

வறுமை ஓழிப்புத் திட்டங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1.சமூக முன்னேற்ற திட்டம்(CDP)-1952

COMMUNITY DEVELOPMENT PROGRAM

மக்கள் பங்கேற்புடன், கிராம்பபுறங்களை அனைத்து வகையிலும் முன்னேற செய்தல்.

2.தீவிர விவசாய முன்னேற்ற திட்டம் (IADB) –(1960-61)

விவசாயிகளுக்கான கடன், உரம், பூச்சிக்கொல்லி, விதை போன்றவற்றை வழங்குதலே இதன் நோக்கம்.

3.தீவிர விவசாய பகுதி திட்டம் (IAAP) – (1964-65)

சிறப்பு அறுவடைகளை மேம்படுத்தலே இதன் நோக்கமாகும்.

4.கடன் உறுதி திட்டம்-1965

RBI-ன் கடன் தன்மை கட்டுப்பாட்டு திட்டம்.

5.வீரிய விதைகள் அபிவிருத்தித்திட்டம்-1967

HIGH YIELDING VARIETY PROGRAM

பசுமைப்புரட்சி திட்டத்தின் அங்கம்

புதிய ரக விதைகள் மூலம், உணவு உற்பத்தியை அதிகரித்தல்.

6.இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் – 1966

INDIAN TOURISM AND DEVELOPMENT CORPORATION.

நாட்டின் பல இடங்களில், தங்கும் விடுதிகள், பயணியர் மாளிகை அமைத்தல்.

“INCREDIBLE INDIA”-இதனுடன் தொடர்புடைய வார்த்தையாகும்.

7.ஊரக மின்வசதி கழகம்-1969

ஊரகப்பகுதிகளில் மின்வசதி ஏற்படுத்தல்.

8.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற முன்னேற்ற கழகம்-1970

வீட்டுவசதிக்கு கடனுதவி அளித்தல்.

9.முடுக்கிவிடப்பட்ட கிராம குடிநீர் வழங்குதல் திட்டம்-(1972-73)

கிராமங்களுக்கு, சுகாதாரமான குடிநீர் வழங்குதல்.

10.வறட்சிப்பகுதி முன்னேற்ற திட்டம்-1973

DROUGHT PRONE AREA PROGRAM.

நிலத்தடி நீர் மேம்பாடு,சுற்றுச்சூழல் மேம்பாடு மூலம் வறட்சியைத் தடுத்தல்.

11.சிறுவிவசாயிகள் முன்னேற்ற முகைமை-(1974-75)

SMALL FARMER DEVELOPMENT AGENCY

சிறு விவசாயிகளுக்கு கடன், மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அளித்தல்.

12.கட்டளைப்பகுதி தொழில் முன்னேற்ற திட்டம் –(1974-75)

COMMAND AREA DEVELOPMENT PROGRAM

பெரிய, நடுத்தர பாசனத்திட்டம் மூலம் நீர்ப்பாசனத்தை உறுதி செய்தல்.

13.இருபது அம்ச திட்டம்(TPP)- 1975

TWENTY POINT PROGRAM

வறுமை ஒழிப்பு, வாழ்க்கை தரம் உயர்த்தலே இதன் நோக்கமாகும்.

இதன் திட்டகாலம்-5வது ஐந்தாண்டு திட்டம்.

இத்திட்டம் 1982, 1986 ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்டது.

14.வேலைக்கு உணவு திட்டம்(FFW) –(1977-78)

FOOD FOR WORK

நாட்டின் பொருளாதார முன்னேற்ற வேலைகளில் ஈடுபடும், தொழிலாளர்களுக்கு உணவு வழங்குதல்.

15.அந்தியோதயா திட்டம் –(1977-78)

ஏழைகளை பொருளாதார அடிப்படையில் தன்னிறைவைப்பெற செய்தல்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.03174603175
Amalapushpam Mar 19, 2020 05:15 PM

புது வாழ்வு திட்டம் என்ற ஒன்று இணைக்காமல் விடுபட்டு உள்ளது . இதன் மூலம் நிறைய ஏழைகள் மிகவும் ஏழைகள் மாற்றுத்திறனாளிகள் நலிவுற்றோர்கள் பயன் பெற்று உள்ளார்கள் . மேலும் இது புரட்சி தலைவி அம்மா அவர்களின் திட்டங்களில் முன்னோடி திட்டம் என்று மற்ற மாநிலங்கள் பின்பற்றி வந்த திட்டம் ஆகும் .

சரத்குமார் அன்பழகன் Feb 19, 2020 10:31 AM

திறமையை பொருளாதாரமும் சாதிய அமைப்பும் உறிஞ்சும்போது இந்தியா இந்நிலையிலே நிற்கும்

விக்னேஷ் Aug 02, 2019 11:45 AM

நாட்டில் இன்னும் முப்பது சதவிகித மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள். இத்தனை திட்டம் இருந்தும் என்ன பயன். நம் நாடு விடுதலை அடைந்து 70வது வருடம் ஆன பின்னும் இப்படி ஒரு நிலைமை இது நாட்டிற்கு தலை குனிவு. நமக்கு பின்னர் விடுதலை ஆன நாடுகல் இன்று வளர்ந்து விட்டது நமக்குத்தான் இந்நிலமை இப்படி இருந்தால் நாடு எப்படி வளரும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top