பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தூய்மை இந்தியாவை படைத்திடலாம் வாரீர்

இக்கட்டுரை முதலாம் இடத்தை தட்டிச் சென்றது.

கூழானாலும் குளித்துக்குடி கந்தையானலும் கசக்கிகட்டு என்பது முதுமொழி. புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது குறள் மொழி. இவ்வாறு தூய்மையை வலியுறுத்தி வந்துள்ள நம் பாரதத்திரு நாட்டின் நிலை என்ன தெரியுமா? தெருக்கள் சாலைகள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் கழிவுகள் திடக்கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன.

ஆறு, ஏரி, குளம், குட்டை என எல்லா நீர் நிலைகளும் 75 சதவீதம் மாசடைந்துள்ளன். அண்மையில் பிணங்கள் கங்கையில் மிதந்தை செய்தி வாயிலாகவும் பத்திரிக்கை வாயிலாகவும் நாம் அறிகிறோம். இவை நாம் ஒவ்வொருவரும் நேரில் காணும் காட்சிகள். இது ஒருபக்கம் என்றால் திறந்த வெளியில் மலம் கழிப்பது தூய்மைக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஐ.நா. அமைப்பு கூறுவது என்ன?

 • இந்தியாவில் 28 சதவீதம் மக்களுக்கு மட்டும் தான் சுத்தமான கழிப்பறை வசதி உள்ளது.
 • 65 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.
 • 50சதவீதம் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர்.
 • இந்தியாவை விட மிகவும் ஏழ்மை நாடான வங்கதேசத்தில் 3 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • நகரப்புறங்களில் 25 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. கழிப்பறை வசதி இருந்தும் சுமார் 40சதவீதம் பேர் அதைப் பயன்படுத்துவதில்லை என்பது முக்கியமான தகவல்.


கால்நடை மேம்பாட்டுத்திட்டம்

சுகாதாரக் கேடுகள்

வயிற்றுகப்போக்கு, போலியோ, சருமநோய், சுவாசநோய், விசக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பொதுச்சுகாதாரத்திற்கு கூடுதலாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை, குடிநீர் பஞ்சம், திடக்கழிவுகள் மண்ணில் கலந்து மண்நிலம் சீர்கேடு ஏற்படுகிறது. விளைச்சல் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்திய அரசின் முயற்சிகள்

 • மத்திய  ஊரகச் சுகாதாரத்திட்டம் 1986, முழு சுகாதாரதிட்டம், நிர்மல் கிராம பாதுகாப்புத் திட்டம், நிர்மல் பாரத் அபியான், ஸ்வச் பாரத் 2014 எனப் பல்வேறு மத்திய அரசுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 • புதிய ஸ்வச் பாரத் 2014 திட்டத்தின் மூலம் வரும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிக்குள் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்திற்குள் தூய்மையான பாரதத்தை படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • எல்லா குடியிருப்புகளுக்கும் கிராம மக்களுக்கும் தண்ணீர் வசதி, கழிப்பிடவசதி, முறையான கழிவுநீர் அகற்றும் விழிப்புணர்வு உண்டாக்குதல், மனமாற்றம் ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை கண்காணித்தல், கலைநிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் தொடர்கள், கருத்து விவாதம் நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
 • “தூய்மைத்தூதர்” என்று பிரபலமானவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நியமிக்கலாம்.
 • பள்ளிக் குழந்தைகள் கண்ணைக் கவரும் படங்களுடன் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 • சமயவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் இதர விழாக்கள் கொண்டாடுவதில் சிறு மாற்றங்கள் கொண்டு வந்து குப்பைகளை குறைத்தல்.
 • சுதந்திரத்தை விட சுகாதாரம் தேவை என காந்தி கூறினார். சுதந்திரம் பேண தூய்மை பேணுவோம். அந்த பிரசார இயக்கத்தில் நாம் ஒவ்வொருவரும் இணைந்து தூய்மை இந்தியா உருவாக பாடுபடுவோம்.

ஆதாரம் : பௌமிதா பானு (தகவல் பகிர்வாளர்)

3.36206896552
Nandhini Feb 18, 2020 06:08 AM

Informative காம்போசிஷன்
Thank u

P.Brundha Sep 11, 2019 10:06 AM

பயனுள்ளதா
இருக்கு

Aarathy May 08, 2019 08:19 PM

Very informative

Vini Jan 03, 2019 07:00 PM

Super very very good

Kowshikavadhani Dec 04, 2018 06:10 AM

தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான நலத்திட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top