பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / தமிழ்நாட்டிற்கான குறிப்பான தகவல்கள் / வேலை வாய்ப்பு கிடைக்காத சிறுபான்மை சமூக இளைஞர்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேலை வாய்ப்பு கிடைக்காத சிறுபான்மை சமூக இளைஞர்கள்

வேலை வாய்ப்பு கிடைக்காத சிறுபான்மை சமூக இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களின் திறனை மேம்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், சுய தொழில் துவங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இத்திட்டம் 2007–2008 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சிறுபான்மை சமூகங்கள் யாவை ?

இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பார்சி மதங்களைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் தற்போது அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் என்னென்ன ?

வ. எண்.

பயிற்சி

பயிற்சிக் காலம் (மாதங்களில்)

1.

ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் நுட்ப பயிற்சி

12

2.

காலனிகளை கணினி மூலம் வடிவமைத்தல்

6

3.

தோல் பொருள் உற்பத்தி மற்றும் வடிவமைத்தல்

6

4.

காலனி தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சி

12

5.

குளிர்சாதனப் பெட்டி பட்டய பயிற்சி

3

6.

கணினி மென்பொருள், கடினப்பொருள் மற்றும் நெட்வொர்க் (Network) பயிற்சி

3

7.

தையல் எம்பிராய்டரி

3

8.

டேலி (Tally), எம்.எஸ். ஆபிஸ் (MS Office) மற்றும் டிடிபி (DTP) பயிற்சி

3

9.

சி (C) மற்றும் சி ++ (C++)

3

10.

மல்டி மீடியா (multimedia) அனிமே~ன்

3

11.

டாட் நெட்

3

12.

கணினி ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்

3

மாவட்டங்களில் நிலவும் தேவைகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள குழுக்கள் திறன் மேம்பாடு பயிற்சிகளை தேர்வு செய்யும்.

பயிற்சி நிறுவனங்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றன ?

குறிப்பிட்ட முன் அனுபவம், போதுமான கட்டமைப்பு, தகுதியான பயிற்றுநர்கள், பயிற்சிக்குப் பின் பணி அமர்த்தும் திறமை ஆகியவைகள் கொண்ட பயிற்சி நிறுவனங்கள் டெண்டர் மூலம் வரவேற்கப்பட்டு போட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

பயிற்சியில் பங்கேற்பவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?

இத்திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) பங்கேற்பாளர்கள் தேர்வு குழு ஒன்றை உருவாக்கும். இக்குழுவின் உறுப்பினர்களை டாம்கோ நியமிக்கும். இக்குழு பயிற்சிக்குத் தகுந்தவாறு குறிப்பிடப்பட்ட (prescribed norms) தகுதியுள்ள இளைஞர்களை தேர்வு செய்யும்.

பயிற்சி துவங்குவதை அறிந்து கொள்வது எப்படி ?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளை வெளியிடும். மாவட்ட நிர்வாகமும் செய்திக் குறிப்புகளை பத்திரிக்கைகளில் வெளியிடும்.

திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர தேவையான தகுதிகள் என்ன ?

அ) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஆ) வேலையில்லாத இளைஞராக இருக்க வேண்டும்.
இ) கேட்கப்படும் கல்வித்தகுதி உடையவராக இருத்தல் வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ?

விளம்பரத்தில் குறிப்பிட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல்,மதிப்பெண் பட்டியல் நகல் இணைத்து விளம்பரத்தில் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன ?

அ) பயிற்சிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதி விலக்கு
அ) பயிற்சி மெட்டீரியல்கள்.
இ) மாத ஸ்டைபெண்ட் (stipend) பயிற்சிக் காலம் வரை

பயிற்சி சான்றிதழை எந்த நிறுவனம் வழங்கும் ?

பயிற்சியில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பங்கேற்பாளர்களுக்கு டாம்கோ (TAMCO), பயிற்சி அளித்த நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவை இணைத்து சான்றிதழ் வழங்கும்.

2.92857142857
சக்திவேல் Mar 23, 2017 09:44 AM

நான் I.T.I(MMV)படித்து உள்ளே ன் எனக்கு வேலை கிடைக்குமா

TASNA May 29, 2015 10:46 AM

கேள்விக்கு நன்றி.

SSLC மற்றும் +2 கல்வி தகுதிக்கு SSC , தபால் துறை, TNPSC , குரூப் IV யில் காலிஇடங்கள் அறிவிக்கும் போது விண்ணப்பிக்கவும். தவிர தங்களது துறையில் சிறந்து படித்து செயல்பட்டால் கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். வாழ்த்துக்கள்!

Parthiban May 29, 2015 09:07 AM

நான் +2முடித்து Itiபடிகிறோன் எனக்கு அரசுவேலை கிடைக்கா வாய்ப்பு இருக்கின்றதா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top